அமரிக்க இராணுவத்தினர் மத்தியில் நடத்திய கருத்துக்கணிப்பில் சிரியா மீதான குண்டுவீச்சுத் தாக்குதல் அமரிக்க மக்களின் நலனுக்கானதல்ல என்று 80 வீதமானோர் கருத்துத் தெரிவித்துள்ளனர். மூன்றில் இரண்டு வீதமானவர்கள் சிரியா மீதான தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். Military Times என்ற சஞ்சிகை நடத்திய இக் கருத்துக்கணிப்பு அமரிக்க இராணுவத்தில் ஆக்கிரமிப்பிற்கு எதிராக நிலவும் மனோ நிலையைக் வெளிக்காட்டுகின்றது.
63 வீதமான அமரிக்க மக்கள் சிரியா மீதான தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். CNN/ORC நடத்திய உலக அளவிலான கருத்துக்கணிப்பில் 59 வீதமான மக்கள் சிரியா மீதான தாக்குதலை அமரிக்கக் காங்கிரஸ் அங்கீகரிக்கக் கூடாது என தெரிவித்துள்ளனர். USA TODAY என்ற சஞ்சிகை மக்கள் யுத்ததில் வெறுப்படைந்துள்ளனர் என்று தலையங்கம் எழுதியுள்ளது.
ஜனநாயக முற்போக்கு சக்திகளும், புரட்சிகர சக்திகளும் மேற்கொள்ளும் பிரச்சாரங்களை அமரிக்க உழைக்கும் மக்கள் உணர ஆரம்பித்துளமையை இது எடுத்துக்காட்டுகின்றது.
யுத்தம் தொடர்பான பிரச்சனையில் ரஷ்ய அரசின் முன்மொழிவைத் தொடர்ந்து குண்டுவீசுவதற்கான அங்கீகாரத்தைக் காலம் தாழ்த்துமாறு ஜனாதிபதி ஒபாமா காங்கிசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
உள்நாட்டிலேயே எதிர்பாராத எதிர்ப்புக்களைத் தற்காலிகாமக எதிர்கொள்ள அமரிக்க அரச நிர்வாகத்தின் நாடகம் இதுவென ரொன் போல் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இவை அனைத்துக்கும் மத்தியில் சிரிய கிளர்ச்சிப் படைகளுக்கு அமரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ ஆயுத்ங்களை இன்னும் வழங்கிவருவதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
வியட்நாமில் இரசாயன ஆயுதங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி மக்களை அழித்து போராளிகளிடம் தோற்றுப் போய்ப் பிணங்களாக இராணுவத்தினர் அமரிக்காவிற்கு அனுப்பப்பட்ட போது மக்கள் மத்தியில் போரை நிறுத்தக் கோரும் எதிர்ப்புணவு வெளிப்பட்டது. மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மக்கள் ம்த்தியில் ஏற்பட்டுள்ள இந்த விழிப்புணர்வு அமரிக்கப் ‘பேரரசின்’ வீழ்ச்சி அதன் அத்திவாரத்திலிருந்தே ஆரம்பமாகிவிட்டதற்கான அறிகுறி.
Syria is now in the focus. America will survive for ever.