06.03.2009.
மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளியில் 14 வயது சிறுமியை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிள் வெள்ளியன்று நீதிமன்றத்தில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பின்போது சாட்சிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறிப்பிட்ட சிறுமியும் அச்சிறுமியின் தயாரும் முதலாவது சுற்றிலேயே சந்தேக நபரை அடையாளம் காட்டினர்.
மற்றுமொரு சாட்சியான கிராமவாசி ஒருவர் சந்தேக நபரை அடையாளம் காட்டத் தவறிவிட்டார்.
கடந்த சனிக்கிழமை பகல் இச்சிறுமி வீட்டில் தனது தாயாருடன் இருந்த வேளை சிவில் உடையில் வந்த சந்தேக நபர் துப்பாக்கிமுனையில் பயமுறுத்தி சிறுமியை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியதாக பொலிசார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
BBC