சிங்கள பௌத்தம் மகிந்த குடும்பத்தினரால் இலங்கையின் அனைத்துத் துறைகளிலும் தனது பாசிசச் சிந்தனைகளை விதைத்து வருகிறது. இன்று நடைபெற்ற நாடு தழுவிய அளவில் நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் தமிழ்ப் பேசும் மக்களுக்கெதிரான வினாக்கள் இடம்பெற்றிருந்தன. அதிக மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருந்த இவ்வினாக்கள் வருமாறு.
1. வடக்கில் மேற்கொள்ளப்பட்ட மனிதநேய நடவடிக்கையின்போது இலங்கை அரச பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்ட புலிப் பயங்கரவாதிகள் சேகரித்திருந்த போர் தளபாடங்கள், அவர்கள் கற்பனை செய்திருந்த ஈழ இராச்சியத்தைக் கட்டியெழுப்பும் நோக்கத்தை மீறிய வேறுவிதமான நோக்கங்களாகக் காணப்பட்டதாக சிலர் அனுமானித்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விடயம் தொடர்பான உங்களின் பார்வையை உள்ளடக்கி கட்டுரை ஒன்றை எழுதுக.
2. இலங்கையின் அரச சார்பற்ற சில அமைப்புகளின் செயற்பாடுகள் நாட்டின் இறையாண்மை, அமைதி, கலாசாரம் மாத்திரமல்லாது அபிவிருத்திக்கும் பாதிப்பக்களை ஏற்படுத்தியிருப்பதாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இதுகுறித்து உங்களின்
நிலைப்பாட்டை காரணங்களுடன் விளக்கிக் கட்டுரையொன்றை எழுதுக.
ஆகிய இரண்டு வினாக்கள், நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் சிங்களம்-2 வினாத்தாளில் இடம்பெற்றிருந்ததுடன், இந்த வினாக்களுக்கு 25 புள்ளிகள் ஒதுக்கப்பட்டிருந்தன.