Monday, April 27, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

சிதம்பரம் நந்தன் நடந்த பாதையைத் திறக்க போராட்டம்- 600 பேர் கைது.

இனியொரு... by இனியொரு...
07/15/2010
in இன்றைய செய்திகள்
0 0
4
Home இன்றைய செய்திகள்

சிதம்பரம் நடராசர் ஆல யத்திற்கு தலித் சமூகத்தின் நந்தன் சென்ற பாதையை மறைத்து அடைக்கப்பட் டுள்ள கதவைத் திறந்திட வும், தடுப்புச் சுவரை அகற் றிடவும் வலியுறுத்தி புத னன்று (ஜூலை 14) எழுச்சி மிகு போராட்டம் நடை பெற்றது. அனைத்து மக்க ளுக்கும் சம உரிமை வழங் கும் அரசமைப்பு சாசனத் திற்கு விரோதமாக ஆலயத் தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடைப்பை அகற்றுவதற்கு மாறாக, தமிழக அரசின் காவல்துறையினர் அந்தக் கதவை திறக்கக் கோரி போராடியவர்களைக் கைது செய்தனர். நந்தன் சென்ற பாதையில் தாங்களும் நடந்து சென்று இப்போராட்டத் தில் பங்கேற்ற சுமார் 600 பேர் கைது செய்யப்பட் டனர்.
சிதம்பரம் நடராசர் ஆல யத்தில் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என நான்கு கோபுர வாயில்கள் உள்ளன. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நந்தன், நடராசரை தரிசிக்க தெற்கு கோபுர வாயில் அருகே உள்ள வழி யில் சென்றார். அந்தணர்கள் அன்று, ஆலயம் தீட்டுப் பட்டுவிட்டது என்று கூறி நந்தனை தீக்கிரையாக்கி, பின்னர் அவர் நெருப்பில் இறங்கி தன்னை புனிதப் படுத்திக்கொண்டு நடராச ரோடு ஐக்கியமாகிவிட்ட தாக கதை கட்டி விட்டனர். மேலும், நந்தன் சென்ற வாயில் கதவை மூடி, அதன் பின்னணியில் சுவர் எழுப்பி அடைத்துவிட்டனர்.தீண்டாமைக் கொடு மையின் மூலஸ்தானம்போல் இருக்கும் இந்தச் சுவரை இடித்து, கதவைத் திறக்க, ஆலயத்தை தனது பொறுப் பில் எடுத்துக் கொண்டுள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி புதனன்று போராட் டம் நடைபெற்றது. தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இந்தப் போராட் டத்திற்கு அழைப்பு விடுத் திருந்தது.நகரில் உள்ள அம்பேத் கர் சிலை அருகிலிருந்து, பேரணி புறப்பட்டது. சுமார் 2 ஆயிரம் பேர் பங்கேற்ற பேரணிக்கு முன்னணியின் மாநிலத் தலைவர் பி. சம்பத் தலைமை தாங்கினார்.தடுப்புச் சுவரை அகற் றக்கோரி ஊர்வலமாகச் சென்றவர்கள், தெற்கு கோபுர வாயில் அருகில் வந்தபோது காவல்துறை யினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். அங்கே கயிற் றுத் தடுப்புகள் அமைக்கப் பட்டிருந்தன. சிறிது நேரம் அங்கே பதட்டமான சூழல் உருவானது. பேச்சுவார்த் தைக்கு அதிகாரிகள் வருவதாக காவல்துறையினர் தெரிவித் தனர். அதைத் தொடர்ந்து சுட்டெரிக்கும் வெயிலை யும் பொருட்படுத்தாமல் அனைவரும் அங்கேயே சாலையில் அமர்ந்தனர்.

