தகவல் தொழில்நுட்பம் ஒவ்வொரு தனி மனிதனதும் படுக்கையறைவரை நுளைந்து தனிமனித விவகாரங்கள் வரை விபரம் திரட்டுகின்ற இந்த நூற்றாண்டில் ஒரு பிரதேசத்து மக்களையே சாட்சியின்றிக் கொன்றொழித்த கோரம் இலங்கையில் நடந்தேறியிருப்பதை மறுபடி மறுபடி தமிழ்ப்பேசும் மக்களுக்குச் சொல்லத் தேவையில்லை. ஆயிரமாயிரமாய்ச் செத்துப்போன அப்பாவிகளின் குருதியுறைந்து போகும் முன்னமே எஞ்சியவர்களை சிறுகச் சிறுகக் கொலைசெய்து கொண்டிருக்கிறது ராஜபக்ச குடும்ப ஆட்சி.
சாட்சியின்றி இலங்கையின் இதயப் பகுதியில் பேரினவாதம் நிகழ்த்திய கோரத்தாண்டவம் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனை என்று கூறி பாசிசத்தின் வேர்களை மனிதகுலத்தின் வாழ்விடங்களிலெல்லாம் படரவிடுகிறது ஒரு கூட்டம்! இலங்கை இனப்படுகொலை வெறுமனே இலங்கையின் ஏதோ ஒரு மூலையில் நடந்த தற்செயல் சம்பவமல்ல.
அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் முன்னெழும் போதெல்லாம் ஆயிரமாயிரமாய் மக்களைக் கொன்று குவித்துவிட்டு பயங்கரவாதத்தை அழித்துவிட்டோம் என மார்தட்டிக்கொள்ளலாம் என உலகின் அரச பயங்கரவாதிகளுக்கெல்லாம் ராஜபக்ச அரசு முன்னுதாரணத்தை வழங்கியுள்ளது. இவற்றையெல்லாம் அண்ணார்ந்து பார்த்துக்கொண்டு மௌனம் சாதிக்கும் மனிதன், ஒன்றில் ஏலவே செத்துப் போனவன் அல்லது மனித குலத்தின் விரோதி என்பதைத்தவிர வேறேதுமில்லை.
முருகபூபதியின் மறுப்பு
“சர்வதேச” அரசுகளுக்கெல்லாம் கொலைசெய்வது எப்படி என்ற முன்னுதாரணத்தை வழங்கியிருக்கும் இலங்கை அரசின் எல்லைக்குள், அது வரித்திருக்கும் சர்வாதிகார வரம்புக்குள் “சர்வதேச” தமிழ் எழுத்தாளர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. புலம் பெயர்ந்த எழுத்தாளர் முருகபூபதி இலங்கை அரசிற்கு ஜனநாயக முகத்தைத் சன்மானமாக வழங்கும் எழுத்தாளர் சமூகத்தின் முன்னோடி; மாநாட்டின் பிரதான ஏற்பாட்டாளர்.
ஊடகவியாளர்களை அனாதைப் பிணங்களாக தெருவோரத்தில் பேரினவாத நரிகளின் பசிக்குப் புசிக்கக் கொடுக்கும் இலங்கை அரச பாசிசத்தின் எல்லைக்குள்ளேயே எழுத்தாளர் மாநாடு நடத்தி கேள்விகேட்கப் போகிறார்களோ என ஒரு கணம் சிந்திக்கத் தோன்றியது. தமிழ்ச் சங்கம் அமைத்து மன்னர்களிடமே வினாவெழுப்பிய போர்குணத்தின் மரபில் பிறந்ததல்லவோ “சர்வதேச” தமிழ் எழுத்து மரபு! ஆக, ராஜபக்சவின் காலடியில் நடைபெறும் இந்த சர்வதேச விழா முன்னோடி முருக பூபதியிடம் தொடர்புகொண்டு இரண்டு விடயங்களை தெளிவுபடுத்தி அறிக்கைவிட்டால் சிக்கல்கள் தெளிவாகும் எனக் கோரியிருந்தேன்.
1. இலங்கை அரசின் இனப்படுகொலையை “சவதேச” எழுத்தாளர் மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் கண்டிக்க வேண்டும்.
2. மாநாடு நடப்பதால் இலங்கை அரசின் இனப்படுகொலையையோ போர்க்குற்றங்களையோ ஏற்றுக்கொள்வதாகாது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.
அரசியல்?
இவை நியாயமானவை தான் என்றும் மாநாட்டுக் குழுவிடம் பேசிவிட்டு உடனடியாகவே பதில் தருவதாகவும் முருகபூபதி குறிப்பிட்டார். பின்னதாக நாம் அரசியலில் தலையிட விரும்பவில்லை என்றார்.
அரசியலில் அவர்கள் தலையிட விரும்பவில்லை என்பதன் பின்புலத்தில் புரையோடியிருக்கும் அரசியல், இலங்கை அரசின் பாசிச அரசியல்! இலங்கை அரசு சர்வதேசத்திற்கு வழங்கிய மனிதவிரோத அரசியல்!! இலங்கைத் தெருக்களிலே கொலைசெய்யபட்டு வீசியெறியப்பட்ட ஊடகவிலாளர்களின், எழுத்தாளர்களின் பிணங்களை மிதித்துக்கொண்டு கொழும்பில் மாநாடு போடத் தயாராக இல்லாத எழுத்தாளர்களை எல்லாம் அவதூறு செய்கின்ற அடக்குமுறையாளர்களின் அரசியல்!!!
தமிழகத்தை அன்னியப்படுத்தல்
அறுபது ஆண்டுகளாத் தொடரும் இன அழிப்பின் ஒவ்வொரு பிரதான காலத்திலும் தமிழ் நாட்டின் ஏதாவது ஒரு மூலையில் தன்னலமற்ற போராட்டம் நடந்திருக்கிறது. பெரினவாதம் கொன்று போடும் ஒவ்வொரு மனிதனதும் கடைசி நம்பிக்கைகளில் ஒன்றாக தமிழகம் இருந்திருக்கிறது. இதனால் தான் இலங்கை அரசு கூட தமிழக மக்களுக்குப் பயந்தது போல இதுவரை யாருக்காகவும் அச்சமடைந்ததில்லை எனலாம். இந்திய அரசோடு இணைந்து பல அரசியல் நாடகங்களை ஏற்பாடுசெய்துதான் தமிழகத்தின் எழுச்சியைக் கட்டுப்படுத்தினோம் என்று படுகொலைகளின் முக்கிய சூத்திரதாரி கோதாபய ராஜபக்சவே ஒத்துக்கொள்கிறார்.
தமிழகத்தை கையாள்வதற்காகவும் போராட்டங்களைத் திசைதிருப்பவும் மில்லியன்களை செலவு செய்திருக்கிறது இலங்கை அரசு.
கொல்லப்பட்டவர்கள் போக எஞ்சியவர்களை இனச்சுத்திகரிப்புச் செய்யும் இலங்கை அரசிற்கு எதிராக மரணபயத்தின் மத்தியிலும் சிறுகச் சிறுகப் போராட்டங்கள் உருவாகின்றன. இன்று இலங்கை அரசினதும் அதன் அடிவருடிகளதும் பிரதான நோக்கங்களில் ஒன்று சாகடிக்கப்படும் ஈழத் தமிழர்களை தமிழகத் தமிழர்களிடமிருந்தும் புலம் பெயர் தமிழர்களிடமிருந்தும் தனிமைப்படுத்தலாகும்.
புலம் பெயர் தமிழர்களைப் பிரிப்பதற்காக வருடத்திற்கு மூன்று மில்லியன் பவுண்ட்ஸ் பணத்தை வழங்கும் ஒப்பந்தம் ஒன்றை பொரிங்க்டர் என்ற நிறுவனத்துடன் கைச்சாத்திட்டுள்ளது ராஜபக்ச அரசு. புலம் பெயர் அரச ஆதரவு லும்பன்கள் இந்த நிறுவனத்தின் பணியைத் தாம் கையிலெடுத்துக்கொண்டு கச்சிதமாக நிறைவேற்றுகிறார்கள். இலங்கை அரசு இன்ப்படுகொலை நிகழ்த்திய போது மூச்சுகூட விடத் திரணியற்றிருந்த இவர்களில் பலர், இப்போது தமிழ் நாட்டைச் சார்ந்த யாரும் மாநாடு குறித்து வாய் திறக்கக் கூடாது என்கிறார்கள். இலங்கை அரச பிரித்தாளும் தந்திரத்தின் எழுத்தாளர் வேடம் இது.
இறுதி நோக்கம்
“சரவதேச” எழுத்தாளர் மாநாடு குறித்து ஏனைய எழுத்தாளர்களும், சமூக ஆர்வலர்களும், போராளிகளும், கட்சிகளும், தமது கருத்துக்களைச் சொல்லவே உரிமை மறுக்கும் இந்த அரச ஆதரவுக் கும்பல், இலங்கை அரசு தமிழ்ப் பேசும் மக்கள் மீது நடத்தும் உளவியல் யுத்தத்தின் தமிழ்ப் பேசும் பிரதினிதிகள். மாநாட்டின் உள் நோக்கம் குறித்தோ அன்றி இலங்கை அரசின் அடக்கு முறை குறித்தோ பேச முற்படும் ஒவ்வொரு மகக்ள் பற்றுள்ள மனிதனையும் “புலி” ஆதரவாளர்கள் என முத்திரை பதித்து அன்னியப்படுத்த முனைகிறார்கள்.
ஆக மாநாட்டின் இறுதி நோக்கம்,
1. இலங்கை அரசின் இனப்படுகொலையையும் இனச் சுத்திகரிப்பையும் அங்கீகரித்தல்.
2. இலங்கை அரச பாசிசத்தை மறைத்து அது ஜனநாயக அரசு என அறிவித்தல்.
3. இலங்கை அரச எதிர்ப்பாளர்களைப் புலிகள் என அடையாளப்படுத்தி அன்னியப்படுத்தல்.
4. தமிழ் நாட்டு மற்றும் புலம் பெயர் அரச எதிர்ப்பாளர்களிடையே பிளவுகளை உருவாக்குதல்.
இவற்றை ஏற்பாட்டளர்களோ அல்லது மாநாட்டின் ஆதரவாளர்களோ மறுக்க மாட்டார்கள் ஏனென்றால் அவர்கள் அரசியல் பேச மாட்டார்கள்!
அவர்கள் முக்கியமான அரசியலைப் பேசியிருக்கிறார்கள். நாங்கள் நிர்வாணமான பிற்போக்குக் கூட்டம் என்றும் கொலை செய்யும் அரசியலைக் கூட நாங்கள் கண்டுகொள்ள மாட்டோம் என்றும் அவர்களின் முகத்தில் அவர்களே அறைந்து கூறியிருக்கிறார்கள்.
தொடர்புடைய பதிவுகள்:
சொற்கள் மிகக் கடுமையாகவுள்ளன.
கடுமையின்றியே வாதங்கள் வலுவாக முன்வைக்கப் பட்டிருக்கலாம்.
மாநாட்டில் சம்பந்தப் பட்டோர் “அரசியல் சார்பற்ற” “நடுநிலை” இலக்கியம் பற்றிப் பேசி வந்தோர்.
அரசியலை வலிந்து தவிர்ப்பது, தவிர்க்கப் பட்டதினும் ஆபத்தான அரசியலையே ஆதரிக்கும் என்பதைப் பலரும் பல இடத்தும் கூறி வந்துள்ளோம்.
முருகபூபதி மீதும் பிறர் மீதும் எஸ். பொன்னுத்துரை போன்றோர் வைக்கும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களைக் கண்டிக்கவும் நமக்கு ஒரு பொறுப்புள்ளது.
மாநாட்டின் நோக்கங்கள் இன்னவை என்று கூறுகிற போது திட்டமிட்டே அவ்வாறு செய்யப்படுகிறது என விளங்குகிறது. எனக்கு அது பற்றி நிச்சயமில்லை.
யாருக்கும் நோகாமல் இலக்கியம் படைக்கிற போக்கு, குற்றச் சாட்டுக்களாக முன்வைக்கப் படுகிற நிலைப்பாடுகட்கே இட்டுச் செல்லும் என்பதை இப்போதாவது ஏற்பாட்டாளர்கள் உணர வேண்டும்.
குறைந்தபட்சம் மாநாட்டில் தமிழ்ச் சமூகநலன் சார்ந்த அரசியல் பேசத் தடை இல்லை என்றாவது அவர்கள் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.
மாநாடு என்ன தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்று யாரும் இப்போதே தீர்மானிக்க முடியாது. ஆனால் தமிழர் நலன் சார்ந்த ஒரு பொதுவான நெறிப்படுத்தல் இப்போதைக்கு உடனடியாக அவசியமாகிறது.
எவையெல்லாம் பேச உருத்துண்டு என இப்போதே வற்புறுத்தலாம்.
இன்னொரு முக்கியமான விடயம்: இம் மாநாடு உண்மையிலேயே ஒரு சர்வதேசத் தமிழ் மாநாடல்ல. அது உலகளாவிய ஈழத் தமிழ் எழுத்தாளர்களின் மாநாடே. அதிற் பிறர் பங்குபற்றுவதால் அது சர்வதேசத் தமிழ் மாநாடாகி விடாது.
இவ் விடயங்கள் பற்றி ஈழத்து ஏற்பாட்டாளர்கள் சில கருத்துக்களைக் கூறியுள்ளனர். அவையும் பிரசுரிக்கப்பட்டு விவாதிக்கப் படல் தகும்.
இதை விடவும் தெளீவாக பேச முடியாது.செவிடர்களாக,குருடர்களாக முற்போக்கு எழுத்தாளர் மாறீப்போனார்களா? முகமூடி போட்டு இத்தனை நாட் களாக இவர்கள் ஆடியது நாடகமா?பெண்ணீயம் பேசுவோர் தமிழ்ப்பெண் இனத்திற்கு நடந்த கொடுமைகள் அறீயாது இன்னும் நாவல் எழுதும் நினைப்பில்தான் இவர்களோடு சேர்ந்து நிற்கிறார்களா?எழுத்தாளன் என்பவன் கொடுமை கண்டு குமுறூபவன் ஆனால் முற்றமே இல்லாமல் முழு வீடுமே இடிந்து கிடக்கும் போது அங்கு கல்யாணம் வைத்து நாதஸ்வரம் இசைக்க நினைப்பது நல்ல எழுத்தாளர் இயல்பு இல்லை.
எழுத்தாழா்கள்,கவிஞா்கள் சமூகத்தின் நம்பிக்கைத்தூண்களாக நின்று நடுநிலைபேண வேண்டியவா்கள் ஆனால் அவா்களில் பலா் அற்பப்புகளுக்கும் விருதுகளுக்கும் தம்மை விற்கின்ற காட்சிகள் எத்தனை.உ+ம்-கவிஞா் வைரமுத்து கருணாநிதியின் பேரனின் திருமண வைபவத்தில் கலந்துகொண்டு பேசும்போது மணமகனை //வாழ்ந்தால் கலைஞா்போல் புகளோடும் துணிவென்றால் அழகிரிபோலவும் வாழவேண்டும்// என்று வாழ்த்தினாராம்,அழகிரி ஒரு ரெளடி என்று தமிழ் நாடு பூராவும் தெரியும்.
சபைக்கு அழைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்த ஒரு நாட்டின் தலைவா் அழைக்கின்ற போது அதைவிட்டு அடுத்தவரின் உயிரும் உரிமையும் ஒரு பொருட்டா என்ன,உலகமே போலியப்பா.
இந்தச் சந்திப்பை இலங்கையில் ஏற்பாடு செய்பவர்கட்கு முதல்வர், பத்திரிகையாளர், கதையாசிரியர், இடதுசாரி எதிர்ப்பாளர் ஞானசேகரன்.
கனதியான விவாதம் என்றாலே உங்களுக்கு அலேர்ஜியா?
தயவுசெய்து உங்கள் “துட்டுக்கு இரண்டு கொட்டைப் பாக்கு” இடுகைகளுக்குக் கொஞ்சம் ஓய்வு கொடுங்கள்.
முருகபூபதி எனும் முற்போக்காளருக்கு இதில் சம்பந்தமே இல்லையா?அறீக்கைகள் அவரைத்தானே கதாநாயகனாகக் காட்டுகின்றன.இதில் ஏற்பாட்டாளர் என இன்னொருவரைக் கை காட்டுகிறீர்கள்?எவராக இருந்தாலும் இந்த மகாநாடு இன்றூள்ள நிலமையில் தேவையா?அதை முதலில் யோசியுங்கள்.
விவாதம் மாநாடு தேவையா இல்லையா என்பதைப் பற்றியதல்ல. அதன் பின்னலூள்ள நோக்கங்கள் பற்றியும் –என்னளவில்– அவை விசாரிக்கப் படும் முறை பற்றியுமானது.
(கருணாநிதி நடத்திய தமாஷா தேவையா என்பதிலும் அதில் ஈழத்து “அறிஞர்கள்” பங்குபற்றியதிலும் உங்களுக்குப் பிரச்சனை இருக்கவில்லை அல்லவா).
அமைப்பாளர் பேர்களில் முதலாவது ஞானசேகரனின் பேர்.
(முருகபூபதி கடைசியாக எப்போது முற்போக்கு அரசியல் பேசினார்?) ஞானசேகரனுக்கும் முருகபூபதிக்கும் (சிலகாலம் முன்னர் வரை எஸ்.பொன்னுத்துரைக்கும்) இருந்து வந்துள்ள “இலக்கிய” நெருக்கம் நீங்கள் அறியாததா?
ஸ்தாபன ரீதியாக எந்த இடதுசாரி இலக்கிய அமைப்பும் இதுவரை இந்த நிகழ்வுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. தனிப்பட்ட முறையில் முதலாவது சந்திப்புக்குப் போன சிலர் தாமாகவே ஒதுங்கிக் கொண்டனர். (அரசாங்கத்துக்கு ஆதரவான சிலர் ஒரு வேளை பின்னர் இணையக்கூடும்)
Every writer who take part in this `manadu` should make it clear whethe they support the Mahinda govt or not
அப்படியானால் எல்லாருமே தங்கள் அரசியல் அடையாளங்களைப் பிரகனப் படுத்த வேண்டாமா?
தமது நோக்கங்களைப் பகிரங்கப் படுத்துவதுடன் தமிழர் நலன் சார்ந்த இலக்கிய அக்கறைகளை வெளியிடக் கருத்துச் சுதந்திரத்தை உறுதிப்படுத்த ஏற்பாட்டாளர்கட்கு ஒரு கடமை உண்டு.
பங்கு பற்றுவோர் மீது அரசியல் நிபந்தனைகளை விதிப்பது அரசாங்கத்த்தின் ஊடக அடக்கு முறையையும் புலிகளின் கருத்துச் சுதந்திர மறுப்பையும் ஒத்தது.
நீங்கள் வேன்டுவது என்ன, பொலிஸ் ராச்சியமா?
