சென்னை உயர்நீதிமன்ற அமர்வின் இறுதி தீர்ப்பின் படி 2009 –ம் ஆண்டில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட சிதம்பரம் நடராசர் கோவிலை மீண்டும் தீட்சிதர்களின் வசமே ஒப்படைக்கும் வண்ணம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. 40 ஏக்கர் பரப்பளவுள்ள கோயிலும், சுமார் 2,700 ஏக்கர் நிலமும், பல கோடி மதிப்புள்ள நகைகளும் கோயிலின் அர்ச்சகர்களான தீட்சிதர்களின் கட்டுப்பாட்டுக்குப் போய்விட்டது. தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கோயிலை, தீட்சிதப் பார்ப்பனர்களின் தனிச்சொத்தாக்கியிருக்கிறது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு.
பார்ப்பனியத்தின் தமிழின வெறுப்புக்கும், தீண்டாமைக்கும் வரலாற்றுச் சான்றாக இருப்பவர்கள் தீட்சிதர்கள். அன்று நால்வர் பாடிய தேவாரத்தை சிதம்பரம் கோயிலுக்குள் முடக்கி வைத்து அழிக்க முனைந்த தீட்சிதர்கள்தான் பத்தாண்டுகளுக்கு முன் திருவாசகம் பாடிய சிவனடியார் ஆறுமுகசாமியை சிற்றம்பல மேடையிலிருந்து அடித்து வீசினார்கள். அன்று நந்தனாரை எரித்துக் கொன்றது மட்டுமல்ல, 1935 -ம் ஆண்டுவரை நடராசர் கருவறைக்கு எதிரே இருந்த நந்தனார் சிலையை அகற்றியவர்களும் அவர்கள்தான். நந்தனார் நுழைந்த தெற்குவாயிலை மறித்து தீண்டாமைச் சுவர் எழுப்பிவைத்துக் கொண்டு, அதை நியாயப்படுத்துபவர்களும் தீண்டாமை வெறி பிடித்த தீட்சிதர்கள்தான்.
தீட்சிதர்கள் பக்தர்களை எப்படி நடத்தினார்கள் என்பது பக்தர்களுக்குத் தெரியும். தீட்சிதர்கள் எந்த சட்டத்தையும், எந்த பக்தரையும் மதித்ததில்லை. பக்தர்களிடம் பணம் பறிப்பது, சாமி நகைகளை களவாடியது, கள்ளக் கையெழுத்துப் போட்டு கோவில் சொத்தை விற்றது என்று தீட்சிதர்கள் செய்த அயோக்கியத்தனங்களைப் பற்றி சக தீட்சிதர்களே அரசுக்குப் புகார் கொடுத்ததன் விளைவாகத்தான் 1982-ல் எம்.ஜி.ஆர் அரசு நிர்வாக அதிகாரியை நியமித்தது. எம்.ஜி.ஆர் அரசு போட்ட ஆணையைத்தான் தற்போது ஜெயலலிதா அரசு குப்பையில் வீசியிருக்கிறது.
