புதிய சூழலில் நடைபெறும் சுதந்திரதினம் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் என்ற நம்பிக்கையிலேயே சுதந்திரதின நிகழ்வுகளில் கலந்துகொண்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கில் வாழ்பவர்களுக்கும் தெற்கில் வாழ்பவர்களுக்கும் இடையில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டவே சுதந்திரதினத்தில் கலந்துகொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் சுதந்திரதினம் என்பது சிங்கள அப்பாவி மக்களையும்கூட ஒடுக்கும் கருவியாகும். பிரித்தானிய அரசு தனது அடிமைகளான அதிகாரவர்க்கத்திடம் இலங்கையை ஒப்படைத்த நாளே இச் சுதந்திரதினம். சம்பந்தன் அந்த அதிகாரவர்க்கத்திடமே நல்லிணக்கத்தை எதிர்பார்க்கிறார். நல்லிணக்கம் என்பது சிங்கள் ஒடுக்கப்படும் மக்களுக்கும் சுய நிர்ணைய உரிமைக்காகப் போராடும் தமிழ்ப் பேசும் மக்களுக்கும் இடையே மட்டும் தான் ஏற்பட வேண்டும்.
ஒடுக்குமுறையாளர்களுடன் தமிழ்த் தேசியத்தின் பேரால் ஏற்படுத்தப்படும் நல்லிணக்கம் மேலும் அழிவுகளையே ஏற்படுத்தும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போன்ற கட்சிகள் தேசியத்தின் பெயரால் நடத்தும் வியாபாரம் இலங்கையின் தரகு முதலாளித்துவ, பேரினவாத அதிகாரவர்க்கத்தின் நலன்களையே உறுதிப்படுத்தும்.
நமது முன்னோர்கள் எவ்வளவு எளிமையாக சொல்லி வைத்திருக்கிறார்கள் “இனம் (வர்க்கம்) இனத்தோடு தான் சேரும் “
தமிழரின் பெயரால் பரம்பரை அரசியல் வாதிகளையும்
தமிழீழ போராட்டத்தின் பெயரால் உலகின் கோடீஸ்வரர்களையும் உருவாக்கி விட்டோம்.
இதற்காக வன்னியில் தமிழரின் இரத்தத்தை ஆறாக்கினோம் .
தனித்தமிழ் நாட்டில் முடி சூட்ட எம்மால் முடியாதென நாம் நன்கறிவோம். எனவே எம் பதவிக்காக தமிழர் மீது
எங்கள் மேலதிகாரம் காக்கப்பட வேண்டுமாயின்
இவ்வாறு கால்களில் விழுவதை விட வேறு என்ன தான்
செய்ய முடியும்.
எதிர்பார்க்கப்பட்ட ஒரு விடயம்
அடுத்தது அமைச்சுப் பதவி வெகுவிரைவில்
1998-இல், கண்டி-இல் இருந்து கொழும்புக்கு அவசர அவசரமாக (தலதா மாளிகைக்கு வெளியாலிருந்த மேடை தகர்க்கப்பட்ட காரணத்தினால்) மாற்றப்பட்ட , 50 ஆவது சுதந்திர தினம், ஸ்ரீ லங்காவில் ஊரடங்குச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டதற்கும் மத்தியிலேயே பிரித்தானிய முடிக்குரிய இளவரசனை பிரதம விருந்தினனாக்கி ‘கொண்டாடப்பட்டது’.
குரங்கன் சார்ள்ஸ் தனது மனைவி கொலை செய்யப்பட்ட பின்னணியில் ஒளித்து வாழ்ந்து வெளியே காலெடுத்து வைப்பதற்கு ஏதுவான ஒரு சூழ்நிலையையே 1998 பெப்ரவரி மாத 4 ஆம் நாள் நிகழ்வுகள் பெருமளவில் நிலைநாட்டின. சிலோன் 1948-இல் டொமினியன் (dominion) அந்தஸ்தை அடைந்ததிலிருந்து அன்றைய தினம் 50 வருடங்கள். அதை சுதந்திர தினம் என குறிப்பிடுவதிலேயே பிழை. சிலோன் 1972 இல் ஸ்ரீ லங்கா-ஆக சரியோ பிழையோ யாப்பு மாற்றத்தினால் குடியரசானதை சுதந்திரம் என்றால் ஒப்புக் கொள்ளலாம். ஈழத் தீவில் எத்தனையோ சிக்கல்கள் சுதந்திர தினத்தை நிர்ணயிப்பதிலேயே இருப்பதை நாம் உணர வேண்டும். இச்சிக்கல்கள் இன்னும் சிக்குண்டுகொண்டே போகின்றன.
சம்பந்தன் நல்லிணக்கம் என்ற சாட்டில் அமெரிக்க உத்தரவிலேயே செயற்படுகிறான். 100 நாள் வேலைத்திட்டம்று பேய்க்காட்டும் ஜனாதிபதியும் ரணில் விக்கிரமசிங்க-உம் நடாத்தும் அரசும் முழுக்க முழுக்க அமெரிக்க உத்தரவின் படியே ராணுவ மயமாக்கலை குறைத்துக் காட்டி பெப்ரவரி 4 ஆம் நாள் கூத்தை முடித்துள்ளனர்.
இதைப் போய் வேறு கோபங்களை தீர்க்கு முகமாக சம்பந்தன், சுமந்திரன் என்று எரிந்து விழுவது அபாயகரமானது.
தடம் புரண்ட ஈழத் தமிழ்த் தேசிய உணர்வுகளை பிழையான பாதைகளில் இழுக்க இழுபறிகள் நடந்துகொண்டிருக்கும் வேளையில், இன்றைக்கு நாளைக்கு இல்லாமலிருக்கப் போற கிழடொன்றையே பெரிது படுத்தி வியாக்கியானங்கள் எழுதுவது பிழை.
இம்முறை பெப்ரவரி 4ஆம் திகதிக் கூத்தை அண்மித்து விஷமிகள் சிலர் ஏனைய முக்கிய விடயங்கள் பலவற்றையும் நிர்ணயிக்க முற்படுவது கவனிக்கப்பட வேண்டியவை.
மிக முக்கியமான விடயம் :-
பிரித்து ஆளும் காலனித்துவ சூழ்ச்சியை ஹூகோ ஸ்வயர்-ஆல் மறைக்கக்கூட முயலவில்லை. கோபம், பொறாமை, எரிச்சல், அரசியல் விழல், ஊடுருவிய மனோரீதியான தாக்குதல்கள் என்று சம்பந்தப்பட்ட அனைவரும் திசை திருப்பப்பட்டுள்ளனர் என்பது அந்த விஷமிக்கு நன்கே தெரியும்.
http://www.sundayobserver.lk/2015/02/01/new45.asp
கவனிக்கப்பட வேண்டியவை:-
தேசியக் கொடி விடயத்தில் எப்படி கண்மூடித்தனத்தை வளர்த்தெடுத்து சர்ச்சைகளை உருவாக்கி அதிலேயே தரகு பேசுகிறான். அதையும் விட ஆணித்தரமாக எவ்வாறு லண்டனின் நாசகார பணச்சுரண்டல் மையம் இவ்வருடம் கொழும்பிலும் கால்பதிக்கும் என்று சொல்கிறான்.