கட்டுனாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தை சார்ந்த பகுதிகளில் பெருந்தொகையான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச விமான நிலையத்தைச் சூழந்த் பகுதிகள் எங்கும் இராணுவத்தினர் காணப்படுகின்றனர். இந்தியா, சீனா, ஜப்பான், வடகொரியா ஆகிய நாடுகளின் ஆடைத்தொழிற்சாலைகள் இலங்கையின் முதன்மையான சுதந்திர வர்த்தக வலயமே இராணுவத்தினரின் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
வடகிழக்கைக் கையாள்வதற்காக என ஏற்படுத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் அடிப்படையில் இராணுவத்தினரை நாட்டின் எந்தப்பகுதியிலும் பாதுகாப்புக் காரணங்களுக்காக அனுப்பலாம். அதே வேளை இராணுவத்தினர் பாதுகாப்பிற்கு எதிரானது எனக் கருதும் எவ்வகையான நடவடிக்கைகளுக்கும் எதிரான எந்த முடிவையும் மேற்கொள்ளலாம். இச்சட்டத்தின் அடிப்படையிலேயே இராணுவத்தினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேசாளர் தெரிவித்தார்.
அரோகரா !