நிங்கள் எதிரியின் பக்கமா அல்லது மக்களின் பக்கமா என்பதைக் கேட்பதில் என்ன தவறு? நாங்கள் என்ன அவர்களது வரவு செலவுக் கணக்கையா கேட் கிறோம்? அரசியல் நிலைபாட்டைத்தானே? அதுவும் இவ்வாளவு வாதப் பிரதிவாதங்கள் நடந்த பிறகுமா?
நாம் மனிதர்களாக இருக்க வேண்டாமா? குழந்தைகள் கொல்லப்பட்டன்ர், இளய சமுதாயமே விலங்கிடப்பட்டு சிறயில் கிடக்கிறது.முள்ளீவேலியில் தமிழர் வாழ்க்கை முடங்கிக் கிடக்கிறது இதை உலகிற்கு சொல்ல வேண்டிய தமிழ் எழுத்தாளர் இலங்கை அரசோடு கூத்தடிப்பது பொலீஸ் இராச்சியமா?
“பங்குபற்றுவோர் தாங்கள் அரச ஆதரவாளர்களா இல்லையா என்று சொல்லவேண்டும்” என்று வற்புறுத்துவது/நிபந்தனைபோடுவது பொலிஸ் ராச்சியத்துக்குரிய சிறப்பு.
இலங்கை அரசோடு கூத்தடிப்பதென்ற குற்றச் சாட்டை உறுதிப்படுத்த முன் அமைப்பாளர்களிடமிருந்து முழுமையான தகவல்களைப் பெற முயல் வேண்டும். (கூத்தடிப்பதைத் தவிர்க்கும் வாய்ப்பையும் உருவாக்க வேண்டும்).
விசாரியாமல் வழக்குத் தீர்ப்பதும் பொலிஸ் ராச்சியத்துக்குரிய சிறப்புத் தான்.
மனிதர்களாக இருங்கள் என்பது தான் என் கோரிக்கையும்.
நியாயமான நல்ல மனிதர்களாக இருப்பின் சிறப்பு.
நண்பரே தாங்கள் கேட்பதில் நியாயமுண்டு ஆனால் யதார்த்தத்தையும் நாங்கள் கொஞ்சம் பார்க்க வேண்டாமா?அரசினால்நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவிற்குச் சாட்சியமளிக்கப் போகின்றவரையேதுரத்துகின்றனரெனப் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. காணாமல் போனதமிழருக்காதரவான சிங்களவர்கள் தாக்கப்படுகின்றனர். அமைதியானஊர்வலங்கள் முட்டைவீச்சுக்குள்ளாகின்றது.இந்நிலை பற்றியெழுத வேண்டிய எம் எழுத்தாளர்கள் கொழும்பில் மாநாடு கூட்டிச் சாதிக்கப் போவதென்ன என்பதனைப் பற்றிக் கேடபதுதவறல்ல . சபா நாவலனின் கருத்தக் காலதேவையை அறிந்து எழுதப்பட்டதாகவே நான்கருதுகின்றேன்.
ஆம் உமா,
இவா்கள் ஆயிரம் நியாயங்களை எடுத்துவைத்தாலும் இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் புத்தியீவிகள் அரசின் தந்திரத்திற்கு உடந்தையாவதை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாது.
மாற்று அரசியல் களம் குறித்து உரையாடுபவர்கள் என்று தங்களைத் தாங்களே விதந்துரைத்தவர்கள்தானே இந்தச் சமூக அக்கறையாளர்கள். கட்சி கட்டவும் , அரசியல் பேசவும் குறுந் தமிழ் தேசியவாதம் தங்களை அனுமதிக்காத காரணத்தால் தமிழ்மக்களின் உரிமைகள் குறித்துத் தாங்கள் பேசுவதற்கான அரசியல் வெளியை வென்றெடுக்க வேண்டுமென்று கூக்குரலிட்டவர்கள்தானே இவர்கள். சிறிலங்கா இனவாத அரசு தன்னை நியாயப்படுத்துவதற்கும் , நிலைநிறுத்துவதற்கும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு எந்த வகையிலும் துணைபோய் விடக்கூடாது என்பதே இங்கு கருப்பொருள். அரசுகள் இலங்கை அரசுக்குக் கொடுப்பதாகக் கூறப்படுகின்ற அழுத்தங்களோ, ஆதரவோ அதன் நலன்கள் தொடர்பானவையாகவே இருக்கும். ஆனால் ; இவற்றையெல்லாம் கடந்து தங்கள் சொந்தச் சுயலாபங்களைப் புறந்தள்ளி ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான பொதுப்பரப்பில் சிந்திப்பதும், பயணிப்பதுமே சமூக அக்கறையாளர்களது, அறம் வேண்டுவோhரது இன்றுள்ள சமூகக் கடமையாக இருக்க முடியும். இந்த மாநாட்டை அரசியலாக்கிக் கொச்சைப்படுத்தாதீர்கள் என்று ஏற்பாட்டாளர்கள் வேண்டுவதற்குள்ளே ஒரு நுண் அரசியல் ஒழிந்து கிடக்கின்றது. அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்கள் எடுபிடிகள் ஊடாக விரிக்கும் மாயவலை இது. இந்த உலகில் அரசியல் அல்லாத எதுவுமே கிடையாது. எங்குமே அதன் வியாபகத் தோற்றம். அதை மறுப்பதும், மாற்று வேடம் பூணுவதும் இலங்கை அரசின் ஒடுக்குமுறை அரசியலுக்குத் துணை போவதுதான்.
i thouth i never say this – well done Navalan. Senan
கொழும்பில் ஊடகவியலாளனுக்கு நேற்று நிகழ்ந்த கதியை எண்ணிப் பாருங்கள் ? இந்த இலட்சணத்தில் எந்த முகத்தை வைத்துக் கொண்டு மாநாட்டில் எதை வெட்டி அடுக்கப் போகிறீர்கள் என்று கூற முடியுமா? அடுத்தது 20 வருட கடூழியச் சிறைத்தண்டனையிலிருந்து தப்பிப் பிழைத்து வெளிநாட்டில் தஞ்சம் புகுந்திருக்கும் ஊடகவியலாளன் திசநாயகம் எல்லைகள் கடந்த ஊடகவியலாளர் அமைப்பிற்கு வழங்கியிருக்கும் செவ்வியைக் காது கொடுத்துக் கேட்டுப் பாருங்கள். அப்போதாவது உங்கள் மனச்சாட்சிக்குப் பதில் கூற எத்தனிப்பீர்கள்.
A London based Tamil journalist has been arrested on Wednesday (17) at the Colombo Airport, while he was on his way to visit his family. A British passport holder, Karthigesu Thirulogasundar (37), was arrested by the officers attached to Sri Lankan state intelligence agency and currently being held in an undisclosed location. Thirulogasundar was previously attached to London based popular TV channels Deepam TV and GTV. He is currently working as a full time journalist for London based radio station, IBC. He had visited the island, hoping to visit his aging mother who is seriously ill.
காவடி தூக்க வெளீக்கிடும் கூட்டம் எதையுமே காதில் போட்டுக் கொள்ளாது தோழா. அது தன் கருத்தை இழந்து,காலில் மிதிபடும் போதும் நடுநிலை என்றே நக்கித் தின்னும் எலும்புக்காய் விசுவாச கூச்சல் போடும்.
இலங்கையில் இன்று பேச்சு சுதந்திரமோ எழுத்துச் சுதந்திரமோ இல்லை. அதற்கான சாத்தியக் கூறுகளும் இல்லை. அப்படியிருக்கையில் இம் மாநாடு இதற்காக குரல் கொடுக்க சாத்தியமில்லை.
இது இலங்கை அரசிற்கு வெளிநாடுகளில் நல்ல பெயரை வாங்கிக் கொடுக்க பயன்படுத்தப்படும். எழுத்தாளர்கள் கூட்ட்ம் போடுகிறார்கள். சுதந்திரமில்லாமலா? என இலங்கை அரசு கூறுவதற்கு வாய்ப்பளிக்கும். இது சர்வதேச ஈழத் தமிழர்கள் மாநாடா? சர்வதேச தமிழர் மாநாடா? என்பதெல்லாம் தேவையற்ற வாதம்.
ஒன்றுமே செய்ய முடியாத மாநாடு எப் பெயரைப் பெற்றால் என்ன? வலது சாரி எழுத்தாளர் என்றால் மோசமாகவும் இடது சாரி எழுத்தாளரை கடவுளாக திரித்தலும் தவறு. முருகபூபதி இடதுசாரியாக? இருந்தும் மெளனம் சாதிக்கின்றார். இவர்கள் மகிந்தவை சந்திக்கவில்லை ஈதரவில்லை எனடபதை நம்ப நாங்கள் ஒன்றும் முட்டாளில்லை.
அரசாங்கத்தைப் பாசிச அரசாங்கம் என்று கூறுகிற கருத்துக்களையும் இலங்கை ஆங்கில ஏடுகளில் அடிக்கடி காணுகிறேன்.
குறிப்பிட்ட பிரமுகர்களும் அரசாங்கத்தின் நடத்தையும் பற்றிய கண்டனங்கள் “எட்டக் கூடாத” இடங்களை எட்டும் வாய்ப்பிருந்தால் கருத்துச் சுதந்திரம் தடைப்படுகிறது.
சில விடயங்களில் சுய தணிக்கை செய்கிற தமிழ் நாளேடுகள் பத்தி எழுத்துக்களில் இது வரை கை வைக்கவில்லை. அதற்குக் காலமுண்டு.
இந்தியாவில் உள்ள கருத்துச் சுதந்திரம் இலங்கையில் உள்ளதை விட மேலானதில்லை.
அரசு எதுவும் உடனடி மிடரட்டலாக உள்ள விடயங்களிலே தான் கட்டுப்பாடுகளைத் திணிக்கும்.
இப்போது அதிகம் கவனிப்புக்குட்பட்டுள்ளது ஜே.வி.பி.
தமிழ்த் தலைமைகள் ஒரு மிரட்டலே அல்ல.
(தமிழ்-சிங்கள ஒற்றுமை அடிப்படையிலான) மக்கள் அரசியல் எப்போதும் கண்காணிப்புக்குள்ளாகவே இருந்து வந்துள்ளது.
கருத்துச் சுதந்திரத்துக்கு முழுமையான தடை விதிப்பது அரசைப் பலவீனப்படுத்தும். எனவே இலக்கு வைக்கப் பட்டே கருத்துச் சுதந்திரம் தாக்கப் படுகிறது.
இரங்கையில் பேச்சு எழுத்து சுதந்;ததிரமுண’டா? ஆங்கில பத்திரிகைகளில் வரும் ஒரு சில கட்டுரைகளை வைத்து மாத்திரம் எழுத்து சுதந்திரத்தை மதிப்பது அபத்தமானது. இந்தியாவை இலங்கையுடன் ஒப்பிடவேண்டியதன் அவசியம் என்ன? இங்கிலாநடதுடனோ அல்லது வே|று நாட்டுடன் பஒப்பிடலாமே? சுதந்திரம் ஒடுக்கப்பட்ட நாட்டில் உள்ள எழுத்தாளர்கள் இவ்வாறான ஒப்பீடகளுடனா காலந்தள்ளினார்கள்?
/ இலக்கு வைக்கப் பட்டே கருத்துச் சுதந்திரம் தாக்கப் படுகிறது/
. இதுவே ஒரு சா;வாதிகார போக்கு.
நான் உள்ள நிலைமையைச் சுருக்கமாகச் சொன்னேன்.
பழைய பேனா வீரர்கள் சிலர் பதுங்கிக் கிடக்கின்ற போதும், தமிழிலும் தைரியமான கருத்துக்கள் வருகின்றன.
இன்னும் எத்தனை காலம் என்பது வேறு விடயம்.
சாபநாவலனின் இக்கட்டுரை உரிய நேரத்தில் வந்திருக்கின்றது பலரின் கடுப்பைச் சுமந்து கொண்டு…
புலிநாமத்திற்கு மொட்டை போடுவதற்காகவென்று, மகிந்த அரசிற்கு முட்டுக்கொடுக்க நினைக்கின்ற பலரின் பகடைக்காய்களாகத் தமிழ் எழுத்தாளர் உருட்டப்பட்டுக் கிடக்கிறார்களா????.உண்மையில் புலம் பெயர் தமிழ் எழுத்தாளர்களில் பலரையும் அரித்துக் கொண்டிருக்கிற கேள்வி இது. இதில் பங்கேற்க மாட்டார்களென்றும், பகிஸ்கரிக்க வெண்டுமென்றும் புலம் பெயர் தமிழ் எழுத்தாளர்களில் ஒரு சிலர் ஏற்கனவே அறிக்கை சமர்பித்திருக்கின்றார்ரகள். அது கூட ஒரு அனுமானத்தின் பேரில் தங்களுக்குத் தெரிந்த அறிந்த பேர்வளிகளை மட்டுமே இட்டுக்கட்டிய அறிக்கை. இதில் இன்னவொரு அதிசயமென்னவென்றால் இரண்டு அவுஸ்திரேலிய சாணக்கியர்களான முருகபூபதியும், எஸ்போவும்…..இரண்டு பேருமே சுய புராணத்திலும் தங்களின் காரியங்களிலும் கண்ணுங் கருத்துமாயிருக்கிற இலக்கியக் கர்த்தர்கள்.மாலையும் கழுத்துமாக ஒருவருக்கொருவர் புகழ்பாடித் திரிந்தவர்கள். இப்போ நீயென்ன தலைவரா என்று எஸ்போவும்,, நானே தலைவன் என்று முருகபூபதியும் முறிவெடுத்து நெளிவெடுத்து. மோதுகிற இக்கலவரத்துள் மீண்டும் தமிழெழுத்தாளர்கள் சிதறிச் சின்னாபின்னமாயிருக்கிறார்கள்.
இந்த மகாநாடு கடந்த சிலவருடங்களாகவே ஆலோசிக்கப்பட்டது எனவும் இதுதொடர்பான விரிவான ஆலோசனைக்கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 3 ஆம் திகதி கொழும்பில் தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடந்தது எனவும் இக்கூட்டத்தில் தகைமைசார் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துக்கூறியதுடன் மகாநாடு எவ்வாறு அமையவேண்டும் எனவும் பல ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார் எனவும் முருகபூபதியினுடைய அறிக்கை மட்டுமல்ல கொழும்புப்பத்திரிகைச் செய்திகளும், கூறுகின்றன.ஆனால் இப்போது சிவத்தம்பி அவர்கள் இம் மாநாடு நடைபெறுவதை எதிர்க்கிறேன் என்று கூறுவதாக எஸ்போ எழுதியிருக்கிறார். இம் மகாநாடு இலக்கியவாதிகள் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் புரிந்துணர்வுமிக்க ஒன்று கூடலாகும். கால வெள்ளத்தில் எங்கெங்கோ சிதறுண்டு போனவர்கள் கலை இலக்கிய நேசிப்பின் நிமித்தம் மீண்டும் சந்தித்து கருத்துப்பரிவர்த்தனை செய்யக்கூடிய அரியதொரு சந்தர்ப்பமாகும். எனவே இதனை அரசியலாக்கி கொச்சைப்படுத்திவிட வேண்டாம் என்று பொறுப்புவாய்ந்த மூத்ததலைமுறை எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் உட்பட அனைவரையும் வினயமாகக் கேட்டுக்கொள்கின்றோம். என்று ஒரு வருடத்திற்கு முன்னதாகவே அமைப்பளார்கள் கேட்டுக் கொண்டதாக அறிக்கைகள் வந்திருக்கின்றன. இந்த மாநாட்டிற்கும் இலங்கை அரசுக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் என்ன தொடர்புகளுள்ளன?என்ற புலி எதிர்ப்பாளர் சோபாவின் கேள்விக்கு முருகபூபதியவர்கள் “‘இதுதான் அண்மைக்காலங்களில் சிலரால் முன்வைக்கப்படும் விசித்திரமான கேள்வி. இந்தக் கேள்விக்கு இந்த மாநாட்டிற்கும் இலங்கை அரசுக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவே எந்தவொரு தொடர்பும் கிடையாது என்பதே எனது ஆணித்தரமான பதில்.என்கின்றார்””
உண்மையில் வன்னியில் என்ன நடந்தது என்று அறிய முடியாதிருப்பதைப் போலவே இந்த வல்லவர்களின் வாதங்களுக்குள்ளும் எதனையும் நாம் அறிய முடியாதுள்ளது. என் “சடங்கு” சுமார் ஒரு லட்சத்து அறுபதாயிரம் பிரதிகள் இதுவரை விற்பனையாகி உள்ளது. தமிழ் ஈழன் ஒருவனின் இலக்கியப் படைப்பு ஒன்று விற்பனையில் இவ்வளவு சாதனைபுரிந்த வரலாறில்லை என்று நெஞ்சை நிமிர்த்துகிற எஸ்போ வோ, அல்லது அவுஸ்ரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கத்தின் ஸ்தாபகர் என்ற கோதாவில் ஒட்டுமொத்த தமிழினத்தின் அபிலாசைகளையும் கொழும்பில் அடைவுவைக்கத் துடிக்கிற முருகபூபதியோ, அல்லது தடம்புரள்கிற தமிழ்ப்பேராசியர் சிவத்தம்பியோ, மாலைகளுக்கும்,விருதுகளுக்கும் அலைந்து விதண்டாவாதம் பூணாது பதவிகளிலும் வீண்பெருமைகளிலும் தொங்கிக் கொண்டிருக்காமல், தமிழுக்கும் தமிழ் ஈழருக்கும் நல்லன செய்ய முயலவேண்டும்.. மேற்படி மகாநாட்டை இலங்கையல்லாது, வேறு இடத்தில் ஒழுங்கு செய்வதற்கு இன்னமும் காலங்கடந்துவிடவில்லை. தமிழ் எழுத்தாளர்களை ஒன்றிணையுங்கள். கருத்துகளால் ஒன்றுபடுங்கள். மாலைகள் விருதுகளுக்காக முண்டியடிகின்ற முட்டாள் பட்டாளத்தின் முறுகலுக்கு ஒட்டுமொத்த தமிழ் எழுத்தாளர்களையும் பலிக்கடாவாக்காதீர்கள்!!!!!
“இந்த மாநாட்டை அரசியலாக்கிக் கொச்சைப்படுத்தாதீர்கள்” என்ற கருத்து “இலக்கியத்தை அரசியலாக்கிக் கொச்சைப்படுத்தாதீர்கள்” என்று 50 ஆண்டுகள் முன்பிருந்த்து சொல்லப்பட்டு வந்த (தமிழ்த் தேசியவாத எழுத்துக்கள் வலுப்பெற்ற 1980, 90களில் அடக்கி வாசிக்கப்பட்ட) ஒரு நிலைப்பாட்டின் நீட்சியே.
மாநாட்டு நோக்கங்கள் பற்றிக் கட்டுரையாளரின் கணிப்பீடுகள் பற்றி நான் விவாதிக்கவில்லை.
முக்கியமான சில கேள்விகளை எழுப்பிச் சில சவால்களை முன்வைப்பது, கூடப் பயனுள்ளது என்பதே என் நிலைப்பாடு.
