இலங்கையின் அரசியல்வாதிகள் சிலர் வேற்று மதங்களுக்கு நாட்டில் உள்ள காணிகளை ரகசியமான முறையில் விற்பனை செய்து வருவதாக குற்றம் சுமத்தியுள்ள சியாம் மா பீடத்தின் மாநாயக்கர் உடுகம ஸ்ரீ புத்தரக்கித தேரர், நாட்டை ஆட்சி செய்த அனைவரிடமும் இது பற்றி கூறிய போதிலும் எந்த பலனும் ஏற்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
சிங்கள பௌத்த நாட்டை காப்பற்ற வேண்டும். சிங்கள பௌத்த பிள்ளைகள் வாழக் கூடிய நாட்டை உருவாக்கி கொடுக்க வேண்டும். நாட்டையும், நகரங்களையும் அந்நிய மதத்தினார் படிப்படியாக ஆக்கிரமித்து வருகின்றனர். இவ்வாறு சென்ற சிங்கள பௌத்தம் நடு வீதிக்கு வந்து விடும் எனவும் மாநாயக்கர் குறிப்பிட்டுள்ளார்.
மாத்தளையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார். சிங்கள பௌத்தர்கள் வாழ்வதற்கு இலங்கையை விட்டால் வேறு நாடுகள் இல்லை. அந்நிய மதங்கள் நாட்டை ஆக்கிரமித்து வருவதால், சிங்கள பௌத்தர்கள் காடுகளுக்கு செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும். நிலைமை இவ்வாறு சென்றால் சிங்கள பௌத்தர்கள் நடு வீதிகளில் இறக்க நேரிடும்.
முஸ்லிம் அடிப்படைவாதிகள் பங்களாதேஷில் பௌத்த வழிப்பாட்டு தலங்களை அழிக்கின்றனர். அன்று இந்தியா, மலேசியா போன்ற பௌத்த நாடுகளில் இருந்த பௌத்தவர்கள் விரட்டப்பட்டு வேற்று மதங்கள் அந்த நாடுகளை கைப்பற்றி கொண்டன. அவ்வாறு நிலைமை இலங்கைக்கு ஏற்பட இடமளிக்க வேண்டாம். கட்சி அரசியல் காரணமாக பௌத்த சிங்கள நாடு நாளுக்கு நாள் அழிவடைந்து வருகிறது எனவும் புத்தரக்கித தேரர் கூறியுள்ளார்.
சிங்கள பௌத்த இனவெறிக்கு எதிரான போராட்டம் தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியிலும், இனவாத்திற்கு எதிரான பிரச்சாரம் தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியிலும் மேற்கொள்ளப்பட வேண்டும்.









ஊரான் காசில் திண்டுகொண்டு…கவட்டுக்குள் கையைசொருகி விகாரை மொகட்டைப்பார்த்து தூங்கினால்… இது இல்லை இதைவிடப்பயங்கரமான கனவுகள் வரும்…
சிங்களவனை மோடையன் என்று சொல்லிச்சொல்லியே வளர்ந்தவன் இலங்கைத் தமிழன். இன்று மொகட்டைப்பார்த்தும் தூங்கமுடியாத நிலையில் உள்ளதை மறந்துவிட்டு ஏதோ எழுதவேண்டும் என்பதற்காக எழுதுவதை தயவுசெய்து நிறுத்துங்கள். ஆக்கபூர்வமாக ஏதாவது எழுதுங்கள், செய்யுங்கள். தற்போதுள்ள தமிழர்களிடையே ஒற்றுமையை வளர்க்க முடியாது போனாலும் ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தில் உள்ள பாலகர்களுக்காவது ஊட்டி வளர்த்தாலே போதும். சில தலைமுறைகளில் தமிழினம் விடுதலை பெற்றுவிடும்.
Good point
They are not feeling comfortable about having the elections for the Northern Provincial Council now. That says something. r
அது இருக்கட்டும் இந்தமுறை மாவீரர்தினத்துக்கு உங்கட பாலகரை கூட்டிக்கொண்டு ஒண்டுக்கு போறியளோ ? ரெண்டுக்கு போப்போறியலோ ?
ஒருவர் என்ன தொழிலைச் செய்கின்றாரோ அவருக்கு அந்தத் தொழில் சம்பந்தமாகவே உதாரணங்களும், கருத்துக்களும் தோன்றுவது இயல்பானது.