Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

சுப்ரமணியன் சுவாமி என்கிற பாசிஸ்ட்…

இனியொரு... by இனியொரு...
07/31/2011
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
3
Home பிரதான பதிவுகள் | Principle posts

 

வேறு எந்த வார்த்தையாலும் சுப்ரமணியன் சுவாமியை வர்ணிக்க முடியவில்லை. கடந்த ஆகஸ்ட் 16 அன்று மும்பையிலிருந்து வெளி வரும் டிஎன்ஏ என்ற நாளிதழில், டாக்டர்.சுப்ரமணியன் சுவாமி, இசுலாமியத் தீவிரவாதத்தை ஒழிப்பது எப்படி என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

அந்தக் கட்டுரையில், இந்துக்கள் அமைதியாக இருப்பதால் தான் இந்தியாவில் தீவிரவாதச் செயல்கள் நடைபெறுகின்றன என்ற போக்கில் எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையில், காஷ்மீருக்கு வழங்கப் பட்டிருக்கும் 370 என்ற சிறப்புப் பிரிவை நீக்க வேண்டும், காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அருகே அமைந்திருக்கும் மசூதியை நீக்க வேண்டும், அது போல 300க்கும் அதிகமாக இந்தியாவில் கோவிலுக்கு அருகாமையில் இருக்கும் மசூதிகளை நீக்க வேண்டும், இந்து மதத்திலிருந்து வேறு மதத்துக்கு மாறுவதை தடை செய்ய வேண்டும், பங்களாதேஷ் நாட்டிலிருந்து ஒரு பகுதியை ஆக்ரமிக்க வேண்டும், இந்துக்கள் போர்க்குணத்தோடு மாற வேண்டும், இந்துக்கள் 83 சதவிகிதம் இருக்கும் இந்தியாவில் இந்துக்கள் ஆட்சி நடைபெற வேண்டும் என்று எழுதியிருந்தார். இது போன்ற கட்டுரையை சுப்ரமணிய சுவாமி எழுதுவதற்கான பின்புலம், மும்மையில் நடந்த குண்டு வெடிப்பு.

வெடிகுண்டு வைத்து, அப்பாவி பொதுமக்களையும், குழந்தைகளையும், பெண்களையும் கொலை செய்யும் பாதக செயலைச் செய்பவர்களை நாம் என்றைக்குமே ஏற்றுக் கொள்ள முடியாது. அதே நேரத்தில், இதற்கெல்லாம் காரணம் இசுலாமியர்கள் தான் காரணம் என்று கூறுவது விஷமத்தனமானது.

இந்தியாவில் தீவிரவாதம் பரவ, அதன் வேரில் நீர் விட்டு, வளர்த்தது இந்திய ஆட்சியாளர்கள் தான். காஷ்மீரில், ஐக்கிய நாடுகள் சபை மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்தி, காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இருப்பதா, பாக்கிஸ்தானுடன் சேர்வதா அல்லது தனி நாடாக இருப்பதா என்று முடிவெடுக்க, இந்தியா கொடுத்த வாக்குறுதியை அது இன்று வரை நிறைவேற்றவில்லை. 370வது அரசியல் சட்டப் பிரிவு என்பது, காஷ்மீர் மக்களுக்கு அன்றைய பாரதப் பிரதமர் நேரு கொடுத்த வாக்குறுதி.

இந்தியாவில் தீவிரவாதச் செயல்கள் மிகுந்ததற்கு முக்கிய காரணம், 1992ல் நடந்த பாப்ரி மசூதி இடிப்பு. 1991ம் ஆண்டு சோம்நாத்தில் தொடங்கிய அத்வானியின் ரதயாத்திரை இந்தியாவில் தீவிரவாதம் பரவுவதற்கு முக்கிய காரணியாக அமைந்தது. இது போன்ற குண்டு வெடிப்புகளால், அப்பாவிகள் உயிரிழப்பதோடு, நின்று விடுவதில்லை. அதற்குப் பிறகு நடக்கும் காவல்துறையின் விசாரணைகளால், எண்ணற்ற முஸ்லீம் குடும்பங்கள் தான் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.

