Tuesday, April 28, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

சர்வதேச எழுத்தாளர் மாநாடு ! : கொழும்பிலிருந்து சாரதி

இனியொரு... by இனியொரு...
01/12/2011
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
23
Home பிரதான பதிவுகள் | Principle posts

சர்வதேச எழுத்தாளர் மகாநாடு நடந்துமுடிந்துவிட்டது. இப்போது ஆதரித்து கையெழுத்து போட்ட நபர்கள் தங்கள் கையெழுத்துக்களை வாபஸ் வாங்கும் படலம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நடைபெற்ற சர்வதேச எழுத்தாளர் சந்திப்பு ,சர்வதேச தமிழ் எழுத்தாளர்களை கொண்டிராவிட்டாலும் இலங்கையில் இருக்கும் தங்களை எழுத்தாளர்களாக கருதிக் கொள்ளும் பலருக்கு மேடையாக அமைந்திருந்தது.அத்தோடு முருக பூபதி, ஞானசேகரம், கம்பவாதி ஜெயராஐ போன்றோர்கள் ஆளுக்காள் மாறி மாறி முதுகு சொறிந்து புகழ்பாடி மகிழவும் இச் சந்திப்பு அமைந்தில் இவர்களுக்கு வெற்றியே.மற்றப்படியாக இந்த மகாநாட்டில் நாம் எதிர்பார்த்த மாதிரியே நடந்தேறியது.

ஏராளமான பணம் செலவழிக்கப்பட்டு மாநாடு நடத்தப்பட்டதிலிருந்து இங்கு நிகழ்வில் பங்குகொண்ட பலரிடம் தொக்கிநின்ற கேள்வி இதுதான் “இவ்வளவு செலவு செய்வதற்கு எங்கிருந்து பணம் வந்தது?” என்பதுதான். விடை எல்லோருக்கும் தெரிந்த ரகசியம்தான். ஆனால் மாநாட்டில் பணம் தனிநபர்களிடம் இருந்து பெறப்பட்டதாக அடிக்கடி கூறிக் கொண்டார்கள். இதிலிருந்தே உண்மை வெளிப்பட்டுவிடும் என்ற பயம் இவர்களிடம் மேலோங்கியிருந்ததை காணக்கூடியதாக இருந்தது. அதே நேரம் இம் மாநாட்டுக்கு மறைமுகமாக கொடுக்கப்பட்டிருந்த அரச ஆதரவின் வெளிப்பாடு இங்கு துள்ளியமாக வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.இதற்கு உதாரணமாக இவர்கள் நடாத்திய ஊர்வலத்தை குறிப்பிடலாம்.

சாதாரணமாக அரச ஆதரவின்றி இவ்வாறான ஒரு ஊர்வலத்தை இங்கு கொழும்பு மாநக ரில் நடத்துவதென்பது அதுவும் தமிழர்களால் என்பது நினைத்துப் பார்க்க முடியாத காரியமாகும்.மற்றும் மகிந்தாவின் நேரடி ஏஜென்டுகளாகவும் இந்த மாநாட்டின் முக்கிய சூத்திர தாரிகளாகவும் இருக்கும் நோயல் நடேசன் என்பவரும் இராஜெஸ்வரி பாலசுப்பிரமணியம் என்பவரும் இந்த மாநாட்டின் பிரதம பேச்சாளர்களாக கலந்து கொண்டு தங்கள் மகிந்த விசுவாசத்தை நன்கு வெளிப்படுத்தினர்.அத்தோடு இங்கு இனப்படு கொலை நடந்தபோது இந்தியாவில் வைத்து பத்திரிகைகளுக்கு இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை என்று பேட்டி கொடுத்த ஜேர்மனியைச் சேர்ந்த சுசீந்திரன் என்பவரையும் இந்த மாநாட்டில் காணக்கூடியதாக இருந்தது. மொத்தத்தில் இதில் கலந்து கொண்ட அநேகர் மகிந்தாவின் விசுவாசிகள் என்பதில் ஐயம் கொள்ளவேண்டியதில்லை.அதே நேரம் பல பேர் பயத்தின் காரணமாக (அரச ஊழியர்களாக இருப்பதன் காரணமாக) இங்கு மாநாட்டில் வேண்டா வெறுப்பாக கலந்துகொண்டதையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

