சீன வானொலி நிலை யத்தின் தமிழ் ஒலிபரப்பு 1963 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி துவங்கி யது. நாள் தோறும் அரை மணி நேரம் ஒலிபரப்பு. முதல் ஒலிபரப்பு இந்திய நேரம் இரவு 7 : 30 முதல் 8 : 00, 25.31 மீட்டர் அலை வரிசையில். மறு ஒலிபரப்பு இந்திய நேரம் இரவு 8 : 00 முதல் 8 : 30. இந்திய நேரம் காலை 7 : 30 முதல் 8 :00, 21.19 அலைவரிசையில் இது மறு ஒலிபரப்பாகிறது. நேயர் மன்றங்களின் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளது. பதிவு செய்யப்பட்ட நேயர் களின் எண்ணிக்கை 22 ஆயி ரத்து 300க்கும் கூடுதலாகும்.
ஆண்டுதோறும் தமிழ் நேயர்களின் கடித எண் ணிக்கை சீன வானொலியின் கடித எண்ணிக்கை வரிசை யில் முன்னணியில் உள்ளது. தமிழ் ஒலிபரப்பு முதலாவது ஆசிய ஒலிபரப்பு மையத் தைச் சேர்ந்தது. 9 பணியா ளர்கள் தமிழ்ப் பிரிவில் உள்ளனர். நாம் பயன்படுத் தும் தமிழை விடவும் சிறப் பான தமிழில் சீனா பற்றி பல சுவையான தகவல்களை தருகிறார்கள்.
ழுசநநn ாடிரளந பயள என்ற சொல்லுக்கு பசுங்கூட வாயு என்று அழகாக தமிழ்ப் படுத்தி இருக்கிறார்கள். ஆனால் நமது எப்.எம் சேவையில் நாம் தமிழை படாதபாடு படுத்தி எடுக் கிறோம். இதில் சிறப்பு என்னவென்றால், இது தமிழ் நாட்டை சேர்ந்தவர் கள் நடத்தும் சேவை அல்ல. சீன நாட்டவர் தமிழ் பயின்று பின்பு வானொலி மற்றும் இணைய தள சேவையை அளிக்கிறார்கள்.
மற்றொரு சிறப்பு என்ன வென்றால், இந்த வானொ லியை தொடர்ந்து கேட்டு எல்லா நிகழ்ச்சிகளுக்கும் சிறப்பான விமர்சனம் எழு தும் நேயர் ஒருவரை வரு டம் ஒரு முறை சீனாவுக்கே நேரடியாக அழைத்து ஊர் சுற்றிக் காட்டி மரியாதை யை செய்கிறார்கள். நீங்க ளும் முயற்சிக்கலாம். இந்த வானொலியில் பணி புரியும் அனைவரும் சுத்த தமிழ் பெயர் சூட்டி உள்ளனர். அதேபோல், சீன மொழி யில் தமிழையும் தமிழைச் சீன மொழியிலும் பயிற்று விக்கிறார்கள். அதனை இணையத்தில் காணலாம். இணையத்தின் வாயிலாக வே வானொலியையும் அடையலாம். இன்னும் கலை சார்ந்த பயிற்சிகளும் இருக்கின்றன.
நன்றி : தீக்கதிர்