Tuesday, April 28, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

சிறுபான்மை சமூகங்கள் பெரும் அச்ச உணர்வுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்:ரவூப் ஹக்கீம் .

இனியொரு... by இனியொரு...
03/23/2009
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

23.03.2009.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றிகள் நாட்டின் பெரும்பான்மை சமூகத்தினரின் பார்வையை கறுப்புக் கண்ணாடியிட்டு மறைத்திருப்பதாக தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், இந்தப் போக்கின் பின் விளைவுகள் குறித்து பெரும்பான்மை இனத்தவர்களுக்கு உடனடியாகத் தெரியப் போவதில்லையெனவும் சிறுபான்மை சமூகங்கள் பெரும் அச்ச உணர்வுடன் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார்.

முஸ்லிம் சமூகத்துக்கு இன்றைய மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் இழைக்கப்பட்டிருக்கும் அநியாயங்கள், உரிமைப் பறிப்புகளைப் போன்று வேறு எந்த அரசாங்கங்களாலும் நடக்கவில்லையெனவும் ஹக்கீம் தெரிவித்திருக்கின்றார்.

மேல் மாகாண சபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு கொலன்னாவ, கொத்தட்டுவ ஜும் ஆப் பள்ளிவாசலுக்கு அருகில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இக் கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய ஹக்கீம் கூறியதாவது;

மேல் மாகாணத்தில் விசேடமாக கொழும்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் விடயம் நாடு முழுவதுமுள்ள முஸ்லிம்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கும் தேர்தலாக மாற்றமடைந்திருக்கிறது. எமது கட்சி இத் தேர்தலில் எத்தனையாவது இடத்தைப் பிடிக்கப் போகிறது என்பதே இவர்களின் பிரதான வினாவாகவும் தேவையாகவும் இருக்கிறது.இப்படியான சவால் மிக்க ஒரு தேர்தலாக இது மாறியிருக்கிறது.

அது மாத்திரமன்றி, இன்று அனைத்துச் சிறுபான்மை இனச் சமூகங்களுக்கு ஏற்பட்டிருக்கும் மோசமான சூழலில் தங்களது ஆத்திரத்தையும், ஆவேசத்தையும் வெளிப்படுத்திக் காட்டும் ஒரு வழியாகவும் இந்தத் தேர்தல் இப்போது மாற்றமடைந்துள்ளது. வெறுமனே மாகாண சபையில் எமது ஆசனங்களை அதிகரித்துக் கொள்ளும் தேர்தலாக மட்டுமன்றி, இச் சமூகங்கள் தமது தனித்துவத்தையும், தன்மானத்தையும் காத்துக் கொள்ளும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகவும் மாறியிருக்கிறது.

ஜனாதிபதி, ஜனாதிபதி தேர்தலையோ பொதுத் தேர்தல் ஒன்றையோ நடத்த விருப்பம் கொண்டிருக்கவில்லை என்றே தெரிகிறது. அப்படி ஒரு விருப்பத்தைக் கொண்டிருந்தால் இப்படி கட்டம் கட்டமாக தேர்தல்களை நடத்தாமல் யுத்த வெற்றிகளைத் தொடர்ந்து உடனடியாகவே தேர்தல்களை நடத்தியிருப்பார். இந்த அரசாங்கம் தேர்தல்களைக் கட்டம் கட்டமாக நடத்துவதன் பிரதான நோக்கம், அரச வளங்களை பூரணமாக தமது தேர்தல் இலக்குகளுக்கு பாவிக்க வேண்டும் என்பதற்காகவே ஆகும். ஒரு தடவையில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்தினால் அரச வளங்களை முழுமையாக பயன்படுத்த முடியாது என்பதை புரிந்து கொண்டே இவ்வாறு தேர்தல் நடத்தப்படுகிறது.