மாநாட்டில் கேள்விப்படாத பெயர் கொண்ட “எழுத்தாளர்கள்”பலர் கலந்து கொண்டனர். அதிலும் தமிழ் நாட்டிலிருந்து கலந்து கொண்டவர்கள் பெயர்களை நாம் வாழ்நாளில் இங்குதான் அறிந்துகொண்டோம். விழா இந்து வெள்ளாள பெருங்குடி மக்களின் பெருவிழாவாகவே இது நடந்தேறியது. இதில் நமது கம்பவாதி ஜெயராஐ தனக்கு கிடைத்த நேரத்தை தன் பிற்போக்குத்தனமான கருத்துக்களை மேடையில் கொட்டித் தீர்ப்பதற்கு வழமைபோல் பயன்படுத்திக் கொண்டார்.

இதில் வேடிக்கை என்வென்றால் இம் மாநாட்டில் கலந்து கொண்ட பெரும்பான்மை பார்வையாளர்கள் கம்பவாதி ஜெயராஐவின் பக்த கோடிகள்தான். இம்மாநாட்டில் பல வேடிக்கையான நிகழ்வுகள் இன்னும்பல நடந்தேறின. « பெண் எழுத்து » என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது.

இதில் பேசப்பட்ட விடயங்களுக்கும் இன்றைய பெண்ணியத்திற்கும் என்ன தொடர்போ புரியவில்லை. இவ் அரங்கில் “பெண்ணிற் பெருந்தக்க யாவுள” என்ற தலைப்பிலும் ஒரு உரை இருந்ததென்றால் பெண்ணியத்தின் புரிதலை நாம் என்னவென்பது?இதேபோல் தோழர் டானியலின் பெயரைக் கொண்டு அவர் பெயரில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது.இங்கு பேசப்பட்ட விடயம் எண் தமிழ் / தாழ்த்தப்பட்டோர் சின்னஞ்சிறு கடவுள் வழிபாடு / ஸ்பெசல் நாடகங்கள் சில சிந்தனைகள் என்ற மூன்று தலைப்புக்களில் பேச்சுக்கள் நடந்தன.

தோழர் டானியலை இதைவிட இவர்கள் வேறு வகையில் அவமானப்படுத்தி இருக்க முடியாது. அந்த அளவிற்கு தலித்தியத்தோடும், ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்க்கையோடும் சம்பந்தம் இல்லாமல் இவர்களின் பேச்சு அமைந்திருந்தது. மாநாடு முழுக்க முழுக்க இந்து சனாதன வெள்ளாள பெருமையின் வெளிப்பாடகவே வெளிப்பட்டது. இல்லாவிட்டால் சாதியமான் ஆறுமுக நாவலரின் பெயரில் அரங்கு அமைத்து. விழா நடத்துவார்களா?

எந்த ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றியும் இவர்களுக்கு அக்கறை இருக்கவில்லை. இவர்கள் மாநாடு நடத்தியதன் நோக்கம் அவர்களைப் பொறுத்தவரை வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது. தங்களைத் தாங்கள் புகழ்பாடவும், இலங்கையில் தமிழ் மக்கள் கொழும்பில் எந்நதவித பயமுமின்றி « ஜனநாயகத்துடனும் » « சுதந்திரத்துடனும் » இந்தளவுக்கு நடாத்துவதற்கு « மகிந்த அரசு ஜனநாயக மனிதாபிமான அரசாக » இருப்பதே காரணம் என்று கூறி இவர்கள் மகிந்தாவுக்கு சான்றிதழ் வழங்கி தங்கள் விசுவாசத்தை காட்டியுள்ளனர்.

சாரதி (கொழும்பு)

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

சுவிஸில் கைதான விடுதலைப் புலிகள் - பிளவின் வெளிப்பாடு?

