Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

சில மக்கள் விரோத முன்னாள் உளவாளிகள் : பாலன்

இனியொரு... by இனியொரு...
11/11/2010
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
1
Home பிரதான பதிவுகள் | Principle posts

கம்யூனிசத்திற்கும்  மக்களுக்கும் எதிரான சிந்தனை முறையைச் சமூகப் பொதுப் புத்தியாக மாற்றும் உளவியல் யுத்தத்தில் பிரித்தானிய உளவு நிறுவனங்களிடம்  கூலிக்கு வேலை பார்த்தவர்கள் இந்த உளவாளிகள்.

பெர்ட்ராண்ட் ரஸ்ஸல்


ரஸ்ஸல் இங்கிலாந்தின் மிகப்பெரிய பிரபுக்களின் குடும்பத்தில் பிறந்தவர். அவரது பாட்டனார் பிரிட்டிஷ் பிரதமர். இளமைக்காலத்திலிருந்தே ரஸ்ஸல் இடதுசாரியாக இருந்தாலும் “கம்யூனிஸ்டு அல்லாத இடதுசாரியாக இருக்க வேண்டும்” என்பதில் வெகு கவனமாக இருந்தவர். எனவே ரசிய சோசலிசப் புரட்சி வெற்றி பெற்றவுடனேயே அதை எதிர்த்தார். பிறகு 1920இல் ரசியா சென்று வந்தவுடன் “போல்ஷ்விக் கோட்பாடும் நடைமுறையும்” என்ற நூலின் மூலம் தனது மார்க்சிய எதிர்ப்பை மீண்டும் உறுதி செய்தார். மார்க்சிய தத்துவம், பொருளாதாரம் இரண்டையுமே அவர் நிராகரித்தார். ஒரு குறிப்பிட்ட உலகக் கண்ணோட்டம், அதன் அடிப்படையில் வரலாற்றைப் புரிந்து கொள்வது, புதிய சமுதாயத்தை அமைக்கப் போராடுவது என்பதெல்லாம் தவறு என்று அவர் கருதினார்.

ஒரு கொள்கையின் மீது நம்பிக்கை வைத்து அதன் வெற்றிக்காகப் பாடுபடுபவர்கள் வன்முறையிலும் கொலை வெறியாட்டத்திலும் ஈடுபடத் தயங்க மாட்டார்கள் என்பதும் அந்த வகையில் மதம், நாசிசம், கம்யூனிசம் ஆகியவை அனைத்தும் ஒன்றே என்பதும் அவர் கருத்து. ஐயவாதமும் அறியொணாவாதமும் ‘சித்தாந்தம்’ என்ற ஒன்று இல்லாதிருப்பதும்தான் சகிப்புத்தன்மைக்கும் ஜனநாயகத்திற்கும் அடிப்படையானது என்று அவர் கருதினார். ஆனால், இரண்டாம் உலகப்போர் முடிந்தவுடனே ரஸ்ஸல் வெளியிட்ட ஒரு அறிவிப்பு அனைவரையும் துணுக்குறச் செய்தது. அளப்பரிய தியாகங்கள் செய்து நாஜி ஜெர்மனியை முறியடித்திருந்தார்கள் ரசிய மக்கள். உலக மக்களும், ஒடுக்கப்பட்ட நாடுகளும் கம்யூனிசத்தை நோக்கியும், ரசியாவை நோக்கியும் ஈர்க்கப்பட்டனர். கம்யூனிசக் கொள்கை காட்டுத் தீயாய்ப் பரவிய காலமது. அப்போது ரஸ்ஸல் அறிவித்தார்: “ரசியா மேலை நாடுகளிடம் நிபந்தனையின்றிச் சரணடைய வேண்டும். இல்லையேல் அதனை அணுகுண்டு வீசி அழித்துவிட வேண்டும்.” ஒரு கொள்கைக்காகத்தான் என்றாலும் வன்முறையில் ஈடுபடக் கூடாது என்று பேசிய அகிம்சாவாதி, கம்யூனிசக் கொள்கையைப் பின்பற்றுகிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக ஆறில் ஒரு பங்கு மனித இனத்தையே அழிக்கக் கோரியதை என்னவென்பது?

