இனப்படுகொலையாளிகளை காப்பா ற்றவும், சுயநிர்ணய உரிமையை கைவிடவும்மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுக்குக் கண்டனம்
கடந்த 23-07-2011 அன்று தமிழர் தாயகப்பிரதேசத்தில் இடம்பெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் சிங்கள பௌத்த பேரினவாதக்கட்சிகளையும் அதன் துணைக் குழுக்களையும் தமிழ் மக்கள் நிராகரித்துள்ளதன் மூலம் தமிழ்த்தேசத்தின் தனித்துவத்தினை வெளிப்படுத்தியுள்ளனர். அத்துடன் தமிழ்த் தேசம் வேறு சிங்களதேசம் வேறு என்பதனையும் மீளவும் வலியுறுத்தியுள்ளனர். இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாகஇரண்டு தேசங்களும் வேறுபட்டது என்ற அடிப்படையிலேயே சர்வதேச சமூகம் தமிழ் மக்களதுஇனப்பிரச்சியையை அணுக வேண்டும் என்பதே தமிழ் மக்களது விருப்பம் என்பதனையும்வெளிப்படுத்தியுள்ளனர்.
அனைத்துத் தமிழ் மக்களும் ஒன்றிணைந்துஒற்றுமையாகத் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தால்
· ஸ்ரீலங்கா அரசு மீது சுமத்தப்பட்ட போர்க்குற்றச் சாட்டுக்கள்விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படல்
· தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான அரசியல்தீர்வைஅடைதல்
· தமிழர் தாயகத்தில் இடம்பெறும் நிலப்பறிப்புக்கள், இராணுவமயமாக்கல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு மக்கள் குடியிருப்புக்களில் இருந்து படையினர்வெளியேறல்
போன்ற நிலைப்பாடுகளை ஒருமித்த குரலில் சர்வதேசசமூகத்திற்குக் கூறுவதாக அமையும் என்று தமிழ் மக்கள் உறுதியாக நம்பியதனால் கடுமையான இராணுவநெருக்கடிகளையும், வாழ்வியில் நெருக்கடிகளையும் சந்தித்தவாறு ஒற்றுமையாக ஓரணியில்திரண்டு ஏனைய பேரினவாதக் கட்சிகளையும் நிராகரித்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தனர்.
ஆனால் கூட்டமைப்பினர் தாம் கொள்கையில்உறுதியாக இருப்பதுபோன்று வார்த்தைகளில் மட்டும் வீர வசனங்களைப் பேசி தமிழ் மக்களைநம்பவைத்து வாக்குகளைப் பெற்றுக் கொண்டனர். தேர்தலின் பின்னர் தமது சுயரூபத்தைவெளிப்படுத்தி தமிழ் மக்களது அரசியல் அபிலாசைகளுக்கு முற்றிலும் எதிராக செயற்பட்டுவருகின்றனர்.
தேர்தல் முடிவுகள் வெளியான மறுநாள் 24-07-2011அன்று புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் உரையாற்றிய த.தே.கூட்டமைப்பின்தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் புலம்பெயர் தமிழ்மக்களை சோர்வடையச் செய்து அவர்களால் போர்க்குற்ற விசாரணையை வலிறுத்தி சர்வதேசஅளவில் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளை கைவிடச் செய்யும் வகையில்கருத்துரைத்துள்ளதுடன் சிங்கள மக்கள் தருவதற்குத் தயாராக உள்ளதையே அரசியல் தீர்வாக தமிழர்கள்முன்வைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவித்துள்ள கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் பிரிக்கப்பட்டாத ஐக்கியஇலங்கைக்குள் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படல் வேண்டுமென தமிழ் மக்கள் தமக்கு ஆணைவழங்கியுள்ளனர் என்று கூறியுள்ளார்.
தேர்தலுக்குப் பின்னர் இரா.சம்பந்தன் மற்றும்எம்.எ.சுமந்திரன் ஆகிய இருவரும் சுயநிணர்ய உரிமை, தமிழ்த் தேசம் ஆகிய அடிப்படைக்கொள்கைகளை கைவிட்டு கருத்துக்களை வெளியிட்டுள்ளமையை முக்கியமாகக் கருத்தில் கொள்ளவேண்டும்.
