மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் மனித உரிமைகளுக்காக பேசுகிறவர்கள், இடதுசாரிகள்,எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கைது செய்யப்பட்டு மாதக்கணக்கில் சிறையில் இருந்து வருகிறார்கள். அந்த வகையில் பேராசிரியர் சாய்பாபா மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறி சிறையில் அடைக்கப்பட்டார். 2017-ஆம் ஆண்டு அவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. அதனையொட்டி அவர் நாக்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
எத்தனையோ முறை அவரது மனைவி உட்பட குடும்பத்தினரும், மனித உரிமை ஆர்வலர்களும், சமூக செயற்பாட்டாளர்களும் மோடி அரசுக்கு கோரிக்கை வைத்த போதும் அவர் விடுதலை செய்யப்படவில்லை. இந்நிலையில் அவருக்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. அவருக்கு அதற்கான உரிய சிகிச்சை கிடைப்பதில் சிக்கல் இருக்கலாம் என அவரது குடும்பத்தினர் குற்றம் சுமத்தியிருப்பதோடு அவருக்கு உரிய சிகிச்சை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்கள் இது தொடர்பாக அவர்கள் குடும்பத்தினர் தெரிவித்துள்ள விஷயம் கவலைக்குறியதாக உள்ளது. இது தொடர்பாக அவரது மனைவி, “சாய்பாபா எங்களுக்கு ஒரு கடிதம் எழுதினார், அதில் தான் மிகவும் பலவீனமாக இருப்பதாகவும் தொடர்ந்து முதுகுவலி இடுப்பு வலியால் கடுமையாக அவதிப்படுவதாகவும் அதனால் தூங்க முடியாமல் அவதியுறுதுவதாகவும் தெரிவித்திருந்தார். முதல் முறை கொரோனா தொற்றின் பாதிப்பில் இருந்து தான் முழுமையாக குணமடையாத நிலையில் இரண்டாம் முறை கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்கள். எனவே அவருக்கு உரிய முறையில் சிகிச்சையளிக்க வேண்டும் எனக் கோருகிறேன் என்று சாய்பாபா மனைவி தெரிவித்துள்ளார்.