பின்னர், கோட்டாட்சி யர் ராமராஜ், வட்டாட்சியர் காமராஜ், செயல் அலுவலர் சிவகுமார் உள்ளிட்டோர் போராட்டத் தலைவர்களு டன் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டம் குறித்து முன் கூட்டியே அறிவிக்கப்பட்டி ருந்தும், சம்பந்தப்பட்ட இந்து சமய அறநிலையத் துறை சார்பில் உயர் அதி காரிகள் யாரும் பேச்சுவார்த் தையில் கலந்துகொள்ள வில்லை என்பது குறிப் பிடத்தக்கது. பேச்சுவார்த் தைக்கு வந்த அதிகாரிகள் தடுப்புச் சுவர் அகற்றப்படு வது குறித்து வாக்குறுதி எதுவும் அளிக்க மறுத்தனர்.இதனால், அதிருப்தி அடைந்த ஊர்வலத்தினர், சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். இத னால், ஒரு மணி நேரம் போக்குவரத்து நின்றது. சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னணியின் தலைவர் களையும், தொண்டர்களை யும் காவல்துறையினர் கைது செய்தனர். 60 பெண் கள் உட்பட சுமார் 600 பேரை கைது செய்தனர்.இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே. பாலகிருஷ்ணன், பி. செல்வசிங், பெ.சண்முகம், மாவட்டச் செயலாளர் டி. ஆறுமுகம், மாநில குழு உறுப்பினர்கள் எஸ். தன சேகரன், மூசா, சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே. மகேந் திரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலாளர் கே. சாமுவேல் ராஜ், தமுஎகச மாநில பொதுச் செயலாளர் ச. தமிழ்ச்செல்வன், அம்பேத் கர், இந்திய குடியரசு கட்சி சார்பில் அ.த.ஸ்ரீரங்கன் பிரகாஷ், மனித உரிமை கட் சியின் எல்.ஆர்.விஸ்வநா தன், ஆதி தமிழர் பேரவை மாநில தொண்டரணி தலை வர் வீரமுருகு, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கட லூர் மாவட்ட அமைப்பா ளர் எஸ்.துரைராஜ் உள் ளிட்டோர் கலந்து கொண் டனர்.

“சுவரை அகற்றுவோம்”

நடராசர் ஆலயத்தில் இருக்கும் தீண்டாமைச் சுவரை அரசு அப்புறப்படுத் தாவிட்டால் தீண்டாமை ஒழிப்பு முன்னணியே அத னை அப்புறப்படுத்தும் என்று பி. சம்பத் கூறினார்.சிதம்பரத்தில் நடை பெற்ற போராட்டத்தை யொட்டி செய்தியாளர்க ளுக்கு பேட்டி அளித்த அவர், “நந்தனார் சென்ற தெற்குவாயில் தீட்டுப்பட்டு விட்டது என்று ஆதிக்க சக்தியினரால் தீண்டாமைச் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இது வெட்கக் கேடானது. இதை அப்புறப்படுத்தக் கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் போராட் டம் நடத்துகிறோம்,” என்றார்.கே. பாலகிருஷ்ணன் போராட்டம் பற்றி கூறு கையில், “சாதிக் கொடு மைக்கு உள்ளான நந்தனார் ஆலயத்தில் நுழைந்தான் என்ற காரணத்திற்காக அடைத்து வைப்பது, அறு சுவை உணவின் நடுவே மலத்தை அள்ளி வைப்பது போன்றதாகும்,” என்றார். புனிதமான நடராசர் ஆல யத்தில் தீண்டாமையின் கோர வடிவமாக சுவர் நீடிப் பது அவமானத்திற்கு எடுத்துக் காட்டாகும். தமிழக அரசு அப்புறப்படுத்தவில்லை என்றால் தில்லை நடராசர் ஆலயத்தில் உள்ள தீண் டாமைச் சுவரை நாங்களே அகற்ற வேண்டிய கட்டா யம் ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

