‘நல்லாட்சி’ மைத்திரிபால சிரிசேனவைத் தலைவராகக்கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் மகிந்த ராஜபக்சவிற்கு வேட்புமனு வழங்கப்பட்டமை தெரிந்ததே, இன்று மகிந்தவின் கொள்ளையில் பங்கெடுத்துக்கொண்ட சகாக்கள் பலருக்கும் வேட்புமனு வழங்கப்பட்டுள்ளது. விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, சுசில் பிரேமஜயந்த போன்றவர்களுக்கு வேட்பு மனுவழங்கப்பட்டது.
மக்களின் ஆதரவை இழந்துள்ள மகிந்த ராஜபக்ச, மிண்டும் மைத்திரியின் ஆதரவோடு அரசியலில் நுளைகிறார். மகிந்த ஆட்சியில் அவரின் அடிமைகளாகச் செயற்பட்ட விமல் வீரவன்ச போன்ற போன்றவர்கள் மீண்டும் அரசியலுக்குள் நுளைகின்றனர்.
இலங்கை முழுவதும் மக்கள் விரக்தியடைந்துள்ளனர். மகிந்த – மைத்திரி கூட்டு இலங்கையைச் சூறையாடுவதற்கான புதிய தயாரிப்பு. இதன் பின்புலத்தில் ஏகாதிபத்திய அரசுகள் செயற்படுகின்றனவா என்பது குறித்த ஆய்வுகள் தேவை.
மிகவும் ஆபத்தான நிலைமை இது.
கடந்த வருட இறுதியில் மகிந்தவிற்கு எதிரான உணர்வுகள் தலை தூக்கியிருந்த போது அதற்கு எதிரான போரில் மைத்திரி முன்னிறுத்தப்பட்டார். இதன் மூலம் மகிந்தவிற்கு எதிரான வாக்குகளை அவர் கொள்ளையடித்தார். இப்போது அவரே மகிந்த மீண்டும் பின்கதவால் வர இடமளிக்கிறார்.
மகிந்த தொடர்ந்தும் பதவியிலிருக்கும் முகமாக மேற்கொள்ளப்பட்ட சதியின் விளைவாகத்தான் மைத்திரி சென்ற வருடம் கட்சி மாறினாரா என்பதும் ஆராயப்பட வேண்டியதே.
இப்போது மகிந்தவிற்கு எதிரானவர்களின் பட்டியல் மைத்திரி வசம் இருக்கிறது. மகிந்த எதிர் அணியின் தந்திரங்கள் வியுகங்கள் வசதிகள் கூட மைத்திரி வசம் உள்ளது. வேட்டை விரைவில் தொடங்கப் போகிறதா?