யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் அலுவலகத்தில் இருந்து 4 சீ வெடிமருந்துகள், ஆபாச இறுவட்டுகள், ஆணுறைகள் மீட்கப்பட்டதாக இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் ஊடகங்களுக்கு செய்திகளை வழங்கியுள்ளனர்.
தேடுதலின் போது அரச ஆதரவு ஊடகவியலாளர் ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரான சிறீதரன் மீதான பாலியல் மற்றும் பயங்கரவாதக் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் நோக்குடனேயே இலங்கை அரச உளவுத்துறையினர் இவ்வாறு நடந்துகொண்டுள்ளனர் என சந்தேகங்கள் தெரிவிக்கப்படுகின்றன.
இன்று இடம்பெற்ற விசாரணைகளின் பின் நாடாளுமன்ற உறுப்பிர் சிறிதரனின் செயலாளர்களில் ஒருவரான பொன்னம்பலம் லட்சுமி காந்தன் விடுவிக்கப்பட்டு உள்ளார். அலுவலகப் பொறுப்பாளரான 38 வயதுதுடைய அருணாசலம் வேளமாலிகிதன் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளார். இங்கு நடத்தப்பட்ட தேடுதலில் கணனிகள் – ஆவணக் கோவைகள் உள்ளிட்ட முக்கிய குறிப்புகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று மகிந்த ராஜபக்ச பாசிசம் தன்னை மேலும் பலப்படுத்தும் நோக்கில் ஏனைய அரசியல் சக்திகளை அழித்துவருகின்றது. மக்கள் மூச்சுவிடக்கூட ராஜபக்சவின் அனுமதியைப் பெறவேண்டிய நிலையிலேயே காணப்படுகின்றனர்.
இந்த நிலையில் ராஜபக்ச பாசிச அரசோடு இனச்சுத்திகரிப்பு, சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீதான ஒடுக்குமுறை, பல்தேசிய சுரண்டல் ஆகியவற்றோடு உடன்படும் அமரிக்க அரசு, ராகபக்சவை கையாளும் எதிரணி ஒன்றையும் உருவாக்க முனைகிறது. இந்த எதிரணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட்ட ஏனைய அரசியல் சக்திகள் இணைந்துகொள்ள நிர்பந்திக்கப்படுகின்றன. சம்பந்தரின் பாராளுமன்ற உரையில் இராணுவத்தை வட-கிழக்கிலிருந்து முழுமையாக வெளியேறக் கோரவில்லை என்பதன் அடிப்படையும் இதுவே.
ராஜபக்சவிற்கு எதிரான அணிதிரட்டலை அழிப்பதற்கு அதன் மிகப்பலவீனமான எதிரியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலில் குறிவைக்கப்படுகிறது. ராஜபக்சவிற்கும் அமரிக்காவிற்கும் இடையிலான மோதலில் யார் வெற்றிபெற்றலும் மக்கள் தோற்றுப்போனவர்களே.
கூட்டமைப்பு என்னும் போர்வையில் தனி அமைப்புக்கு எவ்வளவு ஆதரவு கொடுத்தார்கள் இந்த பச்சோந்திகள் .கேட்டால் வேண்றூ வந்தோம் என்பார்கள் .அன்றூ வேண்றூ .வரதர் அமைச்சராக இருந்தபோது அரசுடன் கழியாணம் கட்டி குடித்தனமாக வாழ்ந்ததை இந்த பச்சோந்திகள் மறக்கள்ளாம் .ஆனால் ரஜிவ் ஒப்பந்தத்தை அழித்த பாவம் .தமிழர் நலம் அழித்த பாவம் என்றூம் சும்மா விடாது ……ராஜபக்ச யார் அரசு,?.தமிழர் நலம் என்றூ நடித்தவர்கள் யார்.?அரசு அரசுதான் அதை எதிர்ப்பது என்பது இந்தியாவால் மட்டிமே முடியும்.இந்த ரி.ன்.எ பிநாட்டுகள் அனைத்தும் கடந்தேடுத்த முட்டல்களே.போராட்டம் என்பது நம் கையில் அதை சானக்கியாமாக அசைப்பது நம் திறமையாக இருக்க வேண்டும் .போட்டோ விடியோ போஸ் புலிகளூக்குத்தான் பொருந்தும். பாசிசம் என்பது அனைத்து கட்சிக்கும் மக்கள் போட்ட பிச்சையே.அன்றூ வந்ததும் அதே நிலா..இன்றூ வந்ததும் அதே நிலா…………..
இது முன்னமே எதிர்பார்த்த ஒன்று. ஏற்கனவே இவரின் அலுவலத்துக்கு அரசால் வழங்கப்பெற்ற போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டு இருந்தது. இந்த நாடகம் EPDP கும்பலாலும் அரச புலனாய்வு பிரிவாலும் திட்டமிட்டு மேட்கோள்ளப்பட்ட நிகழ்வு. அரசின் இந்த ஜனநாயக விரோத செயற்பாட்டை அவரின் சொந்த கட்சியினரே கண்டிக்க முன்வரவில்லை.இதுதான் இன்றைய அவல நிலைமை. இப்படி ஒரு சம்பவம் நடக்க இருக்கின்றது என்பதை முன்கூட்டி இலங்கை அதரவு இணையமான இலங்கை நெட் செய்தி வெளியிட்டு இருந்தது.
பாலியல் குற்றச்சாட்டில் “கூட்டமைப்பு” பாராளுமன்ற உறுப்பினருக்கு பிடியாணை!
கிளிநொச்சியில் 15 வயதுபெண் ஒருவா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுளதுடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய வன்னிப் பகுதி கூட்டமைப்பு எம்பி ஒருவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முகவர் ஒருவர் 15 வயதுப் பெண்னொருவரை வேலை பெற்றுத் தருவதாகக் கூறி கூட்டமைப்பு எம்பியிடம் அழைத்துச் சென்றதாகவும் எம்பியின் அலுவலகத்தில் வைத்து 15 வயதுப் பெண்ணை கூட்டமைப்பு எம்பி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் பொலிசில் முறைப்பாடு செய்ததனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த பா.உ வுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட கூட்ட்மைப்பு எம்பி தீவுப்பகுதியைச் சேர்ந்தவரென்றும் பொலிஸ்நிலைய தகவல்கள் தெரிவிப்பதுடன் இவர் முன்பு வன்னியில் ஆசிரியராக இருந்தபோது இவருடைய வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த சிறுமி ஒருவர்மீது பாலியல் வல்லுறவு புரிந்ததனால் அந்தச் சிறுமி தற்கொலை முயற்சியில் இறங்கியதாகவும் செய்திகள் தெரிவிப்பதுடன் குறித்த நபர் வன்னியில் இருந்த போது புலிகள் இயக்கத்திற்கு தனது மாணவர்களைச் சேர்த்துவிடுவதாலும் இவருடைய மைத்துனர் ஒருவர் புலிகளின் முக்கிய தளபதியாக இருந்ததனாலும் புலிகள் இவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காது சிறுமியை எச்சரித்து அனுப்பியதாகவும் அந்தக் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Written By newscenter at Saturday, January 05, 2013