15.12.2008.
மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பிரதிநிதி கள் குழு சீனப்பயணம் மேற் கொண்டது.
சீனக்கம்யூனிஸ்ட் கட்சி யின் அழைப்பை ஏற்று டிசம் பர் 2ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அர சியல் தலைமைக்குழு உறுப் பினர் சீத்தாராம் யெச்சூரி எம்.பி., தலைமையில் பெய் ஜிங் வந்த இக்குழுவில் கட் சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் வி.சீனிவாச ராவ், மத்தியக்குழு உறுப் பினர்கள் சுதா சுந்தரராமன், வைக்கம் விஸ்வம், மதன் கோஸ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
ஏழு நாட்கள் சீனப் பயணம் மேற்கொண்ட இக் குழுவினர்., சீனக்கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பின ரும் தத்துவார்த்தத்துறை தலைவருமான லீ சாங் சன் உடன் பல்வேறு பிரச்சனை கள் குறித்து விவாதம் நடத் தியது. சீன மக்கள் மாமன்றத் தில் இக்குழுவினருக்கு உற் சாக வரவேற்பு அளிக்கப் பட்டது.
இந்த சந்திப்புகளின் போது, கட்சியின் முன் னாள் பொதுச்செயலாளர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித்தின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த லீ, இந்திய – சீன உறவில் பெரும் முன்னேற் றத்தை ஏற்படுத்துவதற்காக சுர்ஜித் போன்ற தலைவர்கள் ஆற்றிய பணி குறித்து பெரு மிதத்துடன் குறிப்பிட்டார்.
உலக முதலாளித்துவம் மிகக்கடுமையான நெருக் கடியில் சிக்கியுள்ள சூழ லில், உலகின் மிகப்பெரும் மக்கள் தொகை கொண்ட இரு பெரும் நாடுகளான இந்தியாவும் சீனாவும் பல் வேறு தளங்களில் ஒத்து ழைப்பை மேலும் விரிவு படுத்த வேண்டியதன் அவசி யம் குறித்து இருதரப்பு பிரதிநிதிகளும் விவாதித் தனர்.
உலகப்பொருளாதார நெருக்கடி தீவிரமடைந் துள்ள நிலையில், அதனால் ஏற்பட்டுள்ள சவாலை எதிர் கொள்ள சீன கம்யூனிஸ்ட் அரசு, மிகப்பெரும் மக்கள் நலத்திட்டங்களில் 100 ஆயி ரம் கோடி யுவான்களை செலவிட திட்டமிட்டிருப் பது குறித்தும், சுகாதாரம், அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் வெள்ளமும் பனிப் பொழிவும் பாதித்த இடங் களில் மறு கட்டமைப்பு பணிகள் போன்ற விவரங் கள் குறித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குழு வினர் விவரங்களை கேட் டறிந்தனர். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கள் பலரையும் சந்தித்து பேசிய இக்குழுவினர் சீனா வில் பூகம்பம் பாதித்த செங்டு உள்ளிட்ட இடங் களுக்கு நேரில் சென்று மறு கட்டுமானப் பணிகளை பார்வையிட்டனர்.