2011 ஆம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டின் சுன்னாம்பு நீர்ப்படுகையில் நச்சுப் படிவுகளை ஏற்படுத்தி பேரழிவுகளைத் தோற்றுவித்துக்கொண்டிருந்த சுன்னாகம் அனல் மின்னிலையத்தின் உள்ளக உற்பத்தியை நிறுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இன்றைய இலங்கை அரசின் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்கவே இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
சம்பிக்க ரணவக்க ராஜபக்ச அரசில் எரிசக்தி மற்றும் மின்வலு அமைச்சராகவிருந்த காலத்தில் நொதேர்ன் பவர்ஸ் என்ற நிறுவனம் சுன்னாகம் அனல் மின்நிலையத்தில் மின்சார உற்பத்தி நடத்திக்கொண்டிருந்தது.
யாழ்ப்பாணக் குடா நாட்டில் சுன்னாகத்தை மையமாக கொண்ட நிர்ப் படுக்கைகளை நச்சாக்கிற்று. நீரை அருந்தியவர்களுக்குப் புற்று நோய் உருவானது. பயிர்ச்செய்கை அழிந்து போனது. செம்மண் சார்ந்த வளமான நிலப் பகுதியான இணுவில், உரும்ம்பிராய், ஏழாலை, தெல்லிப்பளை, ஊரழு பகுதிகள் எல்லாம் பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டது.
அமைச்சராகவிருந்து ஒரு பெரும் நிலப்பரப்பையே நாசப்படுத்திய சம்பிக்க ரணவக்க இன்று நோதேர்ன் பவர்ஸ் இன் மின் உற்பத்தியை மூடுமாறு உத்தரவிட்டுள்ளார்.
2014 ஆம் ஆண்டு நச்சுக் கழிவுகளை வெளியேற்றி சூழலை மாசுபடுத்தக் காரணமாகவிருந்த இத்தாலியரான ஆன்ரியோ கியாக்கபோன் என்பவரை உலகப் போலிஸ்படையான இன்டர்போல் தேடிவருவதாகவும் அவர் தப்பியோடிவிட்டதாகவும் அறிவித்தது.
ஜாதிக ஹெல உறுமைய என்ற சிங்கள பௌத்த அடிப்படைவாதக் கட்சியைச் சார்ந்த சம்பிக்க ரணவக்க நான்கு வருடங்களாக – 2010 இலிருந்து 2014 வரை – குடா நாட்டின் ஒரு பகுதியை நச்சாக்குவதற்குக் காரணமாகவிருந்துள்ளார்.
இன்று நோதேர்ன் பவர்ஸ் நிறுவனம் சூழலை நச்சாக்கியது என்று சம்பிக்க ரணவக்கவே வாக்குமூலம் கொடுத்து அந்த நிறுவனத்தை மூடக் கோரியுள்ளார். ஆக, 2010 ஆம் ஆண்டிலிருந்து நான்கு வருடங்கள் மின்வலு அமைச்சராகவிருந்து சூழலை மாசுபடுத்திய சம்பிக்க இன்டர்போலின் பார்வைக்கு குற்றவாளியில்லையா? இன்டர்போலால் தேடப்படும் எவரும் தமது குற்றங்களைத் தாமே ஒப்புக்கொள்வதில்லை. சம்பிக்க ரணவக்க சூழலை மாசுபடுத்தியதைத் தானே ஒப்புக்கொண்டுள்ளார்.
கடந்த நான்கு வருடங்களாக இந்த அழிவை மேற்கொண்ட ஒருவர் இன்றும் அதே பதவியில் தொங்கிக்கொண்டிருக்க அனுமதிக்க முடியுமா? மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சராகத் தொடர முடியுமா?
புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரழந்தவர்கள், குழந்தைப் பேறு அற்றுப்பொனவர்கள், விவசாய நிலங்களையும், குடி நீர் வசதிகளையும் இழைந்து அனாதைகளாக்கப்பட்டவர்கள் போன்ற அனைவருக்கும் சம்பிக்க ரணவக்க பதில் சொல்ல வேண்டும்.
