தங்கள் நாட்டின் ராணுவம் மற்றும் பாதுகாப்பு குறித்தும் 2015-ம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகம் மேற்கொள்வது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவும் சீனாவும் முடிவு செய்துள்ளன.
ரியோ-டி-ஜெனிரோவில் நடைபெறும் ரியோ ப்ளஸ் 20 மாநாட்டின்போது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சீனத் தலைவர் வென் ஜியோபோ ஆகியோர் இதுகுறித்து சுமார் 40 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
மேலும் வெளியுறவு செயலர் ரஞ்சன்மாத்தாய் கூறுகையில், இந்தியா-சீனா இடையே எல்லைப்பிரச்னை,நதிநீர் மற்றும் இரு தரப்பு பொருளாதா ஒத்துழைப்பு மற்றும் இந்திய உள்கட்டமைப்பு துறைகளில் சீனா முதலீடு செய்ய வேண்டும் என பிரதமர் மோகன்சிங், சீன பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார் என்றார்.
மிக விரைவில் இந்தியாவிலிருந்து அரிசி சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்று அவர் கூறினார்.
ஆசியப் பிரந்தியத்தில் இதுவரை இந்தியா உடாகவே அமரிக்கா தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த முற்பட்டது. சீனாவிற்கு எதிரான செயற்பாடுகள் என்ற அளவில் இந்தியக் கட்டுப்பாட்டு எல்லையைக் கடந்து அமரிக்கத் தலையீடுகள் அதிகரித்துள்ளன. சீனாவுடனான புதிய நெருக்கம் அமரிக்க – இந்திய நட்பை மீளமைத்துக் கொள்வதற்காக இந்திய அரசு விடுக்கும் வேண்டுகோளாகவோ குறைந்தபட்ச எச்சரிக்கையாகவோ கருதலாம்.
அப்போ…சீனா உளவாளிகள் இலங்கைலிருந்து இந்தியாவை உளவு பார்ப்பதாக சொன்னதெல்லாம் பொய்யா?…
Good relationship between the two countries is very essential for the well being of the whole of Sri Lanka – Shri Lanka. Good that they have a Hotline between New Delhi and Beijing.