Sunday, April 26, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

சிவனு லெச்சுமணன் பாதையில் 30 வருடங்களின் பின் மண்ணை மீட்க போராட்டம் – டெவன் தோட்ட மக்கள் : சை. கிங்ஸ்லி கோமஸ்

இனியொரு... by இனியொரு...
08/31/2011
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
9
Home பிரதான பதிவுகள் | Principle posts

1977 மே மாதம் 07 ஆம் திகதி டெவன் தோட்டத்தின் 7000 ஏக்கர் காணியை சிங்கள் மக்களுக்குப் பிரித்து கொடுப்பதற்கு அன்றைய அரசாங்கம் செய்த சதி திட்டத்திற்கு எதிராக தோட்டத் தொழிலாளர்கள் வெகுண்டு எழுந்த போது துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி தன்னுயிர் நீத்த தியாகி சிவனு லெச்சுமணன் மீட்டு கொடுத்த நமது மண் மீண்டும் கபடமாக பணக்காரர்களுக்கு விற்பனை செய்யப்படுவதற்கு எதிராக டெவன் தோட்ட தொழிலாளர்கள் கடந்த நான்கு நாட்களாக வீதியில் அமர்ந்து பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மஸ்கெலியா பிலான்டேசன் நிறுவனத்திற்கு சொந்தமான டெவன் தோட்டத்தின் அழகிய டெவன் நீர் வீழ்ச்சிக்கு பக்கத்தில் அமைந்துள்ள டெவன் தோட்டத்திற்கு சொந்தமான காணியையே சில பணக்காரர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு வினவிய போது இது தொடர்பாக நாங்கள் ஏதும் அறியோம் என கூறுகின்றனர்

தோட்டமுகாமையாளர் அமன் பொலவிடம் வினவிய போது தான் இது தொடர்பாக கம்பனிக்கு அறிவித்திருப்பதாகவும் அவர்கள் இந்த காணி விற்பனை தொடர்பாக மேலதிக விசாரணை செய்வதாகவும் கூறினார். மக்களின் போராட்டம் தொடர்பக தான் கருத்து கூற இயலாது என்றும் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள மேற்படி காணி தோட்ட நீர்வாகத்திற்கு சொந்தமானது எனுவும் தெரிவித்தார்.

போராட்டத்திற்கு தலைமை தாங்கும் தொழிலாளர்களில் ஒருவரான சிவகுமார் கருத்து தெரிவிக்கையில் காடுகளை களனியாக்கி எமது மூதாதையர் பணத்தினை அள்ளித்தரும் பசுஞ்சோலையாய் மாற்றினார்கள் ஆனால் காணிகளை சுவீகரித்துள்ளவர்களில் ஒருவன் 22 ஏக்கர் காணி தனக்கு சொந்தம் என்றும் மற்றும் ஒருவன் 50 ஏக்கர் காணி தனக்கு சொந்தம் என்றும் கூறுகின்றனர்.

உழைப்பாளர்கள் நாங்கள் 8 அடி லயத்தில் சிறை வாழ்க்கை வாழ்கிறோம் எங்களுக்கம் காணி வேண்டும் எங்களுக்கும் காணிகளை பிரித்து தாருங்கள் என்று கூறினார்.தோட்டத்தின் மாதர் சங்க தலைவி நிர்மலாவிடம் வினவிய போது சிவனு லெச்சுமணன் மீட்டு தந்த இரத்தம் தோய்ந்த இந்த மண்ணை மீண்டும் சூரையாட விட முடியாத எங்களுக்கு நடப்பதற்கு கூட பாதை இல்லாமல் போகக் கூடிய நிலை உருவாகியிருப்பதாகவும் உல்லாச விடுதிகள் கட்டப்படடு வருவதனால் தங்களின் பிள்ளைகளின் எதிர்காலம் அச்சத்திற்கு இடமாகி இருப்பதாகவும் கூறினார்.

காணியில் உல்லாச விடுதி ஒன்ரை கட்டிக் கொண்டிருக்கம் பெயர் சொல்ல விரும்பாத பிரதேச தனவந்தர் ஒருவர் கூறும் போது தான் சட்ட ரீதியாகவே இந்த காணியை பெற்றக் கொண்டதாகவும் நீதி மன்றத்தில் தான் தீர்த்துக் கொள்வதாக கூறினார்.