ஊழலை அழிக்கிறோம், குற்றவாளிகளைத் தண்டிக்கிறோம் என்று கூறும் சாம்பார் அரசில் அங்கம் வகிக்கும் அடிப்படைவாதியும் குற்றவாளியுமான சம்பிக்க மட்டும் தண்டிக்கப்படாமலிருப்பதன் பின்னணி என்ன?
2007 ஆம் ஆண்டில் மலேசியாவைத் தளமாகக் கொண்ட எம்.ரி.டி கப்பிடல் என்ற பல்தேசிய வர்த்தக நிறுவனம் இலங்கையில் நோர்தேர்ன் பவர் என்ற நிறுவனத்தின் 80 வீதமான பங்குகளை வாங்கிக்கொண்டது. நோர்தேர்ன் பவர் என்ற நிறுவனத்தை ஜெகான் பிரசன்ன அமரதுங்க என்ற தனி மனிதனே நடத்திவந்தார். நோர்தன் பவர் நிறுவனதினூடாக சுன்னாகம் மின்சார உற்பத்தி நிலையத்தை வாங்கிக்கொண்ட எம்.ரி.டி கப்பிடல் அங்கு மின்சார உற்பத்தியை 2008 ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் ஆரம்பித்தது. அதுவரையில் டீசல் பாவிக்கப்பட்டு உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் 2008 இலிருந்து பேர்னாஸ் கழிவு எண்ணையைப் பயனபடுத்தி உற்பத்தி செய்யப்பட்டது.
கட்டுமானத்துறை, நிதி முதலீடு போன்ற துறைகளில் ஈடுபட்டிருந்த பன்னட்டு நிறுவனமான எம்.ரி.டி கப்பிடல் யாழ்ப்பாணத்திலேயே முதல் தடவையாக மின்சார உற்பத்தியைப் பரிசோதித்தது. போரால் விழுங்கப்பட்ட மக்களின் வாழ்கையின் மீது பரிசோதனை நடத்த ஆரம்பித்த எம்.ரி.டி கப்பிடல் தனது இலங்கைக் கிளையை எம்.ரி.டி வோக்கேர்ஸ் என அழைக்க ஆரம்பிதது.
எம்.ரி.டி வோக்கெஸ் இன் இயக்குனர்களில் ஒருவராக பிரித்தானிய ஆளும் கன்சட்வேட்டிவ் கட்சியின் பிரதான உறுப்பினரும் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்டவருமான நிர்ஜ் தேவா என்பவர் செயற்படுகிறார் . ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினரான இவர் பிரித்தானியாவிலேயே ஊழலுக்குப் பேர்போன பேர்வளி.
சூழலை அழிக்கும் வெவ்வேறு நிறுவனங்கள் சட்டத்திலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக நிர்ஜ் தேவாவை இயக்குனராகச் சேர்த்துக்கொண்டுள்ளன. இன்றைய இலங்கை அரசின் ஆதரவாளரான தேவா இன்டர்போலின் கண்களிலிருந்து தப்பித்தது எப்படி? தேவா தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளியா இல்லையா?
ராஜபக்சவின் இனக்கொலை அரசில் அங்கம் வகித்த சிங்கள பௌத்தப் பேரினவாதி சம்பிக்க ரணவக்கவிலிருந்து நிர்ஜ் தேவா உட்படப் பலர் யாழ் குடா நாட்டை அழிப்பதில் பங்காற்றியுள்ளனர். இவர்கள் தண்டிக்கப்படாவிட்டால் வேறு வழிகளில் உள்ளே நுளைந்துகொண்டே இருப்பார்கள்.
சுன்னாகம் நொதேர்ன் பவர் நிறுவனத்தை சம்பிக்க மூடுமாறு வழங்கிய உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுமா என்ற சந்தேகங்கள் எழுந்தாலும் கண்துடைப்பிற்காவது சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம். மைத்திரி அரசின் எடுபிடிகளாக மாறியுள்ள புலம்பெயர் ஊடகங்களின் ‘பிரேக்கிங் நியூஸ் ‘ அருவருப்புக்கள் இலங்கையில் சொர்க்கத்தின் வாசல் திறக்கப்பட்டிருப்பதாக பீற்றிக்கொள்கின்றன.
