Friday, March 6, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

சீமான் – ஒரு எச்சரிக்கைக் குறிப்பு : நிவேதா

இனியொரு... by இனியொரு...
06/25/2012
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
12
Home பிரதான பதிவுகள் | Principle posts

சக மனிதன் மீதுள்ள பற்றிலிருந்தே சமூகப்பற்று எழுகிறது. மனிதர்கள் மீதுள்ள பற்றும் அபிமானமுமே ஒருவனை ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடத் தூண்டுகிறது. மக்களின் ஒருபகுதியினரை அடக்கும் நோக்கோடு அதிகாரத்தைப் பங்கு போட்டுக்கொள்வதென்பது ஒரு போதும் விடுதலையைப் பெற்றுத் தராது. இந்தச் சிறிய அடிப்படையிலிருந்தே நண்பர்களையும் எதிரிகளையும் அடையாளம் கண்டுகொள்ளலாம். சந்தர்ப்பவாதிகளையும், ஒடுக்குமுறையாளர்களையும், அரசியல் வியாபாரிகளையும், பயங்கரவாதிகளையும் நண்பர்களாக் கருதும் எந்த விடுதலைப் போராட்டமும் எதிர்ப்புரட்சிகரப் பண்பையே கொண்டிருக்கும்.

ஒரு வகையில் ஈழ விடுதலைக்கான போராட்டம் என்பது அதன் தோற்றுவாயிலிருந்தே எதிர்ப் புரட்சிகரப் பண்பைக் கொண்டிருந்தது.

இலங்கை அரசின் பேரினவாத ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டம் என்பது அவசியமானது மட்டுமல்ல மக்களின் விடுதலைக்காகப் போராடுதல் என்பது புரட்சிகரமானதும் கூட.
ஒரு தேசிய இனம் தனது தேசிய விடுதலைக்காக, அன்னிய ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடுதல் என்பது மனித குல விடுதலையின் ஒரு பகுதி மட்டுமன்றி, அதன் உந்துசக்தியுமாகும்.
மனித விரோதிகளும் சமூகத் துரோகிகளும் மக்களின் விடுதலை சார்ந்து ஒருபோதும் போராடுவதில்லை.

80களின் ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளிலிருந்து ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி போன்ற விடுதலை இயக்கங்கள் வரை இந்திய அரசையும், இந்தியப் பாராளுமன்ற அரசியல் வாதிகளையும் தமது நண்பர்களாகக் கருதினர். இந்தியாவிலே ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுகின்ற எந்த அமைப்பையும் இவர்களில் யாரும் ஏறெடுத்துக்கூடப் பார்த்ததில்லை. வங்க தேசத்தைப் பிரித்துக்கொடுத்த இந்தியா தமிழீழத்தையும் பெற்றுத் தரும் என அப்பாவித் தனமான நம்பிக்கை வைத்திருந்தார்கள்.

இந்தியப் பிராந்திய நலனின் பிரதிநிதிகளாக ஈழ விடுதலை இயக்கங்கள் உருவாகின. ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்த அவர்களது பார்வை மாற்றமடைந்தது, எதிரிகளாக இருக்க வேண்டியவர்கள் நண்பர்களானார்கள். நண்பர்கள் எதிரிகளாகக் கணிக்கப்பட்டனர். சில வேளைகளில் இந்தியாவை தவிர்த்தால் அமரிக்க நலன்களோடு தம்மை அடையாளப்படுத்திக்கொண்டார்கள். மனித விரோதச் செயற்பாடுகள் இவ்வாறான அணிசேர்க்கையிலிருந்தே ஆரம்பமாகிற்று.

ஈழத்தில் நிலவிய மக்கள் ஆதரவும், போர்க்குணம் மிக்க இளைஞர்களின் தியாகமும் தெற்காசிய விடுதலைக்கே வித்திடவல்ல, இயல்புகளைக் கொண்டிருந்தது. ஆனல் தமிழ் நாட்டின் அரசியல் வியாபாரிகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கே போராட்டத்தின் அணி சேர்க்கை பயன்பட்டது. எம்.ஜி.ராமச்சந்திரன், முத்துவேல்.கருணாநிதி என்று ஆரம்பித்து வை.கோபாலசாமி, நெடுமாறன், தொல்.திருமாவளவன் வரை ஈழ மக்களின், துயரத்தில் தம்மை வளர்த்துக்கொண்டனர். ஜெகத் கஸ்பர் போன்ற வியாபாரிகள் மில்லியன்களை சுருட்டிக்கொண்டு இலங்கை அரசோடு நேரடியாகவே இணைந்து கொண்டனர்.

