சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு எதிராக செயற்படும் அமைப்புகள் தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது. நாங்கள் இந்த விடயத்தில் வெறுமனே இருக்கவில்லை.
நல்லிணக்கம் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க முடியாது என்று அண்மையில் சர்வதேச மட்டத்திலான மூன்று அமைப்புக்கள் கூறியிருந்தன. குறித்த மூன்று அமைப்புக்களும் பிரஸல்ஸ், நியூயோர்க் மற்றும் லண்டன் ஆகிய இடங்களிலிருந்து கொண்டு ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க முடியாது என்ற விடயத்தை ஒரே நாளில் தெரிவித்துள்ளன.
இந்த அமைப்புக்களின் பின்னணியில் சில சக்திகள் செயற்படுகின்றன என்பது தெளிவாக தெரிகின்றது. இது யார் என்பதை விரை வெளியிடுவோம் என்று இலங்கை அரசின் ஊடகத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இன்றைய நிலையில் உலக அரங்கில் குரல் கொடுக்கக்கூடிய ஒரு அரசியல் தலைமையை தமிழினம் தனக்கென்று உருவாக்கிக் கொள்ளும்வரை, தமிழினம் ஒரு திறந்த வீடு, அமைச்சர் மட்டுமல்ல அவரது நாயும் நுளைந்துவிடும்.
இவனெல்லாம் அமைச்சர்!தொலை தொடர்பாடல்கள்,உள்ளங்கையில் அடங்கி விட்ட காலத்தில் நியூயோர்க்,பிரசல்ஸ்,லண்டனெல்லாம் ஒரு கணப்பொழுதில் கூட முடியுமென்பது ஒரு வேளை படிப்பறிவற்ற சிங்கள மக்களுக்கு தெரியாதிருக்கலாம்!இவர் சொல்கிறார் மறை கரமொன்று செயற்படுகிறதாம்!ஆமாம்,அமேரிக்காவை விட,பிரித்தானியாவை விட,பிரான்ஸை விட சீனாவை விட அப்படியே பொருளாதாரத்தில்,பலத்தில் ஏணி வைத்தாலும் எட்ட முடியாத நாடு பாருங்கள்!அதனால் எதிரிகள் அதிகமாகி விட்டார்கள்!போய்யா,போ பொண்டாட்டி புள்ளய ஒழுங்காப் பாரு!!!!!!!!
சிங்களவர் சிறிது யோசித்து நடந்திருந்தால், புலிகள் தமிழரை தாமாகவே
அழிக்க வழிசெய்திருப்பார்கள். இப்போ வெளிநாடுகளிலும் அப்படித்தான்.
முள்ளிவாய்க்காலில் அழிவிற்கு கொண்டுபோனவ்ர்கள் புலம்பெயர்நாடுகளிலும்
அடிவாங்குவத்ற்கு வழிசெய்கின்றார்கள். சிங்களவ்ர் தமிழரைக்காக்கவே
அறியாமையால் இந்த பாடு படுகின்றனர். துரை
என்ன ஆளைக் காணவில்லை என்று பார்த்தால் தெரியுது, மூளைச்சலவை செய்து புதுத் தெம்புடன் திரும்பியுள்ளார். பாவம் சிங்களவர், அவர்களுக்கு எல்லாப்பக்கமும் அடி. ஆனால் அவர்கள் எப்படியும் இவரின் உதவியுடன் தமிழரைக் காப்பாற்றிவிடுவார்கள்.
நல்லிணக்கக் குழு ஒரு கண்துடைப்பு மட்டுமல்ல “சர்வதேசக்’ கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியுமாகும்.
அதிற் பங்கு பற்றுவதன் மூலம் அதை அம்பலப்படுத்தலாம் என்பது ஒரு கண்ணோட்டம். அதைப் புறக்கணிப்பது இன்னொன்று.
புறக்கணிப்புக்காக வாதிடுவோர் அதற்கான தங்கள் நியாயங்களை முன்வைத்துப் பரந்த மட்டத்தில் விவாதித்திருக்க வேண்டும். நடந்திருக்க வேண்டிய பல விடயங்கள் போன்று, அதுவும் நடக்கவில்லை.
பங்கு பற்றுவதன் மூலம் அதை அம்பலப்படுத்தலாம் என்போரும் குழுவின் நோக்கங்கள் பற்றியும் செயல்முறை பற்றியும் பல கேள்விகளைப் பகிரங்கமாகவே எழுப்பியிருக்கலாம்.
யாரும் யார் சொன்னதற்காகவும் பங்குபற்றவும் இல்லை ஒதுங்கி நிற்கவும் இல்லை.
இந்த நாடகம் தமிழரைப் பொறுத்த வரை, பராளுமன்றத் தேர்தல்களை விட அர்த்தமற்றது.
புலிகள் மட்டுமே தமிழரை இப் பேரழிவுக்குக் கொண்டு போயினர் என்பது உண்மையானால், அதை இயலுமாக்கியது எது? புலிகள் இல்லாமல் இன்னொரு போராளி அமைப்பு தலைமையிலிருந்திருந்தால் வேறு விதமாக நடந்திருக்குமா?
இப்போது புலிகள் நாட்டில் இல்லை. உருப்படியாக ஒரு தமிழ்த் தேசியத் தலைமை உள்ளதா?
தொடர்ந்தும் புலிகளையே திட்டிக்கொன்டிருப்பதை விட்டு ஆக்கமாக எதையும் செய்ய வழி சொன்னால் பயனிருக்கும்.
மேற்குறிப்பிட்ட செய்திக்கு கருத்துரையுங்கள்!அடிவருடுவதற்கு இந்தத் தளத்தைப் பயன்படுத்தாதீர்கள்!இரவில் “போட்டதை”இங்கே வந்து வாந்தி எடுக்காதீர்கள்!
தந்தைக்கு முன்னால் மகள் கதறக், கதறக் கற்பழிக்கப்படுகையில்………..மனைவிக்கு முன்னால் கணவன் வெட்டிக் கொல்லப்படுகையில்…………மனித மனத்திடம் மரித்துப் போனது எது.
உலக அரங்கில் இருந்து வெளிவரும் புதிய குரல்கள், நியாயமுள்ள கருத்துகள் இலங்கை அரசிற்குப் பிரச்சனையாக உள்ளது. புலிகளின் தவறுகளில் இருந்து படித்துக் கொண்டவர்கள் இப்போது இன்னொரு தளத்தில் இயங்கும் வாய்ப்புகளை அழிப்பதே அரசாங்கத்தின் நோக்கம்.