சுண்ணாம்பு நீர்ப் படுக்கைகளில் 2008 ஆம் ஆண்டில் ஆரம்பித்து இன்றுவரை படிந்திருக்கும் நச்சு இன்னும் எவ்வளவு பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பது கணிப்பிடப்படவில்லை.
அந்த நீரைச் சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிப்பதற்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும். குற்றவாளிகள் சிறைப்பிடிக்கப்பட வேண்டும்.
இவை நடைபெறாவிட்டால் தமக்குத் தேவைப்படும் நேரங்களில் யார் வேண்டுமானாலும், எந்த வகையிலும் அழிவுகளை மேற்கொள்ளலாம். மக்களின் நிலங்களை ஆக்கிரமிக்கலாம். உணவிலும் நீரிலும் நஞ்சு கலக்கலாம். சாரி சாரியாக மக்களைக் கொன்று போடலாம்.
இன்று தெரிந்தோ தெரியாமலோ சம்பிக்க ரணவக்க தானும் தான் சார்ந்தவர்களும் மேற்கொண்ட குற்றங்களுக்கு ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இதனை ஆதாரமாகக் கொண்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதும், பாதிக்கப்பட்டவர்கள் நியாயம் பெறுவதும், நஞ்சு சுத்திகரிக்கப்படுவதும் அவசியமானது.
2009 ஆம் ஆண்டு வன்னிப் படுபாதகக் கொலைகள் நிறைவேறிக்கொண்டிருக்கவே நொதர்ன் பவர் கொம்பனி-உம் முதலில் டீசல் எண்ணெயை பாவித்தே செயற்படுகிறது,
முஸ்லிம் மக்களை “வெளியார்” (outsiders) என புறந்தள்ள்ளி ராஜபக்சவுக்கு துவேசவாதம் கற்பிக்க ஆரம்பித்த சம்பிக்க ரணவக்க 2010 ஆம் ஆண்டு எரிசக்தி அமைச்சனாக நியமனம் பெறுகிறான்
http://www.bbc.co.uk/sinhala/news/story/2008/11/081107_muslim_protest.shtml
அதே நேரம் சிலகாலம் கழித்து நிராஜ் தேவாவும் ரவி விஜேரட்ன எனும் பிரித்தானிய தனவந்தனும் இரு பெரு கள்ளன்கள் நொதர்ன் பவர் கொம்பனியின் 100% உரிமை கொண்டாடும் எம்.டி.டீ வோக்கர்ஸ் நிறுவன்த்தில் இயக்குனன்களாக இணைகின்றனர். இவ்விரு கொள்ளைக்காரர்களும் கடல் போக்குவரத்துக்கு பாவிக்கப்படும் கழிவு எண்ணெய், அதாவது எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளின் கச்சா எண்ணெய்-இன் அடிமட்ட தேக்கம் (டீசல், மண்ணெண்ணெய் போன்றவை கூட கச்சா எண்ணெய் வெப்பமூட்டப்பட்டு வெப்பநிலைகளுக்கு ஏற்ப காய்ச்சி வடிக்கப்படுபவை) – கப்பல் துறையில் பங்கர் ஒயில் (Bunker Oil) எனவும் அனல் மின்நிலைய பாவனைக்கு ஹெவி புfயல் ஒயில் (Heavy Fuel Oil) எனவும் பாவனையாகும் வியாபார நடத்தைகளுக்கு அண்டித்தவர்கள்.
இந்நியமனங்களோடு தான் நொதர்ன் பவர் கொம்பனி தனது சுயரூபத்தை எடுக்கிறது. அதாவது ஹெவி புfயல் ஒயில் (Heavy Fuel Oil) பாவனை தொடக்கப்படுகிறது. அதனோடு இணைந்து தான் மின்சாரசபையை அண்டிய கிணறுகளில் நீர் எண்ணெயால் மாசடைய ஆரம்பிக்கின்றன.
சம்பிக்க ரணவக்க எரிசக்தி துறையில் குறிப்பாக மின்சாரம் பற்றிய அறிவியலில் கைதேர்ந்தவன். அதற்கும் மேலாக சுற்றுச் சூழல் மாசடைவதை எதிர்க்கும் அரசியலாலேயே தனது துவேச அரசியலை முன்னெடுத்தவன். இதனாலேயே 2010-க்கு முன்னராக ராஜபக்ச அரசின் சுற்றுச்சூழல் சார்ந்த அமைச்சனாகத் திகழ்ந்தவன்.
