அமரிக்காவும் பிரித்தானியாவும் ஏனைய ஐரோப்பிய நாடுகளும் சிரியாவில் இஸ்லாமியப் அடிப்படைவாதப் பயங்கரவாதிக்ளின் ஊடாக நாடத்திய தாக்குதல் படு தோல்வியடைந்ததைத் தொடர்ந்து சிரியா மீதான நேரடி ஆக்கிரமிப்பிற்குத் திட்டமிட்டு வருகின்றன.
உலகம் முழுவது இஸ்லாமிய அடிப்படைவாதத்தை எதிர்த்துப் போராடுவதாக சாரி சாரிய ஆயிரமாயிரம் அப்பாவிக்க் குழந்தைகளையும் அப்பாவி மக்களையும் அழித்துத் வெறியாட்டம் நடத்திவரும் ஐரோப்பிய அமரிக்க ஏகதிபத்திய நாடுகள் சிரியாவில் இஸ்லாமியப் அடிப்படைவாதப் பயங்கரவாத்த்தைத் திட்டமிட்டு வளர்த்தன. சிரிய மக்கள் அமரிக்கா தலைமையிலான பயங்கரவாதத்திற்கு எதிராக நடத்திய உயிர்த்துடிப்பான போராட்டம் சிரிய சர்வாதிகாரி ஆசாத் தனது ஆட்சியைத் தற்காலிகமாகத் தக்கவைத்துக்கொள்ள வழியேற்படுத்தியது. மறுபுறத்தில் அனைத்து நவீன தொழில் நுட்பங்களோடு அமரிக்க ஆதரவு இஸ்லாமியப் பயங்கரவாதிகளின் வன்முறை தோற்கடிக்கப்பட்டது.
அரபு நாடுகளில் அமரிக்க அரச பயங்கரவாதம் சந்தித்த முதலாவது இராணுவத் தோல்வி சிரியாவிலேயே நடைபெற்றது.
இத் தோல்வியின் பின்னர் சிரிய அரசு இரசாயன ஆயுதங்களை வைத்திருக்கின்றது என்ற ஆதாரமில்லாத வதந்தியை ஏகாதிபத்திய நாடுகள் கட்டவிழ்த்துவிட்டன. அந்த வதந்தியைக் காரணமாக முன்வைத்து சிரியாவில் நேரடி இராணுவ ஆக்கிரமிப்பை நடத்துவதற்காக அமரிக்க ஐரோப்பிய அரசுகள் திட்டமிட்டு வருகின்றன.
பிரித்தானியப் பாராளுமன்றம் இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து வாக்களித்தமையை தமது எதிர்ப்பிற்குக் கிடைத்த வெற்றி என்று ‘போருக்கு எதிரான கூட்டமைப்பு’ என்ற அமைப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நேற்று லண்டனில் ஒழுங்கி செய்திருந்தது. ஐயாயிரம் பேர் வரை கலந்துகொண்ட அந்த ஆர்ப்பாட்டத்தில் ரொனி பென் கலந்துகொண்டு உரையாற்றும் போது தமது குரல் பிரித்தானியாவின் குரலாக ஒலித்தது என்றார்.
பிரிட்டனில் இருக்கும் நம்மடை பொது உடமை வாதிகள் யாராவது கலந்து கொண்டார்களா ?
some of them are in the organising committee too oons
எண்ணை வளத்திற்காக சிரீயாவுடன் எதிரும் புதிருமாக நின்றாலும்,எப்படியும் கொஞ்சமாவது தேறுமென,பிரித்தானியர்கள் சிந்திப்பதில் பெரிய கில்லாடிகள்.
லூசுத்தனமா பேசுறங்கிறது இதைத்தான் !