சிரியாவின் விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தின் மீது இஸ்ரேல் குண்டுத்தாக்குதல் நடத்தியிருந்தமை அறிந்ததே. தலை நகர் டமாஸ்கஸின் புற நகர்ப் பகுதியான ஜம்ரஹ்யாவில் நடைபெற்ற இந்தத் தாக்குதல் குறித்து ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பாதுகாப்புச் சபை அதிபருக்கு சிரிய அரசு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
சிரிய ஜிகாதி அமைப்பான அல் நுசாரா இந்தப் பகுதிகள்மீது தாகுதல் நடத்தி கைப்பற்ற முயற்சித்து தோல்விகண்ட பின்னர் இஸ்ரேலின் உதவியோடு சில பகுதிகளில் நுளைந்துள்ளதாக கடிததில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமரிக்க ஆதரவு அரசான சௌதி அரேபியாவின் ஆதரவோடு பயிற்றுவிக்கப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு பிரித்தானியா வெளிப்படையாகவே பண உதவிகளை மேற்கொள்கிறது. இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இஸ்லாத்த்தின் அடிப்படை எதிரிகளான இஸ்ரேலுடன் கூட்டுச் சேர்ந்துகொள்கிறார்கள்.
இதே அடிப்படை வாதத்தை கோட்பாடாக முன்வைக்கும் சௌதி அரசின் ஆதரவாளர்கள் கமலஹாசனின் அமரிக்க ஆதரவு திரைப்படமான விஸ்வரூபத்தை எதிர்க்கிறார்கள். மதவாதத்தை தூண்டும் இஸ்லாமிய அடிப்படை வாதிகள் அவர்களுக்கு எதிராக உலகம் முழுவதும் கொலைகளை நடத்திவரும் அமரிக்கா குறித்து பேசுவதில்லை. இந்து அடிப்படை வாதிகளைப் போன்றே இவர்களும் அமரிக்க அரசிற்கு சேவை செய்கிறார்கள். இடையில் நசுங்கி மாண்டுபோவது அப்பாவி தமிழர்களே.
This puts the Tamils of Sri Lanka – Shri Lanka in a precarious position. 1948. Palestine and Kashmir.