சார்க் பாதுகாப்பு : இந்தியப்படைகள் இலங்கையில்

சார்க்’ மாநாட்டில் பங்கேற்கும் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு பாதுகாப்பு வழங்கும் வகையில், இந்திய படைப்பிரிவு ஒன்று முன்கூட்டியே இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். ஏற்கனவே செய்திகளில் வெளியானதுபோல பாரியத்தொகையான படையினர் இலங்கைக்கு விஜயம் செய்யமாட்டார்கள் என அமைச்சர் குறி;பப்pட்டுள்ளார். தலைவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் போது தமது சொந்தப்படைகளை அழைத்துசெல்வது வழக்கம். அதனைப்போலவே, இந்திய பிரதமரும் தமது படைகளுடன் இலங்கைக்கு விஜயம் செய்வதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேவேளை ‘சார்க்’ மாநாட்டுக்காக ஏனைய நாடுகளின் தலைவர்கள் செல்ல இருப்பதால், எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 3ஆம் திகதி வரை, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். பிந்திக்கிடைத்த தகவல்களின்படி, இந்தியாவின் கடற்படை கப்பல் ஒன்று ஏற்கனவே இலங்கையின் கடற்பகுதிக்கு பிரவேசித்துள்ளது. அத்துடன் உலங்குவானூர்திகள் மற்றும் குண்டுத்தாக்குதல்களை கட்டுப்படுத்தும் கார்கள் என்பன இந்த வாரத்தில் இலங்கைக்கு கொண்டு செல்லப்படவுள்ளன.