உலகளாவிய ரீதியில் ஹெவி புfயல் ஒயில் (Heavy Fuel Oil) சுற்றுச் சூழல் மாசடையச் செய்யும் ஒரு முக்கிய காரணி. இதன் நிமிர்த்தமே ஐரோப்பிய ஒன்றியம் ஹெவி புfயல் ஒயில் (Heavy Fuel Oil) மீது கண்டிப்பான பல தடைகளை ஐரோப்பாவிலே நடைமுறைப்படுத்துகிறது. ஆகலும் அடிமட்ட ஹெவி புfயல் ஒயில் (Heavy Fuel Oil) முற்று முழுதாக ஐரோப்பாவிலும் பல மேற்கத்திய நாடுகளிலும் அறவே தடை செய்யப்படுகிறது. இந்த நிலையில் தான் ஸ்ரீலங்கா ஒரு ஹெவி புfயல் ஒயில் (Heavy Fuel Oil) கழிவுச்சாலையாகிறது. எம்பில்லிபிட்டியாவிலும் பல சிறிய மின்னுற்பத்தி நிலைகளிலும் நொதர்ன் பவர் கொம்பனி-யை விட கூடியளவு பாவனை காண்பது இந்த ஹெவி புfயல் ஒயில் (Heavy Fuel Oil).
ஆனால் யாழ் குடாநாட்டின் சுண்ணக் கல் படுகை, முழுக்கவே நிலக்கீழ் நீர்த்தேக்கத்தின் மீது தங்கிய நீர்ப்பாவனை முறைமை என்பன ஒருபுறமாகவும், மறுபுறம் குறைந்த பட்சம் ‘குற்றவியல் அலட்சியம்’ (Criminal Negligence) காரணமாகவும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுவிட்டது.
இதிலும் உள்ளூர் விசாரணை என சம்பிக்க ரணவக்க தப்பவே முயற்சிப்பான். ஆனால் நிராஜ் தேவாவும், ரவி விஜேரட்ன-உம் பிரித்தானியர் என்ற அடிப்படையிலேயே சிவில் சட்ட நடவடிக்கைகளுக்கே ஆளாக வேண்டிய நிலை உருவாகியுள்ளது. அதாவது நொதர்ன் பவர் கொம்பனி தான் நீரை மாசடையச் செய்கின்றது என்பது உறுதியாகும் நிலைக்கு மேலும் தள்ளப்பட்டுவிட்டது.
எரிபொருளை நிலக்கீழ் துருப்பிடித்த தங்கிகளில் ஒழுக ஒழுக சேமித்து வைத்திருக்கலாமோ எனத் தோன்றினாலும், பலர் இதுவரை நாம் காணும் விதத்தில் ஆதாரங்கள் இல்லாமல் வெறுமனே கழிவு எண்ணெய் கிணறுகள் வெட்டித் தாக்கப்படுகின்றது எனும் ஒரு கோட்பாட்டை பரப்புவதும் ஆதாரங்களுடன் ஊர்ஜிதப்படுத்தப்பட வேண்டும்.
சம்பிக்க ரணவக்க அப்புறப்படுத்தப்பட்டிருந்த அண்மைய காலகட்டத்தில் 185 நாட்களில் அவசர அவசரமாக கட்டிமுடிக்கப்பட்ட இன்னொரு 24 MW “உதுரு ஜனனி” அனல் மின்னுற்பத்தி நிலையமும் சுற்றுச் சூழல் மாசடையச் செய்யும் ஹெவி புfயல் ஒயில் (Heavy Fuel Oil) பாவிக்கும் ஒரு அநியாயமே.
கீழுள்ள இணைப்பில் பல திசைதிருப்பும் பொய்களுக்கு மத்தியில் சந்தேகங்களைக் கிளப்ப வேண்டிய முக்கிய வசனமொன்று :-
// எரிபொருள் களஞ்சியப்படுத்தல்இ ஏனைய வசதிகளுடன் கூடிய இந்த மின் நிலையம் சுற்றாடல் சார் கழிவூ பொருட்கள் பயன்பாட்டு முறைமையையூம் கொண்டதாகும்.