ஒரு சிறந்த ஜனநாயக நாடாக, வளர்ந்த பக்குவப்பட்ட மக்களாக வளருவதே ஒவ்வொரு மனிதனின் நோக்கமாக இருக்க முடியும். ஆனால் சுப்ரமணியன் சுவாமி செய்யும் பிரச்சாரமானது, ஹிட்லரின் கோயபல்ஸ் செய்யும் பிரச்சாரத்திற்கு நிகரானது.

300க்கும் அதிகமான, கோயிலுக்கு அருகாமையில் இருக்கும் மசூதிகளை இடிக்க வேண்டும் என்ற கருத்து, மதநல்லிணக்கம் என்ற இந்தியாவின் அரசியல் அமைப்புச் சட்டம் என்ற அடி நாதத்திற்கே வெடி வைப்பதாகும்.

ஒவ்வொரு தீவிரவாதச் செயலுக்குப் பிறகும், முஸ்லீம்கள் தான் காரணம் என்று இசுலாமியர்கள் மீதான வெறுப்புணர்ச்சியை வளர்ப்பதை, சுப்ரமணியன் சுவாமி போன்ற நபர்கள் செய்து வருகின்றனர். இது போன்ற கருத்துக்கள் நல்லிணக்கத்தை வளர்க்க உதவாது. மாறாக, இரு பிரிவினருக்கிடையே வன்முறையைத் தூண்டுவதாக மட்டுமே அமையும். குண்டு வெடிப்பினால், சாதாரண மக்களிடையே ஏற்பட்டுள்ள கோபத்தை வன்முறையாக மாற்றுவதற்கு சுவாமி முயன்றிருக்கிறார்.

இசுலாமியத் தீவிரவாதத்தின் நோக்கம், இந்துக்களை கொல்வது என்று சுவாமி கூறுகிறார். ஆனால், நெருக்கடியான மார்க்கெட் போன்ற இடங்களில் வைக்கப் படும் குண்டு, இந்துக்கள், கிறித்துவர்கள், இசுலாமியர்கள், சீக்கியர்கள் என்று பாரபட்சம் பார்ப்பதில்லை. இந்துக்களே இல்லாத, இந்தோனேசியா, நார்வே, அமேரிக்கா போன்ற இடங்களில் கூடத்தானே குண்டுகள் வெடிக்கின்றன ? தீவிரவாதத்துக்கு மதமோ நிறமோ கிடையாது.

சுப்ரமணியன் சுவாமியைப் போன்ற நபர்களே, தீவிரவாதத்துக்கு உரமாக இருக்கிறார்கள். வன்முறைச் சம்பவங்களால், அமைதி குலைந்து, வன்முறை தாண்டவமாட வேண்டும் என்ற எண்ணத்தில் வைக்கப் படும் குண்டுகளை செய்யும் காரியங்களை, சுவாமி போன்றவர்கள் தங்கள் பேச்சுக்களாலும், எழுத்துக்களாலும் செய்கிறார்கள். இசுலாமியர்கள், இந்தியா இந்துக்களின் நாடு என்பதை ஒப்புக் கொண்டு வாழ வேண்டும் என்பது எத்தகைய விஷமத்தனமான பிரச்சாரம் ?

இந்தியாவை ஆண்ட இசுலாமிய மன்னர்களான அக்பர் மற்றும் ஷாஜஹானுக்கு மதநல்லிணக்கத்தின் மீது இருந்த நம்பிக்கையின் காரணமாகவே, 1947ல் இந்தியாவில் 75 சதவிகிதம் பேர் இந்துக்களாக இருந்தனர். 300 மசூதிகளை இடிக்க வேண்டும் என்ற சுவாமியின் கோரிக்கை, சாதாரண இசுலாமியர்களை தீவிரவாதிகளின் பக்கம் கொண்டு சேர்க்காதா ?

