கோயம்புத்தூர் தந்தை பெரியார் நகரில் வசிக்கும் அருந்ததிய சமூகத்தினர் பயன்படுத்தும் சாலையை சாதிஆதிக்க சக்தியினர் மறித்து தடுப்பு சுவர் கட்டியுள்ளனர். இந்த அராஜகத்தை கோவை மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் ஆதித்தமிழர் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகள் அம்பலப்படுத்தியுள்ளன.
கோவை மாநகராட்சி, சிங்கா நல்லூர் 10வது வட்டம் காமராஜர் ரோடு அருகில் உள்ள, தந்தை பெரியார் நகர். இக்குடியிருப்பில் ஆதி திராவிட நலத்துறையின் மூலம் 1989 ஆம் ஆண்டில் 58 குடும்பங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கப் பட்டது.
தந்தை பெரியார் நகரிலிருந்து ஜீவா வீதி வழியாக, காமராஜர் ரோடு எனும் பிரதான சாலையை இணைக்கும் 30 அடி சாலை உள்ளது. இச்சாலை வழியாகத்தான் பெரியார் நகரில் வசிக்கும் தலித் மக்கள் காமராஜர் சாலைக்கு செல்ல வேண்டியுள்ளது. இங்கு மாநக ராட்சி மூலம் சாலை, கழிவுநீர் வடிகால் மற்றும் தெருவிளக்கு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.
அருந்ததியர் மக்கள் செல்லும் இச்சாலையை சாதி ஆதிக்க சக்தியினர் சிலர் தீண்டாமை எண்ணத்தோடு சுவர் கட்டி மறித்து அடைத்துள்ளனர்.
1989 ஆம் ஆண்டில் அருந்ததிய சமூகத்தினருக்கு இந்த மனைப்பட்டாக்கள் வழங்கப்படுவதற்கு முன்பு வரை தடுப்புச்சுவர் எழுப்பப்பட வில்லை. அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பிறகுதான் தடுப்புச்சுவர் வைத்து, அந்தச்சுவரின் மறுபக்கத்தில், அதாவது தங்கள் பகுதியில் விநாயகர் சிலையொன்றை வைத்து பெயருக்கு கோவில் என்று பெயர்ப் பலகையும் மாட்டியுள்ளார்கள்.
அந்தக் கோவிலில் பூசைகள் எதுவும் நடப்பதில்லை. அருகில் உள்ள வீட்டுக்காரர் அந்தக் கோவிலை மாட்டுத்தொழுவமாகவே பயன்படுத்தி வருகின்றார். தலித் மக்கள் அந்தப் பாதையைப் பயன்படுத்தி தங்கள் வீடுகளுக்கு முன்பாக நடந்து சென்றுவிடக்கூடாது என்பதே அந்தக் கோவில் மற்றும் தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டதன் பின்னணி என்று பெரியார் நகர் மக்கள் கூறுகிறார்கள்.
பாதை மறிக்கப்பட்டு இருப்பதால் போதிய அடிப்படை வசதிகள் செய்வதிலும் பல சிரமங்கள் ஏற்பட் டுள்ளன. பாதை திறக்கப்பட்டால் தங்களுக்குத் தேவையான வசதி களும் கிடைக்கும் என்ற எதிர் பார்ப்பு அந்தப்பகுதி மக்களிடையே உள்ளது.
தற்போது சுவர் இருக்கும்பாதை மட்டுமின்றி, அருந்ததிய மக்களின் குடியிருப்புக்குள் வருவதற்கான மற்றொரு பாதையும், மனைப்பட் டாக்கள் தரப்பட்ட சமயத்தில் அடைக்கப்பட்டே இருந்தது என்ற அதிர்ச்சியான தகவலையும் அவர்கள் தருகிறார்கள். அந்தப்பாதையைத் திறக்க கடுமையான போராட்டம் நடந்துள்ளது. அப்போது, காவல் துறையினர் பலர் மீது வழக்குத் தொடுத்தனர். 1989 ஆம் ஆண்டில் போடப்பட்ட அந்த வழக்கில் சில ஆண்டுகளுக்கு முன்புதான் தீர்ப்பு வந்து தலித் மக்கள் விடுதலை யாகியுள்ளனர்.
இந்நிலையில், அண்மையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய பல போராட்டங்கள், அருந்ததியர்களுக்கு உள்ஒதுக்கீடு, ஆலய நுழைவுப் போராட்ட வெற்றிகள் போன்றவை பெரியார் நகர் மக்களுக்கு நம்பிக்கை அளித்தன. இத னால் தங்களுக்குரிய பாதை மறிக் கப்பட்ட கொடுமையிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி கோவை மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் ஆதித்தமிழர் விடுதலை முன்னணி அமைப்பாளர்களை அணுகி கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து கோவை மாநகராட்சியின் வடக்கு மண்டலத்தலைவர் சி.பத்மநாபன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் யு.கே.சிவஞானம், மாநிலக்குழு உறுப்பினர்கள் வி. பெருமாள், கே.கணேஷ், வழக்கறி ஞர் வெண்மணி, மார்க்சிஸ்ட் கட்சி யின் நகரச் செயலாளர் கே.மனோ கரன், ஆதித்தமிழர் விடுதலை முன்னணியின் மாநில அமைப்பாளர் ரவிக்குமார் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஆதித்தமிழர் விடுதலை முன்னணியின் நிர்வாகிகள் அந்த இடத்தைப் பார்வையிட்டனர்.
