சிறுமி சேயா மீதான பாலியல் வதைக் கொடுமையைக் கண்டித்து ஆப்பாட்டம்

DSC00827சிறுமி சேயா மீதான பாலியல் வதைப் படுகொலையைக் கண்டித்தும் நாட்டில் இடம் பெறும் ஏனைய பாலியல் வதைச் செயல்களுக்கும் பாலியல் தாக்குதல்களுக்கும் எதிர்ப்புத் தெரிவித்தும் நீதி கோரியும் 30-09-2015 (புதன் கிழமை) காலை வவுனியா பேருந்து நிலையத்துக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. இப் போராட்டத்தினை சமூக நீதிகான வெகுஜன அமைப்பினரும் இலங்கை ஆசிரியர் சங்கமும் புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சியும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

இக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் பெருந்திரளான பொதுமக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அக்கட்சியின் மாகாணசபை உறுப்பினர்களும் ஏனைய அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு தம் கண்டனத்தை வெளிப்படுத்தினர்.