இலங்கையில் பேரினவாதத்தினதும் பாசிசத்தினதும் தத்துவார்த்தப் பின்புலம் சிங்கள பௌத்த மேலாதிக்கமாக அமைந்திருக்கின்றது. மகிந்த அரசு தன்னை ஆதிக்கத்தில் நிலை நிறுத்த சிங்கள பௌத்த மேலாதிக நச்சை பெரும்பான்மை மக்கள் மத்தியில் விதைக்கிறது. மற்றொரு பேரினவாதக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மகிந்த அரசின் பேரினவாதத்தைத் தீவிரப்படுத்தக் கோருகிறது.
இலங்கையில் தேரவாத பௌத்தம் ஆரம்பிக்கப்பட்ட அனுராதபுர மஹாவிஹாரை உள்ளிட்ட முக்கிய பௌத்த தளங்களை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளர்.
அனுராதபுர மஹாவிஹாரை சிதைவடைந்த நிலையில் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பௌத்த மத வழிபாட்டுத் தளங்களை பாதுகாக்க
வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என அவர் சுட்க்காட்டியுள்ளார்.
எதிர்கால சந்ததியினரின் நலனைக் கருத்திற் கொண்டு நாட்டின் வரலாற்று
முக்கியத்துவம் வாய்ந்த பௌத்த மத வழிபாட்டுத் தளங்களை பேணிப் பாதுகாப்பதற்கு
அரசாங்கம் தெளிவான திட்டமொன்றை வகுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.