சவால்களை ஏலவே கூறி விட்டேன்.
உண்மைகள் ஏற்பாட்டார்களின் வாயிலாக வருவது அதிகம் பயனுள்ளது.
கடுமையான சொற்களைக் காரணங் காட்டியே விவாதங்களை மட்டுமல்லப் பதில்களையும் தவிர்க்க இயலும்:
10 ஆண்டுகள் முன்பு பேராசிரியர் சிவத்தம்பி “தமிழ் கலைத் துறைப் பங்களிப்புக்காக” ஒரு ஜப்பானியப் பரிசு வாங்கியது பற்றி ஒரு இடதுசாரி ஏட்டில் எழுப்பப் பட்ட கேள்வியை அவர் “அந்தப் பத்திரிகை அப்படித்தான் சொல்லும்” என்று சொல்லிச் சமாளித்தது நினைவில் உள்ளது.
இப்போதுங் கூட முருகபூபதியிடமும் ஞானசேகரனிடமும் சில விளக்கங்களைக் கோரவும் கோரிக்கைகளை முன்வைக்கவும் காலங் கடந்துவிடவில்லை. அவர்களுடைய பதில்கள் நிலைமைகளை மேலும் தெளிவாக்கும்.
மாநாடு பற்றி எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இருக்கவில்லை. மாநாட்டில் கலந்து கொள்ள நான் எவ்வித அக்கறையும் காட்டவுமில்லை.
விளக்கம் கேட்டால் வேறூ கதை சொல்லி நம்மை விசரராக்கப் பார்க்கும் கூட்டத்திடம் போய் மறூபடி,மறூபடி மாட்டுப்படச் சொல்கிறீர்களா? பட்டு வேஸ்டி,சால்வை கட்ட எதையும் செய்யும் தயாராக இருக்கும் இவர்களூக்கு தமிழ் என்பதும், இலக்கியம் என்பதும் நம் தலையில் மிளகாய் அரைப்பது என்பதை எப்போதுதான் புரிந்து கொள்ளப் போகிறீர்கள்?பக்கத்தில் நடந்த சைவ மகாநாட்டிற்கே வராத நீங்களா கொழும்புவிற்கு மெனக்கெடப் போகிறீர்கள்? முருக பூபதி ஒன்றூம் ஈழத்தமிழ் இலக்கியத்திற்கு தீபம் காட்டப் போவதில்லை, நெருப்பு வைக்கப் போகிறார்கள்.
ஒவ்வோரு செயலுக்கும் ஆயிரமாயிரம் தத்துவவிளக்கங்கங்கள் கொடுக்கலாம். தேவையுமுண்டு. ஆனாலும் இலங்கையில் இன்னமும் மக்கள் வாழ்ந்தகொண்டிருக்கிறார்கள் என்பதும் வாழத்துடிக்கிறார்கள் என்பதும் யதார்த்தம். அந்தத்துடிப்பில் ஒன்றாக ஏன் இந்தமாநாடும் இருந்து தொலையக்ககூடாது. எங்களுடையகருத்தக்களை அந்தக்கோணத்திலிருந்து ஏன் நோக்க்ககூடாது?
இந்த மாநாடு தொடர்பாக எழும் ஐயங்களை தி. ஞானசேகரனிடம் கேட்டோம். பெறப்பட்ட அவருடைய பதில்கள் இத்தொடுப்பில் உள்ளன.
சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு தொடர்பாக தி. ஞானசேகரனுடன் உரையாடல்
மாநாட்டில் அரசியல் பேச முடியுமா என்று இங்கே எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலாக அமையக்கூடிய பகுதியை மட்டும் இங்ன்கே தருகிறேன்.
++++
17. இந்த ஆய்வரங்கங்களில் பேசப்படுகின்ற விசயங்களிற்கு தணிக்கை இருக்கிறதா?
நிச்சயமாகத் தணிக்கை இருக்கிறது அதாவது. எந்த அரசியல் விடயங்களும் அதற்குள் வரக்கூடாது.
18. ஏன் அப்படி?
இது எழுத்தாளர் மாநாடு ஏற்கனவே இது அரசுசார்பு அரசு எதிர்ப்பெண்டு நிறைய முத்திரைகள் இதற்கு குத்தப்பட்டிருக்கின்றன. இந்தப் பொய்ப்பிரச்சாரங்களை முறியடிக்கவேண்டிய தேவையிருக்கிறது. இது ஈழத்தமிழ் இலக்கியம் குறித்து பேச வேண்டிய இடம். எங்களுடைய நோக்கம் அரசியல் பேசுவதல்ல. பல்வேறு பட்ட அரசியல் கருத்துள்ளவர்களும் இதற்குள் கலந்து கொள்ளஇருக்கிறார்கள் உதாரணமாக புலி ஆதரவாளர்கள், புலி எதிர்ப்பாளர்கள், அரச எதிர்ப்பாளர்கள், அரச ஆதரவாளர்கள் என்று பலதரப்பட்ட அரசியல் நிலைப்பாடுள்ளவர்களும் ஒன்றாகச் சேர்கின்ற இடம் இது. இதனுள் அவரவர் தன் தன் அரசியலைத் தூக்கிப்பிடித்தபடி நின்றால் வீணான குழப்பங்கள் விழையலாம்.
19. ஆனால் இதனை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் வரலாமில்லையா.. நீங்கள் புகலிட இலக்கியம் என்றொரு அரங்கை வைத்து விட்டு அதில் ஆய்வு செய்கிற ஒருவர் தான் ஏன் புலம்பெயர்ந்தேன் என்று சொல்லவெளிக்கிட்டாலே அங்கே அரசியல் வந்துவிடுகிறதில்லையா?
அதெல்லாம் உண்மைகள், உதாரணமாக கலவரங்கள் நிகழ்ந்தன அதற்கு இனவாதம் காரணம் இது வெளிப்படையான உண்மை அந்த உண்மைகளைப் பேச இங்கே தடையில்லை.
அதைப் பேசத்தான் இந்த மாநாடே.
ஆனால் அவதூறுகளைப் பேச தனிமனிதர்களைத் தாக்குதல் செய்ய, இன்னொருவரின் அரசியல் நிலைப்பாட்டை கேலி செய்கிற விடயங்களை மாத்திரமே நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். மற்றபடி உண்மைகளைப் பேச இங்கே தடையில்லை.
++++++++
எதையாவது பேசித் தொலையுங்கள் ஆனால் அதற்கு ஏன் ஈழத்தமிழ் இலக்கியம் என்றூ முழ்ங்குகிறீர்கள் இளீச்சவாயர் மகாநாடு எனப் பெயரிடலாமே?
1 செம்மொழி மா நாடு நட்த்தும் போதும் இதே கூட்டம் தான் கருணா நிதி நடத்தக் கூடாது என்று கூச்சலிட்டது .
இப்பொழுது கொழும்பில் நடத்தக்கூடாது என்று கூச்சலிடுகிறது. உலகில் அதிக தமிழர்கள் வசிக்கும் இரண்டாவது பெரிய நாடு சீலங்கா அங்கு நடத்தாமல் மாஸ்கோவிலா நட்துவார்கள்
ஏதோ இப்போது ராஜ் பட்சே மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டு குற்றவாளிக் கூண்டில் நீற்பது போலவும் அவரை தமிழ் எழுதாளர்கள் மாநாடு நடத்தி விடுதலை செய்ய்ப்போவது போலவும் சிலர் எழுதிருப்பதைக் காணும் போது நகைப்புதான் ஏற்படுகிறது உலகின் என்த நாடு , எந்த அமைப்பும் இது நாள் வரை ராஜ் அபட்சே என்ற கொடியவன் மீது எந்த குற்றச் சாட்டும் வைக்கவில்லை . அய் நாவின் முன் கொண்டுவரப் பட்ட தீர்மானம் அற்ப ஆயுசில் முடிந்த்து விட்டது . இதில் தமிழ் எழுத்தாளர்கள் மா நாட்டால் ராஜ பட்சேவிற்கு கிடைக்கப்போகும் புது அங்கீகாரம் எதும் இல்லை ஏற்கனவே வெனிசூலா குயூபா முதல் இந்திய , சீனா வரை எல்லா நாடுகளும் அவரை பயங்கர வாத்தை ஒழித்த தலவர் என்றெ கொன்டடுகின்றன இதில் தமிழ் எழுதாளர்கள் மானாடு நட்துவதால் ஒன்றும் குறைந்து போய்விட்ப் போவதில்லை ராஜபட்சேவை பாராட்டிய குயூபாவின் பிடல் கேச்ட்ரோவிற்கு எதிராக
மகேந்திரனும் பொன்னீலனும் அறிக்கை விடிருக்கிறர்களா?
எல்லாம் தமிழ் நாட்டின் அரசியிலுக்காக எழுப்படும் மய்மாலக் கூச்சல் அதில் சில நல்வர்களும் ஏமாந்துவிடுகின்றனர்.
நாவலன்,இக்கட்டுரையின்வழி,நாம் தொடர்ந்து கூறுவதை வகைப்படுத்திய-நிரல்ப்படுத்திய ஒரு உரையாடலுக்குள் இழுத்து வந்துள்ளீர்கள்.இதை வரவேற்கிறேன்.இலங்கையின் அரச வியூகமானதை அதன் ஆளும் கட்சிக்குள் காணுகின்ற போக்கை உடைத்துவிட்டுப் பரவலாக விளங்க முற்படும்போது,இவ் “எழுத்தாளர்”மாநாடென்பது நீங்கள் குறித்த நிரல்படுத்தப்பட்ட
” ஆக மாநாட்டின் இறுதி நோக்கம்:
1. இலங்கை அரசின் இனப்படுகொலையையும் இனச் சுத்திகரிப்பையும் அங்கீகரித்தல்.
2. இலங்கை அரச பாசிசத்தை மறைத்து அது ஜனநாயக அரசு என அறிவித்தல்.
3. இலங்கை அரச எதிர்ப்பாளர்களைப் புலிகள் என அடையாளப்படுத்தி அன்னியப்படுத்தல்.
4. தமிழ் நாட்டு மற்றும் புலம் பெயர் அரச எதிர்ப்பாளர்களிடையே பிளவுகளை உருவாக்குதல்.”
கருத்துக்களுக்கமைய வினைகளை ஆற்றுவதாகவே இருக்கும்.
இவ்வெழுத்தாளர் மாநாட்டை ஆதரிப்பதற்கான காரணங்களை அடுக்குபவர்கள் ஏதோவொரு வெளியில் தமது சுய தேவைகளின்வழியே பரவலான மக்களது நலன்களைக் கையிலெடுத்து ஆசிய-ஐரோப்பிய மூலதனத்துக்கேதுவாக இயங்குவதில் முனைப்புப்பெறுவதாகவே இருக்கும்.
இரு முனைகளாக இயங்கும் ஆதிக்க மூலதனவூக்கத்தில் ஒரு பகுதி மேற்கு மூலதனத்துக்கேற்ற திசைவழியைக்கொண்டியங்குகிறது. மறு தளமானது ஆசிய மூலதனத்துக்கேற்றபடி இயங்க முனைகிறது.
இந்த இரண்டு தளமும்(ஆசிய-மேற்கு பொருளாதார அணிகள்) சிங்கள இனவாத அரசினது தமிழ்பேசும் மற்றும்சிறுபான்மை இன மக்கள்மீதான பொருளாதார-இன-பாண்பாட்டு ஒடுக்குமுறையை அங்கீகரித்தபடியும், தார்மீக ஒத்துழைப்பையும்நல்கியபடியுந்தாம் இலங்கையை முற்றுகையிட முனைகின்றன.
இன்றும், மௌன்ட் பெலரின் சொசைட்டி(Mont Pelerin Society) போர்ட் மென்பராக இருக்கும் இரணில் விக்கிரமசிங்காவை அண்மித்தியங்கும் தமிழ் ஓட்டுக்கட்சிகளை இங்கு முன் வைத்து யோசித்தால் இவ்வெழுத்தாளர் மாநாட்டை இரு தரப்பும் (மேற்கு-ஆசிய விசுவாசம்) வரவேற்று ஆதரிக்கிறது என்பதையும்,நமது புலம் பெயர் தளம் இவ்விரண்டு முகாங்களது லொபியாக இயங்குவதை அறியக் கூடியதாகவிருக்கிறது.
உதாரணத்துக்கு தமிழரங்க இரயாகரன்கோஷ்டி(புரட்டுப் புரட்சி) – இராகவன் கோஷ்ட்டி(தலித்துவ முன்னணி-அபிவிருத்தி,ஜனநாயகம்) இரண்டுமே ஒவ்வொரு தெரிவில் ஆதரிக்கின்றன.இங்கே, இராகவன்-சோபாசக்தி அணி,இரயாகரன் போன்ற பினாமிகள் எங்கே-எப்படி தமிழ்பேசும் மக்கள்மீது நடாத்தப்பட்ட சிங்கள இனவொடுக்குமுறையை,எதன் தெரிவில் மறைமுகமாக ஆதிரித்தும்-எதிர்த்தும் இயங்குகின்றார்களென்பதைப் புரிவதன்வழி, இன்னும் பாரிய பின்னடைவுகளைத் தமிழ் பேசும் மக்கள் சந்திப்பதைத் தடுக்கலாம்.
இங்கே,உங்கள் கட்டுரை மட்டுமல்ல,பொதுச் சூழலே இதை வற்புறுத்துவதெனவுணர்கிறேன்.
பிற்குறிப்பு: ஆசிய மூலதனத்துக்கு ஊக்க வினையாக இயங்கும் கிஷோர் மபுபானியின் ஆய்வுகள் பேசப்படவேண்டும்.அவர் தனது தெரிவுகளில் இனமுரண்பாடுகளை அழிப்பதை ஆயுத-பொருளாதார முறைமைகளை பயன்படுத்துவதில் சீனாவையே உதாரணமாகக்கொள்வதும்,அதையே இந்தியாவுக்கும் இலங்கைக்கும் பரிந்துரைத்தவர்.அவருக்கும் ப.சிதம்பரத்துக்குமான உறவு நீண்டது.புலியழிப்பின்போது கிஷோர் மபுபானியும் சிதம்பரமும் பல தடவைகள் சந்துள்ளனர்.
சிறீரங்கன்,
நாம் , கொழும்புத் தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடக்கப்போகும் (ஆகக்கூடினது 300 பேர் நின்று பார்க்கலாம்) இந்த மாநாட்டை எதிர்த்து நிற்பது ஆசிய- மேற்கு மூலதனங்களை எதிர்த்து நிற்பதாகுமா?
இந்த மாநாட்டை ஆசிய-மேற்கு மூலதனங்களின் பினாமிகள்தான் நடத்துகிறார்களா?
அதுகிடக்க,
இந்தக்கேள்வி முக்கியமானது,
ஒரு தமிழ் எழுத்தாளர் மாநட்டை நான் நடத்த விரும்புகிறேன். அம்மாநாட்டை ஆசிய-மேற்கு மூலதனங்களுக்கு சார்பாக அல்லாமல் (எதிராகக் கூட இருக்க வேண்டியதில்லை) நடத்த நான் செய்ய வேண்டியவை எவை?
மயூரன் யாழ்ப்பாணத்தில் நல்லூர்க் கந்தனுக்குத் தேரிழுத்தவர்கள் நாம் சமீபத்து இனவழிப்பை மறந்து…ஆனால்>நான் கூறுவது அணித் திரட்சிகளையும்>அதன் வாயிலான அரசியல் கோரிக்கைகளையும்.டான் தொலைக் காட்சியில் உரையாடிய தேவதாசன்-இராகவன் வகையறாக்கள் என்ன செய்தார்கள் என்பது நாம் பார்த்ததுதாம்.நீங்கள் தமிழ் எழுத்தாளர் மாநாடு நடாத்து மளவுக்கு நமது சமுதாயம் அனைத்து வளமும் பெற்று வாழவில்லை!முதலில் அவர்களது வலியைப் போக்க-இனவழிப்பைத் தொடரும் இலங்கை அரச பாசிசத்துக்கெதிராக அணிதிரண்டு வீதிக்கிறங்கு ஊர்வலங்களைத் தொடருங்கள்.அது>இலங்பகப் பிரச்சனைகளைக் குறித்த ஜனநாயகக் கோரிக்கையாக இருக்கும்.நாலு சுவருக்குள் மாநாடு நடாத்தியவர்கள் தந்த பரிசு>அகதி வாழ்வு-அடிமை வாழ்வு-மரணம்-கொலை-கொள்ளை நிலப்பறிப்பு இத்தியாதி.இதைத் தொடர்வதன் புள்ளியே இவ் வகை மாநாடுகளின் தெரிவிலிருந்தே ஆரம்பிக்கிறது.
உங்களுடைய பதிலை,
1. நமது சமுதாயம் அனைத்து வளமும் பெற்று வாழும் நிலையில் மட்டுமே இலங்கையில் ஓர் எழுத்தாளர் மாநாடு நடைபெற வேண்டும். அதுவரை வேறு தேசத்தவர்கள் (இந்தியத்தமிழர் உட்பட) மட்டுமே ஆய்வரங்குகளை, மொழி சார்ந்த, இலக்கியம் சார்ந்த, திரைப்படம், கணினி சார்ந்த ஆய்வுகளைச் செய்யப் பாத்தியதை உடையவர்கள்.
2. இலங்கையில் அரச பாசிசத்தை நேரடியாக எதிர்க்காத, நேரடியாக எதிர்ப்பதற்கான கட்டுமானங்கள் அல்லாத எந்தவொரு நிகழ்வும் பாசிசத்துக்கும் மேற்குக் கிழக்கு மூலதங்களுக்கும் சேவகம் செய்வதாகவே அமையும்.
3. இலங்கைத் தமிழர் தமக்கான விடிவு கிடைக்கும்வரை வேறு எந்தவொரு வேலையிலும் ஈடுபடாமல் முழு மூச்சாக எதிர்ப்பு நடவடிக்கைகளிலேயே காலம் கழிக்க வேண்டும்.
என்றா நான் புரிந்துகொள்வது?
(முள்ளிவாய்க்கால் காலத்தில் இராணுவத்திடம் அடைக்கலம் கோரி இராணுவக்கட்டுப்பாட்டுப்பிரதேசங்களுக்கு தப்பி ஓடிய சனங்கள் பற்றிய உரையாடல் ஒன்றில், யாரோ சொன்னார்களாம்,
“அந்தச்சனங்கள் துரோகிக்கூட்டங்கள். மண்ணுக்காகப் போராடி வீரமரணம் அடைந்திருக்க வேண்டாமா” என்று )
இப்பொழுது என்ன அவசியம் வந்தது இலங்கயில் எழுத்தாளர் மானாட்டுக்கு. எழுத.தாளர்கள் முத்கெலுமபு இல்லதவர்களெ இலங்கயில் அரசியல் பெசினால் என்னகிடைக்கும் என்பத தெரியும்.இதில் வ்யப்புக்கு ஓன்ற்மெஇல்லை.
சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு தொடர்பாக தி. ஞானசேகரனுடன் உரையாடல்
http://mauran.blogspot.com/2010/11/blog-post.html
++++
17. இந்த ஆய்வரங்கங்களில் பேசப்படுகின்ற விசயங்களிற்கு தணிக்கை இருக்கிறதா?
நிச்சயமாகத் தணிக்கை இருக்கிறது அதாவது. எந்த அரசியல் விடயங்களும் அதற்குள் வரக்கூடாது.
18. ஏன் அப்படி?
இது எழுத்தாளர் மாநாடு ஏற்கனவே இது அரசுசார்பு அரசு எதிர்ப்பெண்டு நிறைய முத்திரைகள் இதற்கு குத்தப்பட்டிருக்கின்றன. இந்தப் பொய்ப்பிரச்சாரங்களை முறியடிக்கவேண்டிய தேவையிருக்கிறது. இது ஈழத்தமிழ் இலக்கியம் குறித்து பேச வேண்டிய இடம். எங்களுடைய நோக்கம் அரசியல் பேசுவதல்ல. பல்வேறு பட்ட அரசியல் கருத்துள்ளவர்களும் இதற்குள் கலந்து கொள்ளஇருக்கிறார்கள் உதாரணமாக புலி ஆதரவாளர்கள், புலி எதிர்ப்பாளர்கள், அரச எதிர்ப்பாளர்கள், அரச ஆதரவாளர்கள் என்று பலதரப்பட்ட அரசியல் நிலைப்பாடுள்ளவர்களும் ஒன்றாகச் சேர்கின்ற இடம் இது. இதனுள் அவரவர் தன் தன் அரசியலைத் தூக்கிப்பிடித்தபடி நின்றால் வீணான குழப்பங்கள் விழையலாம்.
19. ஆனால் இதனை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் வரலாமில்லையா.. நீங்கள் புகலிட இலக்கியம் என்றொரு அரங்கை வைத்து விட்டு அதில் ஆய்வு செய்கிற ஒருவர் தான் ஏன் புலம்பெயர்ந்தேன் என்று சொல்லவெளிக்கிட்டாலே அங்கே அரசியல் வந்துவிடுகிறதில்லையா?
அதெல்லாம் உண்மைகள், உதாரணமாக கலவரங்கள் நிகழ்ந்தன அதற்கு இனவாதம் காரணம் இது வெளிப்படையான உண்மை அந்த உண்மைகளைப் பேச இங்கே தடையில்லை.
அதைப் பேசத்தான் இந்த மாநாடே.
ஆனால் அவதூறுகளைப் பேச தனிமனிதர்களைத் தாக்குதல் செய்ய, இன்னொருவரின் அரசியல் நிலைப்பாட்டை கேலி செய்கிற விடயங்களை மாத்திரமே நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். மற்றபடி உண்மைகளைப் பேச இங்கே தடையில்லை.
20. அரசுக்கு ஆதரவான கோசங்களே இந்த மாநாடு எங்கும் நிறைஞ்சிருக்கும் எண்டொரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறதே?
அது பொய்யென்பது இதுவரை நாங்கள் பேசியவிடயங்களில் இருந்தே தெளிவு பட்டிருக்கும். இவர்கள் தங்களை முன்னிலைப்படுத்துவதற்கா அல்லது எதற்காக இவ்வாறெல்லாம் பேசுகிறார்கள் என்பது உண்மையில் எங்களுக்கும் புரியவில்லை.
++++
வேர்களோடு வீழ்ந்த மரங்கள் மண்ணீல் புதைந்துள்ள மனித உடல்கள் தேடும் போதெல்லாம் எலும்புக்கூடுகள்.எரிந்த எம் மண்ணீல் இன்னும் புலம்பல்கள் நிற்கவில்லை.ஈழத்து இலக்கியத்தை இங்கிருந்து படையுங்கள் அத விடுத்து ராஸபகஸ கும்பலோடு கூடிக்குலாவ மகாநாடு நடாத்தாதீர்கள்.
நாவலன்,இன்னுமொன்றைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்”சர்வதேச” அரசுகளுக்கெல்லாம் கொலைசெய்வது எப்படி என்ற முன்னுதாரணத்தை வழங்கியிருக்கும் இலங்கை அரசின் எல்லைக்குள், அது வரித்திருக்கும் சர்வாதிகார வரம்புக்குள்”என்ற தங்கள் கருத்தானது இன்று உலகத்தில் அமெரிக்காவினது தலைமையில் இயங்கும் நேட்டோ சர்வ நாசகார இராணுவ ஒடுக்குமுறையைச் சந்திக்கும் மக்களது வலியைக் குறித்துக் கணக்கெடுத்திருக்கிறதாவென என்னிடம் கேள்வி வரிகிறது.
இதன் பொருட்டு, மூலவளக் கொள்ளைக்காக கொங்கோவில் இன்றுவரை 3 மில்லியன்கள் மக்கள்,சோமாலியாவில் 4 மல்லியன் மக்கள்,ஈராக்கில் 1.5 மில்லியன் மக்கள்,அவ்கானில் இதுவரை இரண்டு இலட்சங்கள் மக்கள்வரைப் படுகொலை செய்யப்பட்டதும்,அவர்களது கொலைகளை எங்ஙனத் திட்டமிடப்பட்ட தொழில் ரீதியான கொலையென்பதையும் நாம் உணர வேண்டும்.இவர்களிடமிருந்தே இலங்கை ஆளும் வர்க்கம் இதை முன்மாதிரியாகவைத்துத் தமிழ்பேசும் மக்களை-புலியழிப்பை அரங்கேற்றியது.ஈராக்கில் சீனாவுக்கு மூக்குடைத்த அமெரிக்காவை,சீனா இலங்கையில் புலியழிப்பைச் செய்து மூக்குடைத்தது.இதை விரிவாக உணர்வது அவசியமே.புலிகளது மேற்குலகச் சேவகத்தைத் தகர்ப்பதால் சீனா தனது வர்த்தகத் தொடர்பாடலது கடல்வழிப் பிரயாண வசிதியில் சில நிர்ணயமான ஒழுங்கைக் கைப்பற்றியுள்ளது.
இப்போதைய மூலவள-வர்த்தக யுத்தமானது மூன்றவது உலக யுத்தமாகவே பொருளாதார வளர்ச்சியடைந்த நாடுகளது ஆளும் வர்க்கத்தால் திட்டமிடப்பட்டு நகர்த்தப்படுகிறது. கடந்த இரண்டு உலக யுத்த வடிவத்தையும் உடைத்து விட்டுப் புதிய முறைமைகளில் அணிபிரிந்துள்ள ஆளும் வர்க்கங்கள் தத்தமது மூலவளத் தேவைக்காகப் போட்டியிட்டு மூன்றாம் உலக யுத்தத்தை நடாத்துகின்றன. இனிமேல் பழைய பாணி உலக யத்தம் நடைபெறவதின்றி இந்தப்பாணியில்(ஈhராக்-அவ்கான்,கொங்கோ இன்னபிற) உலக யுத்தம் நடைபெறுவதை உணரவேண்டும்.இவ் யுத்தத்தில் ஆசிய-மேற்குலக மூலதனம் தன் முரண்பாடுகளை யுத்தத்தின்வழி நடாத்துவதை ஏற்காதுபோனால் சரியான தரவுகளுக்கு நாம் முகம் கொடுப்பதைத் தவறவிடுவோம்.
ஆசிய மூதனத்தோடு கஸ்பியன்வலைத் தேசங்களை இணைப்பதும் அவசியம்.அதாவது இருஷ்சியக் கூட்டணி.இலங்கையில் நடாத்தப்பட்டது-படுவது இதன் ஒரு தெரிவே!இலங்கையின் அரசியற் சூழலானது இனிமேல் மெல்லிய-தாழ் வகைப்பட்ட புதியபாணி மூன்றாவது உலக யுத்தத்துள் ஈர்க்கப்பட்டே இருக்கும்!நேட்டோவினது சமீபத்திய மாநாடு இதை உறுதிப்படுத்துகிறது. 2014 ஆண்டில்நேட்டோத் துருப்புகளது அவ்கான் வெளியேற்றமானது தென்னாசிய அரசியல் வியூத்தைத் மீளத் தகவமைத்துக்கொள்வதற்கான காலக்கெடூவாகும்.இதுள் நேட்டோவானது நான்கு ஆண்டுகளுக்குள் ஈரானை முற்றுகையிட்டே முடிக்க வேண்டும்.துருக்கியை ஐரோப்பியக் கூட்டமைப்புக்குள் இணைக்கவேண்டும்.இவை இரண்டும் நபுக்கா எண்ணை-எரிவாயுக்குழாய்களது ஒப்பந்தத்தில் நோர்த் ஸ்ரீம் இருஷ்சியக் குழாய்களுகஇகு ஆப்பு வைப்பதன் தொடரில் ஈரானிய எண்ணை நபுக்காவுக்கு உறுதிப்பட்டாலேதாம் துருக்கியை ஊடறுத்து இது சாத்தியமாகும்.எனவே,மூன்றாவது உலக யுத்தம் புதிய பாணியில் நடைபெறுவதை இனம் காணுங்கள்.இங்கே அணிகள் ஒவ்வொரு தேசதஇதுக்ப் பின்னும் இயங்கும்போத அங்கே பலியாவது பரந்துபட்ட மக்களே-இனங்களே!தமிழ்பேசும் மக்களது தலைவதியும் இதற்கு விதிவிலக்கற்றுப் போகிறது.
தயவுசெய்து யாராவது பார்ப்பனியத்தைப் பற்றி வேறெங்காவது எழுதித் தொலைத்து எங்களைக் காப்பாற்ற மாட்டார்களா?
தயவுசெய்து, தயவுசெய்து….
நான் ஒரு சமயத்தில் இரண்டு விடய்ங்ககளை பேசக் கூடாது என்று சட்டமாஎன்னா?
“…எங்களைக் காப்பாற்ற மாட்டார்களா?” என்பது எப்படிச் சட்டமாகும்?
(அதற்கும் பொழிப்புரை எழுதாதிருப்பின் நன்றியுடையவனாயிருப்பேன்)
சட்டமேயல்ல என்பதால் தான் இனியொரு பிரசுரித்துத் தொலைக்கிறதே.
;இம்மாநாடு ஓர் புரட்சிகர அமைப்பின்>கலை இலக்கிய மாநாடல்ல! இம்மாநாட்டை நடாத்துபவர்களும் கலந்து கொள்பவர்களும் மிதவாதப் போக்குடையவர்கள். இவர்களிடம் போய் என்னோ>என்னவெல்லாம் கேட்கின்றேம். நாம் கடந்தகாலக் கணிப்பீடுகளில் விட்ட தவறுகளில் இருந்து இன்னும் விடுபடவில்லை.
கொழும்பில் நடைபெறவிருக்கும் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை இலங்கை, இந்திய மற்றும் புலம்பெயர் பெண் எழுத்தாளர்கள் அனைவரும் நிராகரிக்க வேண்டும் என நாம் கேட்டுக் கொள்கின்றோம்.
அரசியல் கைதுக்கு எதிராகவும்,பத்திரிகைச் சுதந்திரத்துக்கு ஆதரவாகவும், பாதிக்கப்பட்ட மக்களின் மீள்வாழ்வுக்கு குரல் கொடுக்கவேண்டியதை விட்டுவிட்டு எந்த முகத்தை வைத்துக்கொண்டு இந்த மாநாட்டாளர்கள் பேச்சு, எழுத்து சுதந்திரம் என மறுக்கப்பட்டிருக்கும் இலங்கையில் எழுத்தாளர்கள் மாநாடு நடாத்துகிறார்கள்? ஆகையால் “இம் மாநாட்டில் கலந்துகொள்வோரும், நடத்துவோரும் சமூகபொறுப்பு, அக்கறையற்றவர்கள், அரசியல் பண்பில்லாதவர்கள்”. என்பதே எங்கள் கருத்து.
http://www.oodaru.com/?p=1923#more-1923
ஊடறுவின் குறித்த பதிவுக்கு “நாகேந்திரம்” என்பவர் அளித்த மறுமொழியிலிருந்து சிறு பகுதி:
++++
“ கொழும்பில் மாநாடு நடத்துவது என்றால் அரசு நிபந்தனை உண்டு என்று கேள்விப்பட்டேன். அதாவது ராஜபக்சேவை விமர்சனம் பண்ணக்கூடாது. முள்ளி வாய்க்கால் போன்ற பிரச்சனைகளை பேசக்கூடாது. அப்படியென்றால் மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு இந்த உணர்வே இருக்கக் கூடாது. இலங்கை சிங்கள அரசு தமிழர்களுக்கு மிகப் பெரிய அழிவையை உண்டாக்கி இருக்கிறது என்று மனதில் எண்ணம் இருந்தாலும் கூட பேசக்கூடாது. அல்லது பேச வேண்டுமானால் அரசுக்கு அனுசரணையான செய்திகளை மட்டும் பேச வேண்டும். அந்த மாதிரி பேசக்கூடியவர்களும் இருக்கிறார்கள். விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஈழ மக்கள் விடுதலைக்கு எதிராக பேசக்கூடிய மக்களும் இருக்கிறார்கள். அவர்கள் நிச்சயமாக இந்த மாநாட்டில் பங்கு கொள்வார்கள்!”
ஞானி போன்றவர்களின் இக்கதைகள் “கழுதை மயிர் பிடுங்கி தீர்த்தமாடியவர்கள்” போல் உள்ளது சில தமிழகத்தினதும்—எம் எழுத்தாளர்களினதும் நிலை! இதை சைவ சமயப் பிரசங்கி கிருபானந்தவாரியார் அழகாகக் சொல்வார். இராமேஸ்வரம் கோவில் முன்பான கடற்கரையில் தீர்த்தமாட பலர் கூட்டமாக நின்றனர். அதற்குள் ஓர் கழுதையும்!. வடஇந்தியாவில் இருந்து பிதிர்க்கடன் தீர்க்க வந்த ஒருவர் பக்கத்தில் நின்ற கழுதையிலிருந்து மயிர் ஒன்றைப் பிடுங்கி, சிவ சிவ என கும்பிட்டபடி கடலில் குதித்து தீர்த்தமாடினான்!. இதைப் பார்த்தவர்கள் எல்லாம் கழுதையை பலாத்காரதாக பிடித்து மயிர் பிடுங்கி அர்படியே தீர்த்தமாடினார்கள்!. இதைப் பார்த்த ஓருவர் ஏன் இப்படியெனக் கேட்டபொழுது, வடஇந்தியாவிலிருந்து வந்தவர் அப்படிச் செய்தார்! அதனாலேயே நாங்களும் என்றனர்!
இது போலவே எஸ். பொ. கழுதை மயிர் பிடுஙகியவனாட்டம், மாநாட்டை நிராகரி என்றிட, சில புலி இணைய தளங்கள் இதை பிரசுரிக்க, அதைக் அப்படியே கொப்பியடிக்கின்றனர் எழுத்தாளர்கள் சிலர்!. சென்ற வாரம் தமிழக எழுத்தாளர் ஒரு சிலரிடம் கதைத்த பொழுது, இது எஸ்.பொ. தீராநதி, இன்னும் சில இணையதளங்களால் வந்தவினை என்றார்கள். இதில் ஞானி போன்ற பலர் அவசரப்பட்டு பலதை கவிட்டுக் கொட்டிவிட்டனர் என்றனர்!. இவ் அபிப்பிராயமே இலங்கை எழுத்தாளர்கள் பலரதும்!.
இதில் என் நோக்கம் இம்மாநாட்டிற்கு பச்சைக்கொடி காட்டுவதும், வக்காலத்து வாங்குவதுமல்ல!. கடந்தகாலங்களில் புலம்பெயர் மாநாடுகள் (இலக்கிய-பெண்கள் சந்திப்புக்கள் உட்பட்) என்றால் கனல் பறக்கும் கர்னகடுர புலி-அரச அறிக்கைகள்-பேச்சுக்கள்-அதனடிப்படையிலான தீர்மானங்கள் தான்!.
கடந்தகால இப் போக்கில் இருந்து விடுபட்டு, எதிர் காலத்திலாவது இந்நிலையை மாற்றினால் என்ன?. சர்வதேச த.எ. மாநாடு போன்று, தாயகம் நோக்கிய, இலக்கிய-பெண்கள் மாநாடுகள் சந்திப்புக்களை நடாத்தினால் என்ன?. இம் மாநாடுகளில் அங்குள்ளவர்களையும் பங்குகொள்ள வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டால் என்ன? . அரச-மகிந்த எதிர்ப்பு கோஸங்களுடான-போஸ்டர்கள்-பனர்கள், போட்டு-மாட்டி ஒட்டி- மாநாடு நடத்தினால்தான் அது மாநாடோ?. இக்கோஸங்கள் இல்லாத மாநாடுகளுக்கு உந்த தேசிய சர்வதேச எழுத்தாளர்கள் வரமாட்டார்களோ?. நாட்டு நிலவரத்தை கணக்கில் எடுத்து மூல-தந்திரோபாய ரீதியாக எம்வேலை முறைகளை மாற்ற முடியாதோ?. அதனடிப்படையில் ஒடுக்கபபட்ட்-பாதிக்கப்பட்ட மக்களின் அபிலாசைகளை உள்ளடக்கிய நிகழ்வுகளை நடாத்த முடியாதோ?. முடியும்!. முயன்றால் முடியும்!. இது உங்களுக்கான எம் போதனைகள் அல்ல! தாயக வேலைக்கான எம் எதிர்கால் மக்கள் நலன்சார் வேலைமுறையும் இதுவேதான்!.
+++++
ஊடறுவின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது
பேச்சு>எழுத்து>சுதந்திரம் மறுக்கப்படும் இடங்களில் இருந்துதான் நிகழ்வுகள் நடாத்தப்படவேண்டும். அதற்கு அங்கிருந்துதான் மறுக்கப்படுபவனவற்றிற்கான உண்மையான காரண-காரியங்களை கண்டறிய முடியும்! இது மண்ணுக்கும் மக்களுக்குமான பிரச்சினை. எதை> எப்படி>எங்கிருந்து ஆரம்பிப்பது என்பதை தீர்மானிப்பவர்கள் நாங்கள் அல்ல. சமகால இலங்கையில்> புலம்பெயர்வில் நடைபெறுபவைகள் போல் கர்ன-கடூர-வெற்று-வெள்வெருட்டுக்கள் போல் எதையும் செய்ய முடியாது! மறுக்கப்படுவனவற்றிற்கு எதிராக மக்களை சிந்திக்க வைத்தாலே> அது இன்றைய காலகட்டத்தில் ஓர் சிறுபொறிதான்!
பேச்சு;த எழுத்து சுதநிரத்துக்கு குரல் கொடுக்கும் மாநாடு – அல்லது இலங்கை அரசை பேச்சு எழுதது சுதந்திரத்துக்கு அழுத்தம் கொடுக்கும் மாநாடா இதை நடாத்த முடியுமா? அதைப் பற்றிய எந்த நோக்கமும் அமைப்பாளர்களுக்கு இல்லை. அமைப்பாளர்கள் அவுஸ்திரெலிய தமிழ் பிரசைகள்.