ஆனால், 60களில் ரஸ்ஸல் மீண்டும் ‘ஜனநாயகவாதி’ ஆகிவிட்டார். அணு ஆயுத எதிர்ப்பியக்கத்தை முன் நின்று நடத்தினார். அதற்காகக் கைது செய்யப்பட்டார். இதற்குக் காரணம் சமாதானத்தில் நாட்டமா, அல்லது ரசியாவும் அணுகுண்டு தயாரித்துவிட்டது என்ற அச்சமா எனும் கேள்வி எழுகிறது. அதேபோல அமெரிக்காவின் வியட்நாம் ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் இயக்கம் நடத்தினார் ரஸ்ஸல். அந்த காலகட்டத்தில் உளவு நிறுவனத்துடன் அவருக்கிருந்த உறவு அறுபட்டதால் இந்த ‘ஜனநாயக உணர்வு’ தோன்றியதா, அல்லது உலகு தழுவிய அமெரிக்க எதிர்ப்பு கம்யூனிச ஆதரவாக மாறிவிடாமல் தடுக்க பிரிட்டிஷ் உளவுத்துறை தீட்டிய திட்டத்தின் அங்கம்தான் ரஸ்ஸலின் அமெரிக்க எதிர்ப்பா என்ற கேள்வியும் எழுகிறது.

ஜார்ஜ் ஆர்வெல்

இந்தியாவில் பிறந்து பர்மாவில் சிறிது காலம் போலீஸ் அதிகாரியாகப் பணியாற்றிய பிரிட்டிஷ்காரர். பிறகு அவர் ஒரு ‘சுதந்திர’ இடதுசாரி எழுத்தாளராக அறியப்பட்டார். 1943இல் ஜெர்மனியின் ஆக்கிரமிப்புக்கெதிராக ரசிய மக்கள் போராடிக் கொண்டிருந்தபோதுதான் கம்யூனிசத்தை இழிவுபடுத்தும் ‘விலங்குப் பண்ணை’ எனும் நாவலை எழுதினார் ஆர்வெல். இரண்டாவது உலகப்போர் முடிந்த பின் ரசியாவுக்கெதிரான பனிப்போரை அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் தொடங்கின. அந்தத் தருணத்தில்தான் வெளிவந்தது ஆர்வெல்லின் ‘1984′ எனும் நாவல். ஆர்வெல்லின் இந்த இரண்டு கம்யூனிச எதிர்ப்பு நாவல்களையும் பிரபலப்படுத்தி விற்பனை செய்யுமாறு மூன்றாம் உலக நாடுகளிலுள்ள தனது தூதரகங்களுக்கு உத்தரவிட்டது பிரிட்டிஷ் அரசு. குறிப்பாக முஸ்லீம்கள் பன்றிகளையும், நாய்களையும் வெறுப்பவர்களாதலால், ‘‘விலங்குப் பண்ணை நாவலில் வரும் பன்றி, நாய் ஆகிய பாத்திரங்கள் கம்யூனிஸ்டுகளைத்தான் குறிக்கின்றன” என்று இசுலாமிய நாடுகளில் பிரச்சாரம் செய்யுமாறும் தனது தூதரகங்களுக்கு வழிகாட்டியது.

பிரிட்டிஷ் உளவு நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் பணிபுரிந்த செலியா என்ற பெண் 1996இல் கீழ்க்கண்டவாறு தெரிவித்தார்.

“1949இல் ஆர்வெல்லை கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரம் மற்றும் உளவு வேலை தொடர்பாகச் சந்தித்தேன். அவருக்கு இவ்வேலையில் பெரும் ஆர்வம் இருந்தபோதிலும் உடல்நிலை சரியில்லாததால் இயலவில்லை என்று கூறிவிட்டு, பத்திரிக்கைத் துறையில் உள்ள கம்யூனிச ஆதரவாளர்கள் யார் யார் என்ற பட்டியலைக் கொடுத்தார். தான் ஆள்காட்டிய விசயம் வெளியே தெரிய வேண்டாமென்றும் கேட்டுக் கொண்டார்.”