Comments 23

  1. mathiyayaparanam kiddinan says:
    15 years ago

    எங்கிருந்து பணம் வந்தது?”
    எங்கிருந்து பணம் வந்தது?”
    எங்கிருந்து பணம் வந்தது?”

  2. mathiyayaparanam kiddinan says:
    15 years ago

    மற்றும் மகிந்தாவின் நேரடி ஏஜென்டுகளாகவும் இந்த மாநாட்டின் முக்கிய சூத்திர தாரிகளாகவும் இருக்கும் நோயல் நடேசன் என்பவரும் இராஜெஸ்வரி பாலசுப்பிரமணியம் என்பவரும் இந்த மாநாட்டின் பிரதம பேச்சாளர்களாக கலந்து கொண்டு தங்கள் மகிந்த விசுவாசத்தை நன்கு வெளிப்படுத்தினர்.அத்தோடு இங்கு இனப்படு கொலை நடந்தபோது இந்தியாவில் வைத்து பத்திரிகைகளுக்கு இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை என்று பேட்டி கொடுத்த ஜேர்மனியைச் சேர்ந்த சுசீந்திரன் என்பவரையும் இந்த மாநாட்டில் காணக்கூடியதாக இருந்தது

    எங்கிருந்து பணம் வந்தது?”

  3. Pera grad says:
    15 years ago

    இதில் நோயல் நடேசன் பற்றி நேரடியாகத் தெரியும். இங்கு (மெல்பர்ன் இல்) மகிந்தவிடம் காசு வாங்கிக் கொண்டு பத்திரிக்கை நடத்துபவர் என்றால் யாவரும் அறிவர்.

    • chandro says:
      15 years ago

      பரா கிரெடா அல்லது ப்ரயன் கிரெடா எழுத்தாளர் மானாடு இலங்கையில் வைப்பது பிழை என்டால் கைலாசபதி பேருரைக்கும் சிவசெகரத்தின்நூல் வெளியீட்டு விழாவுக்கும் என்ன வேண்டியிருக்காம். குருக்கள் – விட்டால் குற்றமில்லையோ

  4. S.G.Ragavan says:
    15 years ago

    “விழா இந்து வெள்ளாள பெருங்குடி மக்களின் பெருவிழாவாகவே இது நடந்தேறியது.” “மாநாடு முழுக்க முழுக்க இந்து சனாதன வெள்ளாள பெருமையின் வெளிப்பாடகவே வெளிப்பட்டது.” சாரதி மேலே நீங்கள் குறிப்பிட்ட இரண்டையும் சற்று விளக்க முடியுமா? இந்த விழா குறித்து ஆதரவு தெரிவித்து வேறு ஒருவர் தனது கருத்தை இவ்வாறு பகிர்ந்து கொண்டார் ஒடுக்கப் பட்ட அல்லது தாழ்த்தப்பட்ட மக்கள் தமது கருத்தினையும் தமது இலக்கிய ஆர்வத்தையும் வெளிப்படுத்த
    தடையாக இருப்போரே இந்த்த விழாவை விமர்சிக்கின்றனர் என்று. ஆனால் சாரதி நீங்கள் ஏதோ சொல்கிறீர்கள் மொத்தத்தில் எனக்கு தலைச் சுற்றுகிறது. எனது பார்வையின் படி ஒடுக்குமுறையாளர்களுக்கு பல்லக்கு தூக்கும் அன்ன காவடிகள் இந்த விழாவை அவர்களின் விருப்பத்துக்கு இணங்க நடாத்தினார்கள் என்பதே.

    • sanakkunsi says:
      15 years ago

      விழாவில் தலித்துக்கள் புறக்கநிக்கப்பட்டதாகச் சொல்வது தவறு .தங்களை தலித்துக்கள் என்று சொல்லிச் சொல்லியே சலுகைகளப் பெறும் டொமினிக் ஜீவா , தெணியான் , கலாநிதி கலாமணி, பரணிதரன், துஷ்யந்தன் …போன்றோர் முன் வரிசையில் அமர்ந்திருந்தனரே !

