யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள சிறீ ரெலோ அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இராணுவத் துணைக் குழுவான சிறீ ரெலோ அலுவலகம் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தியதாக குற்றம்சுமத்தி யாழ்பாணப் பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்திய மாணவர் தலைவர்களைக் கைது செய்து புனர்வாழ்வு முகாம்களில் மகிந்த இராணுவம் பல மாதங்கள் அடைத்து வைத்திருந்தமை தெரிந்ததே.
தாம் இராணுவத்துடன் இணைந்து செயற்படுவதாகவும் பல்கலைக்கழக மாணவர்கள் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தியமை உண்மையே என்றும் இக் குழுவின் முக்கிய உறுப்பினரும் பிரித்தானியப் பிரசா உரிமை பெற்றவருமான கீரன் பிரித்தானிய தமிழ்த் தொலைக் காட்சியொன்றில் தெரிவித்திருந்தார்.
இத்தாக்குதலில் அலுவலகம் சேதமாகியுள்ளதாகவும் இது குறித்து, கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் இக்குழுவின் யாழ். மாவட்ட அமைப்பாளர் செந்தூரனால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. புதிய முறைப்பாடு முன்னரைப் போல சந்தேகத்திற்கு உரியவர்களைக் கைது செய்வதற்கான முன்னேற்பாடா என்று சந்தேகங்கள் தெரிவிக்கப்படுகின்றன.
இதே வேளை யாழ்ப்பாணத்தில் நடைபெறும் 41 வது இலக்கியச் சந்திப்பு என்ற நிகழ்வில் சிறீ ரெலோவின் முக்கிய உறுப்பினர்கள் பிரதான ஏற்பாட்டாளர்கள் எனவும் தெரியவருகிறது. இலங்கை அரச ஆதரவு புலம்பெயர் தமிழர்கள் இணைந்து நடத்தும் இந்த நிகழ்வில் இலங்கையிலுள்ள பல அரச துணைக்குழு உறுப்பினர்கள் இணைந்து கொண்டுள்ளனர்.
சிறீ ரெலோ முக்கிய உறுப்பினர் ஒருவர் பாரிஸ் நகரில் பருதி என்ற விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரைக் கொலைசெய்தது தொடர்பாகக் கைதானது தெரிந்ததே.
ஒரு கல்லில் இரு மாங்காய்! இலக்கிய சந்திப்பிற்கும் இடைஞ்சல் இல்லாமல் போகும். மாகாண தேர்தலுக்கும் சத்தம் போட யாரும் இருக்க மாட்டார்கள். எல்லோரும் புனர் வாழ்வுக்கு தயாராகுங்கள்!!
https://www.youtube.com/watch?v=z9QiXMcWldo
இலக்கியச் சந்திப்பில் கீரன் லீனா ஆகியோர் தயாரித்து வழங்கும் வீடியோ, ஜனநாயகம் வாழ்கிறது அண்ணாச்சி
Here at Batticaloa also I think the Police is slowly closing down the offices of various groups.