/இம்மாநாடு ஓர் புரட்சிகர அமைப்பின்>கலை இலக்கிய மாநாடல்ல! /
அப்படியாயின் என்ன நோக்கம். எதுவும் தெளிவாக இல்லை. வன்னியில் உள்ள நிலங்கள் அனைத்தும் பெரிய “மு” முதலைகளிடம் பறிபோகும் சூழல் உள்ளது. கவிஞர்களும் கதாசிரியர்களும் இந்த மாநாட்டில் குரல் கொடுப்பார்களா?
இக்கட்டுரையோடு தொடர்புடைய கேள்விகளையும் பதில்களையும் கீழே தந்துள்ளேன்.
முழுமையான (ஒலிவடிவத்திலும் அமைந்த) நேர்காணல் இங்கே:
http://mauran.blogspot.com/2010/11/blog-post.html
17. இந்த ஆய்வரங்கங்களில் பேசப்படுகின்ற விசயங்களிற்கு தணிக்கை இருக்கிறதா?
நிச்சயமாகத் தணிக்கை இருக்கிறது அதாவது. எந்த அரசியல் விடயங்களும் அதற்குள் வரக்கூடாது.
18. ஏன் அப்படி?
இது எழுத்தாளர் மாநாடு ஏற்கனவே இது அரசுசார்பு அரசு எதிர்ப்பெண்டு நிறைய முத்திரைகள் இதற்கு குத்தப்பட்டிருக்கின்றன. இந்தப் பொய்ப்பிரச்சாரங்களை முறியடிக்கவேண்டிய தேவையிருக்கிறது. இது ஈழத்தமிழ் இலக்கியம் குறித்து பேச வேண்டிய இடம். எங்களுடைய நோக்கம் அரசியல் பேசுவதல்ல. பல்வேறு பட்ட அரசியல் கருத்துள்ளவர்களும் இதற்குள் கலந்து கொள்ளஇருக்கிறார்கள் உதாரணமாக புலி ஆதரவாளர்கள், புலி எதிர்ப்பாளர்கள், அரச எதிர்ப்பாளர்கள், அரச ஆதரவாளர்கள் என்று பலதரப்பட்ட அரசியல் நிலைப்பாடுள்ளவர்களும் ஒன்றாகச் சேர்கின்ற இடம் இது. இதனுள் அவரவர் தன் தன் அரசியலைத் தூக்கிப்பிடித்தபடி நின்றால் வீணான குழப்பங்கள் விழையலாம்.
19. ஆனால் இதனை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் வரலாமில்லையா.. நீங்கள் புகலிட இலக்கியம் என்றொரு அரங்கை வைத்து விட்டு அதில் ஆய்வு செய்கிற ஒருவர் தான் ஏன் புலம்பெயர்ந்தேன் என்று சொல்லவெளிக்கிட்டாலே அங்கே அரசியல் வந்துவிடுகிறதில்லையா?
அதெல்லாம் உண்மைகள், உதாரணமாக கலவரங்கள் நிகழ்ந்தன அதற்கு இனவாதம் காரணம் இது வெளிப்படையான உண்மை அந்த உண்மைகளைப் பேச இங்கே தடையில்லை.
அதைப் பேசத்தான் இந்த மாநாடே.
ஆனால் அவதூறுகளைப் பேச தனிமனிதர்களைத் தாக்குதல் செய்ய, இன்னொருவரின் அரசியல் நிலைப்பாட்டை கேலி செய்கிற விடயங்களை மாத்திரமே நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். மற்றபடி உண்மைகளைப் பேச இங்கே தடையில்லை.
20. அரசுக்கு ஆதரவான கோசங்களே இந்த மாநாடு எங்கும் நிறைஞ்சிருக்கும் எண்டொரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறதே?
அது பொய்யென்பது இதுவரை நாங்கள் பேசியவிடயங்களில் இருந்தே தெளிவு பட்டிருக்கும். இவர்கள் தங்களை முன்னிலைப்படுத்துவதற்கா அல்லது எதற்காக இவ்வாறெல்லாம் பேசுகிறார்கள் என்பது உண்மையில் எங்களுக்கும் புரியவில்லை.
ஆட்டு மந்தையாய் தமிழன் அடைக்கப்பட்டிருக்கையில் மயூரன் மக்களூக்கு எல்லாம் வைக்கோல் குடுக்கச் சொல்கிறாரா?போதி மரத்து புத்தர் சிலைகள எல்லாம் தமிழன் வாழுமிடங்களீல் நிறூவி தமிழர் மன உணர்வுகள கீறூம் இலங்கை அரசுக்கு காவடி தூக்குவதுதான் தமிழர் தலைவிதியா?ஈழத் தமிழ் இலக்கியத்திற்கு சமாதி கட்ட ஒரு மகாநாடு தேவையா?
மயூரன் நீங்கள் நான் சொல்வதை விட்டு, மானுட வாழ்வியக்கப் போக்கில் தொங்குகிறீர்கள்.இன்று, இலங்கை அரசினது வியூகங்களை மிக இலகுவான முறையில் மலினப்படுத்தி ஒன்றோடொன்றைக் குழப்பாதீர்கள்.நீங்கள் எழுதுங்கோ-படையுங்கோ,கணினியில் புரட்டுங்கோ, அவையாவும் சமூக அசைவியக்கத்தின் உறுப்புகளே.
ஆனால்,நிறுவனப்பட்ட அரச ஆதிக்கத்துக்குள்ளிருந்து சர்வதேசத்தில் புலம் பெயர்ந்த படைப்பாளிகளை இணைத்து மாநாடு நடாத்துகிறோமெனக் கூவிக்கொண்டியங்கும் பேர்வழிகளைக் குறித்து நீங்கள் நியாயப்படுத்துவதை நாமும் ஏற்க வேண்டுமென்பதல்ல.அதேபோன்று, நாம் கூறுவதற்கும் நீங்கள் தலையாட்டவேண்டுமென்றுமில்லை!
என்றபோதும்,கடந்தகால நடாத்தையில், இத்தகைய “எழுத்தாளர்கள்”எந்தத்திசையில் அரசியலோடியங்கியவர்கள் என்பதைவிட நமது பிரச்சனைகளை அரசியல்ரீதியாகத் தீர்க்க முடியாதவொரு சிக்கலில் மக்கள் தவிக்கும்போது அவற்றைக் கிடப்பில் போட்டுவிட்டு,அல்லது அதைத் திசை திருப்பி மழுங்கடிக்கும் திசைகளில் இத்தகைய மாநாட்டரங்குகளெல்லாம் இலங்கையில் திடீரெனப் பத்திப்படர்வதும்,தமிழ் மக்களது புறமுரண்பாடுகளையும்,அவர்கள்மீது சுமத்தப்படும் இராணுவ அழுத்தங்களையும் மிக இலகுவாக சகஜமாக்கவும்,அதையே தொடர்ந்து நிலைப்படுத்தவம் மக்களது கவனம் மட்டுமல்ல அத்தகைய மக்களுக்கும் படைக்கிறோம்-புடைக்கிறோமெனும் பேர்வழிகளையும் ஒரு ஒழுங்குக்குள் அமுக்கியெடுக்க வேண்டிய வியூகத்துக்குப் பெயர் “சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு”என்று நாம் புரிகிறோம்.
இதன் தெரிவில் அணிச் சேர்க்கையாகும் ஒவ்வொரு தளத்திலும் பத்திப்படரும் இலங்கை அரசினது மையச் சிந்தனையோட்டத்தின் ஆதாரமான “ஆதிக்கம்”அதன் வினைத் தொடரைப் புலம் பெயர் தளங்களில் மிக இலகுவாக நிலைப்படுத்தப்படுவதற்கும்,அந்த ஆதிக்கத்தைத் தகர்க்க முடியாதவொரு சூழலை உருவாக்கவும் இங்கே கொட்டை போட்டு நீரூற்றுகிறது.இதையெல்லாம் இலங்கையிலிருப்போர் எதைக்கொண்டு அழைத்தால்மட்டும் அது மகிந்தாவைப் புடுங்கும்,சிங்கள அரச ஆதிக்கத்தையும்-அரச வன்முறை ஜந்திரத்தின் கெடுபிடிகளையும் இல்லாதாக்கித் தமிழர்களது சுய நிர்ணயவுரிமையை அங்கீகரக்க ஏதுவாகிவிடுமெனும் கூத்து முற்று முழுதான போக்கிரித்தனமாகும்.அங்கே,ஆதிக்கச் சக்திகளது தெரிவுக்கான வியூகங்களைத் தம்மையறியாது ஒப்புதலோடு தொடர முனையும் “எழுத்தாள”நாயகர்களை எண்ணி வருந்தத்தாம் முடியும்.முள்ளிவாய்க்காலுக்கும்,கொழும்பு மாநாட்டுக்கும் முடிச்சுப்போடுவதன் தொடரில் எதை நியாயப்படுத்த நீங்கள் புதிய மாதிரிகளை உருவாக்குகிறீர்கள்?
உலகம் உருண்டையென்பது உண்மைதாம் மயூரன்!
“எங்களுடைய நோக்கம் அரசியல் பேசுவதல்ல, இது ஈழத்தமிழ் இலக்கியம் குறித்து பேச வேண்டிய இடம். இவ்வாறு கொழும்பில் நடக்கும் சர்வதேச எழுத்தாளர் மாநாடின் பின்னணியில் பலர் சிலாகிக்கின்றனர்”.
நல்லது இலக்கியம் எங்கிருந்து பிறக்கின்றது?
சமூகம் இல்லாமல் இலக்கியமா?
சமூக அவலங்கள் குறித்து பேசாத, ஆராயாத, அக்கறைப்படாத இலக்கிய சந்திப்புகள் மகாநாடுகள் என்பன குறித்து சமூக அக்கறையுள்ளோர் எதிர்ப்பு குரல் கொடுப்பதை வரவேற்கவேண்டுமல்லவா?
முருகபூபதி கடைசியாக எப்போது முற்போக்கு அரசியல் பேசினார்? எஸ்.பொன்னுத்துரைக்கும் இருந்து வந்துள்ள “இலக்கிய” நெருக்கம் நீங்கள் அறியாததா?…… ஆமாம்! இவர்களை முற்போக்கு எழுத்தாளர்கள் என்று பல பத்திரிகைகள் ஊடகங்கள் எழுதியிருந்தன. அதிலும் சரிநிகர் இவர்களை முற்போக்கு எழுத்தாளர்கள் பட்டியலில் வைத்து கதையளந்தது. அட இதுவா எல்லோரும் பேசும் முற்போக்குதனம்?
மகிந்தவை முற்போக்கு சிந்தனை கொண்ட பிடல் காஸ்ட்ரோவே வாழ்த்தியிருக்க உலக நாடுகள் எல்லாம் பாராட்ட இந்த எழுத்தாளர்கள் மாத்திரம் எதிர்க்க வேண்டுமா என்ன? இனப் படுகொலையை செய்வோரின் ………. யை கழுவுதல் அல்லவா முற்போக்குதனம்?
மிகக் குடூரமாக தொடர்ந்து கொண்டிருக்கும் இனப் படுகொலையை இனவழிப்பை இந்த மகாநாடுகள் மூடிமறைக்கும், என்பது எல்லோருக்கும் விளங்கும் ஆனால் எமக்கு தமிழினம் இல்லாமலேயே நாம் தமிழில் இலக்கியம் படைக்க முடியும் என்று நாம் முற்போக்காக சிந்தித்து மகாநாடு கூடும் போது இதனை நிறுத்துதல் பிற்போக்குதனம் ஆகாதா?
மயூரன் அவர்களே, இன்று எழுத்தாளர் மாநாடு தொடர்பாக இங்கு எழுந்து கொண்டிருக்கும் எதிர்வினைகள் நமது சமுதாயம் அனைத்து வளமும் பெற்று வாழும் நிலையில் மட்டுமே இலங்கையில் ஓர் எழுத்தாளர் மாநாடு நடைபெற வேண்டும் என்ற தர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல. மாற்றாக அவ்வாறான மாநாடு நடைபெறும் காலச்சூழலும், அதன் மூலம் இலங்கை அரசானது இலங்கையில் வாழும் தேசியச்சிறுபான்மை இனங்களுக்கான குறைந்தபட்ச அரசியல் தீர்வை முன்வைத்தல் என்ற அரசியலில் இருந்து தப்பிப்பிழைப்பது குறித்த சாத்தியங்களை ஆய்வதும் அதற்கான அழுத்தங்களையும், கோரிக்கைகளையும் இலங்கை அரசின் மீது முன்வைப்பதற்கான வாய்ப்புக்ளையும் உள்ளடக்கிய செயற்பாடு என்ற தளங்களிலேயும் அணுகப்பட முடியும்.
அடக்குமுறை வேரோடு பிடுங்கி எறியப்படும் வரைக்கும் வேறு தேசத்தவர்கள் (இந்தியத்தமிழர் உட்பட) மட்டுமே ஆய்வரங்குகளை, மொழி சார்ந்த, இலக்கியம் சார்ந்த, திரைப்படம், கணினி சார்ந்த ஆய்வுகளைச் செய்யப் பாத்தியதை உடையவர்கள் என்றா நான் புரிந்துகொள்வது என்ற வாதம் ஏற்புடையதன்று. ஏனெனில் யுத்தம் முனைப்புப் பெற்றிருந்த கடந்த 30 ஆண்டு கால வரலாற்றிலே பல்வேறு அமைப்புக்கள், குழுக்கள் சார்ந்த, தமிழ் மொழியொடு, தமிழ் இலக்கியத்தோடு தொடர்புடைய பல்வேறு துறைகள் சார்ந்த தமிழ் மாநாடுகள் பெரிய, சிறிய அளவுகளிலே தமிழ் பேசும் ஈழத்தவர்கள் வாழ்ந்து வரும் நாடுகளிலே நடைபெற்று வந்துள்ளன என்ற உண்மையையும் நாம் இங்கு விட்டுச் செல்ல முடியாது.
அடுத்து சமூகப் பிரக்ஞையுடைய ஈழத்து எழுத்தாளன் உலகின் எந்தத் திக்கில் வாழ்ந்தாலும் இலங்கை அரசின் அரச பாசிசத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எதிர்ப்பதற்கான கட்டுமானங்களைத்தான் தேடியலைந்து கொண்டிருப்பான். அதுவல்லாத எந்தவொரு வேலைத்திட்டத்தைக் கொண்டிருக்கும் எழுத்தாளனோ, நிகழ்வோ அடக்குமுறையாளர்களை வலுப்படுத்தும் நிகழ்ச்சி நிரலுக்கு உதவுவதாகவே அமைந்து விடுவது வழக்கம். தமிழ் எழுத்தாளர்களே! இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த விடிவு கிடைக்கும்வரை வேறு எந்தவொரு வேலையிலும் ஈடுபடாதீர்கள் என்று இங்கு யாரும் கூப்பாடு போடவுமில்லை, கோசம் எழுப்பவும் இல்லை. அரச அடக்குமுறைக்கு எதிரான முழுமூச்சான எதிர்ப்பு நடவடிக்கைகளிலேயே காலம் கழிப்பதில் உங்களுக்குச் சிரமம் இருப்பின் குறைந்த பட்சம் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருப்பதன் மூலம் இலங்கை அரசுக்கு மறைமுக உதவியை ஏற்படுத்துகின்ற திட்டங்களிலிருந்து தப்பிப் பிழைக்க முடியும் என்றுதான் கூறுகிறோம்.
முள்ளிவாய்க்கால் காலத்தில் இராணுவத்திடம் அடைக்கலம் கோரி இராணுவக்கட்டுப்பாட்டுப்பிரதேசங்களுக்கு தப்பி ஓடிய சனங்கள் பற்றிய உரையாடல் ஒன்றில், யாரோ சொன்னார்களாம், ‘அந்தச்சனங்கள் துரோகிக்கூட்டங்கள். மண்ணுக்காகப் போராடி வீரமரணம் அடைந்திருக்க வேண்டாமா” என்று மேற்கோள் காட்டுகிறீர்கள். அப்படியாhயின் நீங்கள் குண்டு மழையிலிருந்து உங்களைத் தற்காத்துக் கொள்வதற்காகத் தற்போது இலங்கை அரசிடம் தஞசம் கேட்டிருப்பதாகக் நாங்கள் பொருள் கொள்வதா?
மற்றும் மாநாடுகள் என்பது பெரும் பொருட்செலவில் நடைபெறும் திருவிழாக்களாகவே நடைமுறையில் பெரும்பாலும் அமைந்து விடுகிறது. அதற்கான பணச்செலவில் தமிழ் இலக்கியத்திற்கும், தமிழ் மொழிக்கும் எத்தனையோ மடங்கு சேவை செய்வதற்கான வாய்ப்புக்கள் எம்முன்னே விரிந்து கிடக்கின்றன.
மயூரன்,
சர்வதேச எழுத்தாளர் மாநாடு என்று அவர்கள் பெயர் சூட்டிக்கொண்டதை நீங்கள் கோணர்ஸ்வரர் கோவில் நந்தி பூசை என்ற அளவிற்குத் தரம் தாழ்த்தி முதலில் சர்வதேச ஜாம்பவான்களைத் கொச்சைப்படுத்தி உள்ளீர்கள்.
சரி விடுங்கள், நந்தி பூசை நடத்த அவர்கள் என்ன சாதா மனிதர்களா? சர்வதேச் எழுத்தாளர்கள் அல்லவா? சர்வதேச எழுத்தாளர் குழாம் ஒன்று ஊடக சுந்ததிரம் முற்றாக மறுக்கப்படும் மண்ணில் ஜாம் ஜாம் என்று பூசை நடத்துகிறார்கள். இதன் அரசியல் பின்விளைவுகள் என்ன என்பதைப் பற்றிப் முச்சுக்கூட்ட விட மறுக்கிறீர்கள்.
சரி, அரசியல் தான் பேசுவோம் என்று தேசிய கலை இலக்கியப் பேரவை போன்ற அமைப்புக்கள் மக்களைப் பற்றி பாசிச எல்லைக்குள் நின்று பேசும் நிலையில் நாங்கள் அரசியலே பேச மாட்டோம் என்று அடம்பிடிப்பதை ம்ம்ம்.. எப்படி நியாயப்படுத்துகிறீர்கள்?
இவர்கள் எங்காவது ஒரு மூலையில் குந்தியிருந்து கூட்டம் போட்டுவிட்டு வந்திருக்கலாம். சர்வதேசம் என்று உல்டா கொடுத்து அதற்கு வேறு அரசியலே வேண்டாம் என்று பாசிச அரசில் நடக்கும் நாட்டில், இப்போதும் மக்கள் வாழ்வுக்காகப் போராடும் நாட்டில் இலக்கியம் வளர்க்கிறார்களாம்.
