09.03.2009.
மார்ச் 8 அன்று உலகெங்கும் கடைப்பிடிக்கப் பட்ட சர்வதேச மகளிர் தினத்தன்று, நிதி நெருக் கடியால் பெருகிவரும் வறுமைக்கும், பெண்கள் மேல் தொடுக்கப்படும் வன்முறைக்கும், சம உரிமை கோரியும் உலக மகளிர் அணி திரண்டனர்.
பெங்களூர் முதல் புரூம் பெர்க் வரையிலும் டர்பன் முதல் டப்ளின் வரைக்கும் அணி திரண்ட மகளிர் பாலின வேறுபாட்டுக்கு எதிராக ஆர்த்தெழுந்தனர். தங்களது நாடுகளில் பெண்கள் மீது தொடுக்கப்படும் சமுதாயக் கொடுமைகள் மற்றும் குடும்ப வன்முறைகளுக்கு எதிராக குரல் எழுப்பினர்.
நிதி நெருக்கடியால் உருக்குலைந்து வரும் ஐரோப்பிய சமுதாயத்தில் பெண்கள் பரிதாபத்திற்கு ஆளாகி விட்டனர் என்பதை ஆணாதிக்க உலகமயம் பெண்களின் வறுமைக்கு காரணமாகி விட் டது என்ற மகளிர் ஊர்வல பேனர் உலகுக்குச் சுட்டிக் காட்டிது. மாட்ரிடில் இது காணப்பட்டதென்றால் வார்சாவில் “சம உரிமை, சம கூலி” என்ற பேனர் காற்றில் பறந்தது.
நிதிப் பிரச்சனையில் பறிக்கப்படும் வேலைகளில் முதல் அடி பெண்களுக் குத்தான் என்று ஜெர்மன் பெண்ணியத் தலைவி ஹெல்கா ஸ்விட்சர் கூறுகிறார். இன்றும் கூட பெண்கள் பெறும் கூலி ஆண்களை விட 23 சதவீதம் குறைவாக இருப்பதை அவர் சுட்டிக் காட்டுகிறார்.
இவர் அமெரிக்காவின் அயல்துறை அமைச்சர் ஆனாலும் உலக மகளிருக் காகவும் குரல் கொடுக்கிறார். உலகில் உள்ள எந்தவொரு நாட்டிலும் முழுமையான பெண் சுதந்திரம் அளிக்கப்படவில்லை என்று ஹிலாரி கூறியுள்ளார்.
இந்தியாவின் பெங்களூரில் கலாச்சாரக் காவலர்களுக்கு எதிராக பெண்கள் அணி திரண்டனர். ‘சுடிதாரைக் கிண்டல் பண்ணும் ஆணே! உன் வேட்டி எங்கே!’ என்ற கேள்வி பொறித்த துணியுடன் பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா என உலகின் மூலை முடுக் கெல்லாம் சர்வதேச மகளிர் தினத்தின் போராட்டக் குரல்கள் எதிரொலித்தன. ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது. பெண்களுக்கு எதிரான பாலின வேறுபாடு சர்வதேச மயமானது போல் அதற்கு எதிரான போரும் சர்வதேசமயமாகியுள்ளது.