  5. கிறுக்கன் says:
    15 years ago

    சமீபகாலமாக நமது ஈழத்து சூழலில் கூட தலித்தியம் , தலித்துக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், சாதியம் என்கிற கதையாடல்கள் மிக நாசுக்காக முனைப்பாக்கப்படுகிறது இவற்றுக்கான பின்புலங்களை நாம் சிறிது உற்றுநோக்கல் அவசியமானதாகவே படுகிறது. நமது சமூகத்தின் அடி கட்டுமானங்களையே ஆட்டம் காண முயற்ச்சிக்கும் ஆரம்பகட்ட அதிவுகளாகவே தெரிகிறது….. யாரோ ஒருசில மனநோய் இன்னும் பீடித்து கொண்டிருக்கிற வேளாளர் என தமக்குள்தாமே பிதற்றிக்கொண்டு திரியும் மூடர்கள் பற்றி, ஒரு சமூகம் எதற்கு கவலைப்படவேண்டும்? “நாம் ஆர்க்கும் குடியல்லோம்”     

  6. Sithan says:
    15 years ago

    “விழா இந்து வெள்ளாள பெருங்குடி மக்களின் பெருவிழாவாகவே இது நடந்தேறியது.”சாரதி சாரதி சொன்னது உண்மைதான். இந்த மகாநாட்டு புகைப் படங்களை வீடியோக்களை பார்க்கும்போது இந்த உணர்வே எனக்கும் ஏற்பட்டது. இவர்களின் ஊர்வலம் நல்லூர் கந்தசாமி கோயில் தேர்த்திருவிழா ஊர்வலத்தை எனக்கு ஞாபகமூட்டியது. எங்கள் தலித் மக்களுக்கோ அல்லது முஸ்லீம் மக்களுக்கோ அல்லது எழுத்தாளர்களுக்கோ இங்கு என்ன இடம் கொடுக்கப்பட்டது. முஸ்லீம் எழுத்தாளர் அமைப்பு ஒன்று இந்த மகாநாட்டிற்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்ததை நான் படித்தேன்.

  7. Kumar says:
    15 years ago

    இத்தனைக்குப்பின்பும் இந்த சாதிய வார்த்தைகளை முன்னிறுத்தி நாம் உரையாடுகிறோம் என்றால் சாரதி போன்ற தாழ்வுமனப்பான்மை கொண்டவா்களும் கிறுக்கன் கூறியது போன்று மனநோயில் இருந்து குணமடயாமல் வாழும் மனிதா்களும் ஒரே விடயத்தையே செய்கின்றார்கள் என்பதே உண்மை.

    நாம் வாழ்கின்ற காலகட்டத்தில் நல்லது செய்வதாக யாரை நம்புகின்றோமோ அவா்களே அதிகம் தீமை செய்வதை உணரமுடிகிறது.

  8. siranjivi says:
    15 years ago

    வெளிநாடுகளில் பத்திரமாய் இருந்தபடி அய்யோ! தமிழினம் அழிகிறதே! தேங்காய் பிழிகிறதே! என்று எழுதித்தள்ளும் புலி விசுவாசிகளை எப்படி குஷிப்படுத்தலாம்? என்று யோசித்தபடி சாரதி மாநாடு போயிருக்கிறார். வயித்தெரிச்சலை கொட்டியிருக்கிறார். ஒரே பேத்தல்!
    நாசமாப்போன இலங்கை அரசு தலையில் இடி விழக்கூடாதா? என்று பிலாக்கணம் வைக்கிற ஆட்களுக்கு சொல்வது இது தான்: இலங்கையிலும் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் திண்ணைவேலியில் மட்டுமல்ல, திக்குவெல்லையிலும் இருக்கிறார்கள். இன்றைய இலங்கையில் அரிசி சீனி தேங்காய் விற்கிற நிலையில் வாழ்க்கையே போராட்டமாய் இருந்தாலும், அவர்களுக்கும் இலக்கியம் படைக்க நேரம் இருக்கிறது. அவர்களிடமும் சிருஷ்டி அற்புதமாய் வெளிப்படுகிறது. மாநாட்டுக்கு சொந்தக் காசை போட்டு வந்து, தங்கள் படைப்புகளையும் அறிமுகப்படுத்தி, மற்றவர்களுடன் கலந்து உரையாடி, நமக்கும் ஒரு அங்கீகாரம் இருக்கிறதே! என்கிற மன திருப்தியுடன் திரும்பியிருக்கிறார்கள். அங்கே தர்க்கங்கள் இருந்தன. ஒற்றுமைகள் தெரிந்தன. மாநாட்டில் ஆயிரம் குறைகள் இருக்கலாம், ஆனால் அறிமுகமில்லாத, ஏழை, சராசரி எழுத்தாளர்களுக்கு அது ஒரு சங்கமமாய் இருந்திருக்கிறதே!
    சிந்திப்பவர்கள் சிந்திக்க. சிந்திக்க தெரியாத சூனியங்கள் திட்டுக. இலங்கை பற்றி ஒரு இழவும் தெரியாமல் எழுதுபவர்கள் எழுதுக. புலித்தனம் மறையாத வெளிநாட்டு பூனைகளும் மியாவ் மியாவ் போடுக.