கல்விக்கும் அறிவுக்கும் சம்பந்தமே இல்லை என்பதைத் தானே சுவாமியின் கட்டுரை நிரூபிக்கிறது ? படித்த படிப்பு ஒரு மனிதனை பண்படுத்தாமல், மற்ற சமூகத்தின் மேல் விஷத்தை கக்குவதை சொல்லிக் கொடுத்தால், அதை விட கல்லாத பாமரன் எவ்வளவோ மேல் அல்லவா ?

இந்தியாவில் இசுலாமியர்கள் மட்டும் தான் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்றால், மாலேகான் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட இந்து சாமியார்களை எந்த வகையில் சேர்த்துக் கொள்வார் டாக்டர்.சுவாமி ?

கருத்துச் சுதந்திரத்திற்கு எந்த அளவிற்கு உரிமை இருக்கிறதோ, அந்த அளவுக்கு அதை கவனமாக பயன் படுத்த வேண்டும். கருத்துச் சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் சொல்லி விடலாம், எழுதி விடலாம் என்பதும், ஜனநாயத்திற்கு மிகுந்த ஆபத்தில் போய் முடியும்.

சுப்ரமணியன் சுவாமியும், அவரின் விஷம் கக்கும் கட்டுரையை வெளியிட்ட டிஎன்ஏ நாளேட்டின் ஆசிரியர் ஆதித்ய சின்ஹாவும், வன்மையான கண்டனத்திற்கு உரியவர்கள். சுவாமியின் கட்டுரையைத் தொடர்ந்து, மஹாராஷ்டிர மாநில, சிறுபான்மையினர் கமிஷன், டாக்டர்.சுவாமியை கைது செய்ய வேண்டும் என்று மும்பை காவல்துறை ஆணையருக்கு கடிதம் எழுதியிருக்கிறது.

சுவாமி போன்ற நபர்களின் கோயபல்ஸ் வகையிலான பொறுப்பற்ற பேச்சுக்கள், வன்மையான கண்டனத்திற்கு உரியன.

நன்றி : சவுக்கு

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

நிருபாமாவிற்கு விருந்து வழங்கிய ராஜபக்ச

Comments 3

  1. தமிழன் says:
    15 years ago

    சு.சாமி கட்டுரையை ஒழுங்காகப் படியுங்கள்.அவர் சொல்லும் பல உத்திகள் பதிலடியாக செய்ய வேண்டியவை என்றுதான் எழுதியுள்ளார்.அதாவது பாகிஸ்தானின் உத்தி இதுவென்றால் பதிலடி இது என்று.அப்பாவி முஸ்லீம்களை அவர் ஒன்றும் சொல்லவில்லை. தீவிரவாதிகளால் மூளை சலவை செய்யப்பட்ட,தீவிரவாதத்தினை
    ஆதரிக்கும் முஸ்லீம்களையே கண்டிக்கிறார். கோவையில் குண்டு வைத்தது யார்.

    .பாகிஸ்தான் 26/11க்கு காரணமாக இருந்து கொண்டே அதில் ஈடுபட்ட  குற்றவாளிகளை காக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள எந்த முற்போக்கு,இஸ்லாமிய இயக்கங்களாவது பாகிஸ்தானை கண்டித்து ஒரு கூட்டமாவது போட்டிருப்பார்களா.சு.சாமி சொல்வதை நான் ஏற்கமாட்டேன்.இஸ்லாமிய தீவிரவாத ஆபத்தே இல்லை என்று சவுக்கு பொய் சொல்கிறார்.சவுக்கின் சகவாசம்தான் அதற்கு காரணம்.கசாபை தூக்கில் போட வேண்டும் என்று தீர்ப்பு கொடுத்தால் மருதையனும்,வினவும் அதை எதிர்த்து எழுதுகிறார்கள்.அ.மார்க்ஸ் முதல் மருதையன் வரை எல்லோரும் இதில் ஒரே அணிதான் – பாகிஸ்தானை விமர்சித்து எழுதமாட்டார்கள், இஸ்லாமிய தீவிரவாதம் இல்லவே இல்லை என்பார்கள், இந்துக்களை மட்டும் திட்டுவார்கள். சவுக்கு இவர்களை விமர்சித்து ஏன் எழுதுவதில்லை.

