27.11.2008.
சர்வதேச பொருளாதார நெருக்கடியால் பல்வேறு நாட்டு நிறுவனங்கள் ஆட்குறைப்பு, சம்பளக் குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது;
பொருளாதார நெருக்கடியால் சம்பளக் குறைப்பு, கூலிக் குறைப்பு போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் வாய்ப்புள்ளது. இதனால், உலகம் முழுவதும் 150 கோடி தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். இதனால், உலகம் முழுவதுமே நெருக்கடியான நிலை ஏற்படும். உணவு, பொருட்கள் விலை உயரும்.
ஏற்கனவே ஏராளமான ஊழியர்கள் வேலைக்கு தகுந்த சம்பளம் பெறவில்லை. இப்போது சம்பள குறைப்பு வரும் போது நடுத்தர மக்களை கடுமையாகப் பாதிக்கும்.
2008 ஆம் ஆண்டில் உலக சம்பள வளர்ச்சி விகிதம் 1.7 சதவீதமாக இருந்தது. 2009 ஆம் ஆண்டில் அது 1.1 வீதமாகக் குறையும். எனவே, பல நாடுகளில் குறிப்பாக பொருளாதார வளம் நிறைந்த நாடுகளில் சம்பளம் குறைக்கப்படும்.
தொழில்துறையை சார்ந்த நாடுகளில் 2008 ஆம் ஆண்டில் சம்பள வளர்ச்சி விகிதம் 0.8 சதவீதமாக இருந்தது. 2009 ஆம் ஆண்டில் அது 0.5 சதவீதமாக இருக்கும்.
கடந்த 10 ஆண்டுகளில் சர்வதேச அளவில் உள்நாட்டு மொத்த உற்பத்தி விகிதம் 1 சதவீதமாக இருந்தது. சம்பள வளர்ச்சி விகிதம் 0.75 சதவீதமாக இருந்தது. ஆனால், இப்போது அதில் தடை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகமாகயுத்தத்திற்கு பிறகு உலகஒழுங்குமுறை சீர்குலைகிறது என்றே
அர்த்தப்படும்.இந்தஒழுங்குமுறை பணம்படைத்தவர்களால் ஏற்படுத்தப்பட்டது.இனியொரு
உலகஒழுங்கு உலகத்தில் வாழும் மானிடருக்காக ஏற்படுத்தப்படவேண்டும்.
இந்த நுhற்றி ஐம்பதுகோடி மக்களுடைய உணர்வுகளும் இந்தஉலகத்தில் ஒரு பிரளயைத்தையே ஏற்படுத்தப்போகிறது.
காலத்திற்கு ஏற்றமாதிரி இவற்றை ஒழுங்கமைக்காமல்விட்டாவிட்டால் பூமியில் மானிடவாழ்வே கேள்விக்குறி
யாகி விடும்.மானிடத்தில் அக்கறையுள்ள சமூகவிஞ்யானத்தை பயின்ற எமது இனத்தில் அதுவும் ஜேர்மனியில் இருசகாப்தத்திற்கும் மேலாக குடியிருக்கிறார்கள்.அதில் என்னை பயிற்றிவித்தவர்களும் இருக்கிறார்கள்.அவர்கள் தமது மெளத்தை கலைத்து கருத்து சொல்ல
முன்வரவேண்டும்;.