  9. நெருஞ்சி says:
    15 years ago

    //……. மாநாட்டுக்கு சொந்தக் காசை போட்டு வந்து, தங்கள் படைப்புகளையும் அறிமுகப்படுத்தி, மற்றவர்களுடன் கலந்து உரையாடி, நமக்கும் ஒரு அங்கீகாரம் இருக்கிறதே! என்கிற மன திருப்தியுடன்……//

    அ
    டப் பாவி! ‘
    விலைவாசி ஏற்றமும்,ஏழ்மையும்’ இருந்து,’திண்ணைவேலியில் மட்டுமல்ல, திக்குவெல்லை’யிலும் இருந்து,கொழும்பு போய்,வாழ்க்கைப் போராட்டத்தை மறந்து,’அங்கீகாரம் பெறும் வெறும் மனத்திருப்திக்காக’ ‘சொந்தக் காசை’ செலவிட,எப்படிடா மனம் வந்தது?

    ‘சொந்தக் காசில’
    பெண்டாட்டிக்கு ஒரு மாத்துப் பொடவையை,புள்ளையளுக்கு அடுத்த நேரச் சோத்தை கொடுத்திட்டு,இணயத்தில இலவசமாய்,அங்கீகாரம் எடுக்கலாம்.மனத்திருப்தி எடுக்கலாம்.அதுக்கெல்லாம் மார்க்கம் இருக்கடா.

    புளியும்,வெலினாடும் சொல்லி,துன்னிரதிக்கு வழியிருக்கின்னா,தொடர்ச்சியா எலுது அண்ணாச்சி.அதுக்குள்ள, இந்தக் கொள்ளையில போற வெள்ளம்,கவிதையாய் கொட்டுது,இலக்கியமாய் வடியுது.நீ எலுது அண்ணாச்சி!

  10. appu says:
    15 years ago

    இனவெறி பிடித்த கொலைகாரன் இராசபக்சேவின் கால்கழுவி(கால் -இடக்கறடக்கல்) குடித்து தமிழினத்தைக் காட்டிக்கொடுத்தும் கூட்டிக்கொடுத்தும் தமிழ்ப்பெண்களை விற்றும் மானங்கெட்ட பிழைப்பு பிழைக்கும் கருணாக்களும் டக்ளசுதேவாக்களும் எந்த சாதி என்று அம்பலமாக்கினால் என்னாகும் சாரதி?துரோகிகளும் ஈகையரும் எல்லாப்பிரிவினரிலும் உண்டு.சிங்கள இந்திய வெறியை எதிர்த்து களமாடியவர்  எந்த சாதி?சாதி பார்த்து சந்திசிரித்த்தது போதும்.மார்க்சு,பெரியார்,அம்பேத்கார் வழியில் நம் இன விடுதலையை முன்னெடுக்க வேண்டுமன்றோ

  11. YOGA.S says:
    15 years ago

    சிரஞ்சீவியாக வாழக்?!கடவீர்!சரி,திக்குவெல்லை கமால் கலந்து கொண்டாரா,சிரஞ்சீவி சார்?????????????????????????????????????????????????????????????????????????