சரி என்ன தான் அங்கு பேசுவார்கள்? நந்திக்கடல் அலைகளின் அழகையா? அங்கே இரத்தமும் சதையுமாக அழிக்கப்பட்ட மக்களை மறந்துவிட்டு அதன் அழகைப் பேசுவார்களோ? அரசியல் பேசக் கூடாது பாருங்கள்.
சரி அவர்கள் என்னதான் பேசலாம் என்று நீங்களாவது சொல்லுங்கள்.! தசாவதாரம், எந்திரன், கிலி, பில்லி இவைகளில் ஏதாவது பற்றி?
இறுதியாக கொல்லப்பட்ட மக்களுக்குக் கூட்டம் தொடங்கு முன் ஒரு நிமிட அஞ்சலி? ம்ம்ம் ஹ்ம்.. அரசியல் பேசக் கூடாது பாருங்கள்.
நீங்கள் என்ன செய்யலாம் என்று சிறீ ரங்கனைக் கேட்கிறீர்கள், குறைந்த பட்சம் அரசியலற்ற இலக்கியம் என்பது பிற்போக்குத் தனம் என்பதையாவது அம்பலப்படுத்தலாமே? அங்கிருந்தே உங்களது அரசியலை ஆரம்பிக்கலாமே?
ஏதோ நான் குசும்புத் தனமாகப் கதைப்பதாக எண்ணவேண்டாம்! கொம்யூட்டர் திரையில் அடித்துச் சொல்கிறேன். உண்மையாகவே பேசுகிறேன்.
ஈழத்து மக்களின் வாழ்வியல் அவலம் குறித்து “பேசாத” இலக்கியம் ஒன்றை பேசுவற்கே நாங்கள் கூடுகின்றோம் நீங்கள் ஏன்தான் வில்லங்கப் படுகிறீர்கள். எங்களை எல்லாம் முற்போக்கு எழுத்தாளர்களாக பார்த்தது எங்களின் தவறு இல்லையே! நாங்கள் என்ன அருந்ததி ராயா? காஸ்மீர் மக்கள் பற்றி பேசுவதற்கு!. எத்தனையோ சிங்கள, முஸ்லிம் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் நாட்டை விட்டு தப்பிச்சென்று தமிழ் மக்களிற்கு எதிரான இன அழிப்பை, அடக்குமுறைகளை அம்பலப் படுத்திவருகிறார்கள், நாங்கள் சுத்த இலக்கியவாதிகள் விவேகமானவர்கள் அவர்களை மாதிரி மடையர்களா? என்ன? நாம் சர்வதேச அளவில் புகழ் பெற்ற சர்வதேச இலக்கிய வாதிகள், எங்களை இகழ் வதற்கும் புகழ் வதற்கும் எங்களது செயல்பாடுகளை விமர்சிபதற்கும் தகுதியானவர்களே அதனைச் செய்யவேண்டும் எதற்கும் லாயக்கற்ற ஈழத்தமிழர்களுக்கு என்ன தகுதி இருக்கின்றது?
தமிழர் இலக்கியத்திற்குப் புலம்பெயர்ந்தவர்கல்தான் தலமைக்காரர் என்று முன்னர் எஸ்போ அவர்கள் ஆருடம் கூறியதாக ஞாபகம். அவர் தன்னை நினைத்துக் கூறிய ஆருடம் இப்போ அவர் ஆருயிர்த் தோழர் முருகபூபதியின் உருவில் பலித்துவிட்டதோ?????
அரசியல் இல்லாமல் இலக்கியமா? இலக்கியம் இல்லாமல் சமூகமா? என்றெல்லாம் உஸ்ணமாகவே மாறிமாறிக் கேள்விகள் பறக்கிற இந்தக் கணத்தில் உண்மையில் எழுத்தாளப் பிரம்மாக்கள் எழுதுகோல் சகிதம் வானெழும்பிக் கண்டங்கடந்து கடல் கடந்து கொழும்பில்க்குதிப்பதற்கு தயார்ப் பட்டுவிட்டார்கள் என்று அவர்கள் பதிவுகள் இனம் காட்டுகின்றன. மயூரன் உட்படப் பலர் வழிமொழிகிறார்கள் வாழ்த்துக்கள்.
ஆனாலும் ஒருவிடயம் இதற்க்குப் பொறுப்பானவர் என்று கருதப்படுகிற முருகபூபதியவர்கள் பகிரங்கமாகவே சொல்லுகிறார் நான் அரசுடனோ, அல்லது ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தன்னுடனோ கூட இந்த மாநாடு பற்றி மூச்சும் விடவில்லை என. சரி கொழும்பில் மாநாடு நடத்தவே வேண்டுமென மூச்சுக்கு முன்னூறு தடவை முணுமுணுக்கிற மயூரன் கேட்கிறார் ஒரு தமிழ் மாநாடு வைக்கவேண்டுமென்றால் என்ன செய்யவெண்டும் என்று ஒன்றுமே அறியாத அப்பாவியாக….. . அவ்வாறாயின் இம் மாநாடு தொடர்பாக எவரும் பொறுப்பேற்கவும் நிர்வகிக்கவும் வக்கில்லாதிருக்கிறீர்களா????? கொழும்பிற்கு உங்களின் அழைப்பை ஏற்று வருகிற புலன் பெயர்ந்த எங்களின் எழுத்தாளச் சிங்கங்களை நான்காம் மாடியிலிருந்து காப்பாற்றப் போவது யார்?? கேபியா?/ டக்ளஸா?? கருணாவா?? சம்பந்தரா?/மகிந்தவா?? நாற்பதினாயிரத்தை அழித்துவிட்டு மௌனமாயிருக்கிறவர்களுக்கு இந்த நானூறையும் அழித்துவிட்டுக் கணக்குப் போட யாரும் சொல்லிக் கொடுக்கத் தேவையில்லையே?/? அப்படியென்றால் புலிக்கோ, ஈழத்திற்காகவோ, அல்லது அரசுக்கு எதிராகப் பேசிய,எழுதியவர்கள் இந்த எழுத்தாளர் மாநாட்டில் எப்படி பங்கேற்பர்?? வரமுடியாதே???? அப்படி அவர்கள் வரும் பட்சத்தில் நடைபெறப் போகிற இன்னல்களுக்கு பொறுப்பேற்கப் போவது யார்???முருகபூபதி தானில்லை என்கின்றார் சிவத்தம்பியவர்கள் தனக்குத் தொடர்பில்லையென்கின்றார். மயூரன் அப்பாவியாகிக் கை விரிக்கின்றார்.எதைச் சொல்லப் போகின்றீர்கள்? என்ன நடக்கிறதங்கே??ஒரு சிலரின் மாலைமரியாதைக்காக இலக்கியமெனக் கூப்பாடுபோட்டுக் கொலைக்குக் கொடுக்கப் போகின்றீர்களா??????/,
இந்த மாநாட்டை வைத்து இணையச்சூழலில் இலகுவாக Team பிரித்து முத்திரை குத்தி விடுகிறார்கள்.
மூன்று அணிகளைப் பிரிக்கிறார்கள்.
1. மாநாட்டை எதிர்க்கும் அணி
2. மாநாட்டை ஆதரிக்கும் அணி
3. கருத்துத்தெரிவிக்கவோ, மாநாட்டில் கலந்துகொள்ளவோ அக்கறைப்படாத, விரும்பாத அணி.
இன்னும் நம்முடைய ஆட்கள் தமது வசதிக்காக இவ்வணிகளை இரண்டாகப் பிரிக்கிறார்கள். (எப்போதும் இரண்டாகப்பிரித்து நிற்பாட்டிவிடுவது சில அரசியற்போக்குகளில் வசதியானது).
1. மாநாட்டை ஆதரிப்போர். (மகிந்தவின் கைக்கூலிகள்)
2. மாநாட்டை எதிர்ப்போர். (விட்டுக்கொடுக்காக தன்மான உணர்வுள்ள போராளிகள்)
இந்த அணிப்பிரிப்பு எனக்கு அளவற்ற கோபத்தை வரவழைக்கிறது.
ஏனென்றால் நான் இந்த மூன்று அணிகளுக்குள்ளும் அடங்கப்போவதில்லை. இங்கே என்னுடைய பிரச்சினையே வேறு.
இந்த மாநாட்டை நடத்துவோரோடோ, மாநாட்டோடோ எனக்கு சம்பந்தமெதுவுமில்லை. மாநாட்டுக்காரர்கள் பலரோடு எனக்கும் நான் சார்ந்த அமைப்புக்களுக்கும் முரண்பாடுகள் பலவுண்டு.
நான் மாநாட்டை எதிர்த்து அரசியல் பண்ணுவோரின் அரசியல் மீதான ஐயங்களோடும் உடன்பாடின்மைகளோடும் கோபத்தோடும்தான் இதற்குள் வந்துசேர்ந்தேன்.
என்னுடைய பிரச்சினை மாநாடோ, அதை ஆதரிப்பதோ அல்ல, மாறாக மாநாட்டை எதிர்க்கும் முறையும் அதன் அரசியலும் தீங்கானது என்பதுதான்.
மாநாட்டினை எதிர்ப்போருக்கு பதில்சொல்லுபவர்கள், எதிர்ப்போரை விமர்சிப்பவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்பதைக் காது கொடுத்துக் கேட்பதற்கும் முற்சாய்வுகளின்றிப் படிப்பதற்கும் இங்கே எவரும் தயாராயில்லை. எந்தப்புள்ளியின் நின்றுகொண்டு பதில்கள் சொல்லப்படுகின்றன என்பதை ஆராய்வாரில்லை.
இங்குள்ள பின்னூட்டங்கள் பல எடுத்த எடுப்பில் முதல் வேலையாக ஒருவருக்கு முத்திரைகுத்தி இரண்டில் ஒரு அணிக்குள் தள்ளி அதன்பிறகு கதைக்க வருபவையாகவே உள்ளன.
சோபாசக்தியும் ராகவனும் சொல்வதைத்தானே நீயும் சொல்லிறாய், நீ அவர்களைப்போல் டக்ளசின் ஆளா என்ற தொனியில் என்னுடன் பேச வருகிறார்கள். ஆனால் அவர்கள் இதையே தமக்குத் திருப்பிப்போட்டுப் பார்ப்பதில்லை. எஸ் பொ, டி. அருள் எழிலன் போன்ற மக்கள் விரோதப்போக்குடைய அரசியல் கருத்துடையவர்கள் சொல்வதைத்தானே நாங்களும் சொல்கிறோம், நாம் அவர்களுடைய ஆட்களா என்று நினைத்துப்பார்ப்பதில்லை.
இரண்டுவகை அணிப்பிரிப்போடும் எனக்கு உடன்பாடில்லை.
“ஈழத்தமிழர் அவலம்” “மகிந்தவின் போர்க்குற்றம்” எனும் கோசங்களைப்போட்டால் போதும் எவரையும் எம்பின்னால் அணிதிரட்டிவிடலாம் என்கிற போக்கே என்னுடைய கோபத்துக்கு மிக அடிப்படையான காரணம். டி. ராஜேந்தர் அடிக்கடி “நான் தமிழண்டா” என்று சொல்லும் அதே அரசியல் இது.
இந்தக்கோசங்களுக்குப்பின்னல் எந்தக்கேள்வியும் இல்லாமல் ஆட்கள் அணிதிரள்கிறார்கள். இந்தக்கோசங்களைப்போட்டுக்கொண்டு சனத்தை எந்தத்திசையிலும் அழைத்துக்கொண்டு போகலாம் என்ற நிலை உருவாகியிருக்கிறது.
இந்தக்கோசங்களைப்போட்டுக்கொண்டு, வன்னியில் போரினை இந்தியா நடத்திக்கொண்டிருந்தபோது ஒட்டுமொத்த தமிழக மக்களையே “இந்தியாவே இலங்கை விடயத்தில் தலையிடு” என்று மந்தைகள் போக கேட்டுக்கேள்வியில்லாமல் கத்தவைக்க முடிந்தது இதே அரசியலால்தான்.
இன்று நாடுகடந்த தமிழீழமென்றும் வட்டுக்கோட்டைத்தீர்மானம் என்றும் அணிதிரட்டுவதும் இதே அரசியலாற்றான்.
எஸ் பொ தன்னுடைய சொந்தப்பிரச்சினைகளை சொறிந்துகொள்ள இந்த மாநாட்டுக்கதையை கிளப்பி அதற்கொரு “ஈழத்தமிழர் அவலம்” கோசத்தை பூசிக்கொண்டதும் இதே அரசியலைச்செய்யக்கிடைத்த சூழல் தயாராயிருப்பதாற்றான்.
அவர் கிளப்பிய 75 லட்சம் கதையை எவரும் கேள்விகளில்லாமல் நம்ப முனைந்தது எந்த அரசியலால்? (இப்போது அந்த லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்காக அவர் நீதிமன்றத்தை எதிர்கொள்ள வேண்டியதாகியிருக்கிறது)
அந்த அரசியல் மீதானதே என்னுடைய எதிர்வினைகள் அனைத்தும். இதில் மாநாடெல்லாம் எனக்கொரு பொருட்டே இல்லை.
இந்த மாநாட்டுக்கும் மகிந்தவுக்கும் தொடர்பிருப்பதாக எஸ் பொ, பா செய்யப்பிரகாசம், தாமரை முதல் இன்று பின்னூட்டமிடுபவர்கள் வரை சொல்லிக்கொண்டிருக்கிறார்களே, இதுவரை எவராவது அதற்கு ஆதாரமொன்றினை முன்வைத்தார்களா?
ஆதாரமே இல்லாத கதை ஒன்றின் பின்னால் ஆட்களைத்திரட்ட முடிகிறதென்றால் அது ஆரோக்கியமான அரசியலா?
ஆதாரம் கேட்டு எதிர்வினையாற்றத்தொடங்கியவுடன், மகிந்த நடத்துவதாக நாம் சொல்லவில்லை, இந்த ,மாநாடு மகிந்தவுக்குச் சாதகமானது என்றுதான் சொல்லவந்தோம் என்று கரணமடித்தார்கள்.
இப்படிக் கரணமடித்த update இன்னும் எதிர்ப்பாளர் பலருக்குப் போய்ச்ச்சேரவில்லை. இன்னும் மகிந்த நடத்தும் மாநாடு, மகிந்தவின் கைக்கூலிகளின் கூட்டம் என்று கும்மியடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இதில் சீன உளவாளிகள் கணிசமான அளவு பங்கெடுப்பதாக அன்றொருவர் என்னிடம் வாதிட்டுக்கொண்டிருந்தார். 🙂
(எஸ் பொ வும் “சீனசார்பு கம்யூனிஸ்டுக்கள்” என்ற வார்த்தையையே மீண்டும் மீண்டும் அழுத்தி உச்சரித்தார்).
எஸ் போ எதுக்கோ கிளப்பிய பூதத்தை எவரெவரோ; ஏதேதோ நோக்கங்களுக்காக; எங்கெங்கெல்லாமோ ஏவிவிட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதாகத்தான் இந்த ஒட்டுமொத்த விவாதத்தையே நான் பார்க்கிறேன்.
ஆகா என்ன மாதிரி தரம் பிரித்து முதலாம் வகுப்புப் பாடசாலைப்பிள்ளைக்கு விளங்குமாற்போல் விளக்கியுள்ளீர்கள். ஆனால் எனக்கு ஒன்றுமே புரியுதில்லை. ஒன்று மட்டும் சொல்லுங்கள், நீங்கள் மகாநாட்டுக்கு போகிறீர்களா?
இந்ந மாநாட்டின் அடிப்படை குறித்த கேள்விகள் உண்டு. ஆனால் கூட்டத்தை இங்கே நடத்தாதே அங்கு நடத்து என்பவை முட்டாள் தனமானமை. 1974 தமிழாராய்ச்சி மாநாட்டில் கூட்டணியும் சுதந்திரக் கட்சியும் இழுபறிப்பட்டு அரசியல் செய்த பயம் இன்னமும் உண்டு.
அரசியல் இல்லாத ஒன்றும் இல்லை. இங்கு அரசியல் பேசாதே என்பதும் ஒரு அரசியல்
இன்று இலங்கையில் தமிழனம் ஒரு கோமா நிலயில் உள்ளது. ஈழதமிழ் எழுத்தாளர் கூட்டம் நட்த்துவதால் ஒரு சிறு அசைவு ஏற்பட்டாலும் அது நன்மைக்கே. . இல்லை தனி ஈழம் கிடைக்கும்வரை தமிழ் குறித்து எதுவும் செய்யக் கூடாது அப்படி செய்பவன் மகிந்தவின் அடிவருடி என்ற வாதம் தமிழனை மேலும் மயக் நிலைக்கு தள்ளி விடும்
மயூரனின் குறுக்கீடு சில முக்கியமான விடயங்களை கருத்திற் கொள்ளத் தூண்டுகிறது.
1. சர்வதேச(?) தமிழ் இலக்கிய மாநாடு நடக்கலாமா?
(இல்லை என்றால் விவாதத்தத் தொடர வேண்டியதில்லை)
2. நடப்பதானால் எங்கு நடத்தப்பட வேண்டும்?
இலங்கையில் நடத்தக் கூடாது என்பதற்கான வாதங்கள் தமிழர் வாழும் பிற நாடுகட்கும் பொருந்தலாம்.
3.நடத்துவோரின் நோக்கங்கள் என்ன?
சொல்லப் பட்டநோக்கங்களில் தெளிவீனங்கள் உள்ளன. அவை தெளிவுபடுத்தப்பட வேண்டும்
4. பிறர் கூறும் நோக்கங்களில் உண்மையாயிருக்குமா?
அவை சாத்தியமாயிருக்கலாமே ஒழியப் போதிய சான்றுகள் இது வரை தரப் படவில்லை.
5. கூறப் பட்ட நோக்கங்களும் நிபந்தனைகளும் எங்கே இட்டுச் செல்லும்?
இவ்விடத்தில் கட்டுரை எழுப்பும் அச்சங்கள் மிகச் சாத்தியமானவை.
ஆனால் அவை ஏற்பாட்டாளர்களின் நோக்கங்களுக்குட்படும் என்றகி விடாது.
அவ்வாறு நிறுவ மேலும் வினாக்கள் எழுப்பப்பட வேண்டும்.
6. வஞ்சகநோக்கங்கள் இல்லாதவிடத்து, ஏற்பாட்டாளர்கள் விதிக்கும் “அரசியல் தவிர்ப்பு” நிபந்தனை முற்றாக அகற்றப்பட வேண்டும்.
அதே வேளை, சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், எந்த அரசுடனும் அரசியற் கட்சியுடனுமான அடையாளம் முற்றாக வே தவிர்க்கப் பட வேண்டும்.
இவற்றை ஏற்பாட்டாளர்கள் மறுத்தால், சுதந்திரமாகக் கருத்துக் கூற விரும்புவோர் பங்குபற்றாலாகாது என்றுநாம் பரிந்துரைக்கலாம்.
7. மாநாடு தவறான நோக்கங்கதுப் பயன்படாமல் தவிர்க்கும் முயற்சியை எடுத்து அது தோற்ற பின்னரே மாநாட்டுப் பகிஷ்கரிப்புப் பற்றி முடிவெடுக்கலாம்..