இவ்வாறு நடத்தப்பட்டு வரும் இத் தேர்தல்களினால் பின்னடைவை அடையாத கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமே விளங்குகிறது. அரசின் நடவடிக்கைகளுக்கு அஞ்சாமல் தேர்தல்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முகம் கொடுத்து வருகிறது. அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்பட முடியாமல் பல கட்சிகள் அடங்கிக் கிடக்கின்றன. கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அச்சம் காரணமாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிடவில்லை.

இதன் விளைவாக நடந்து முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்குப் பிறகு இன்று வடக்கிலும் கிழக்கிலும் ஆயுதக்குழுக்களின் அட்டகாசங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. அதுமாத்திரம் அன்றி இன்று இக்குழுக்களில் எல்லோரும் நீலமயமாகிவிட்டார்கள்.

அண்மையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இணையத்தளம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் எல்லாக் கட்சிகளுமே நீலமயமாகிவிட்டிருந்தன. ஏனெனில், வேறு கட்சிகள் இனிமேல் வேறுவேறு நிறங்களுடன் இம் முன்னணியில் இருந்து போட்டியிட முடியாது. இப்படியான விடயங்கள் நடக்கும் என்பதையெல்லாம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்பே உணர்ந்திருந்ததால் தான் எமது தன்மானத்தைக் காக்க அரசில் இருந்து விலகி இன்று சுதந்திரமாகச் செயற்படுகிறோம்.

முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான அநியாயங்களும் உரிமைப் பறிப்புகளும் இந்த அரசாங்கத்தில் நடந்தது போல வேறு எந்த அரசாங்கத்திலும் நடக்கவில்லை. அந்தளவுக்கு இந்த அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் கையாலாகாதவர்களாக மாறி மௌனமாகியிருக்கிறார்கள்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று அதி தீவிரமான இனவாதக் கட்சியாக மாறி விட்டிருக்கிறது. யுத்த வெற்றிகள் குறித்து இந்த அரசாங்கத்தினால் செய்யப்படும் பெரும் பிரசாரங்களினால் இன்று பலரும் யுத்த வெற்றிகள் குறித்து பெருமையுடன் இருக்கிறார்கள். ஆனால், இந்நாட்டுக்கு வரவுள்ள ஆபத்துகளைப் பற்றி இன்னும் புரிந்து கொள்ள ஆரம்பிக்கவில்லை. அந்தளவுக்கு அரசின் பிரசாரங்கள் அமைந்திருக்கின்றன.

இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் நாட்டின் பொருளாதாரம் படுபாதாளத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. அபிவிருத்தி என்ற பெயரில் பெரும்பாலான அமைச்சர்களுக்கு 25 வீதம் மட்டுமே நிதி வழங்கப்படுகிறது. மிகுதி அனைத்தும் குறிப்பிட்ட ஒரு அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் யுத்தத்தினால் பொருளாதாரத்துக்கு மேலும் மேலும் சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன. இன்று நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் 2 இலட்சத்துக்கு மேல் வெளிநாட்டுக் கடன் சுமையைத் தாங்க வேண்டி இருக்கிறது. இவ் வருட இறுதியில் இந்த வெளிநாட்டுக் கடன் சுமை 3 இலட்சமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வளர்ச்சியடைந்து வரும் ஒரு நாட்டினால் தாங்கக் கூடிய கடன் சுமையல்ல இது.

நாம் ஆரம்பம் தொட்டு அரசியல் தீர்வு தவிர்ந்த யுத்த தீர்வுகளினால் எதனையும் சாதிக்க முடியாது என வலியுறுத்தி வருகிறோம். அதற்காக இராணுவ வெற்றிகளை நாம் குறைத்தும் மதிப்பிடவில்லை. அதன் வெற்றிகளை ஒரு வரையறைக்குள் நின்று நாம் வரவேற்கிறோம். அதே நேரம் அரசியல் தீர்வும், கௌரவமான சமாதானமும் வர முழுமனதுடன் அரசு செயற்பட வேண்டும்.

 

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

அமெரிக்கா நீட்டும் நட்புக்கரம் வெல்வெட் உறைக்குள் மறைக்கப்பட்ட இரும்புக்கரம்:கொமேனி.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In