  12. Pingback: Tweets that mention சர்வதேச எழுத்தாளர் மாநாடு ! : கொழும்பிலிருந
  13. mathiyayaparanam kiddinan says:
    15 years ago

    முதலாமவர் பிரான்சில் இருப்பதாக அறிகிறேன். பின்னையவர் யார்?

  14. sanakkunsi says:
    15 years ago

    விழாவில் தலித்துக்கள் புறக்கநிக்கப்பட்டதாகச் சொல்வது தவறு .தங்களை தலித்துக்கள் என்று சொல்லிச் சொல்லியே சலுகைகளப் பெறும் டொமினிக் ஜீவா , தெணியான் , கலாநிதி கலாமணி, பரணிதரன், துஷ்யந்தன் …போன்றோர் முன் வரிசையில் அமர்ந்திருந்தனரே ! இவர்களை விட சலுகைகளை எதிர்பார்க்காத சுய நம்பிக்கையுடைய பல தலித்துக்களும் பங்கு கொண்டனர். ஆனால் விழா நடத்தியது மகா தவறு தான்.

  15. BABA says:
    15 years ago

    தமிழக எழுத்தாளர் சின்னப்பாரதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்

    15.01.2011 – சனிக்கிழமை

    புகழ்பெற்ற தமிழக படைப்பாளிகளில் ஒருவரான நாமக்கல் சின்னப்பாரதி அவர்கள் இன்றைய தினம் (15) ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை அமைச்சர் அவர்களது யாழ் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

    சர்வதேச எழுத்தாளர் மாநாடு 2011ல் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்திருந்த சின்னப்பாரதி தனது யாழ் விஜயத்தின் போதே அமைச்சர் அவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.

    இக்கலந்துரையாடலின் போது, இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பில் தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தவறான பிரச்சாரங்கள் தொடர்பில் தெளிவான விளக்கங்களை அமைச்சர் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்ட சின்னப்பாரதி, தமிழ் நாட்டில் குறிப்பிட்ட ஒரு சிலரே இவ்வாறான தவறான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருவதை சுட்டிக்காட்டினார்.

    மேலும் நாட்டு நடப்புகள் குறித்தும் இலங்கைத் தமிழ் மக்களது அரசியல் தீர்வு முயற்சிகள் தொடர்பிலும் தமிழ் கட்சிகளின் இணக்கப்பாடு தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

    அத்துடன் இன்றைய தினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் யாழ் அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் நிகழ்விலும் சின்னப்பாரதி கலந்து கொண்டார்.

    இதன் போது ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர்களான முருகேசு சந்திரகுமார் சில்வேஸ்த்திரி அலென்டின் உதயன் அமைச்சர் அவர்களது மக்கள் தொடர்பு அதிகாரி ரி.எம் பாரூக் அசீஸ் பிரபல நாடகக் கலைஞர் கலைச் செல்வன் மற்றும் தமிழ்நாடு தொழிற்சங்க வாதிகளும் சமூக சேவையாளர்களுமான கருப்பண்னண் நாகராஜ் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்
    EPDP NEWS

  16. Malathi Maithri says:
    15 years ago

    புதுச்சேரியிலிருந்து கொழும்பு மாநாட்டில் பெண் எழுத்து அரங்கில் கலந்து கொண்ட கலா விசு அவர்கள் புதுச்சேரி மகிளா காங்கிரஸ் தொகுதி பெண் தலைவியாவர். புதுச்சேரியில் நவராத்திரி கொலு போட்டி – கோலப்போட்டி – கவிதைப் போட்டி நடத்துவது அமைச்சரை கூப்பிட்டு பெண்களுக்கு பரிசு வழங்குவது. அப்படத்தை அட்டையில் போட்டு பத்திரிக்கை நடத்துவது. இப்படி காங்கிரஸ் கட்சிக்கு தினமும் அயராது உழைத்துவரும் ”பெண்ணியவாதி” யாவார்.

