Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

சீக்கியப் படுகொலைகளின் பின்னணியில் பிரித்தானிய அரசு : புதிய தகவல்கள் வெளியாகின

இனியொரு... by இனியொரு...
01/14/2014
in இன்றைய செய்திகள்
0 0
4
Home இன்றைய செய்திகள்

sasஉலகின் அதிகாரவர்கங்கள் அழிப்பதற்காக தமக்கிடையே ஒத்துழைப்பு வழங்கிக் கொள்வது வழமையான ஒன்று. இலங்கையில் வன்னிப் படுகொலையில் மட்டுமல்ல இன்றுவரை ஏகபோக நாடுகள் தமது அடிமை நாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன. 1984 ஆம் ஆண்டு தமிழ்ப் பேசும் மக்கள் மீதான இனப்படுகொலை நிகழ்வுகளை ஒத்த சம்பவம் ஒன்று நடைபெற்றது. சீக்கியர்களுக்கு எதிராக வன்முறை இந்தியா முழுவதும் தலைவிரித்தாடியது. முள்ளிவாய்க்கால் சுற்றிவழைக்கபட்டது போன்று அம்ரிஸ்டாரில் இருந்த சீக்கியர்களின் பொற்கோவில் சுற்றிவழைக்கப்பட்டு தாக்குதல் ஆரம்பமானது.

பிரித்தானியா புலம்பெயர் சீக்கியர்கள் அதிகளவில் வாழ்ந்த நாடு. சவுத்தோல் போன்ற பல நகரங்கள் சீக்கியர்களது நகரங்களாகவே இருந்தன. தமிழர்களைப் போலன்றி பல்வேறு பிரதேசங்களில் சீக்கியர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்தார்கள். இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி சீக்கியர்களுக்கு எதிரன இனப்படுகொலையை நடத்திய போது இன்று போலவே பிரித்தானியா கண்டனம் தெரிவித்தது.

புலம் பெயர் சீக்கிய அமைப்புக்கள் பிரித்தானிய அரசுடன் பேச்சுவார்த்த நடத்தியது. பிரித்தானியா போர்க்குற்றம் குறித்தெல்லாம் வாய்கிழியப் பேசியது. சீக்கியர்களின் புலம்பெயர் தேசிய வாதிகள் ஏகாதிபத்திய நாடுகளை வளைத்துப்போட்டு இந்தியாவின் பிடியிலிருந்து சீக்கிய தேசத்தை விடுவிப்போம் என்றார்கள்.

நடந்தது வேறு. பொற்கோவிலில் நடத்தப்பட்ட கோரமான தாக்குதல்களில் பிரித்தானிய அரசின் பங்களிப்பும் இருந்தது என அண்மையில் வெளியான ஆவணங்கள் கூறுகின்றன.

இன்றைய கார்டியன் பத்திரிகையில் இதுகுறித்த தகவல்கள் வெளியாகின. புலம் பெயர் சீக்கியக் குழுக்கள் பொற்கோவில் படுகொலைகளில் பிரித்தானிய அரசின் பங்கு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பிரித்தானிய அரசைக் கோரியுள்ளன. ஆவணங்களில் ஒரு பகுதியே வெளியிடப்பட்டுள்ளதால் புரொம்ளிப் பகுதியைச் சேர்ந்த தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மேலதிக ஆவணங்களை வெளிநாட்டமைச்சு வெளியிடவேண்டும் எனக் கோரியுள்ளார். புரொம்ளி பகுதியில் பெருமளவிலான சீக்கியர்கள் வாழ்கின்றனர்.

30 வருடங்களுக்கு ஒருமுறை சில ஆவணங்களை வெளியிடுவது என்ற பிரித்தானியச் சட்டப்படி 2014 புதுவருடத் தினத்தன்று இந்த ஆவணங்கள் வெளியாகின.

