லிபியாவைத் தொடர்ந்து சிரியாவைத் தாக்கி பேரழிவை ஏற்படுத்த திட்டமிட்டு வரும் அமெ ரிக்க ஏகாதிபத்தியத்தின் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவும் சீனவும் நிராகரித்தன.
சிரியாவில் பாத் கட்சி யின் தலைவரும் ஜனாதிபதி யுமான பஷார் அல் அசாத், தனது ஆட்சிக்கு எதிரான வர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டிருப்ப தாகவும், மக்கள் கொல்லப் படுவதாகவும், எனவே அவரை ஆட்சியிலிருந்து உடனடியாக அகற்ற வேண் டுமென்றும் அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள், தங்களது கைப்பா வையாக செயல்படும் அரபு லீக்கின் உதவியோடு சனிக் கிழமை இரவு ஐ.நா. பாது காப்பு கவுன்சிலில் தீர் மானம் கொண்டு வந்தன. இத்தீர்மானத்திற்கு ஆதர வாக இந்தியா உள்பட நிரந் தரமல்லாத 10 உறுப்பினர் களையும் சேர்த்து 13 உறுப்பு நாடுகள் வாக்களித் தன. எனினும், ரஷ்யாவும் சீனாவும் தங்களது ரத்து அதிகாரத்தை பயன்படுத் தியதால் தீர்மானம் நிறை வேறவில்லை.
சிரியாவில் நடக் கும் உள்நாட்டுப் பிரச்ச னைக்கு அமைதியான முறையில் தீர்வுகாண வலி யுறுத்த வேண்டுமேயொ ழிய, மிகப்பெரும் பேர ழிவை ஏற்படுத்தும் விதத்தி ல் உலக நாடுகள் நடந்து கொள்ளக்கூடாது என்று சீனா கூறியுள்ளது.
இந்த தீர்மான முன்மொழிவின் போது இந்தியாவும் அமரிக்காவும் ஓரணியில் ரஷ்யா மற்றும் சீனாவிற்கு எதிரணியில் திரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தியா மீண்டும் ஒரு தடவை அமரிக்க விசுவாசத்தைக் காடியுள்ளது.