அன்பு.... அக்கா அசினிற்கு : பா.மாணிக்கம்

Comments 4

  1. JAMES FRIEDRICH says:
    16 years ago

    ஒவ்வொரு “கிருஸ்தவ தேவாலயத்திலும்” மூலஸ்தானத்திற்கு பின்புறத்தில் ஒரு “சிறிய வாசல் கதவு” இருக்கும்!.அதுபோலதான் இந்த வாசலும்!.இது தீண்டாமையின் சின்னமல்ல!.இது மேற்கத்தியவர்களால்(குறிப்பாக தியோஸப்பிக்கல் சொசைட்டி,அடையாறு,சென்னை) இவ்வாறாக திரிபு படுத்தப்பட்டுள்ளது!.முதலில்,இந்த கிருஸ்தவ ஆலயங்களுக்கு எதிராக இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை செய்யுங்கள்!.
    டெல்லி: சர்வதேச தரத்திலான இந்திய ரூபாய்க்கான சின்னத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஐந்து பேர் கொண்ட குழு பல்வேறு சின்னங்களை ஆராய்ந்து உறுதியில், ஐஐடி கான்பூரில் படித்த மாணவரான உதயக்குமார் வடிவமைத்த சின்னத்தை தேர்வு செய்துள்ளது.
    மொத்தம் ஐந்து சின்னங்களை இந்தக் குழு ஆராய்ந்து அவற்றிலிருந்து உதயக்குமாரின் சின்னத்தை தேர்வு செய்து மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. மத்திய அமைச்சரவை இந்த சின்னத்தை தற்போது ஏற்ருக் கொண்டுள்ளது.
    தேவநாகரி எழுத்தான ‘ற’(ஹிந்தி) மற்றும் ரோமன் எழுத்தான ‘ற்’(சோனியா காந்தி) ஆகியவற்றின் கலவையாக உதயக்குமார் உருவாக்கிய சின்னம் உள்ளது. நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் எண்ணத்தையொட்டி இந்த சின்னம் அமைந்துள்ளது.
    பட்ஜெட் தாக்கலின்போது இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் வகையிலான ரூபாய்க்கான சின்னத்தை அறிமுகப்படுத்த விரும்புகிறோம் என்று கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

    தற்போது தேர்வாகியுள்ள சின்னத்தை நிதியமைச்சகம் அங்கீகரித்துள்ளது.

    இந்த சின்னத்தை வடிவமைப்பதற்காக போட்டி ஒன்றையும் நிதியமைச்சகம் அறிவித்திருந்தது. இதற்கான பரிசாக ரூ. 2.5 லட்சம் அறிவிக்கப்பட்டிருந்தது.
    இந்திய ரூபாய்க்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும் வகையில் டாலர், யென், யூரோ உள்ளிட்டவற்றின் வரிசையில் தனி சின்னத்தை உருவாக்க மத்திய அரசு தீர்மானித்தது.

  2. thamilmaran says:
    16 years ago

    நந்தன் நடந்து வந்த பாதையா?அபபடி ஒன்றூ நடக்கவே இல்லை.இல்லாத ஒன்றூக்காய் இத்தனை ஆர்ப்பரிப்பு எதற்கு.புண்ணாக்கு ஏன் விலை ஏறவில்லை என்றூ இப்போதுதான் புரிகிறது.

  3. paamaran tamilan says:
    16 years ago

    சிதம்பரம் கோயிலில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்று தடையுத்தரவினை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள போது அரசு அதை மீறி எப்படி சுவரை இடிக்க உத்தரவிட முடியும்.சுவர் இருப்பதால் பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுகிறதா.
    அப்படியானால் உச்சநீதிமன்றத்தில் மனு செய்து அனுமதி பெறலாமே?. இது தேவையற்ற போராட்டம்.அரசால் தலையிட முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும்.

  4. Selva Kumar says:
    9 years ago

    மறைத்த சம்பவங்களை தமிழக அரசு முன் வந்து வெளிப்படுத்த வேண்டும்.தெற்கு வாசலை சுவர் போல் மறைத்து வைக்க வேண்டிய அவசியமென்ன?!?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...