பொற்கோவிலிருந்து சீக்கியப் போராளிகளை வெளியேற்றுவதற்கு பிரித்தானிய அரசின் பங்களிப்பை இந்திய அரசு கோரியிருந்தது. அதற்கு வெளிநாட்டமைச்சின் சார்பில் பதிலளித்த பிரையன் போல் என்பவர், பிரித்தானியப் பிரதமரின் அனுமதியுடன் இந்தியாவின் கோரிக்கையை வெளிநாட்டுச் செயலாளர் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.

பிரித்தானிய விசேட விமானத்துறை அதிகாரி இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டு பொற்கோவிலைத் தாக்குவதற்கான திட்டத்தை வரைகிறார். அதனை இந்திராகாந்தி ஏற்றுக்கொண்டு உடனடியாகவே தாக்குதல் நடத்தப்படுகிறது.

23 ம் திகதி பெப்ருவரி மாதம் போல் எழுதிய கடிதத்தில் ‘பொற்கோவிலை தாக்குவதற்கான பிரித்தானியத் தலையீடு பிரித்தானியாவில் வாழும் சீக்கியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தக்கூடும்’ என்று குறிப்பிடுகிறார்.

இத்தகவல் வெளியே தெரியாமல் மட்டுப்படுத்துமாறும் பிரையன் போல் எழுதிகிறார். உள்நாட்டில் சிக்கல்களை ஏற்படுத்தும் என்கிறார். பிரித்தானியா வகுத்துக்கொடுத்த திட்டம் இந்தியாவால் பாரட்டப்பட்டது மட்டுமன்றி இந்தியாவிலும் லண்டனிலும் திட்டம் செவ்வனே பின்பற்றப்பட்டது என்கிறார்.

பிரித்தானியாவில் சீக் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘ஆயிரக்கணக்கான பெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டனர். சீக்கியர்களின் நாள்காட்டியில் புனித நாளான்று தாக்குதல் நடத்தப்பட்டது. உயிரிழப்புக்களைத் தவிர, கட்டடங்களும், சொத்துக்களும் அழிக்கப்பட்டன. வரலாற்றுரீதியான சீக்கியர்களின் நூலகம் சூறையாடப்பட்டது. வரலாற்றில் கறைபடிந்த நாள்’ என்று குறிப்பிட்டுள்ளது.

இன்னும் மூன்று கடிதங்கள் உட்பட இதே ஆண்டு மார்ச் மாதத்தின் பின்னான எந்த ஆவணங்களும் வெளியிட்ப்படவில்லை என வலைப்பதிவு கூறுகின்றது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
பாலஸ்தீன அரசாங்கத்திற்கு மின்னஞ்சல் அனுப்ப தமிழர்களிடம் கோரிக்கை

பாலஸ்தீன அரசாங்கத்திற்கு மின்னஞ்சல் அனுப்ப தமிழர்களிடம் கோரிக்கை

Comments 4

  1. Ragalai Panneer says:
    12 years ago

    இலங்கையில் நடந்து முடிந்த யுத்தத்தை நடத்தியது மகிந்த என்றாலும் திட்டதை கச்சதமாக வகுத்துக் கொடுத்தவர்கள் ஏன் பிரித்தானியா அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளாக இருக்கக் கூடாது?உண்மையில் மிக கவனமாக இவ்விடயம் குறித்து ஆராய வேண்டும்.நமது விடுதலையை இந்தாடுகள் பெற்றுத் தரும் என பரப்புரை செய்வோர் பின்னும் இவர்கள் இருக்கிறார்கள் என்று யாரேனும் சொன்னால் நம்பாமல் இருக்க முடியுமா?

  2. Sutharsan says:
    12 years ago

    What is there to analyze this ? It is generally accepted that the war came to an end with the help of everyone else and the blame is with the leadership of VP. He was reckless, did not want to listen to good advice and he believed that he was too smart to be outdone by the enemy. The ball stops right there with him. And the dumb diaspora kept giving him the dead rope.