மேற்கூறிய கருத்துக்கள் பங்குபற்றும் எண்ணம் எந்த நிலையிலும் இல்லாமலேயே என்னாற் கூறப்படுகிறது.
என் அக்கறையின்மைக்குக் காரணங்கள் வேறு. நான் எஸ்.பொன்னுத்துரையின் (வழமையான) அவதூற்று மழைக்கு முன்னரே ஒதுங்கி நிற்க முடிவெடுத்து விட்டேன். ஆனால் ஏற்பாட்டாளர்களதும் பங்கு பற்றுவோரதும் நோக்கங்கள் பற்றி விசாரியாமல் முடிவுக்கு வர நான் இன்னமும் ஆயத்தமாக இல்லை.
நியாயமான சந்தேகங்களும் நிறுவப்பட வேண்டியவை என்பதே என் நிலைபாடு.
//மாநாடு தவறான நோக்கங்கதுப் பயன்படாமல் தவிர்க்கும் முயற்சியை எடுத்து அது தோற்ற பின்னரே மாநாட்டுப் பகிஷ்கரிப்புப் பற்றி முடிவெடுக்கலாம்..//
எவ்வளவு நிதானமான ஆலோசனை இது..
இதுவே இந்த மாநாட்டைக் கையாள்வது தோடர்பான மிகச்சரியான வழிமுறையாக இருக்கும்.
இது இந்த மாநாட்டுக்கு மட்டுமல்ல, இனி நாம் எதிர்கொள்ளப்போகும் இதுபோன்ற ஒவ்வொரு அரசியற் சவால்களுக்கும் பொருந்துவதாகும்.
மயூரன்
//மாநாடு தவறான நோக்கங்கதுப் பயன்படாமல் தவிர்க்கும் முயற்சியை எடுத்து அது தோற்ற பின்னரே மாநாட்டுப் பகிஷ்கரிப்புப் பற்றி முடிவெடுக்கலாம்..//
ஆக முள்ளி வாய்க்காலில் மக்களைப் புலிகள் தடுத்து வைத்ததையும்-அரசு புலிகளோடு சேர்த்து மக்களைக் கொல்வதையும் எதிர்ப்பதற்கு முதலில் “அதைச் செய்யாது தடுக்க” முயற்சி எடுத்துத்தாம்-பின்னர் தோற்றபோதுதாம் அவர்களது நடவடிக்கைகளை எதிர்த்தீர்களா மயூரன்?-நீங்கள் எங்கே எதிர்த்தீர்கள்-உங்களுக்கு ஒரு இராணுவம் இருக்கென்றல்லவா மார் தட்டியவர் நீங்கள் 🙂
//உங்களுக்கு ஒரு இராணுவம் இருக்கென்றல்லவா மார் தட்டியவர் நீங்கள் :-)//
குறிப்பாக எனது எந்தக் கருத்தைக்கூறுகிறீர்கள் என்று சொல்ல முடியாவிட்டாலும், என்னுடைய வலைப்பதிவுகள் சிலவற்றிலிருந்து நீங்கள் இதனை எடுத்தீர்கள் என்று ஊகிக்கிறேன்.
2004 இணையத்தில் எழுதத்தொடங்கிய காலம் முதல் இந்த மார்தட்டல் மட்டுமல்ல, இதைவிட அபாயகரமான கருத்துக்களை எல்லாம் நான் என் வலைபப்திவுகளில் வெளிப்படுத்தியுள்ளேன்.
“போரை நிறுத்தட்டாம்” என்றொரு பதிவில் புலிகள் யுத்தத்துக்குப் போவதே நல்ல திசை என்று வேறு சொல்லி இருந்தேன்.
இவற்றை நான்தான் எழுதினேன் என்று சொல்வதற்கு, ஏற்றுக்கொள்வதற்கு எனக்குத் தயக்கமோ வெட்கமோ கிடையாது.
என்னுடைய அக்கருத்துக்களை இன்றைக்கு நான் புதிதாகப் பெற்ற சிந்தனைகள், அறிவின்வழி மறுத்து நிற்கவும் எனக்குத் தயக்கங்கள் இல்லை.
நான் முதலாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தபோது பக்கத்தில் இருந்த மாணவியைக் கவர்வதற்காக உலகத்தின் விளிம்பில் வீழ்ந்துகொண்டிருக்கும் பெரிய அருவி பற்றிக் கதையளந்துள்ளேன். அப்படி அன்று சொன்னதற்கு இப்போ நான் என்ன செய்வது?
வலைபப்திவில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் நான் ஒரு கருத்தைத் தவறாகச்சொல்லி விட்டதற்காக இன்றைக்கும் அதைக் காவடிதூக்கி ஆடவா?
புதிது புதிதாய் அன்றாடம் நான் சேகரிக்கும் அனுபவங்களூடாக, அதை மூளையில் முறைவழியாக்குவதனூடாக நேற்று நான் சரியென நம்பினதை இன்றைக்கு பிழையென நம்புவேன்.
அது இங்கே எங்கே வந்ததென்றுதான் புரியவில்லை.
இங்கே நீங்கள் சொன்ன அக்ருத்துக்களின் சாரமாக நான் எடுத்துக்கொண்டது (பருமட்டாக),
“இலங்கை அரசுக்கு எதிரான அரசியல் உள்ளடக்கம் தவிர்ந்த ஏனைய உள்ளடக்கங்கள் கொண்ட அசைவியக்கங்கள் கிழக்கு-மேற்கு மூலதனங்களுக்குச் சார்பானதாகவே அமையும். எனவே அவை தடைசெய்யப்படவேண்டும்”
என்பதுதான்.
நான் எடுத்துக்கொண்ட சாராம்சம் தவறெனில் நீங்ன்கள் திருத்திவிடலாம்.
நீங்கள் பயோலொஜி படித்ததையும் எடுத்து விடுங்கள்.உப்புத் தின்றவன் தண்ணீர் குடிப்பது போல முருகபூபதிக்காக வாந்தி எடுப்பதை நிறூத்துங்கள்.பழஞ்சோறே இல்லாமல் மக்கள் தவிக்கும் போது உங்களூக்கு பால் பாயாசம் கேட் குதோ.
கருணாநிதி உற்றிய பால் பாயாசம் முதம்பிவேலிகளுக்கு உள்ளுமல்லவா பாய்ந்தது!
எக்ஸ் எக்ஸ் எக’ஸ் மீண்டும் மீண்டும் மாநாட்டு அணி பகிஸகரிப்பு என்ற விரடயங்களை விட்டு ஜனநாயகமற்ற பேச்சு சுதந்திரமற்ற இலங்கைச் சூழலில் இம் மாந பநதநாடு இவ் விடயங்களுக்காக என்ன குரல் கொடுக்கும் என்பதே கேள்வி. 2. இவ் விடயங்களுக்கு மாநாடு கூட்டியா குரல் கொடுக்க வேண்டுமா எனில் மயூரன் சார்ந்த அமைப்பு இது வரை இவற்றிறகாக என்ன செய்துள்ளது. கூட்டம் நடாத்துவது நோயலின் சுதந்திரம். 3. மாநாட்டின் முடிவில் இப்பொழுது உள்ள நிலைமையை விட மிக மோசமான கசூழ்நிலை உருவாக வாய்ப்புகள் உள்ளன. அதற்காகத்தான இந்த மாநாடா?
இலங்கையில் விபச்சாரத்தை தொழிலாக அங்கீகரிக்க குரல் கொடுக்கும் பலர் கூட இந்த இலக்கிய சந்திப்பிற்கு எதிராக அறிக்கை விட்டுள்ளனர் .
விபச்சாரத்தை தொழிலாக அங்கீகரிக்க போராடுவதர்ற்கு இவர்களுக்கு என்ன சுதந்திரம் உள்ளதோ, அதே சுதந்திரம் இலங்கையில் இலக்கிய சந்திப்பு நடாத்த மற்றவர்களுக்கு உரிமை உண்டா இல்லையா ?????
அதாவது விபச்சாரத்தை தொழிலாக அங்கீகரிக்க கேட்பது முதலாளித்துவ, குட்டி பூர்சுவா வர்க்கத்தில், விருப்பத்தில் ஒன்றன தாராள மயமான, கட்டுடைக்கப்பட்ட, தனிமனித சுதந்திரத்தின் அடிபடையிலான கோரிக்கையாகும். இதன் அடிபடையிலேயே இவர்கள் ஊடக சுதந்திரத்தையும் மற்றவர்களுக்கு வழங்க முன்வர வேண்டும். அதை விடுத்தது சந்தற்பத்திர்க்கும��� , தமது தேவைக்கும் வசதியாக கண்மூடி தனமாக அறிக்கை விடுவதும், தனி தவில் வாசிப்பதும் முதலாளித்துவ ஜனநாயக சிந்தனையை கூட அவமதிப்பதாகும்.
என்பது எனது கருத்து.
இறுதியாக நான் சொல்லவருவதென்னவென்���ால்: என்னை பொறுத்த மட்டில் கலை கலைக்காக என்ற அடிப்படையை கொண்ட சுய புகழ் பாட நினைக்கும், புலத்தில் வாழும் பல இலக்கிய வாதிகளை போல சிலரே இந்த இலக்கிய சந்திப்பை இலங்கையில் ஏற்பாடு செய்கின்றனர். இது கிடத்தட்ட முன்பு ஐரோப்பாவில் நடந்த இலக்கிய சந்திப்பு போன்றதாகும். இதை நீங்களும், புலிகளும், இந்திய பிழைப்பு வாதிகளும் தமது லாபத்தையும், சுய தேவையையும் நடுநிறுத்தி இந்த இலக்கிய சந்திப்பிற்கு எதிராக அறிக்கை விட்டுல்லிர்கள். பிரமுகதனமும், தமக்கு எல்லாம் தெரியும் என்ற யாழ்ப்பான மேலாதிக்க சாதித் தடிப்பும், அதனடிபடயிலான கருத்தியல் மேலாதிக்கப் பயங்கரவாத சிந்தனையும் தான் இதன் அடிப்படை உளவியல், மற்றும் சிந்தனைக்க் காரணிகளாகும்.
நன்றி
மயூரன் இம் மாநாடு தேவையா இல்லையா என்ற கேள்விக்குல்லேயே புகவில்லை.
அவர் செய்ததெல்லாம் சில குற்றாச்சாட்டுக்கள் பற்றிய விசாரணை.
மாநாட்டை எதிர்ப்போர் குற்றச்சாட்டுக்களாக முன்வைப்பவற்றை அவர் நியாயமான ஐயங்களாக் முன்வைக்கிறாரே ஒழிய மாநாடு எங்கே கொண்டுபோய் விடக் கூடும் என்பதில் அவர் ஏற்பாட்டாளர்களுடன் உடன்படுவதாகத் தெரியவில்லை.
எதிர்ப்பாளார் “முகாமில்” மயூரன் இல்லை. ஆனால் அவர், தெளிவாகவே சொல்லியுள்ளது போல “ஆதரவ்” “அக்கறையின்மை”: முகாங்களிலும் இல்லை.
அதை விளங்கிக் கொள்ளாமல் அவரது விசாராணைகளுக்கு நோக்கம் கற்பிப்பது நமது இயக்கங்களுடைய அரசியல் பாரம்பரியத்தையே நினைவூட்டுகிறது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் “நம்மடையாள்” “அவங்கடையாள்” “பச்சைத்தண்ணி, அனேகமாக இப்போது உயிரோடு இல்லாதவன்”.
விவாதங்களைக் கோஷ்டி பிரிக்காமால் முன்னெடுக்காத் தவறும் போது பழைய இயக்க அராஜகங்களுக்குள்ளேயே போய் விழுவோம்.
பொட்னி வாத்தியார் மாதிரி எதையாவது பேச வேண்டும் உங்களூக்கு?தமிழ் வாலிபன் ஆர்செனல் சால்வையை கழுத்தில் கட்டி தன் டீம் தோற்றது என அழுது கொண்டு திரியுறான் அவனுக்கு முருகபூபதியைத் தெரியாது.இந்த மயூரன் சங்ககாரா புகைப்படத்தை வைத்து சாமியாடுகிறார் அவருக்கு கொழும்பும்,காலிமுகத்திடலும் சொர்க்கமாக் இருக்கலாம்.பொழுது போவதற்கு இந்த மகாநாடு தேவைப்படலாம் ஆனால் நமக்கு முருகபூபதியின் முறூக்கு வியாபாரத்தில் நம்பிக்கை இல்லை.
ஊரில் இராச் சம்பந்தன் விற்கிற முறுக்கு உருசிப்பட்ட நாக்கல்லவா “பொன்” மொழிகிறது.
ட்துகிலுறீயப்பட்ட பெண்ணூம்,தூக்கிலிடப்பட்ட அப்பாவிகளது இறப்பும் எதுவும் செய்யவில்லையா உங்கள் இதயத்தை? ஏழை எழுத்தாளனைப் பார்க்க அவுஸ்ரேலியாவில் இருந்து ஒருவர் யாழ்ப்பாணத்திற்கு வெறூங் கையோடு போனார் என்றால் அவரை எதில் சேர்ப்பீர்கள்? உயிருள்ளது இலக்கியம் அது இன்னும்,இன்னும் உயிர்ப்புடன் இருப்பது மனித ஈரத்தில்தான் கேளீக்கையும்,ஆட்சியாளரின் அரசியல் சுயநலமும் கொண்ட மகாநாட்டில் அல்ல.தமிழ்மாறன்
துகிலுரிதல் கருணாநிதியின் சினிமாக் கதைகளில் அடிக்கடி வரும்.
முறுக்கு….ம். ..ம்… ம்…
கிடையவே கிடையாது.
சம்பந்தன் விற்கிற முறுக்குப் பற்றிச் சுவையறிவோர் சொல்வார்களா?
கோவைப் பாயாசம் பற்றிச் சுவையறிவோர் சொல்வார்களா?
மாநாடு பற்றிய குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்காமல் இம் மாநாடு பற்றிய உங்கள் பார்வையை தெளிவு படுத்தவும். மாநாடு அளிக்கும் பாதகமான செயல்பாடுகள் குறித்த கண்டன அறிக்கையில் உள்ள சில பெயர்களை முன் வைத்து அவர்களது செயற்பாடுகள் குறித்து விமர்சனங்கள் வைப்பதை தவிர்த்து மாநாடு பற்றிய சபா நாவலனின் கட்டுரைக்கு உங்களது கருத்தை முன்வைக்கவும்.
////மாநாடு தவறான நோக்கங்கதுப் பயன்படாமல் தவிர்க்கும் முயற்சியை எடுத்து அது தோற்ற பின்னரே மாநாட்டுப் பகிஷ்கரிப்புப் பற்றி முடிவெடுக்கலாம்..//
எவ்வளவு நிதானமான ஆலோசனை இது..
இதுவே இந்த மாநாட்டைக் கையாள்வது தோடர்பான மிகச்சரியான வழிமுறையாக இருக்கும். //
மு.மயூரன் முள்ளிவாய்க்கால் வரைக்கும் நீங்கள் பார்த்த அதே ரயலை தான் இப்பவும் பார்க்க வெளிகிடுரீங்களோ?
ம்…………. சரியான குசும்பையா நீங்கள்.
//கண்ணிழந்த மனிதா் முன்னே ஓவியம் வைத்தார் இரு காதில்லாத மனிதா் முன்னே பாடல் இசைத்தார்//.
எல்லோரும் முட்டி மோதிக்கொள்கிரார்கள் எதற்காகவென்று புரியவில்லை டக்ளஸ் என்கிறார்கள் பிரபாகரன் என்கிறார்கள் ஏன் இவா்களையெல்லாம் அழைக்கிறார்கள் என்று புரியவில்லை.
இலங்கை என்ற நாட்டில் ஒரு சிறுபான்மை இனம் தவிர்க்கமுடியாத காரணங்களால் (பொழுது போக்கிற்காவல்ல) உரிமை கேட்டு போராடியது ஆனால் பல ஆண்டுகளாக கொரூரமான முறையில் அடக்கப்பட்டது இறுதியாக முள்ளிவாய்க்காலில் அது நடந்தேறியது,அழிந்தவா்களில் நம்மில் பலருக்கு வேண்டப்படாத அல்லது ஏற்றுக்கொள்ளப்படாத புலித்தலைமைகளும் அடங்கும்.
புலிப்பயங்கரவாதிகள் அழிந்தார்கள் என்று உலகிற்கு பிரச்சாரம் செய்யும் வேளையில் தமிழனின் தனியுரிமை கேட்கும் ஆணவத்தையும் அடக்கிவிட்டோம் என்பதே சிங்கள ஏகாதிபத்தியத்தின் எக்காளம்.
யுத்தம் நடந்த இடத்தில் சா்வதேச விதிமுறைகள் கடுமையாக மீறப்பட்டுள்ளன என்பது வெளிச்சமாகிறது இதை புலியை ஆதரிப்பவா்களாக இருந்தாலும் இல்லையென்றாலும் அமெரிக்காவே இதைத்தான் செய்கின்றது என்று வாதிடுபவா்களானாலும் ஒரு கணம் சிந்திக்கவேண்டியது என்னவென்றால் அப்படியொரு விதிமுறைகளை மீறியும் தமிழ் இனத்திற்கு ஒரு தீா்வை வழங்கி அதன் பின்பு இப்படியான தமிழ் எழுத்தாழா்கள் சந்திப்பொன்றை சிங்கள அரசு மேற்கொண்டிருந்தால் இங்கு சிலரின் கருத்து நியாயமானதே ஆனால் தங்கள் தவறுகளை மூடிமறைப்பதற்கு மீண்டும் ஒரு தடவை சிங்கள பேரினவாதம் தமிழனையே பகடைக்காயாக பயன்படுத்துவதை எந்தவகையில் ஆதரிப்பது.
தமிழன் அடிமை என்றால் அவன் இலக்கியம் யார் தேவைக்கு?????.
karuthu:
இந்த மாநாடு என்ன செய்யும் என்ற எதிர்பார்ப்பு எதையுமே நான் எங்குமே கூறவில்லை.
அது “அரசியலுக்குத் தடை” விதிக்குமானானால் கட்டுரையாளர் அஞ்சும் விதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைத் தெளிவாகக் கூறினேன். மேலும், ஏற்பாட்டாளர்கள் சில விடயங்களைத் தெளிவுபடுத்தவும் உறுதிமொழி கூறவும் தேவை உண்டென்று கூறினேன்.
மயூரன் எந்த அமைப்புச் சார்பாகவும் பேசுவதாக எனக்குத் தெரியவில்லை.
நானும் எந்த அமைப்புச் சார்பாகவும் பேசவில்லை.
எனக்குத் தெரிய இதுவரை ஒரு இலக்கிய அமைப்பும் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தவுமில்லை.
நான் தொடர்போடுள்ள ஒரு அமைப்பு அணுகப் படவுமில்லை.
தயவு செய்து மனிதர் மேல் முத்திரை குத்தி அந்த அடிப்படையில் சொற்களுக்குப் பொருள் கூறுவத்தைத் தவிர்த்தால் பயனுடன் உரையாடலாம்.