சமுதாயம் முழுவதையும் எப்போதும் வேவு பார்த்துக் கொண்டிருக்கும் அரசுதான் சோசலிச அரசு என்று சித்தரிப்பதற்காக ‘1984′ எனும் நாவலில் ஆர்வெல் உருவாக்கியதுதான் “பெரியண்ணன் உன்னைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான்!” (Big Brother is watching you!) என்ற பிரபலச் சொற்றொடர். ஆனால், இந்தச் சொற்றொடரை உருவாக்கிய ‘மேதை’யோ ஒரு போலீசு உளவாளி.

ஸ்டீபன் ஸ்பென்டர்

1930களில் பிரிட்டனில் இருந்த பிரபல இடதுசாரி கவிஞர்களில் ஒருவர். பின்னர் அவர் ஒரு வன்மம் கொண்ட கம்யூனிச எதிர்ப்பாளராக மாறினார். பனிப்போர் காலகட்டத்தில் விதவிதமான கம்யூனிச எதிர்ப்புப் பத்திரிக்கைகள் மேற்குலகிலிருந்து வெளியாயின. ‘ரீடர்ஸ் டைஜஸ்ட்’ போன்றவை அத்தகைய சனரஞ்சகப் பத்திரிக்கைகள். “என்கவுண்டர்’ (Encounter) (சந்திப்பு அல்லது மோதல் என்று பொருள்) என்ற பத்திரிக்கை ‘அறிவுத்தரம்’ கொண்ட ரகத்தைச் சேர்ந்தது.

ஸ்பென்டர் இந்தப் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தார். “பண்பாட்டுச் சுதந்திரத்திற்கான காங்கிரஸ்” என்ற அமைப்பு இந்தப் பத்திரிக்கைக்கு நிதி கொடுத்து வந்தது.இந்தப் பத்திரிக்கை அமெரிக்க உளவு நிறுவனத்தால் (சி.ஐ.ஏ) நடத்தப்படுகிறது என்ற ரகசியத்தை கனார் க்யூரி ஓ ப்ரியன் என்ற ஐரிஷ்ராசதந்திரி அறுபதுகளின் மத்தியில் வெளியிட்டார். உடனே ஸ்பென்டரும் அவருடன் சேர்ந்த அறிவாளி/ உளவாளிகளும் இதை மறுத்தனர். ஆனால், என்ன துரதிருஷ்டம்! “நாங்கள் தான் பணம் கொடுக்கிறோம்” என்ற உண்மையை அமெரிக்க உளவு நிறுவனமே ஒப்புக் கொண்டது. உடனே கவிஞர் ஸ்பென்டர் பல்டியடித்தார். தனக்கு எதுவுமே தெரியாதென்றும் தான் ஏமாற்றப்பட்டு விட்டதாகவும் புலம்பினார். ஆசிரியர் பதவியையும் உடனே ராஜினாமா செய்தார்.

ஆனால், இந்த ‘அப்பாவி முற்போக்குக் கவிஞர்’ பிரிட்டிஷ் உளவாளியாகவும் இருந்திருக்கிறார் என்ற உண்மை இப்போது வெளிவந்துள்ளது. தனது பத்திரிக்கைக்கு யார் பணம் தருகிறார்கள், என்ன நோக்கத்துக்காகப் பணம் தருகிறார்கள் என்பதெல்லாம் கவிஞர் ஸ்பென்டருக்குத் தெளிவாகத் தெரிந்திருக்கிறது. ராஜினாமா நாடகமெல்லாம் “சுதந்திரமான முற்போக்குக் கவிஞர்” என்ற தன்னைப் பற்றிய கருத்துருவைப் பாதுகாத்துக் கொள்ளும் கீழ்த்தரமான மோசடியே. உளவாளி என்று ஊர் சிரித்துப் போனபின்னரும் ‘அறிவாளி’யின் ஆன்மா தனது கவுரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள எத்தனை தந்திரங்கள் செய்கிறது!