  3. srimanoharan says:
    12 years ago

    Thank you for your detailed report. It is a pity our people ,including diaspora, have hope in so-called International community – it is U.S. , EU etc.. Govt speaks on “foreign intervention”, Sri Lanka’s  55% of exports goes to U.S. & EU for the last 15 yrs. Just to remind it was a British queen HONOURED   sea dogs (sea pirates) Pirate like Drake was given the title Sir. Primitive accumulation of capital was outright plunder. In Sri Lanka by way of three Ordinances lands were confiscated from the Sinhalese and later sold to British Planters at the rate of 5 shillings(those days) an acre. Several tanks were filled to put up roads.

  4. சந்திரசேகரன் சுப்பிரமணியம் says:
    12 years ago

    தமிழ் இனப்படுகொலை இலங்கையில் நடந்தது..
    ஆனால் இது இந்திய மண்ணில் இந்தியப் பிரதமரால்
    இங்கிலாந்தின் விமானப்படை உதவியுடன் நடத்தப்பட்டது
    என்றால், இதுவா குடியாட்சி, மக்களாட்சி..என்ன காரணம்?
    அரியணை மீதில் ஒரு முறை ஒரு குடும்பம்
    அமர்ந்து கொண்டால் அடுத்த நூறு வருடங்களுக்கு
    அந்த குடும்பத்திலிருந்து யாரும் அரியணை ஏறக் கூடாது
    என சட்டத் திருத்தம் வேண்டும்.
    ( அவர்தான் நூறு வருடங்களுக்கு தேவையான சொத்து
    குவித்திருப்பாரே !! ) இது என்ன மன்னராட்சியா? நேரு என்ன சக்கரவர்த்தியா? அவரது கூட்டமே நாட்டை ஆள்வதற்கு ..கட்சி பார்த்து வாக்கு போடாதீர்கள்..அந்த மனிதன் என்ன செய்தான் செய்வான் என எண்ணிப்பார்த்து போடுங்கள்..வேறு எதையும் எண்ணாதீர்கள் ..

    தமிழ் இனத்திலும், அன்று சீக்கிய இனம் போலவே,
    தமிழ்அமைச்சர்கள் என்ற பெயரால் மத்திய மாநில
    அரசுகளில் அங்கம் வகித்துக் கொண்டே பிறநாட்டு
    அதிகார பண வர்க்கத்துடன் ரகசிய உடன்பாடு
    வைத்துக் கொண்டு, தமிழ்இனத்தை, அதன் பாரம்பரியத்தை
    அழிக்க கையூடு பெற்றுக் கொண்டு, தமிழரைச் சாதி மதம்
    என்ற பெயரால் கொஞ்சம் கொஞ்சமாய் அழித்துக் கொண்டு
    வருகிறார்கள்..

    உண்மையில் இவர்கள் இந்தியர்கள் என்றால் ,
    நதிகளைத் தேசிய மயமாக்குவதில் என்ன சிக்கல்?
    முல்லைப் பெரியாரும் காவிரியும், கிருஷ்ணாவும்
    தமிழகத்திற்கு வரக்கூடாது என்பதில் ஆழமான அழுத்தமான முடிவு..

    அனைத்து இந்தியக் கோவில்களை, இந்து கிறிஸ்துவ முஸ்லிம் ஆலயங்களை அரசுடமை ஆக்குங்கள். 65 வயது தாண்டி எவரும் மத்திய அல்லது மாநில அரசுகளில்அமைச்சர் பதவி வகிக்கக் கூடாது என சட்டம் கொண்டு வந்துபின் தேர்தல் நடத்துங்கள்..முதுகலைப் பட்டம்
    வாங்கி, அயிந்து வருட பணி அனுபவம் பெற்றபின் தான்
    தேர்தலில் போட்டியிட முடியும் எனச் சட்டம் திருத்துங்கள்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...