ஆடு திருடர்களை விரட்டிச் சென்ற சப் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் கொலையில் மணிகண்டன் என்பரும் இரண்டு சிறுவர்களும் கைதாகி உள்ளார்கள். இந்த வழக்கில் சிறுவர்களின் பங்கு பற்றி பல விதமான விவாதங்கள் எழுந்துள்ளன.
மணிகண்டன் ஆடுதிருடுவதை தொழிலாகவே வைத்துள்ளார் திருச்சி சமயபுரம் சந்தைகளிலும் இறைச்சிக் கடைகளிலும் விற்றுள்ளார். ஒரு ஆட்டைத் திருடிச் செல்லும் போது எஸ்.ஐ. பூமிநாதனிடம் சிக்காம்ல இருக்க வேகமாகச் சென்ற போது செல்லும் வழியில் இருந்த சுரங்கப்பாதையில் தண்ணீர் நின்றதால் அதற்கு மேல் செல்ல முடியவில்லை. இந்நிலையில் அவர்களை பிடித்த பூமிநாதன் சிறுவர்களின் தாய்க்கும், காவல்துறையினருக்கும் பேசி மேலதிக காவலர்களை சம்பவ இடத்திற்கு வரவழைத்துள்ளார்.
இதனால் கைதாகி சிறை சென்று விடுவோமோ என அஞ்சிய மணிகண்டன் கல்லால் இன்ஸ்பெக்டரின் பின்னந்தலையில் தாக்கியதோடு அறிவாளால் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார் என்கிறது தகவல். ஆனால், போலீசாரோ இரண்டு சிறுவர்களும் சேர்ந்துதான் பூமிநாதனை கொன்றுள்ளார்கள் என்று கூறுகிறார்கள்.
இறந்த இன்ஸ்பெக்டரின் உடற்கூறு ஆய்வில் அவரது பின்னால் நின்று தாக்கிக் கொன்றுள்ளதுமட்டும் உறுதியாகி உள்ளது. இந்த விவகாரத்தில் கைதாகி உள்ள இருவர் சிறுவர்கள் என்பதால் சமூக ஆர்வலர்கள் இது தொடர்பாக கவலைகளை வெளியிட்டுள்ளார்கள்.
பூமிநாதனின் கொலை தமிழக காவல்துறையினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆடுதிருடர்கள் கொலை செய்யும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்கள் என்பதுதான் அதிர்ச்சிக்கு காரணம் என்ற போதும் இரவு ரோந்துப்பணிகளில் ஈடுபடும் போலீசாருக்கு துப்பாக்கி வழங்குவது குறித்து காவல்துறை உயரதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.