பொதுப்பாதையை மறித்தே சுவர் எழுப்பப்பட்டுள்ளது என்பது உறுதியானதால் இவ்வமைப்புகள் சார்பில் கோவை மாநகர ஆணையர் அன்சுல் மிஸ்ராவை சந்தித்து மனு அளிக்கப்பட்டது. மனுவைப் பெற்றுக்கொண்ட ஆணையர் பொதுப் பாதையை மறித்துக் கட்டப்பட்டுள்ள சுவர் அகற்றப்படும் என்று உறுதி அளித்தார்.
தெலுங்கு பேசும் அருந்ததியரும்,நாயுடுக்களூம் அடித்துக் கொள்லுகிறார்க்ள இதை சாருநிவேதா எழுத விரும்புவதில்லை.ஆனால் தமிழர்கள் தெலுங்கரான தம்மை அடிக்கிறார்கள் என்றே எழுதுவார்.கோவயில் அதிகாரம்நாயுடுக்கள் கையில் இருக்கையில் அரசியல்வாதிகள் தலையிட பயப்படுவார்கள் இதுவே பிள்லைமார், செட்டியார் என்றால் பிரச்சனையாக்குவார்கள்.இங்கே எண்ணீக்கையே பிரதானம். அரசியலில் சாதி கலந்தது சதி செய்தார் பெரியார் அவர் தலைவரானார், எம்.ஜி.ஆர் சாதிப்பிரச்சனைகலைத் தூண்டி விட்டு, சண்டைகலை ஏற்படுத்தினார் தெய்வமானார். சமத்துவபுரம் கண்ட தமிழன் கலைஜர் துரோகியானார். தமிழன் தன்னைத் தமிழனாய் உயர்த்தாமல் தாழ்த்தி அழிந்து கொண்டிருக்கிறான். நாகரீகமும் கணணீயும் தமிழைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனநாமோ தமிழ் அழிவது தெரியாமலேநம்மை இழந்து கொண்டிருக்கிறோம். நமது இராமர்கள் இதை உணராது பிற மொழிக் காதலுக்கு மரியாதை செய்து கொண்டிருக்கிறார்கள்.
யார் யாரை அடிக்கிறார்கள் என்பதை விட்டு நடப்பது சரியா பிழையா என்று ஆராயப் பழகுங்கள். அல்லாவிட்டால் இது உங்களை மேலும் fascist போக்கிலேயே கொண்டு செல்லும்.
ஆஸ்திரேலியாவில் இந்திய இளைஞர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில், மேலும் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார்.ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியர்கள் மீது, சமீப காலமாக இனவெறி தாக்குதல் நடத்தப் பட்டு வருகிறது. இந்த மாதத்தில் மட்டும் இதுவரை பத்துக்கும் மேற் பட்ட இந்தியர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன், பிரிஸ் பேனில் வாடகை டாக்சி ஓட்டும் இந்திய இளைஞர்கள் மூன்று பேரும், “பிசா’ டெலிவரி செய்யும் இந்திய இளைஞர் ஒருவரும் தாக்கப்பட்டனர்.
இதற்கிடையே, கடந்த டிசம்பரில் நியூ சவுத் வேல்சில் இந்திய இளைஞர் ரன்ஜோத் சிங் என்பவரின் உடல், தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் சாலையோரத்தில் பிணமாக கிடந்தது. இந்த கொலை தொடர் பாக, இந்தியாவைச் சேர்ந்த ஒரு தம்பதியர், சிட்னியின் தென்பகுதியில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில், இந்த கொலை தொடர்பாக, வாகா என்ற இடத்தில் மேலும் ஒரு இளைஞர் நேற்று கைது செய்யப் பட்டார். இவரை பற்றிய விவரங்கள் எதுவும் வெளியிடப் படவில்லை.
ரன்ஜோத் சிங்கின் உடல், விமானம் மூலம் நேற்று இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டது. டில்லி விமான நிலையத் தில் அவரது உடலுக்கு, மத்திய வெளியுறவு இணை அமைச்சர் பிரினீத் கவுர், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின், இறுதிச் சடங் கிற்காக அவரது உடல், பஞ்சாப் மாநிலத்துக்கு கொண்டு செல்லப் பட்டது.இதுகுறித்து அமைச்சர் பிரினீத் கவுர் கூறியதாவது: ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இதில், விரைவில் ஏதாவது ஒரு முடிவு எட்டப்படும். இதுகுறித்து விசாரிப்பதற்கு, உயர் மட்ட கமிட்டி ஒன்றை ஆஸ்திரேலிய அரசு அமைத்துள்ளது.
இந்த கமிட்டி, ஒவ்வொரு சனி, ஞாயிறு கிழமைகளிலும் கூடி, இதுகுறித்து ஆலோசித்து வருகிறது. இந்தியர்கள் மீது தாக்குதல் நடத் தப்படுவது துரதிர்ஷ்டவசமானது. இதுபோன்ற சம்பவங்களை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆஸ்திரேலியா, இறையாண்மை கொண்ட நாடு. இந்த விஷயத்தில் அந்நாட்டு அரசால் என்ன செய்ய முடியுமோ, அதைச் செய்து வருகிறது. இவ்வாறு பிரினீத் கவுர் கூறினார்.
நன்றி: தினமலர்