உல்லாச பிரயாணிகளின் கண்கவர் பிரதேசமான இந்த இடத்தில் அழகான நீர் விழ்ச்சியும் பசுமையான இயற்கையும் ஊசியிலைக் காடுகளும் நாசம் செய்யப் பட்டு உல்லாச விடுதிகளை அமைத்து வரும் இந்த பணக்காரர்களுக்குபின்னால் பல அரசியல் சக்திகள் செயல்படுவதாக கூறப்படுகின்றது .

சிவனு லெச்சுமணன் பெற்றுக் கொடுத்த இடத்தை மக்களுக்கு திருப்பிக் கொடு டெவன் தோட்டத்து பொது மக்களுக்கு பாதகம் விளைவிக்காதே தனி நபர் ஒருவருக்கு 50 ஏக்கர் கொக்கப் பட்டுள்ளது தோட்டத் தொழிலாளர்களுக்கும் காணி பிரித்துக் கொடுஎன்னும் சுலோகங்களை ஏந்திய வாறு தொழிலாளர்கள் போராட்டத்தை முன்னெடுத்து செல்கின்றனர்.

எந்த வித அரசியல் தலையீடும் இல்லாமல் சுயமாக பேராடி வரும் மக்களுக்கமலையகத்தின் பல அமைப்புகளும் ஆதரவுகளை வழங்கிவருவது பாராட்டக் கூடிய விடயமாகும் மலையகத்தின் பிரபல தொழிற்சங்கங்கள் மேற்படி போராட்டத்தில் தலையிடாமல் இருப்பதன் காரணம் குறித்து மக்கள் தங்களின் அதிருப்தியையும் தெரிவித்தனர்.

மலையக வரலாற்றில் அந்த இடத்தில் போராட்டம் மூன்றாவது போராட்டம் எனவும்1977ல் சிவனுலெச்சுமணன் உயிர் தியாகம் செய்த காணி மீட்பு போராட்டததை தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு புதிய ஜனநாயக மார்சிய லெனினிச கட்சியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரனி இ.தம்பைய்யாவின் தலைமையில் மலையகத்தின் சில முற்போக்கு சிந்தனையாளர்களின் ஒத்துழைப்புடன் மேல் கொத்மலை நீர்த் தேக்கத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் மேற்கொண்ட மாபெரும் கடையடைப்புப் போராட்டமும் மறியல் போராட்டத்தையும் தொடர்ந்து டெவன் தோட்டத்து பொது மக்கள் முன்னெடுக்கும் காணிமீட்பு போராட்டமும் அதே இடத்தில் நடைப்பெறுவது குறிப்பிடத்தக்கது.

டெவன் தோட்டத்து பொது மக்கள் முன்னெடுக்கும் காணிமீட்பு போராட்டத்தினை திசைத்திருப்ப சிலர் பொய்யான வாக்கறுதிகளை வழங்கி வருவதாகவும் போராட்டத்தை தங்களின் சுயநலனுக்காய் பயன்படுத்த சிலர் முனைவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

டெவன் தோட்டத்து பொது மக்கள் முன்னெடுக்கும் காணிமீட்பு போராட்டம் மலையக பிரதேசத்தின் தேயிலைத் தோட்டங்களை சிறு முதலாளிகளுக்க பிரித்து கொடுக்க செய்திருக்கும் திட்டத்திற்கு எதிராய் ஆரம்பித்திருக்கும் முதலாவது போராட்டம் என்பதுடன் தேயிலை தோட்டத்து தொழிற்சாலைகளை உல்லாச விடுதிகளாக மாற்ற முனைந்து வரும் சதி திட்டங்களுக்கு எதிரான போராட்டமாகவும் காணப்படுகின்றது.போராட்ட கலாசாரமும் பண்பாடும் தொலைந்து போயிருக்கும் இந்தக் காலக் கட்டத்தில் டெவன் தோட்டத்து பொது மக்கள் முன்னெடுக்கும் காணிமீட்பு போராட்டம் வெற்றிப் பெற ஒத்துழைப்பு வழங்க வேண்டியது மலையகத்தை உண்மையாக நேசிக்கும் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

முல்லைத் தீவில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் ஆரம்பம்

Comments 9

  1. Nadesan says:
    15 years ago

    welcome inioru, now inioru is in progress in a track of forward.

