மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா போன்றவர்களை பயன்படுத்தி பொய் கூறுவது மாத்திரம் போதுமானதல்ல, அதனை நிரூபிப்பதற்கான சாட்சியங்கள் இருக்குமாயின் சனல் 4 வுக்கு எதிராக அரசாங்கம் வழக்குத் தொடர வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியி்ன் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
அகுரஸ்ஸ பகுதியில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சனல் 4 குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானவை என்றால் அந்த தொலைக்காட்சிக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையர் என்ற வகையில் அனைவருக்கும் எதிராகவே இந்த குற்றச்சாட்டுக்ககள் முன்வைக்கப்பட்டுள்ளன என்பதே எமது நிலைப்பாடு. இத்தகைய பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானவை என அரசாங்கம் நிராகரிக்குமானால் நாட்டினதும், இராணுவ வீரர்களினதும், ஜனாதிபதியினதும் நற்பெயரை பாதுகாப்பதற்காக இதற்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மங்கள சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.
அது முடியாதே?ஏலவே,”அந்த”காட்சிகளை பின்னிருத்தி,சிங்களத் தமிழில் ஒரு நிமிடம் ஒரேயொரு நிமிடம் ஓடும் (டப்பிங்) படம் வெளியாகி விட்டதே?