தெற்காசிய பிராந்திய வலய நாடுகளில் பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்காக வரலாற்று சிறப்பு மிக்கதோர் உடன்படிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று எதிர்வரும் 3ம் திகதி கைச்சாத்திடப்படவுள்ளது. பயங்கரவா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் கைச்சாத்திடப்படவுள்ள முதலாவது ஒப்பந்தம் இதுவெனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், தெற்காசிய பிராந்திய வலய நாடுகளில் உற்பத்திப் பொருட்களின் தரம் குறித்தும் கவனம் செலுத்தப்படவுள்ளது.