தமிழகம் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் வரலாறு காணாத நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. கடந்த பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன் சுமை 4.85 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அரசு கஜானாவோ காலியாக உள்ளது.
இது போன்ற ஒரு சூழலில்தான் வருகிற 7-ஆம் தேதி முதல்வராக பொருப்பேற்கிறார். தேர்தலுக்கு முன்னர் தேர்தல் களத்தில் போட்டியிட்ட அனைத்துக் கட்சிகளுமே திமுகவை பொது எதிரியாக சித்தரித்தன. அதே கட்சிகள் அரசியல் களத்தில் அதே மூர்க்கத்துடன் தான் உள்ளது. ஒரு கட்சி ஆளும்கட்சியாக பதவியேற்று ஆறு மாதங்களை சுவாசித்துக் கொள்வதற்கான காலம் என்பார்கள். ஆனால், திமுகவுக்கு அப்படி ஒரு காலமே இல்லை. காரணம் கொரோனா தொற்று கற்பனை செய்ய முடியாத அளவுக்கு தமிழகத்தை பாதித்து வருகிறது.
இன்னொரு பக்கம் ரேஷன்கார்டுக்கு 4,000 ரூபாய் தருவதாக வாக்குறுதி அளித்தார். அதைக் கொடுக்க லட்சம் கோடி ரூபாய் வேண்டும். மத்திய அரசோ மாநில அரசுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை எதனையும் வழங்கவில்லை. அதனால் ஏற்படும் நிதிச்சுமை ஒரு பக்கம் இருந்தாலும், மாநில அரசின் வருவாய் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.
டாஸ்மாக், பத்திரப்பதிவு, பெட்ரோல் டீசல் வரி வருவாய் இம்மூன்றும்தான் மாநில அரசின் பிரதான வருவாய்கள். இந்த மூன்றுமே இப்போது வருவாயில் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் இதை எப்படி சமாளிக்கப் போகிறார் என்பது இன்னொரு சவால்.
மிக முக்கியமான மத்தியில் மோடி “பாசிச பாஜகவை வீழ்த்துவோம்” என்பது திமுக வைத்த கோஷம்.கடுமையாக மோடியை விமர்சித்து வந்த ஸ்டாலின் இப்போது முதல்வர். ஏற்கனவே பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களை மத்தியில் ஆளும் அரசு மிக மோசமாக பாரபட்சமாக நடத்தும் நிலையில் மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி, கேரளத்தில் பினராயி விஜயன், தமிழகத்தில் ஸ்டாலின் என பாஜகவுக்கு எதிரான அரசியல் கொள்கை கொண்ட மாநிலங்களை நடத்துவது போல தமிழகத்தையும் நடத்தினால் இதை எல்லாம் எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதே இப்போதைய கேள்விக்குறி!