சிறிலங்க அரசு தமிழர்கள் மீது நடத்திய இனப் படுகொலைப் போரில் கொல்லப்பட்டவர்கள், காணாமல் போனவர்களின் மொத்த எண்ணிக்கை 1,46,679 பேர் என்று சிறிலங்க அதிபர் ராஜபக்ச நியமித்த கற்ற பாடங்கள் மற்றும் இனக்கப்பாடு ஆணையத்தின் முன்பு சாட்சியமளித்த மன்னார் பேராயர் ராயப்பு ஜோசப் கூறியுள்ளார்.
கற்ற பாடங்கள் மற்றும் இனக்கப்பாடு ஆணையத்தின் முன்பு கடந்த சனிக்கிழமை சாட்சியமளித்த மன்னார் பேராயர் ராயப்பு ஜோசப், “ஈழப் போர் உச்ச கட்டத்தில் இருந்த 2008ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வன்னிப் பகுதியிலுள்ள கிளிநொச்சி, முல்லைத் தீவு மாவட்டங்களில் 4,29,059 பேர் இருந்தனர் என்று இவ்விரு மாவட்டடங்களின் சிறிலங்க அரசு முகவர் அலுவலகங்கள் தெரிவிக்கின்றன. போர் முடிந்து அரசின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்த மக்களின் எண்ணிக்கை 2,82,380 பேர் என்று 2009ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி ஐ.நா.வெளியிட்ட விவரம் கூறுகிறது. அப்படியானால், 1,46,679 பேர் என்ன ஆனார்கள் என்பதை சிறிலங்க அரசு விளக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
போருக்குப் பின்னால் தமிழர் பகுதிகள் இராணுவ மயமாக்கப்படுகின்றன, மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருகின்றன, தமிழர்கள் வாழ்ந்த இடங்களில் சிங்களர்கள் அதிக அளவில் குடியேற்றப்பட்டு சிங்கள மயமாக்கலும், தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்படுவதும், புத்த மத மயமாக்கலும் நடைபெற்று வருகிறது. மொத்தத்தில் தமிழர் பகுதிகள் காலனி மயமாக்கப்பட்டு வருகிறது என்றும் பேராயர் ராயப்பு ஜோசப் கூறியுள்ளார்.
இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிறிலங்க அரசப் படைகள் நடத்தியது தமிழர்களின் இன அழிப்புப் போரே என்பதற்கான வலிமையான ஆதாரம் அந்நாட்டு அதிபர் நியமனம் செய்த ஆணையத்தின் முன்பே முதல் முறையாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.








கடவுளே இத்தனை நடந்தும் ஈனப்பிறவிகள் இதயம் இல்லாதவர்கள் இன்னும் கூடிக் கூத்தடிக்கிறார்களே? பொன்னரும்,கந்தனும் போன பிறவியில் பாவம் செய்தவர்கள் ஆனால் இந்த சில்வாக்களூம், பெரேராக்களூம் நம்மைக் கொன்றூம் நம் நாடி நரம்புக்கள் துடிக்கவே இல்லையே?
துடித்துத் துடித்தே
எம் நரம்புகள்
செத்துவிட்டன ஐயா
உங்கள் நரம்புகள் கண்டதுக்கு எல்லாம் துடித்து நாசமாய் போயிருக்கும் ஆனால் இனத்துக்குக்காய் மண்ணூக்காய் அவை துடித்திருக்காதே?
கருத்தில் இனவெறி தாண்டவமாடுகிறது.பொன்னருக்கெதிராக கந்தனையும் கந்தனுக் கெதிராக பொன்னரை ஏவிவிட்டதும் எமது சமூகஅமைப்பே முழுவதுமாகக சிதறியோடாமல் பாதுகாத்தவர்கள் சில்வாக்களும் பெரோக்களுமே
வரும் காலத்தில் தலைமாறி சிந்தியுங்கள் கணக்கு சரியாக வரும்.