கீஸ்லர்

பிரிட்டிஷ்காரரல்ல, ஹங்கேரி நாட்டுக்காரர். பிறப்பால் யூதர். 30களில் ஜெர்மன் கம்யூனிஸ்டு கட்சியில் சேர்ந்தார். சோவியத் யூனியனுக்கும் சென்று வந்தார். ஸ்பெயினில் நடந்த பாசிச எதிர்ப்புப் போரில் பங்கேற்றுக் கைது செய்யப்பட்டார். பிறகு சர்வதேச நிர்ப்பந்தம் காரணமாக விடுதலை செய்யப்பட்டார். அந்தப் போரில் அவர் பாசிச எதிர்ப்புப் பத்திரிகையாளராகச் செயல்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஒருவேளை அப்போதே அவர் உளவாளியாகவும் இருந்தாரா எனத் தெரியவில்லை. கீஸ்லரின் பிரபலமான (பிரபலம் ஆக்கப்பட்ட) நூல் ‘பகலில் இருள்’. தோழர் ஸ்டாலினைக் கொடுங்கோலனாகச் சித்தரிக்கும் நூல் இது.

சோவியத் அரசுக்கெதிராகச் சதி செய்ததற்காக புகாரின், ஜினோவியேவ் போன்ற மத்தியக் கமிட்டி உறுப்பினர்கள் மீது அப்போது நீதிமன்ற விசாரணை நடந்தது. பகிரங்கமாக நடைபெற்ற இந்த விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். தண்டனை விதிக்கப்பட்டனர். சோவியத் ஆட்சியை ஒழிப்பதற்கு அப்படியொரு சதியை மேலை ஏகாதிபத்தியங்கள் செய்தன என்பதும் பலவிதமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இது ஒருபுறமிருக்க, இந்த விசாரணை தொடர்பாக கீஸ்லர் எழுப்பும் கேள்வி முக்கியமானது. “அவர்கள் ஏன் குற்றத்தை ஒப்புக் கொண்டார்கள்?” என்று கேட்கிறார் கீஸ்லர். உலகப் பத்திரிக்கையாளர்களின் முன்னிலையில் பகிரங்கமாக விசாரணை நடைபெற்றதால் மிரட்டி ஒப்புதல் வாக்குமூலம் வாங்கி விட்டார்கள் என்றும் கீஸ்லரால் சொல்ல முடியவில்லை. “அவர்கள் இத்தனைக் காலம் பொருள் முதல்வாதிகளாக இருந்தார்கள்; எனவே மார்க்சியம்தான் அவர்களுடைய எதிர்ப்புணர்வையே உறிஞ்சி விட்டது” என்கிறார் கீஸ்லர். இந்தக் கூற்று கோமாளித்தனமானது என்பது ஒருபுறமிருக்கட்டும். இந்தக் ‘கோமாளித்தனத்தின்’ தத்துவ ஞானம் எது என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

