சட்ட வல்லுனர்கள், தேசியவாதிகள், விதேசிகள் என்ற பல்வேறு பிரிவினரை உள்ளடக்கிய வட மாகாண சபை சுன்னாகம் அழிவு தொடர்பான போலி அறிக்கை ஒன்றைத் தயாரித்து மக்கள் மத்தியில் திணித்தது. ஆய்வு நடத்தியதாகக் கூறிய குழு அமர்ந்திருக்க முதமைச்சர் தலைமையிலான குழு அனைத்தையும் அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறது. காணொளியின் பதினைந்தாவது நிமிடத்திலிருந்து மருத்துவக் கலாநிதி முரளி வல்லிபுரநாதன் வடமாகாண சபையின் வரலாற்றுத் துரோகத்தை ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்துகிறார்.