அத்துடன் இவர்கள் இருவரதும் கருத்துக்களை தொகுத்துநோக்கும்போது, தமிழ் மக்களால்ஏகோபித்த அடிப்படையில் கடந்த 20 ஆண்டுகளாக நிராகரிக்கப்பட்டு வந்த 13 ஆம் திருத்தச்சட்டத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட மகாணசபையை அங்கீகரித்து தமிழர்களை சிறுபான்மை இனம்என்று ஏற்றுக்கொண்டு ஒற்றையாட்சி அரசியல் அமைப்புக்குள் அடிமைகளாக வாழும் நிலைக்குள் தள்ளதிரைமறைவு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பதே உண்மையாகும்.
ஸ்ரீலங்கா அரசாங்கத்துடனும், சர்வதேசசமூகத்தினருடனும் தமிழ் மக்களின் பெயரால் மேற்கொள்ளப்படும் பேச்சு வார்த்தைக்கு திரு.இராசம்பந்தன், எம்.எ.சுமந்திரன் ஆகிய இருவருமே தலைமை தாங்குகின்றனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
தமிழ் தேசத்தின் இறைமைக்கான போராட்டத்தில்எமது மக்களும் இளைஞர்களும் செய்த தியாகங்களையும், சந்தித்த இழப்புக்களையும் விலைபேசும்வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.
அதாவது இனப்படுகொலை புரிந்தவர்கள் மீதுசுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றச் சாட்டுக்களுக்கான விசாரணையை தமிழ் மக்கள் விரும்பவில்லைஎன்றும், சிங்கள மக்கள் தருவதற்குத் தயாராக உள்ள எத்தத் தீர்வையும் பெற்றுக் கொண்டுவாழத் தயாராக உள்ளனர் என்ற செய்தியே கூட்டமைப்புத் தலைவர்களின் கருத்துக்களின்தொகுப்பாக சர்வதேச சமூகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களை நிரந்தர அடிமைகளாக்கும் வகையில்தமிழ் மக்களது நலன்களுக்கு எதிரான மேற்படி தலைவர்களது கருத்துக்களை தமிழ் தேசிய மக்கள்முன்னணி வன்மையாகக் கண்டிக்கின்றது.
புலம்பெயர் தமிழ் மக்கள் சர்வதேச சமூகத்துடன்இணைந்து ஸ்ரீலங்காவில் இடம்பெற்றதாகக் கூறப்பட்டுள்ள போர்க்குற்றங்களை விசாரிப்பதற்காகமேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை முறியடித்து ஸ்ரீலங்கா அரசாங்கத்தை காப்பாற்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பு மேற்கொள்ளும் சதிமுயற்சியை தாயகத்திலும், புலத்திலும் வாழும் தமிழ் மக்கள்புரிந்து கொண்டு இவர்களது சதியை முறியடித்து விடுதலை நோக்கிய பாதையில் உறுதியாகப் பயணிக்கவேண்டும் எனக் கோருகின்றோம்.
அத்துடன் தமிழ் மக்கள் மீது புரியப்பட்டஇனப்படுகொலை தொடர்பாக சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணையை சர்வதேச சமூகம்மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியும், தமிழ் தேசத்தின் இறைமை அங்கீகரிக்கப்பட்டஅடிப்படையில் ஒரு நாட்டுக்குள் இரண்டு தேசங்கள் என்ற அரசியல் தீர்வை அடைவதற்காகவும்தமிழ் தேசிய மக்கள் முன்னணி தாயக மக்களுடனும், புலம்பெயர் தமிழ் மக்களுடனும் இணைந்துதொடர்ச்சியாக ஐனநாயக வழியில் செயற்படும் என்றும் உறுதியளிக்கின்றது.
செ.கNஐந்திரன்
பொதுச் செயலாளர்
தமிழ் தேசிய மக்கள் முன்னணி