இவர்களின் வரிசையில் இன்று ஒவ்வொரு சமூகப்பற்றுள்ள, ஈழ அரசியலோடு தொடர்புடையவர்களதும் பார்வை சீமான் மீது திரும்புகிறது.

இஸ்லாமிய அடிப்படை வாதமோ, இந்து அடிப்படைவாதமோ, இந்து பாசிசமோ ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான மக்கள் விரோதத் அரசியல் கோட்பாடுகள்.

குஜராத் நரேந்திர மோடி என்றால் இந்துப் பயங்கரவாதி என்பது சமூகத்தின் மீது அக்கறையுள்ள எந்த மனிதனுக்கும் மாற்றுக் கருத்திராது. ஆயிரக்கணக்கான குழந்தைகளையும், வயோதிபர்களையும் கொன்றொழித்த சமூக விரோதி மோடி மகிந்த ராஜபக்சேவுக்கு எந்த வகையிலும் குறைவற்ற போர்க்குற்றவாளி. பாலியல் வன்முறை, கொலை, சூறையாடல், இந்து வெறி, மக்கள் மீதான வன்முறை என்று மனித குலம் அவமானப்படும் வகையிலான அனைத்து ஈனச் செயல்களுக்கும் மோடி மொத்த உருவம்.

அறுபது வருடங்களாகத் தமது தலைமகளால் ஏமாற்றப்பட்டு அழிவை மட்டுமே சந்திக்கும் ஈழத் தமிழர்களின் அறியமை இருளுக்கு அத்தனை விடுதலை இயக்கங்களும் காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் எங்காவது ஒரு சந்தில் எப்போதும் ஒடுக்கப்பட்டவர்களின் குரல் ஓங்கி ஒலிக்கும் தமிழ் நாட்டில் அரசியல் வாதியாக உருவெடுத்த சீமான் மோடியின் அரசியலைப் பாராட்டுவதை என்னென்பது?

மோடியின் ஆட்சி நல்லாட்சி என்று கூறும் சீமானுக்கும் மனிதாபிமானத்திற்கும் என்ன தொடர்பு?

ஏகாதிபத்தியத்திற்கு எதிரான மக்கள் சார்ந்த தேசிய விடுதலைப் போராட்டம் என்பதன் அரிச்சுவடியிலேயே மோடிகள் எதிரிகளாகிவிடுவார்களே?

ஆக, சீமான் மறுபடி இன்னொரு அழிவை தனது அரசியல் அரிச்சுவடியிலிருந்து திட்டமிடுகிறாரா? ஒடுக்கப்படும் தேசிய இனம் எச்சரிக்கை அடையவேண்டும்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
Tags: தமிழ் இனவாதிகள்அரசியல்
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

ஒசாமாவிற்கும் பிரபாகரனிற்கும் வேறுபாடில்லை - அமரிக்கா : கோசலன்

Comments 12

  1. Varathan says:
    15 years ago

    “இவர்களின் வரிசையில் இன்று ஒவ்வொரு சமூகப்பற்றுள்ள, ஈழ அரசியலோடு தொடர்புடையவர்களதும் பார்வை சீமான் மீது திரும்புகிறது”
    I think writer Nivetha’s

    பார்வை சீமான் மீது திரும்புகிறது. You don’t have any other topics to write in Inioru?? Nobody (people in Sri Lanka) is caring about him. He is also one of the best clown in Tamilnadhu. People in Sri Lanka not bothering about these clowns.