கம்யூனிசக் கோட்பாட்டிற்கு எதிரான கீஸ்லரின் மையமான வாதத்தில் அது வெளிப்படுகிறது. “நாம் முரணற்றவர்கள் அல்ல; முரணற்றவர்களாக மாற வேண்டும் என்பதற்கான முயற்சி நம்மை எங்கே கொண்டு சேர்க்கும் தெரியுமா? அதோ கம்யூனிஸ்டுகளைப் பாருங்கள்!” என்கிறார் கீஸ்லர். முரண்பாட்டை ‘உறிஞ்சும்’ மார்க்சியத்தின் முயற்சி, எதிர்ப்பு உணர்வை உறிஞ்சும் நடவடிக்கையாகக் கீஸ்லருக்குப்படுகிறது. ‘தவறிழைத்தவன் தன்னுடைய தவறை எப்படி ஒப்புக் கொள்ள முடியும்’ என்பதுதான் கீஸ்லரின் கேள்வி. எனவே சொல்லுக்கும் செயலுக்கும், தத்துவத்திற்கும் நடைமுறைக்கும் இடையில் உள்ள முரண்பாட்டைக் களைவதற்கு மார்க்சியம் மேற்கொள்ளும் முயற்சி அவருக்குத் தீயொழுக்கமாகவும், மோசடியாகவும் படுகிறது. முரண்பாடுகளுடன் வாழ்வதை ஏற்றுக் கொள்வதும், அதை அங்கீகரிப்பதுமே நல்லொழுக்கமாகவும், நேர்மையாகவும் அவருக்குத் தெரிகிறது. எனவே ஏற்றத்தாழ்வு, சுரண்டல், கொடுமைகள் ஆகிய அனைத்து முரண்பாடுகளும் நிறைந்த முதலாளித்துவம், அதன் முரண்பட்ட நிலையின் காரணமாகவே ஒழுக்கமானதாகவும், எனவே சுதந்திரமானதாகவும் அவருக்குத் தோன்றுகிறது.

நாஜிகளும், கம்யூனிஸ்டுகளும் மதவாதிகளும் ஒரே ரகம்தான் என்று ரஸ்ஸல் கூறியதைப் போலவே கீஸ்லரும் கூறுகிறார். “ஸ்பெயின் நாட்டின் பாசிச சர்வாதிகாரமும் சோவியத்தின் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரமும் ஒன்றுதான். பிராங்கோ தனது சர்வாதிகாரத்தை ஸ்பெயினுடன் நிறுத்திக் கொள்கிறான்; ரசியாவோ அதை உலகெங்கும் பரப்ப முயல்கிறது.” கீஸ்லரின் கவலை கம்யூனிச அபாயம் பற்றித்தான். மெக்கார்த்தியிசம் என்ற வெறிகொண்ட கம்யூனிச எதிர்ப்புக் கொள்கை அமெரிக்க அரசால் அமல்படுத்தப்பட்டு கம்யூனிஸ்டுகளும், கம்யூனிச ஆதரவாளர்களும் வேட்டையாடப்பட்டபோது, அவர் மெக்கார்த்தியிசத்தை ஆதரித்தார்.

“மேற்கத்திய ஜனநாயக நாடுகள் பாசிசத்திற்கெதிராக சோவியத் யூனியனுடன் ஐக்கிய முன்னணி அமைத்ததைப் போல, இன்று கம்யூனிசத்திற்கெதிராக ஜனநாயகவாதிகளாகிய நாம் மெக்கார்த்தியுடன் ஐக்கிய முன்னணி அமைக்க வேண்டும்” என்றார் கீஸ்லர். “முதலாளித்துவச் சர்வாதிகாரமும், பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரமும் ஒன்றே” என்று சொல்லி இரண்டையும் எதிர்ப்பதாகப் பம்மாத்து காட்டும் அறிஞர்கள், தீர்மானகரமான தருணங்களில் முதலாளித்துவத்தின் வெறிபிடித்த ஏவல் நாயாகத்தான் மாறுவார்கள் என்பதற்கு இது இன்னுமோர் சான்று.

வினவின் கட்டுரையிலிருந்து..

http://www.vinavu.com/2010/11/08/spy-2/

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

நாவற்குழியில் குடியேற்றப்பட்ட சிங்களக் குடும்பங்கள் : தொடரும் ஆக்கிரமிப்பு

Comments 1

  1. Garammasala says:
    15 years ago

    Garammasala posted this response to Vinavu on 08-Nov-10 at 7:49 pm:

    William Blum, 1986: The CIA: A Forgotten History (Zed Books) ISBN 0-86232-480-7 என்ற நூலில் இவை போன்ற பல விவரங்கள் இருந்ததாக நினைவு.
    இலங்கையில் 8,9 ஆண்டுகள் முன்பு “புதிய பூமி” என்ற அரசியல் ஏடு இத் தகவல்களைக் கொண்ட சுருக்கமான ஒரு கட்டுரையை வெளியிட்டதாக நினைவு.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...