சிங்கள மாணவர் கிழக்குப் பல்லகைக்கழக வளாகத்துள் கொலை

இன்று வியாழக்கிழமை இரவு சுமார் 9.30மணியளவில் பல்கலைக்கழகத்துக்தின் மாணவர் விடுதிக்கு உள்ளேயே இந்த மாணவன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகபீடத்தில் இறுதியாண்டு கல்விபயிலும் குருணாகல் மாவட்டம் பொத்தகல பிரதேசத்தைசேர்ந்த எச்.எம்.சுஜரிதபகன் சமரசிங்க(26வயது) என்ற மாணவனே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுததாரிகள் விடுதிக்குள் வந்து குறித்த நபரின் அறைக்குள் சென்று இவரை அழைத்து துப்பாக்கிசூட்டை நடத்திவிட்டு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு சென்றுள்ள பொலிஸாரும் படையினரும் அப்பகுதியில் கடும் தேடுதல் மேற்கொண்டுவருதுடன் பல்கலைக்கழகம் முழுவதும் தேடுதல் நடத்திவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.