நிலத்தின் மேல் எரிபொருள் களஞ்சியம் 2014-இல் அந்திரப்பட்டபடி அவசர அவசரமாக எழுப்பப் பட்டமையை மேற்கோள் காட்டி கேட்கப்படவேண்டிய முக்கிய கேள்விகள்:-
24 MW ‘நொதேர்ன் பவர் கொம்பனி’ அனல் மின்னுற்பத்தி நிலையம் எங்கே ஹெவி புfயல் ஒயில் (Heavy Fuel Oil)-ஐ களஞ்சியப்படுத்தியது?
எப்பேர்ப்பட்ட ஹெவி புfயல் ஒயில் (Heavy Fuel Oil) பாவிக்கப்பட்டது? இன்னும் பாவிக்கப்படுகிறது?
ஹெவி புfயல் ஒயில் (Heavy Fuel Oil) எரிசக்தி உருவாக்கப்பயன்படுத்தப்பட முன்னர் சுன்னாகம் மின்சார சபை வலாகத்தில் வைத்தே சுத்திகரிக்கப்படுகிறதா? எரிசக்தி உருவாக்கப்பயன்படுத்தப்பட்ட பின்னரும் எவ்வளவு வீதம் எரிக்க முடியாத கழிவாகிறது?
(இக்கழிவின் கழிவு கிணறுகள் வெட்டித் தாக்கப்படுவதாக பல செய்திகள் உலாவந்தாலும் ஊடகங்களில் ஆதாரங்கள் வெளிவந்தபாடாயில்லை)
பயங்கரவாத அரசின் மின்சக்தி அமைச்சின் பொய்கள் மத்தியிலிருந்து:-
http://powermin.gov.lk/tamil/?p=3278
பெப்ரவரி 2013
இந்த வருட இறுதியினுள் முழு தீவையூம் மின்சாரத்தால் ஒளிமயப்படுத்த மஹிந்த சிந்தனையின் முன்னெடுப்பிற்கு அமைய மின்வலு சக்தி அமைச்சால் யாழ்ப்பாண மாவட்ட மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட ..உதுரு ஜனனி.. புதிய மின் நிலையம் இன்று காலை மின்வலு சக்தி அமைச்சர் வழக்கறிஞர் பவித்ரா வன்னி ஆரச்சி அவர்களின் அழைப்பில் அதிமேதக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் கரங்களால் திறந்து வைக்கப்பட்டது.
இது வரையில் தனியார் துறையில் மின்சாரத்தை கொள்வனவூ செய்து யாழ்ப்பாண மக்களின் மக்களின் மின்சார தேவையை பூர்த்தி செய்ததுடன் அதற்காக இ.மி.ச பாரிய தொகையை செலவிட்டது. மின்சக்தி துறை முகங் கொடுத்துள்ள நெருக்கடி நிலையில் இருந்து மீள விலை குறைந்த மின்சார உற்பத்தி முறையை பின்பற்றும் திட்டத்தின் கீழ் எண்ணெய் உபயோகித்து செயற்படும் இந்த புதிய மின் நிலையத்தில் ஒரு மின் அலகிற்காக செலவாகும் ரூ. 17.86 ஆகும். 24 மெகா வோட் திறனுடனான இந்த உதுரு ஜனனி மின் நிலையத்தில் வருடாந்த மின்சார திறன் 176 மில்லியன் அலகுகள் ஆகும். இதன் ஊடாக இலங்கை மின்சார சபையின் வருடாந்தம் ரூ. 1350 மில்லியன் தொகையை மீதப்படுத்த முடியூம் என கணக்கிடப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையின் வழிநடத்திலின் கீழ் தேசிய நிறுவனமான லக்தனவி நிறுவனத்தின் ஊடாக கடந்த வருடத்தின் ஏப்ரல் மாதம் நிர்மாண பணிகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் இந்த மின் நிலையத்தின் வேலை பணிகள் இவ்வருடம் ஜகவரி மாதமளவில் நிறைவூ பெற்றது. தேசிய முதலீட்டில் தேசிய பொறியிலாளர்களின் தலையீட்டில் நிர்மாணிக்கப்பட்ட இந்த “உதுரு ஜனனி” புதிய மின் நிலையத்திற்காக ரூ. 3500 மில்லியன் தொகை செலவாகியூள்ளதாக கணக்கிடப்பட்டு உள்ளது. எரிபொருள் களஞ்சியப்படுத்தல்இ ஏனைய வசதிகளுடன் கூடிய இந்த மின் நிலையம் சுற்றாடல் சார் கழிவூ பொருட்கள் பயன்பாட்டு முறைமையையூம் கொண்டதாகும்.