மற்றி மற்றி சிந்திக்கின்ற ரொட்சிச பன்னாடைகள் வந்துசேர்ந்திருக்கின்ற இடம்தான் பேரினவாதிகளுக்கு ச்ல்லாரி(?) அடிப்பது. மனிதகுலமேன்மைக்காக காலை உண்வுக்குபதிலாக மாக்சிச சிந்தனை உட் கொண்டோம் என பம்மாத்து பண்ணிக்கொண்டே, பேரினவாதிகளின் மனிதப்படுகொலையை மூடிமறைக்கும் பொய்யர்கள் மத்தியில் பேராயரின் குரல் மனிதத்தின் ந்ம்பிக்கை குரலாக ஒலித்திருக்கின்றது. அட நியாயமான கேள்வியக்கூட விட்டார்களா பொய்யர்கள்? அதையும் இனவாதம் என்று ஈனம் பேசுகின்றார்கள். எதற்கும் துருப்புச்சீட்டாக சாதியத்தை பற்றிபேசி உங்கள் அரசியல் வங்குரோத்தை மறைத்துவிடமுடியாது.
கணக்கு பார்த்தவன் அமைதியாக இருக்க கூட்டல்கழித்தல் தெரியாதவன் துள்ளிக் குதிப்பதில் விந்தையில்லை. துள்ளுகிற கழுதை பொதி சுமக்காது. இதுவே ராமுன் நிலையும். பொன்னனும்கந்தனும் சில்வாவும்பெரேராவின் பாட்டாளிவர்கத்தை சேர்தவர்கள்.இலங்கைத்தீவின் உழைப்பாளிகள்.நாட்டின் செல்வத்தை ஈட்டிக்கொடுப்பவர்கள். இவர்களை பிரித்துவைத்து அரசியல் மாயாஜலம் நடத்துவது முள்ளிவாய்கால்லுடன் முடிவடைந்து விட்டது. இந்த முள்ளிவாய்கால் பிரேதங்கள் இனி உயிருடன் எழுந்துவந்து பிரிவினை கோரப் போவதில்லை. ராமு உயிருடன் எழுந்து வந்தது போலவே தோன்றுகிறது. இது வரும் காலஅரசியலுக்கு எந்தவிதத்திலும் உதவப்போவதில்லை. ராமு தமிழ்மொழியில் அழகிய வார்தைகள் இருக்க ஏன்? அசிங்கமாக வார்த்தைகளை தேடிப்பிடித்து கையாளுகிறீர்கள். ஆத்திரப்படுபவனுக்கு புத்தி மட்டம். துள்ளுகிற கழுதை பொதிசுமக்காது. பன்னாடை பரதேசிவார்த்தைகளை விட்டு முடிந்தால் தனியொருநாட்டில் சோசலிஸமா? நிரந்தரப்புரட்சி சாத்தியமா? இன்றைய உலகிற்கு தேவையானது என விளக்கம் கொடுங்கள்.அது பயன்யுள்ள பணியாக இருக்கும் வாசகர்களுக்கு.
கணக்குப்பார்ப்பதல்ல விளக்குப்பிடிப்பதே( மாக்சிய அறிவெனும் ஒளியை பேரினவாதகொலைகாரகும்பலுக்கு ஆதரவாக) இன்றைய தேவை என்று சிலர் முன்முடிபுகளுடன் செயல்படுகின்றார்கள். இது சமூக விரோத அரசியல். அது வெட்கம் அறியாதது.
சிங்கள உழைப்பாளிகளை பேரினவாதிகளாக காண்கிற கண்களுக்கு என்ன மாக்ஸிய ஒளி வேண்டியிருக்கிறது?. இது மதியுரை அறிஞர் அன்ரன் பாலசிங்கம் “தழிழீழ சோசலிஸசம்” நோக்கி முள்ளிவாய்கலில் முடிவடைவதற்கு ஒப்பானது ராமன்னா!. மீண்டும் விஷப்பரீட்சையா? தயவு செய்து நிறுத்துங்கள்.
