தாம்பரத்தில் உள்ள ஜியோன் பள்ளி பேருந்தில் பயணம் செய்த 2ம் வகுப்பு மாணவி ஸ்ருதி, பேருந்துக்குள் இருக்கைக்கு அடியில் ஓட்டை வழியாக கீழே விழுந்து உயிரிழந்தார்.
சிறுமியின் சாவுக்கு காரணமான பள்ளி பேருந்துக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்புதான் எப்.சி. (தகுதிச்சான்று) வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் விபத்துக்கு முக்கிய காரணம், போக்குவரத்து துறை அதிகாரிகள்தான் என்ற வலுவான குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அந்த பேருந்துக்கு தகுதிச் சான்றிதழ் வழங்கிய தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் பட்டப்பசாமி மற்றும் தாம்பரம் மோட்டார் வாகன ஆய்வாளர் ஆகிய அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
அதிகாரிகளைத் தற்காலிகமாக இடை நிறுத்துவதால் தொடரப்போகும் இவ்வாறான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியாது, இந்த விபத்து தனியார் மயமாக்கலின் இலாபவெறியின் படுகொலையே என புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழவில் உயர் நீதிமன்றத்தின் தலையீடும், செயல்பாடும் சட்டத்தை நடைமுறைப்படுத்த அமைக்கப்பட்ட அரசுத்துறைகள், சட்டத்திற்கு புறம்பாக செயல்படும்போது, அதற்கெதிராக பொதுமக்கள் வன்முறையை கையாள்வதில் தவறில்லை என்பதை போன்ற ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்துகிறது.ஆனால் உண்மையில் உயர்நீதி மன்றத்தின் நோக்கம் அதுதானா? http://suraavali.blogspot.in/2012/07/blog-post_27.html
சூறாவளி: சென்னை சிறுமி சுருதியின் சாவில் உயர்நீதிமன்றத்தின் சாகசம்!