இலங்கைக்கான விஜயத்தில் ஈடுபடுவதற்காக வழங்கப்பட்டிருந்த அனுமதியை இலங்கை அரசாங்கம் கடைசி நேரத்தில் நிராகரித்தமையினால் தமது பிரதிநிதிகள் குழுவின் விஜயத்தை ரத்துச் செய்வதற்கு அழுத்தம் விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச சட்ட வல்லுனர்கள் சங்கத்தின் மனித உரிமைகளுக்கான அமைப்பு ( International Bar Association’s Human Rights Institute (IBAHRI))குறிப்பிட்டுள்ளது.
IBAHRI இன் ஊடகத் துறை தகவல்களின் அடிப்படையில் இலங்கை செலவிருந்த ஒருவருக்கான விஸா திரும்பப் பெறப்பட்டுள்ளது அதே வேளை ஏனையோருக்கு நாட்டில் நுளைவதற்கான அனுமதி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.
லண்டனிலிருக்கும் இலங்கைத் தூதரகத்திற்கு இலங்கை அரசின் இந்த நடவடிக்கை குறித்து நிறுவனம் தீவிர கவலையைத் தெரிவித்துள்ளது.