இந்த விஸேட நிகழ்வில் மின்வலு சக்தி பரதி அமைச்சர் ப்றேமலால் ஜயசேகர அவர்கள்இ சிறு கைத்தொழில் மற்றும் சிறு வியாபார அபிவிருத்தி அமைச்சர் டக்லஸ் தேவானந்தஇ சப்ரகமுவ மாகாண சபை தலைவர் திரு.காஞ்சன ஜயரத்ன அவர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற எறப்பினர்கள் மேலும் வெளிநாட்டு அரச முதலீட்டாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Is this going to be like a mini Bhopal…?
இந்தியாவின் ஒப்பிடமுடியாத மாபெரும் அவலங்களுடன் ஒப்பிட முயல்வது கவலைக்குரியது.
நிராஜ் தேவா எவ்வாறு ‘தெற்காசியாவுக்கான எரிசக்தி மாபெருந்திட்டம்’ எனும் கோட்பாட்டில் (1999 ஆம் ஆண்டளவில் வரையறுக்கப்பட்டது) ஸ்ரீ லங்காவின் தூதுவன் போல் அண்மைக்காலங்களில் பங்கேற்கிறான் என நோக்கினால் சுன்னாகத்தில் நடக்கும் அழிவுகளை போபால் அநியாயத்தோடு தொடர்பு கொள்ள முயற்சிக்கலாம். பெரிய அழிவை ஏற்படுத்திய போபால் வாயுக் கசிவு பலகாலமாக அழிந்து போயிருந்த ஒரு சுற்றுச் சூழலிலேயே நிகழ்ந்தது. போர் நிமிர்த்தம் யாழ் குடாநாடு அபிவிருத்தி எனும் பொய் மாயையில் இருந்து தப்பிப்பிழைத்துள்ளதாகவும் இதனை நோக்கலாம்.
ஆனால் போபால் அழிவு சிறிதாகப் போகும் வகையில் திருகோணமலை முதல் வன்னி நிலப்பரப்பு ஊடாக மிகப்பெரும் சுற்றுச் சூழல் மாசடையப்போகும் அநியாயங்கள் தமிழர் தாயக பூமியின் வட எல்லைகளுக்கு திட்டக்குழாயில் வந்த வண்ணம் இருப்பதை நாம் நோக்க வேண்டும். நிராஜ் தேவா சுன்னாகத்தில் பிரசன்னமாவது முதற்துளிகள்.
Read all my comments in other sites… you’ll know…
This is not started now & it’s not a overnight issue…
Bhopal was a Human negligence disaster…
The result a long term illness… evacuation…
Here…
I can say, it’s well master planned slow process disaster…
But for this our Tamil Politicians, leaders, government workers & media directly & indirectly supported…
Only someone one have to come forward without any selfish & only with a team wok with some international help only we can clear all these mess…
In these few days within my capacity contacted few people & getting more info from net I’m writing this very confident…
When everyday pass… we’re loosing…
Guys open your eyes…
May be we are not directly affected… But the HUMANS…
For all these time former UPFA alliance Doglost Thaavunaanthaa doesn’t know about this disaster…?
தமிழ் மக்கள் தாம் மட்டுமல்ல சிங்கள் மக்களையும் இப்போது கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இணைத்து கொண்டு போராட்டங்களை தொடர வேண்டும். உயிர் வாழ்வை தகர்க்க இருக்கும் இந்த கொடுமைக்கு எதிராக மக்கள் இப்போதே போராட வேண்டும்
இனி வரும் காலங்களில் இருக்கும் மிச்ச மீதி வளங்களையும் அழிப்பதற்கு சுவாமி நாதன் போன்ற இந்திய விஞ்ஞானிகள் இலங்கையை முற்றுகையிடுவார்கள்.