(சிறுபாண்மையினருக்கு எதிரான உள்ளுராட்சி திருத்த சட்டமூலத்திற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஆதரவு !)
கிழக்கு மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்ட (19.10.2010) ‘உத்தேச உள்ளுராட்சி திருத்த சட்ட மூலம்’ 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆதரவாக 18 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆதரவாக வாக்களித்தன. ஐ.தே.கட்சி கட்சி உறுப்பினர்களும், ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் உறுப்பினரும் எதிர்த்து வாக்களித்தனர். ஆயினும் ஐ.தே.கட்சியின்; உறுப்பினர் தயா கமகே வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அப்துல் ரசாக்(ஜவாத்) எதிர்த்து வாக்களிப்பு. மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் வாக்கெடுப்பை பகிஷ்கரித்திருந்தனர்.
கடந்த வருடம் இச்சட்ட மூலம் கிழக்கு மாகாண சபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட வேளையில் இதனை ஆளுந்தரப்பு அங்கத்தவர்கள் உட்பட ஏனைய கட்சி உறுப்பினர்களும் கடுமையாக எதிர்த்திருந்தனர். அதனையடுத்து சட்டமூலம் வாபஸ் பெறப்பட்டதுடன் பல திருத்தங்கள் செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்படும் எனவும் கூறப்பட்டது.
மீண்டும் மாகாண சபையின் அங்கீராத்திற்கு இச்சட்டமூலம் அனுப்பப்பட்ட போது ‘சிறுபாண்மை மக்களைப் பாதிக்கும் விடயங்கள் உள்ளடங்கியிருக்கிறது’, ‘தெளிவற்ற பல விடயங்கள் காணப்படுகிறது’ என கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண சபை முதலமைச்சர், இச்சட்ட மூலத்தினை ஆதரிக்கும் அவசியமிருப்பதாக தான் கருதவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.
ஆயினும் முதலமைச்சரும் அவர் சார்ந்த கட்சியினரும் இச்சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்து அதனை நிறைவேற்றச் செய்திருக்கிறார்கள். அவர்கள் அரை மனதுடன் ஆதரித்தாக வேறு கூறியிருக்கிறார்கள். இது குறித்து கருத்துத் தெரிவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அப்துல் ரசாக்(ஜவாத்);, ‘குறித்த சட்டமூலத்தில் சிறுபாண்மையினருக்கு பாதகமான அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதை கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள். இங்கு உரை நிகழ்த்திய முதலமைச்சர் கூட நிர்ப்பந்தமான நிலையிலேயே இச்சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்’ எனத் தெரிவித்திருக்கிறார்.
பல்வேறு நிர்ப்பந்தக்களுக்கு உட்பட்டு அரசியல் புரிந்து வரும் சந்திரகாந்தன் என்கிற பிள்ளையான் , அதனையே ‘தமிழர்களுக்கு முன்னேற்றத்தினைத் தரும் அரசியல்’ எனக் கூறிவருவது வேடிக்கையானதே.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விவாதத்தில் கலந்து கொண்ட போதும், விவாதத்தில் காரசாரமாக கதைத்த போதும் வாக்கெடுப்பில் கலந்த கொள்ளமல் அரசுக்கான தமது விசுவாசத்தினை வெளிக்காட்டியிருக்கிறது. இவ்வாக்கெடுப்பில் நடுநிலை வகிப்பதும் ஆதரிப்பதும் ஒன்றுதான். முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வருகின்ற நிலையில் தமக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்ற எதிர்பர்ப்புள்ள நிலையில் இச்சட்டமூலத்தை எதிர்க்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ரசாக் குறிப்பிட்டுள்ளார்.
அப்துல் ரசாக் (ஜவாத்); ‘ சிறுபாண்மை முஸ்லிம் மக்களுக்கு முற்றிலும் பாதகமான அம்சங்களைக் கொண்ட இச் சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களிப்பற்கோ அல்லது நடுநிலையாக நடந்து கொள்வற்கோ எனது மனச்சாட்சி இடம் கொடுக்கவில்லை. அதனாலலேயே எதிர்த்து வாக்களித்தேன்’ எனக்கூறியிருக்கிறார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாகாண சபை உறுப்பினர் (ஜவாத்) மேலும் தெரிவிக்கையில், கட்சியின் செயலாளர் இது தொடர்பாக எனக்கு எஸ்.எம்.எஸ். மூலமாக கட்சியின் நிலைப்பாட்டை தெரியப்படுத்தியிருந்த போதிலும் எனது மனச்சாட்சிக்கு விரோதமாக நான் நடந்து கொள்ள விரும்பவில்லை. இவ்வாக்கெடுப்பில் நடுநிலை வகிப்பதும் ஆதரிப்பதும் ஒன்றுதான். எனவேதான் நான் இதனை எதிர்ப்பது என முடிவு செய்தேன் எனத்தெரிவித்திருக்கிறார்.
இச்சட்ட மூலம் மத்திய, வட டேல், தென் மாகாண சபைகளிலும் நிறைவேற்றுப்பட்டுள்ளது. இதே வேளை பாராளுமன்றத்தில் , உள்ளுராட்சி திருத்த சட்டமூலம், உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் திருத்த சட்டமூலம் ஆகியன சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பாராளுமனற்த்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் திருத்த சட்டமூலத்தின் முக்கிய அம்சமான ‘தேசிய எல்லை நிர்ணயக் குழுவுக்கு’ நியமிக்கப்படவுள்ள 5 உறுப்பினர்களும் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சரினாலேயே நியமிக்கப்படுவார்கள் என அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறியிருக்கிறார்.