  17. தாத்தாவுக்கு மீசை says:
    15 years ago

    அந்த காலத்தில் ஜெயமோகன் தாத்தாவுக்கு மீசை இருந்தது

    http://supperlinks.blogspot.com/2011/01/blog-post.html

    http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=12471&Itemid=263

  18. pallavan says:
    15 years ago

    எழுத்தாளர் மானாடு இலங்கையில் வைப்பது பிழை என்டால் கைலாசபதி பேருரைக்கும் சிவசெகரத்தின்நூல் வெளியீட்டு விழாவுக்கும் என்ன வேண்டியிருக்காம். குருக்கள் – விட்டால் குற்றமில்லையோ

  19. siranjivi says:
    15 years ago

    ராமநாதபுரம் : “”இலங்கை தமிழர்கள் தலை இல்லா முண்டம் போல் தலைவர் இல்லாமலும், தமிழகத்தில் குரல் கொடுக்க யாரும் இல்லை என இலங்கை தமிழர்கள் ஆதங்கப்படுகின்றனர்,” என சர்வதேச தமிழ் எழுத்தாளர் சங்க இந்திய கிளை தலைவர் சுந்தரராஜன் கூறினார்.

    இலங்கை கொழும்பு நகரில் சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு நடந்தது. தமிழகம், ஆந்திரா, புதுச்சேரி, கர்நாடாகா, மகாராஷ்டிரா மாநிலங்களிலிருந்து 45 எழுத்தாளர்கள் பங்கேற்றனர். மாநாட்டில் பங்கேற்ற ராமநாதபுரத்தை சேர்ந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் சங்க இந்திய கிளை தலைவர் சுந்தராஜன் கூறியதாவது: இலங்கை தமிழர்கள் தலையில்லா முண்டம்போல், தலைவர் இல்லா தேசமாக ஒருதுளிகூட முன்னேற்றமில்லாமல் வாழ்ந்துவருகின்றனர். தமிழகத்திலும் குரல் கொடக்க யாரும் இல்லை. யாழ்பாண தமிழர்களுக்காக போராட பல அமைப்புகள் உள்ளன. அவர்கள் போராடுவது எல்லாம் அவர்களது சுதந்திரத்திற்கு மட்டும்தான் .மலை தமிழர்களுக்காக போராடவில்லை. ஈழத்தமிழர்களுக்காக போராடுவது போல் ஒரு மாயை உருவாக்கி ஏமாற்றிவருகின்றனர். உண்மையில் யாழ்பாண தமிழர்கள் நன்கு வசதியுடன் தொழில், அரசு வேலை என நல்லநிலையில் உள்ளனர். புலிகள் இயக்கத்தால் நிரந்தர துன்பத்திற்கு தள்ளபட்டதாக வருந்துகின்றனர். ஒருசில அமைப்புகளின் சுயநலபோக்கினால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கல்வியில்கூட வசதி உள்ளவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கிறது. கீழ்மட்ட மக்கள் கல்விக்காக ஏங்கும் நிலையில் உள்ளனர் .இதுதான் அங்குள்ள உண்மை நிலவரம் என்பதை அங்குள்ள தமிழர்களிடம் பேசியதிலிருந்து தெரிந்து கொண்டோம், என்றார். (செய்தி: நன்றி! தினமலர்)

  20. thillai jeganathan says:
    15 years ago

    மேலே எனது பெயரில் பின்னூட்டம் இடப்பட்டிருக்கிறது நான் சார்ந்த பெண்ணியம் இணையத்தளமும் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்னால் அப்படி ஒரு பதிவும் இடப்படவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இதனை இனியொரு ஏன் அனுமதித்தது என்று விளங்கவில்லை? அதனை நீக்குவதுடன் இந்த மறுப்பை பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    • இனியொரு.. says:
      15 years ago

      தொடர்ச்சியாகப் பதியப்படுகின்ற கருத்துக்கள் தவிர புதிதாக வருகின்ற கருத்துக்களின் மூலத்தின் நம்பகத் தன்மையை கண்டறிவது சாத்தியமற்றதாகவே உள்ளது. வருந்துகிறோம்..

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...