மனித நேயமே இல்லாத மண்டை கழண்ட உங்களப் போன்றோருக்கு தலையில் தட்டி விட்டது.முதல்ல நல்ல டொட்டர் இல்லாவிட்டிப் போனா பிள்ளயார் கோயில்ல ஒரு கயிறூ வாங்கிக் கட்டி சுகப்படுத்துங்கோ சந்திரன் ராசா. ஒரு மாதிரிக் கதைத்து நீங்கள் தெருவில நிக்கிறத பார்க்கேலாது.எல்லாம் சிவன் விட்ட வழி?
சிவன்கோவில் நிற்கவேண்டிய சக்திவேல் இங்கு வந்து அரசியல் கருத்து சொல்லுகிறது ஆச்சரிமாக இருக்கிறது. பிள்ளையாருக்கு நேர்த்தி வைக்கிறதோ நுhல்கயிறு கட்டிக் கொள்வதோ தமிழருக்கு ஒன்றும் புதியதல்ல. அப்படி செய்து அவர்மனம் சாந்தியடையுமென்றால் செய்ய வேண்டியது தானே! மனிதநேயம் பற்றிக் கதைக்கிறீர்களே! தமிழனை தமிழன் தெருவில் போட்டு கொளுத்தும் போது மனிதநேயத்தை எங்கு அடைவு வைத்திருந்தீர்கள்?. பரதேசிகளாக ஆக்கபட்ட வன்னிமக்கள் வன்னியை விட்டுபறப்பட்ட போது தற்கொலைபடை கொண்டு தாக்கிய நேரம் உங்கள் மனிதநேயத்திற்கு நேரம் இல்லாமல் போய்விட்டதா? ஆலடிக்கடையில் இட்டலி சாப்பிட்டுகொண்டிருந்தீர்களா??. சக்திவேல்! மிச்சம்மீதியிருக்க தமிழினைத்தை பாதுகாப்பதற்கு அரசியல் போராட்டம் நடத்தத் தேவையில்லை பாய்ந்து ஓங்கிஉங்கள் மூஞ்சியில் ரத்தம் வர குத்தினாலும் அது அரசியல் போராட்டமே!.அது மனிதநேயமே!!
சந்திரன் ராசா கிருஸ்ணரின் வழியில சிந்திக்காமல் ராவணற்ற வழியில் சிந்தித்துச்சுத்துதான் தலைவர் நாசமாய்ப் போனார்.நமக்கு என்ன சில்வாக்களோடு பரம்பரைப் பகையா ஆனால் அவங்கள்தானே எங்களக் கண்டால் பிடிச்சுத் தின்ன ஆசைப்பட்டது,கோபக்காரன் கோத்தபாயா கொதியோடு கொண்ட்டது உன் இனம் அய்யா,உன் இனம்.
பேராயர் ராயப்பு அவர்களுக்கு மிகுந்த வந்தனம். மரணித்துவிட்ட தமிழ் உயிர்களின் எண்ணிக்கையில் ஒரு சிறிய தவறு நேர்ந்திருக்கிறது என்று நினைக்கிறேன். புலிப்படைகள் செய்த கொலைகளும் இதில் அடங்குகிறதா அல்லது அந்த எண்ணிக்கை வேறா?
பக்க சார்பற்றவிசாரணைகள் மூலம் அதை தெளிவுபடுத்தும் பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கின்றது. அதனைத்தான் பேராயர் தெளிவுபடுத்தியிருக்கின்றார். உங்கள் எஜமானர்களான மகிந்தகும்பல் அதற்கு தயாராக இல்லையென்பதும், பேரினவாதிகளின் தயவில்வாழும் அறிவு(?) ஜீவிகள் உண்மைபேசப்போவதில்லை என்பதையுமே இப்பின்னூட்டம் சொல்லிநிற்கிறது.
தேசத்தில் சிலருக்கு இராயப்பு ஆண்டகையை பிடிக்க வாய்ப்பில்லை ஏனெனில் வாய்ப்பனுக்காக வாயைத் திறந்து இன்னும் மூடாமல் வைத்திருப்பவர்கள், தன் மண்ணீன் மக்களூக்காக குரல் கொடுப்போரை எவ்வாறூ ஏற்றூக் கொள்வார்கள்?