  2. john says:
    15 years ago

    seeman has no film so heismaking somthing comody as if hewill not beforgotten

  3. thurai ilamurugu says:
    15 years ago

    சீமான் வெறும் கோமாளி அல்ல தமிழ் நாட்டு மக்களையும் ஒரு முள்ளீவாய்க்கலுக்குள் தள்ளிவிட முயலும் கோமான்! வைக்கோ மற்றும் பீறரைப்போல இல்லாமல் இன்னும் தூயவரைப்,போல் நடிப்பவர் தமிழ் பாசிசசத்திற்கான கருஅவரிடம் உள்ளது எல்லா தமிழ்த்தேசியர்களும் அவரை தங்களுடைய கொள்கைக்கு ஆதரவான அடியாளாக அவரைக் கருதுகின்றனர்

    • THAMIL MARAN says:
      15 years ago

      சீமானின் தமிழும்,அந்தக் குரலும் அவரட்கு வசீகரம்.சிறப்பாக சிந்திக்க வல்லவர் ஆனால் அரசியலில் இறங்கிதால் நடிக்கவேண்டி உள்ளது,தேவர் சிலைக்கு மாலை போடவேண்டி உள்ளது.கொலிவூட்டில் உள்ள யூதரைப் போல தமிழருக்கு நாசூக்காக நிறய சினிமாவில் செய்திருக்கலாம் ஆனால் அரசியலுக்கு வந்து தன்னை கோமாளீ ஆக்கிக் கொண்டு விட்டார்.

  4. RA BALAKRISHNAN says:
    15 years ago

    SEEMAN ‘S POLITICAL DISCOURSE HAS BECOME POPULAR BECAUSE IT INCLUDES A LOT OF SENTIMENTALISAM AND SENSATION FOUND IN ANY DRAVIDIAN POLITICAL, DISCOURSE OR THE ONES FOUND IN AN AVERAGE TAMIL FILMS.I RECENTLY WATCHED HIS INTERVIEW IN POLIMER TV WHERE HE ELABORATES THE STRATEGY TO DEFEAT CONGRESS -WHICH IS AN IMPOSSIBILITY AS THE DRAVIDIAN PARTIES DEPEND ON IT FOR VOTE BANK POLITICS.SET IN HIGH RHETORICS THE SEEMSN DISCOURSE REVOLVES ON PATHOS AND MINDLESS SENTIMENTS AND OFTEN FAKE DETAILS.THAT IS HOW HE IS POPULAR BECAUSE TAMILIANS DID NOT HAVE THE CULTURE OF UNDERSTASNDING POLITICS WITH A RATIONAL BENT OF MIND.HE IS POPULAR WITH SCHOOL CHILDREN AND RHE ONUS IS ON HIM NOT TO SPOIL THEIR EDUCATION AS THOSE BOYS FIND DEFENCE MECHANISM IN M=NOT FARING WELL IN THEIR EXAMS..SEEMAN VIJAYA KANTH BOTH HAVE SAME DISCOURSE MODALITIES THAT DOES NOT MAKE ANY SENSE ANE IT IS PURELY BROUGHT ON FORTH FROM THE TINSEL TOWN.

  5. suganthy Arumugam says:
    15 years ago

    “”TAMILIANS DID NOT HAVE THE CULTURE OF UNDERSTASNDING POLITICS WITH A RATIONAL BENT OF MIND””
    IS IT RATIONAL???bullshit

  6. suresh says:
    15 years ago

    சீமான் ஒரு கடைதெடுத்த சுயநலவாதி அவரும் கருணாநிதி போல ஆக முயற்சி செய்கிறார் கரடியாக கத்துவது எல்லாம் காசுக்காகத்தான்

  7. thurai ilamurugu says:
    15 years ago

    குமுதத்தில் “இருப்பாய் தமிழா நெருப்பாய்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரைத் தொடர் எழுத ஆரம்பித்துள்ளார். அதைப் பார்த்தவுடன் எமக்குத் தோன்றிய சில கருத்துகள்.
    1. அதில் அண்ணா,அண்ணா என்று ‘யாரையோ’ அழைக்கிறார். அவரது இருப்பிடத்தைப் போலவே தன்னுடைய அறையில் மூங்கிலால் செய்யப்பட்ட மர நாற்காலியை வைத்துள்ளதாகவும் கூறுகிறார். அந்த அண்ணன் யார்? அறிஞர் அண்ணாவோ என்று எண்ணத் தோன்றுகிறது. அதற்கேற்றால் போல் அறிஞர் அண்ணாவின் புகைப்படமும் கட்டுரையின் நடுவில் இடம் பெற்றுள்ளது.

    2. நாம் தமிழர் இயக்கம் அடித்த முதல் அடியிலேயே காங்கிரசு இயக்கம் முற்றிலும் சுருண்டு போய்விட்டது என்று எழுதுகிறார். ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. முதல் அடி? அப்படி என்றால் பாராளுமன்றத் தேர்தலில் (2009ல்) இளங்கோவன், தங்கபாலு தோற்றது தங்களால் தான் என்று முழங்கியது.???? முதல் அடி அல்ல. இரண்டாவது அடி நண்பரே.