  2. Nadesan says:
    15 years ago

    இனிஒரு இப்போது முற்போக்கு பாதையில் வாழ்க வளமுடன்

  3. veeran says:
    15 years ago

    அந்த காணிகள் நில சீர்திருத்த ஆனைக்குழுவுக்கு சொந்த்மானது, அதாவது அரசுக்கு, அவர்கள் அதனை 30 வருட குத்தகைக்கு, தனவந்தர்களுக்கு கொடுத்துள்ளனர், இதற்கு எதிராக தொழிற்சஙக தலைவர்கள் போராடமாட்டார்கள், அவர்களுக்கும் இது போல் காணிகள் வீடுகள் கொடுக்கப்பட்டுள்ளது, சிவலிங்கம், அரிங்டன் தோட்டத்தையும் கொத்மலை மகவெலிகம அருகில் 14 ஏக்கரையும் பெற்றுள்ளார், டெவன் தோட்ட மக்கள் உயர்நீதி மன்றத்தில மனித உரிமை மீற்லாக வழ்க்கு தொடரலாம், தம்பையாவுடன் ஆலொசிக்கலாம்

  4. பிடுங்கி says:
    15 years ago

    சிவனு லெட்சுமணன் அவர்களது மாபெரும் உயிர்த்தியாகம் இன்றைக்கு 3 தசாப்தங்களுக்கு மேலாகிவிட்டது. மலையக மக்களது வாழ்வாதாரம் விட்ட இடத்திலேயே இன்றைக்கும் இருக்கிறது. மாறி,மாறிவந்த தோட்டத் தலைவர்கள் தங்களை வளம் படுத்தியதோடு சரி.சிவனு லெட்சுமணனின் இரத்தம்சிந்திய பொழுதிருந்தே போராடியிருந்தால் இன்றைக்குப் புதிதாகப் போராட வேண்டியிருக்காது. சந்தர்ப்பவாதத் தலைமைகளால் சிதைத்துப் போடப்பட்டிருக்கிறார்கள் அந்த அப்பாவிமக்கள்.

    • samurai says:
      15 years ago

      வாங்க போராடலாம் ஆளில்லாம தவிக்கிரோம்

  5. veeran says:
    15 years ago

    இதனை பற்றி கவலப்பட்டு அர்த்தம் இல்லை, இந்த் டெவன் தோட்ட மக்கள் அல்லது மக்குகள், கடந்த் தேர்தலில் சொல்ல சொல்ல கேளாமல் சுத்துமாது திகாவிற்கும், இதொகா விற்கும் தானே வாக்களித்தனர்,

  6. veeran says:
    15 years ago

    தோட்ட காணிகள் அரசுக்கே சொந்த்தம், கானி சீர் திருத்த ஆனைக்குழுவே இதனைநிர்வகிக்கின்றது, அவர்களே கானிகளை குத்தகைக்கு கொடுக்கின்ற்னர், இதிலநிச்சயம் ஊழல் இருக்கும், உயர்நீதிமன்றத்தில் மனித் உரிமை மீறல் என்று வ்ழக்கிக்ட்டு முயலலாம், தலைவைகள் யாரும் வரமாட்டார்கள், அவர்களும் ஊழல் பெருச்சாளிகள், மறைந்த தலைவர் தொண்டமான் இருந்தால் உதவி இருப்பார்

    • kingsley gomezz says:
      15 years ago

      இந்த தோட்டம் மறைந்த தலைவர் தொண்டமானின் தோட்டமாக இருந்து கைமாற்றப்பட்டது என்று கூறப்படுகிறது அவர் நினைத்திருந்தால் மக்களுக்கு காணி மட்டும் அல்ல வீடுகலைக்கூட சொந்தமாக வழங்கியிருக்கலாம்

      • veeran says:
        15 years ago

        இது அவரது தோட்டம் அல்ல  அவரகு உறவினரது தோட்டம், அரசால் 73 ம் ஆண்டு கையேற்கப்பட்டது, 

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...