  2. தமிழன் says:
    15 years ago

    ‘இந்தியாவில் தீவிரவாதம் பரவ, அதன் வேரில் நீர் விட்டு, வளர்த்தது இந்திய ஆட்சியாளர்கள் தான். காஷ்மீரில், ஐக்கிய நாடுகள் சபை மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்தி, காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இருப்பதா, பாக்கிஸ்தானுடன் சேர்வதா அல்லது தனி நாடாக இருப்பதா என்று முடிவெடுக்க, இந்தியா கொடுத்த வாக்குறுதியை அது இன்று வரை நிறைவேற்றவில்லை. 370வது அரசியல் சட்டப் பிரிவு என்பது, காஷ்மீர் மக்களுக்கு அன்றைய பாரதப் பிரதமர் நேரு கொடுத்த வாக்குறுதி.’

    சவுக்கின் அறியாமைதான் இப்படி எழுதவைக்கிறது.பாகிஸ்தான் ஆக்கிரமித்த பகுதிகளிலிருந்து வெளியேறவில்லையே.அது சரிதானா.பாகிஸ்தான் வெளியேறினால்தான் அன்றைய ஜம்முகாஷ்மீர் பகுதியாக இருந்ததில் வாக்கெடுப்பு நடத்த முடியும்.இந்தியாவில் காஷ்மீரில் தீவிரவாதத்தினை தூண்டிவிட்டு வன்முறைக்கு ஊக்கம் கொடுத்த பாகிஸ்தானைப் பற்றி ஒரு வரி எழுதாமல் சு.சாமியை  திட்டுகிற சவுக்கு ஏன் 1989-90ல் காஷ்மீரில் ஜிகாதிகள் செய்த வன்முறை வெறியாட்டங்களை, காஷ்மீர் பண்டிட்கள் அகதிகளாக்ப்பட்டத்தை பற்றி ஒரு வரி கூட எழுதவில்லை.அதெல்லாம் அத்வானியின் யாத்திரைக்கு முன் நடந்தவை.அதற்கு காரணம் யார்-பாகிஸ்தான்+ஜிகாதிகள். 
    ‘இந்துக்களே இல்லாத, இந்தோனேசியா, நார்வே, அமேரிக்கா போன்ற இடங்களில் கூடத்தானே குண்டுகள் வெடிக்கின்றன ? தீவிரவாதத்துக்கு மதமோ நிறமோ கிடையாது.’
    ஆகவே இந்துக்கள் தீவிரவாதம் செய்வதில்லை என்பதை ஒப்புக்கொள்கிறாரா சவுக்கு.
    9/11க்கு காரணம் இஸ்லாமிய தீவிரவாதம்தானே.ஒசாமா பின் லேடன் என்ன அமைதியின் தூதுவரா.அவர் கொல்லப்பட்ட போது அஞ்சலி தொழுகை நடத்தினார்களே தமிழக முஸ்லீம்களில் சிலர், பள்ளிவாசல்களில்.அது ஏன் நடத்தப்பட்டது.அவனுக்கும்
    எங்களுக்கும் தொடர்பே இல்லை,தீவிரவாதியான அவனால் எங்கள் மதத்திற்கு கெட்ட பெயர் என்று ஏன் அவர்கள் சொல்லவில்லை. இதிலிருந்தே தெரியவில்லையா,இவ்ர்களின் ஆதரவு யாருக்கு என்று.சவுக்கு முதலில் அவர்களை கண்டித்து எழுது,அப்புறம் சாமியை திட்டு.அதை விட்டுவிட்டு புளுகாதே.

    • THAMIL MARAN says:
      15 years ago

      அவர்கள் எல்லாம் தவறூ என்ப்தற்காக நாமுமா தவறூ செய்ய வெண்டும்.அமெரிக்காவில் விரிவுரையாளர் அமெரிக்க அரை லூசு போலா எழுதுவது?சவுக்கை நான் வரவேற்கிறேன்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...