‘உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும், தமிழக அரசு தனிச்சட்டமொன்று இயற்றி சிதம்பரம் கோயிலை அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர முடியும். எல்லா பிரச்சினைகளுக்கும் சட்டமன்றத்தில் “வரலாற்று சிறப்பு மிக்க ஒருமனதான தீர்மானம்” இயற்றும் ஜெயலலிதா அரசு, இதற்கு ஒரு மசோதா கொண்டு வந்து ஒருமனதாக அதை ந்நிறைவேற்றி சட்டமாக்க முடியும். அவ்வாறு சட்டமியற்ற வேண்டும் என்பதற்காகப் போராடுவோம். அது மட்டுமல்ல, பார்ப்பன சாதிவெறி பிடித்த தீட்சிதர்கள், தமிழ் மக்கள் அனைவரையும் இழிவுபடுத்தும் வண்ணம் கோயிலின் தெற்கு வாயிலில் எழுப்பியிருக்கும் தீண்டாமைச் சுவரை அகற்ற வேண்டும். கோயிலில் இருந்து திருட்டுத்தனமாக அகற்றிய நந்தனார் சிலையை மீண்டும் நிறுவவேண்டும் என்பதற்காகவும் போராடுவோம்.’ என்று அறிவித்திருக்கிறார் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் சி.ராஜூ
தில்லை நடராசன் கோவிலில் நடக்கும் தீட்சிதர்களின் கொட்டத்தை எதிர்த்து கடந்த பத்து ஆண்டுகளாக நடந்து வரும் போராட்டத்தை அறிவிர்கள்.இன்று காலை பத்து மணிக்கு உச்ச நீதி மன்றம் என்ற பெயரில் இயங்கும் ’உச்சிக்குடுமி’ மன்றத்தில் நீதிபதிகள் சவுகான், காப்டே அடங்கிய அமர்வு சிதம்பரம் நடராசர் கோவிலை மீண்டும் தீட்சிதப் பார்ப்பன கும்பலிடம் மீண்டும் ஒப்படைத்து பார்ப்பனிய விசத்தை கக்கியது.
இந்த தீர்ப்பு வெளியான உடன் ஆயிரம் ஆண்டுகளாக கோவிலை தனது சொந்த சொத்து போல பாவித்து கொண்டு கொள்ளையடித்து வந்த தீட்சிதர் பார்ப்பன கூட்டம் கோவில் பிரகாரத்துக்குள் அதிர் வேட்டுப்போட்டு சரவெடி வெடித்து கொண்டாடினார்கள். இந்த தீர்ப்பை எதிர் பார்த்து காத்துக் கொண்டிருந்ததை போல மாமிகளும், அம்பிகளும் ஆளுக்கு ஒரு தொலைபேசியுடன் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டிருந்தனர். சாதி- தீண்டாமை கொடுமைகளை சட்டப்படியே இனி நடத்தலாம், கோவிலை தனது இஷ்டம் போல கொள்ளை கூடாரமாக நடத்தலாம் என்றப் பார்ப்பன ஆதிக்க திமிருடன் ஊர்த்வ தாண்டவம் ஆடினார்கள்
பார்ப்பன கும்பலின் ஆதிக்கத்தையும், சாதி-தீண்டாமை கொடுமைகளையும் எதிர் கொண்டு உழைக்கும் மக்களை திரட்டி போராட்டத்தில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் பு.ஜ.தொ.மு, விவிமு., புமாஇமு மற்றும் மனித உரிமை பாதுகாப்பு மையம் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த தோழர்கள் சிதம்பரம் மேலவீதி பெரியார் சிலை அருகில் திரண்டு
கோவிலை தீட்சிதர்களிடம் இருந்து கைப்பற்ற தனி சட்டம் இயற்ற வேண்டும்.
நந்தன் நுழைந்த தெற்கு வாசலை அடைத்து தீட்சிதர்கள் எழுப்பீருக்கும் தீண்டாமை சுவரை தகர்த்து எறிய வேண்டும்.
நந்தனார் சிலையை மீண்டும் நிறுவ வேண்டும.
என்று ஆர்ப்பாட்டம், சாலை மறியல் நடத்தினர்.
http://www.vinavu.com/2014/01/06/demo-against-dheekshitar-takeover-of-chidambaram-temple/
Shall we do the same thing that we did to the mosque in Ayothya, that should make you happy and the problem is solved ?
in Masjid and Church they are allowing all . But here you are not allowing even our supressed brothers. U are not allowing others to perform poojas. This is the way you are insulting the belief of other Hindu brothers
The British left us courts and laws. We manipulate rules and regulations. Then we spend our money on lawyers to satisfy our ego.
You are the one insulting your fellow Hindu bros by patronizing a temple that doesn’t want you all. If you are smart you will boycott the place and start your own place of worship in its place. You can’t that stupid for me to tell you this.
தமிகை மதலமைச்சரும் ஒரு பாப்பளாரே
அவர்களை அரியணை ஏற விட்டு பி இப்படி அஐதால் என்ன பிரயோசனம்