சார்க் நாடுகளிடையே விசேட காவற்துறை – SAARC POLICE DESK:

சார்க் அமைப்பு நாடுகளில் காவற்துறை பிரிவொன்றை அமைப்பது, தொடர்பாக சார்க் நாடுகளின் காவற்துறை மா அதிபர்கள், மற்றும் உள்துறை அமைச்சர்களின் மாநாடொன்று எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. சார்க் நாடுகளின் பயங்கரவாதம் தொடர்பாக விசாரணைகளை நடத்தி அதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது இந்த பிரிவின் நோக்கமாகும்.சார்க் நாடுகளில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக அண்மையில் நடைபெற்ற மாநாட்டில் காணப்பட்டு இணக்கத்திற்கு அமைய இந்த காவற்துறை பிரிவு ( SAARC POLICE DESK) உருவாக்கப்படவுள்ளது. இந்த காவற்துறை பிரிவு சர்வதேச காவற்துறை பிரிவுகளுக்கு சமனானதாகும். பாகிஸ்தானில் நடைபெற உள்ள இந்த காவற்துறை மாநாடு குறித்து அந்த நாட்டின் பிரதமர் யூசுப் கிலானி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு அறிவித்துள்ளார். சார்க் நாடுகளிடையே தகவல் பரிமாற்றம், கூட்டு நடவடிக்கை, பயங்கரவாதிகளை கண்டறிதல் மற்றும் அவர்களின் இருப்பிடங்கள் குறித்து விசாரணைகளை இந்த சார்க் காவற்துறை பிரிவு மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.