    3. காங்கிரசு 5 சட்டமன்ற தொகுதிகளில் வென்றுள்ளது. ஒரு இடம் கூட கிடைக்கவில்லை என்பது எப்படி? தினகரன் செய்தித் தாளில் சீமான் அளித்த நேர்காணல் நினைவுக்கு வந்தது. இந்த 5 தொகுதிகளிலும் நாம் தமிழர் இயக்கத்தினரும், சீமானும் யாது காரணம் பற்றியோ தேர்தல் பணி ஆற்றவில்லையாம். அதனால்தான் 5 இடங்களில் வென்றுள்ளனர் என்பது தான் அந்த செய்தி.
    ஏனோ தெரியவில்லை ஊரிலே கல்யாணம் மாரிலே சந்தனம் என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது. அது போகட்டும் இவர்கள் ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ தேர்தல் பணி ஆற்றாத விடுதலைச் சிறுத்தைகள் ஒரு இடம் கூட பெறாமல் போனது ஏன்?

    4. நெருப்பைப் பற்றி அவர் சொன்னது வியப்பாய் இருந்தது.” நெருப்பு ஒன்றுதான் எதனுடன் இணைந்தாலும் அதன் சுயத்தன்மையை இழக்காது.” நீருடன் சேர்ந்தால் நெருப்பு என்ன ஆகும்.? நண்பர் தான் விளக்கவேண்டும்.

    5. சீமான் ,”வென்றது ஆரியம் துணை நின்றது திராவிடம் “என்ற தலைப்பில் நூல் எழுதியுள்ளார். அடுத்ததாக “வென்றது பார்ப்பனீயம்! துணை நின்றது நாம் தமிழர் இயக்கம்” என்று அவரோ அல்லது வேறு யாருமோ எழுதக்கூடும்!

    கொசுறு: அண்மையில் ஆதித்தனார் பிறந்த நாள் விழாவின் போது இன உணர்வாளர்கள் படை சூழ பா. ஆதித்தனார்சிலைக்கு சீமான் மாலை சூட்டி உணர்ச்சிப் பேருரை ஆற்றினார். (செய்தி. நன்றி தினத்தந்தி).

    விசயலட்சுமி என்ற பெண் நடிகை சீமான் மீதுபாலியல் குற்றச் சாட்டுகளைக் கூறி உள்ளார் அதற்கு சீமான் இதுவரை பதில் அளிக்கவில்லை அவரது வழக்கறைஞர் தான் பதில் அளித்துள்ளார்

    • THAMILMARAN says:
      15 years ago

      மூங்கில் நாற்காலி என்பது வச்தியின் அடையாளமே தவிர புரட்சியின் விதைப்பு அல்ல்.சீமான் முற்றூம் துறந்தவர் போலவும் அவரை விபுலானந்தர் ஆக்கியும் தமிழர் ஆடுவது விளயாட்டு? வேதனை சீமான் அவரது தமிழ்ப்பற்றூக்காக கொண்டாடப்படலாம் ஆனால் தேர்தலுக்கு அவருக்கு விஜயகாந்தோடு கூட்டு தேவைப்படலாம்.ஆக கமலும் அய்ய்யா பாலச் சந்தர் மற்றூம் ஞானி போன்றோர் ஆரியத்தை வெல்வதற்கு விடுவார்களா?

  8. thurai ilamurugu says:
    15 years ago

    மாறியது நெஞ்சம்?

    மாமி மாறிவிட்டார் என்ற சொற்கள் தான் இப்போதைய தமிழ்த் தேசியர்களின் முழக்கம். செந்தமிழன் சீமான் தொடங்கி பேர் தெரியாத தமிழ்த் தேசியர்கள் வரை இதே முழக்கம்தான். நகை அணிவது இல்லை. தெளிவாகப் பேசுகிறார். அடக்கமாக இருக்கிறார். போக்குவரத்து பாதிப்பது இல்லை. போன்ற “பெரிய செய்திகளை” மனதில் வைத்துக் கொண்டுதான் அவர்கள் அப்படி சொல்லுகிறார்கள். சட்டசபை மாற்றம்< பழைய/புதிய சட்டசபையை பூட்டிவிட்டது. செம்மொழி நூலகத்தை சிதறடித்தது. சமச்சீர் கல்வியை சீர்குலைத்தது குலைத்துக் கொண்டிருப்பது. பள்ளி உண்டு பாடம் இல்லை. என்ற புதிய பொன்மொழியை உருவாக்கியது. ஆசிரியர்களை எல்லாம் புத்தகத்திற்கு அட்டை ஒட்டும் ஊழியர்களாக மாற்றியது. கறுப்பு மை கொண்டு புத்தகத்தை கறுப்பாக்கியது. அது லேசாக வெளியே தெரிந்தால் கூட ஆசிரியருக்கு தண்டனை போன்றவற்றை தொடர்ந்து செய்து வருவது ஒரு பொருட்டில்லை. இதெல்லாம் தமிழனின் வாழ்க்கைக்கு தேவை. ஆனால் ஈழத்தமிழனுக்கு தேவையில்லை. எனவே ஈழத் தமிழர்களுக்காகவே கட்சி நடத்தும் செந்தமிழனும் தமிழ்த் தேசியனும் இதனைப் பொருட்படுத்தாதது ஒரு வியப்பு அன்று. பெரியார் முழக்கமிடும் சிந்தனையாளர்களும் இதில் அணி சேர் ந்திருப்பதுதான் வியப்பு. நீதிக் கட்சியை தோற்றுவித்தவர்களில் ஒருவராகிய T.T.நாயர் அவர்கள் சொன்னது இங்கு பொருந்தும் "சிறுகதை தன்னுடைய புள்ளிகளை மாற்றிக் கொண்டாலும் பார்ப்பனன் தனது இயல்பை மாற்றிக் கொள்வது அரிது". மாமாவுக்கு சொன்னது மாமிக்கும் பொரு ந்தும். மாமி தெளிவாகத்தான் இருக்கிறார்.

    1. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஈழத் தீர்மானம். இருமுனைக் கத்தி அய் நா அறிக்கை இராஜபட்சேவுக்கு சமமாக புலிகள் மீதும் குற்றம் சாட்டியுள்ளது. குறிப்பாக சிறார்களை போரில் ஈடுபடுத்தியது. மனிதக் கேடயம் போன்ற செய்திகளில்

    2. அது தமிழக அரசின் தீர்மானம் அன்று. தனி நபர் தீர்மானம். இரண்டிற்கும் அதிக வேறுபாடு உண்டு.

    3. தன் கையில் உள்ள பந்தை நடுவண் அரசிற்கு தட்டிவிட்டிருக்கிறார். அவ்வளவு தான் இதற்கே இவ்வளவு ஆட்டமா?

    அம்மணி ஓசைப்பாடாமல் பல செயல்களை செய்து கொண்டுதான் இருக்கிறார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி பங்களுரில் நடைபெறும் தனது வழக்கை முறியடிக்கும் விதமாக ஊழல் ஒழிப்புத் துறையைத் தன்னிடம் வைத்துக் கொண்டிருக்கிறார். அதாவது அவருடைய வழக்கிற்கு அவரே விசாரனை அதிகாரி!!!. இதை எந்த ஊடகமாவது தெரியபடுத்தியது உண்டா? அந்த நிலையில் பங்களூரு நீதி மன்றத்திற்கு அரசின் சார்பில் கடிதம் ஒன்றையும் நேரடியாக அனுப்பி மிரட்டி இருக்கிறார். கருணா நிதி கொட்டாவி விட்டாலும் ……………..விட்டாலும்.கதறித் துடித்து வரும் வைத்திய நாதப் பார்ப்பனன் இதைப் பற்றி ஏழுததாதது நமக்குப் புரிகிறது. செந்தமிழர்கள் தடுமாறு ஏன்? அவர்களும் பூணூல் அணியாத புதிய பார்ப்பனர்கள் ஆகி விட்டனர் போலும். ஈழத்துப் டாலரும் போயஸ் தோட்டமும் பணமும் சங்கமிக்கும் காலம் இது.

    • THAMIL MARAN says:
      15 years ago

      அதாவது பிஸ்கட்டுக்களூக்காக வாலாட்டும் நாய்கள் சரிதானே?

      • thurai ilamurugu says:
        15 years ago

        ரொம்ப சரி தங்க பிஸ்ககெட்டுகள்

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...