சில பழைய பழக்கங்கள் விட்டொழிக்கத்தக்கன.
கார்த்திகேசு கலியுகவரதன்:
“விபச்சாரத்தை தொழிலாக அங்கீகரிக்க குரல் கொடுக்கும் பலர் ” என்பதன் முக்கியத்துவம் என்ன என்று எனக்கு விளங்கவில்லை. விபசரம் பற்றி உள்ள மனத்தடைகளின் நடுவே அதை கூறுவதன்நோக்கம் ஒரு தரப்பைக் கேவலப்படுத்துவதாக அமையலாம். அது தவிர்க்கத்தக்கது.
Kumar
“தங்கள் தவறுகளை மூடிமறைப்பதற்கு மீண்டும் ஒரு தடவை சிங்கள பேரினவாதம் தமிழனையே பகடைக்காயாக பயன்படுத்துவதை” ஏற்க இயலாது.
உண்மை.
ஆனால் அது தான்நடக்கிறது என்பதை நிறுவாமல் அந்த முடிவை எப்படி எடுப்பது?
karuthu:
நான் ஏன் சபா நாவலனுக்குப் பதில் சொல்ல வேண்டும்? அவர் என்னை ஒன்றும் கேட்கவில்லையே. அவரது அச்சங்களை நான் மறுக்கவில்லை. அவை குற்றச்சாட்டுக்களாவதன் முன் விடையங்களை முறையாக உறுதிப்படுத்துமாறே கோரினேன்.
நமது ஊகங்களப் பிறர் மீது திணிப்பது மிக மிக ஆபத்தானது.
உந்த எழுத்தாளர் மாகாநாடு குறித்து நானும் சில கருத்துககளை சொல்லலாம் என்று நினைக்கிறன் நன்பர்களே!
1-முதலாவது விடயம் சிறிதாக விளம்பரமற்று அல்லது கவனிப்பாரற்று கிடந்த இந்த சர்வதேச எழுத்ததாளர் மகாநாடு எஸ்.பொ எதிர்க்கப்போய் அந்த எதிர்ப்போடு இன்னும் சிலரும் கைகோர்க்க சர்ச்சைக்கும் கவனிப்புக்கும் உாியதாக மாறியது. உண்மையில் இது ஆரம்பத்தில் சர்வதேச எழுத்ததாளர் மகாநாடு என்று குறிப்பிடப்பட்டாலும் அதில் அப்படியெதுவும் இருக்கவில்லை தமிழகத்திலும் புலம்பெயர்ந்தும் இருக்கும் எத்தாளர்கள் எதிர்த்ததன் பின்னனியில் இது இப்போது சர்வதேச மகாநாடாக பேசப்படுகிறது.
2 – இந்த மகாநாட்டை எதிர்ப்போாின் அரசியல் பற்றியது – இது மனிதஉாிமைசாா அக்கறையுடன் தொடர்புடைய அரசியல். எழுத்தாளர்கள் என்போர் ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுப்பவர்பவர்களாகவும் அநீதிக்கு துனை போகாதவர்களாகவும் இருக்க வேண்டும் என்ற அக்கறை நியாயமானது. அவ்வாறு ஒருவர் அறிக்கை விடுவதற்கும் அதில் உடன்பாடுள்ளவர்கள் இணைந்து கொள்வதும் அவர்களது உாிமைசாாந்தது. அந்தவகையில் இந்த நிகழ்வை எதிர்ப்பதில் ஒரு பிரச்சனையுமில்லை. மனித உாிமைகள் மீது காிசனையும் ஈடுபாடும் இருக்கும் புனைவு மற்றும் புனைவுசாரா எழுத்தாளர்கள் இவ்வாறு எதிர்ப்பில் இணைந்து கொண்டுள்ளனர்.
3- ஆதாிக்கும் எழுத்தாளர்கள் என்போர் பற்றியது. இவ்வாறானதொரு நிகழ்வை ஆதாிப்பதற்கும் அதில் பங்கு கொள்வதற்கும் அவர்களுக்கு உாிமையுண்டு. அவர்களது நிலைப்பாட்டை ஒருவர் விமர்ிக்கலாம். இநத மகாநாட்டு ஏற்பாட்டில் இலங்கையில் முன்னிற்கும் நபர்கள் சிலரை நான் நன்கு அறிவன். அவர்களுக்கு எந்தக் காலத்திலுமே எந்தவொரு அரசியலும் இருந்ததில்லை. பின்னர் இப்போது மட்டும் எப்படி அவர்களிடம் அரசியல் உள்ளடக்கத்தை எதிர்பார்ப்பது. இதில் வலைப்பதிவு அனுபவத்தைத் தவிர எந்தவொரு அரசியல் பின்புலமும் இல்லாத இருவருக்கு அரசியலி்ன் அாிச்சுவடியே தொியாத தி.ஞானசேகரன் நேர்காணல் ஒன்றை கொடுத்திருக்கிறார். அதில் முரண்பட ஒன்றுமில்லை. இதே ஞானசேகரன் புலிகள் பலமாக இருந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் நடந்த மானுடத்தின் தமிழ்க் கூடலில் பங்கு கொண்டு பேசியிருக்கிறார். ஒரு நாள் நிகழ்வுக்கு தலைமையும் தாங்கியிருக்கிறார். இன்னொருவர் அந்தனிஜீவா இவர் கடந்த காலத்தில் பங்கு கொள்ளாத அரசியல் அமைப்புக்களே கிடையாது ஏனெனில் இவருக்கு என்று எந்தவாரு அரசியலும் கிடையாது. கிளிநொச்சிக்குச் சென்றால் புதுவையின் வீட்டில் நிற்பார் கொழும்பில் புலிகளுக்கு எதிரானவர்களோடு மறுநாளே மேடையில் நிற்பார். தமிழ்நாடு சென்றால் முனைவர் அரசுவின் வீட்டில் தங்கி புலிகளுக்கும் தனக்கும் உள்ள உறவு பற்றி கதைவிட்டு நன்றாக சாப்பிடுவார். இப்போது கொழும்பில் நடக்கவிருக்கும் மகாநாட்டில் ஏற்பாட்டளாராக இருக்கிறார். இதனை துனிவிருந்தால் மறுக்கச் சொல்லுங்கள் பார்ப்போம். இவர்கள் புலிகளுடன் நின்ற புகைப்படங்கள் என்னிடமுண்டு. எனவே இவ்வாறானவர்களிடம் போய் மனித உாிமை அரசியல் என்றும் போக் குற்றம் என்றெல்லாம் உளறினால் அவர்களுக்கு விளங்குமா? இந்த மகாநாட்டை எதிர்ப்பவர்கள் தங்கள் அறிக்கையில் சில உலகின் முன்னி எழுத்தாளர்களது ஒடுக்கு முறைக்கு எதிரான பங்களிப்புக்களை பட்டியல் இட்டிருந்தனர். இதில் பொிய வேடிக்கை என்னவென்றால் அப்படியலெ்லாம் ஆட்கள் இருக்கிறார்கள் என்று இவர்களுக்கு முதலில் தொிய வேண்டுமே பிறகல்லவா அவர்களுக்கு இதெல்லாம் விளங்கும்.
4- மற்றையது எதிர்ப்திலும் இல்லை ஆதாப்பதிலும் இல்லை என்று கொல்லிக் கொண்டு மகாநாட்டுக்காக ஆதாித்து பேசுபவர்கள் பற்றியது. இதில் முதன்மையானவர் சோபா சக்தி இப்போது புதிதாக ஒரு சில வலைப்பதிவாளர்களும் அதில் இணைந்த கொண்டுள்ளனர். அது எப்படி அப்பு ஆதாிா்ாமல் மகாநாட்டுக்கு ஆதரவாக பேசுவது? ஏற்பாட்டாளர்களை பேட்டி காணுவது. அ்படியாயின் எதிர்ப்பவர்களையும் அல்லவா தேடிச் சொன்று பேட்டி கண்டிருக்க வேண்டும். இத்தனைக்கும் இந்த மகாநாட்டை எதிர்த்து வெளியிடப்பட்ட அறிக்கையில் ஒழுங்கமைப்பாளர் பட்டியலில் தொியும் கி.பி அரவிந்தன் சோபாசக்தி இருக்கும் பாாிசில்தான் இருக்கிறார். முருக புபதியை பேட்டி கண்ட சோ அரவிந்தனையும் அணுகி ஏன் அவர்கள் எதிர்க்கிறார்கள் என்னும் நியாத்தையும் பதிவு செய்திருக்கலாமே. அப்படி நடந்திருந்தால் இவ்வாறானவர்கள் நடுநிலைமையானவர்கள் இவர்களுக்கும் ஏற்பாட்டாளர்களுக்கும் தொடர்பில்லை என்பதனை என்னைப் போன்ற பாமரர்கள் புாதிந்திருப்பார்கள் ஆனால் விடயத்தைப் பார்த்தால் சந்தேகம் அல்லவா வலுக்கிறது. இங்கு உண்மையில் இந்த மகாநாட்டை ஆதாிப்பது ஒரு பிரச்சனைக்குாிய விடயமல்ல ஆனால் இவ்வாறு ஏன் போலித்தனமான நாடங்களை போட வேண்டும். ? இந்த நிகழை்வை எதிர்ப்பது எவ்வாறு ஒருவரது அடிப்படை உாிமையோ அதே போன்று ஆதாிப்பதும் அடிப்படை உாிமையே ஏன் அதனை போலித்தனமாக செய்ய வேண்டும். ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டங்கள் எனவே ஒன்று விளங்குகிறது முருப புபதி தொடங்க எஸ்போ எதிர்க்க இறுதியில் தங்களை பிரபல்யப்படுத்திக் கொள்ளும் நோக்கில் மதிலில் நின்று கொண்டிருந்த புனைகளும் களமிறங்கிவிட்டன என்றுதானே நாங்கள் நம்ப வேண்டியிருக்கிறது.
5- இதில் பின்னூட்டமிட்ட சிலர் இந்த மகாநாட்டை மேற்கு மூலதனத்துடன் எல்லாம் தொடர்புபடுத்தி உறளியிருக்கின்றனர். அதற்கு சிலர் விளக்கமில்லாமல் வேறு பதில் அளித்திருக்கின்றனர். இதெல்லாம் உங்களது யாழ்ப்புலமைச் செருக்கின் விழைவுகள். நான் நினைக்கிறேன் நீங்கள் யாழ்ப்பாணத்தில் நல்லூர் இல்லாட்டி வட்டுக் கோட்டையாக இருக்க வேண்டும். அங்குதான் இப்படியானஅறிவாளிகள் எல்லாம் இருக்கீனம். முருக புபதி போட்ட மேடையில் நீங்கள் மூலதனத்தை படிப்பதற்கு வெளிச்சமா தேடுறிங்கள் ஆ!. இந்த மகாநாட்டை நிராகாாித்து விட்டு போவதற்கு ஒருவருக்கு உாிமையுண்டு ஆனால் அதற்காக விளங்காமல் உளறக் கூடாது. இது ஒரு சில எழு்தாளர்கள சேர்ந்து செய்ய முயலும் மகாநாடு அதில் பலர் அரசுடன் முரண்பாடுகளை வளர்க்க விரும்பாதவர்கள். அவ்வாறு முரண்பட வேண்டிய எந்தவொரு அரசியல் பின்னனியும் அவர்களுக்கு இல்லை. பிறகு மேற்கு மூலதனம் அது இதென்றால் அவர்களுக்கு என்ன விளங்கக் போகிறது. ஏதோ உலகெல்லாம் மார்க்சின் சீடர்கள் புரட்சிக்கு தயாராகிக் கொண்டிருப்பது போலவும் அதனை முருக புபவதி என்ற ஒருவரும் அவருடன் சேர்ந்திருக்கும் ஒருசிலருமா தடுத்து விடப் போகிறார்கள். தமிழில் கே்கிறவன் கேனயன் என்றால் எல்லாம் சொல்லலாம். அப்படித்தான் இருக்கிறது உங்கள் கதைகள்.
6- அடுத்து அரசு இந்த மகாநாட்டை பயன்படுத்த விழைகிறது என்பது பற்றிப் பார்ப்போம். முதலில் இதில் எழுதுபவர்கள் ஒன்றை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் – அரசு இப்படியான தமிழ் எழுத்ததாளர்களையோ அல்லது எதிர்க்கும் எழுத்ததாளர்களை கருத்தில் கொண்டோ தனது நடவடிக்கைகளை திட்டமிடவில்லை. சுருங்கச் சொல்வதெனறால் அது இதனைக் கருத்தில் கூட எடுக்கப் போவதில்லை. வேண்டுமானால் ஒரு அமைச்சர் வந்து வாழுத்துச் செய்தி சொல்லிவிட்டுப் போகலாம். சிலர் வெளிநாடுகளில் இருந்து கொண்டு கனவுலகில் இருப்பவர்களுக்கு ஒன்று விளங்குவதில்லை இந்த அரசு இப்படியான சிறிய நிகழ்வுகளை நம்பியல்ல சீவிப்பது. முப்பது வருட பிரபாவின் சாம்ராஜயத்தை முன்றே வருடங்களில் அழித்துவிட்டு உந்த போர்க் குற்றச்சாட்டுக்கள் அறிக்கைகளை எல்லாம் நகைச்சுவை போல அனுபவித்துக் கொண்டிருக்கிற அரசு. இன்று பேசுவதற்கு நாள் தேடி அலைகிறது ாி.என்.ஏ. இதுதான் தமிழாின் அரசியல் நிலைமை இதற்கிடையில் நீங்கள் நடத்திற மகாநாட்டையா அது கருத்தில் எடுக்கப் போகிறது.
இங்கு எதிர்ப்பு என்பது ஒரு குறியீட்டு வகை அரசியல் அவ்வளவுதான். மற்றவர்கள் விரும்பினால் போய் நடனங்களை பார்த்துவிட்டு வரவேண்டியதுான். தவிர இதாலெல்லாம் இலக்கியம் வளரப் போகிறதும் இல்ல. இங்க யாரும் மகாநாடு போனால்தான் பொிய எழுத்தாளராகலாம் எண்டும் இல்ல. புலிகளும் பொிய இலக்கிய மகாநாடு நடத்தினாங்கள் ஈழத்தில் உடனே இலக்கியம் பிச்சுக் கொண்டு வளந்திட்டுதா?
சும்மா போய் நாலுபேராடு இருந்து அரட்டை அடிச்சுப் போாட்டு வந்தாங்கள் நம்மட எழுத்தாளர்கள். பிறகெதற்கு பொிய விளையாட்டெல்லாம் போடுறியள். மேற்கு ஆசிய மூலதனம். புலிகளை யுத்தத்தை நிறுத்தச் சொல்லியிருக்கலாமே. இதெல்லாம் என்னத்தற்கு? பாலசிங்கம் சொல்லியே பிரபாகரன் கேக்கயில்ல புளொக்கில் எழுதிறாக்கள் சொல்லியா அவர் கேட்டிருப்பார். உளர்றதையும் ஒழுங்கா உளறுக்கோ அப்புகளா. .
.
நம் உள்ளே இருக்கும் மனம் மகாநாட்டின் வெற்றீயை தனக்கு சாதகமாக்க நினைக்கும்.வெளீயே இருக்கும் மனம் இந்த மகாநாடா என பிரச்சாரத்திற்கு உதவாதே என நடிக்கும். நாம் ஏன் எதிர்க்கிறோம் அரசிற்கு இது பிரச்சாரத்திற்கு பயன்படும் தன்னுடைய நற்சான்றீதழுக்கு பயன்படுத்திக் கொள்ளூம் என்பதால் எதிர்க்கிறோம்.கீரைதானே என ஒதுக்கி விட்டால் சோறூ சாப்பிடும்போது எப்படி சுவை இருக்காதோ அவ்வாறூ இலங்கை அரசின் வேலைத்திட்டத்தில் நாமும் இணந்து விடக் கூடாது என்பதால் எதிர்க்கிறோம்.
நீங்கள் எலோரும் தம்பி இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள்தான் இறுக்கிறியள் பிறகு ‘இலங்கை அரசின் வேலைத்திட்டத்தில் நாமும் இணந்து விடக் கூடாது என்பதால் எதிர்க்கிறோம்’ எண்டு கதையளக்கிறியள். அடே அப்பு> புலத்தில் நீங்கள் அடிக்கறி கூம்தெல்லாம் நாடுகடந்தது கடக்காதது மாவீரர் தினம் திலீபனுக்கு வீர வணக்கம் விநாயகத்தின் தலைமையில் புதிய புலிகள் எல்லேமே தம்பி ராசா இலங்கையின்ர நலனுகுத்தானடா பயன்பட்டுக் கொண்டு இருக்கிறது. பிறகு உந்த மாகாநாடு வேற தேவையோ இலங்கைக்கு பயன்பட. போர்க் குற்றச்சாட்டு மனித குல விரோதிகள் இப்படியெல்லாம் ஊழைவிட்டுக் கொண்டிருக்கிறியள் தம்பி அதன் சூத்திரதாரிகளில் ஒருவர் எண்டு சொல்லப்பட்ட சவீந்திர சில்வா ஜநாவுக்குள் வந்து இருக்கப் போகிறார். இப்ப என்னப்பு செய்யப் போறியள். உங்கட புலத்து வீரத்த காட்டுங்கள் பார்ப்பம் பிரபாகரன் சாp பிழைக்கு அப்பால எல்லாத்தையம் தன்னுடைய லட்சியத்திற்காக கொடுத்ததார் கூடவே வன்னி மக்களையும் ஆண்டிகளாக்கி விட்டார். உங்கட புலத்து புரட்சிக்காரன்கள் எல்லாம் வீதிக்கு வந்து குடுமப்த்தோடு நில்லுங்கள் பார்க்கலாம். மகிந்தவுக்கு எதிராக பேராடுங்கள் பார்ப்பம். குர்திஸ் மக்கள் செய்தது மாதிரி மேற்க நாடுகளின் துதரகங்களை கைப்பற்றுங்கள் பார்ப்பம். உங்கடை பிள்ளை குட்டியள இழங்கள் பார்ப்பம் உங்களால ஏலாது. பிறகு அரசாங்கத்தின்ர வேலைத் திட்டங்களில்ல நாங்கள் இல்லயெண்டு கதைவிடுறியள். அங்க அப்பு நீங்கள் அடிக்கும் கூத்துக்கள்தான் தம்பி இலங்கை அரசின்ர ராஜதநதிர முதலீடு. முதல்ல சர்வதேச அரசியலை ஒழுங்கா படியும். ஏற்கனவே எல்லாம் தொிஞ்ச மாதிாி புல்டா விட்டதாலதான் குப்புற விழுந்தது. பிறகு ஏதோ எதிர்ப்பு என்று கதைவிடுறியள். சும்மா ஒரு எழுத்தாளர் மகாநாட்டை வைத்துக் கொண்டு புதிது புதிதாக கதைவசனங்கள் எழுதுறியள். உங்களுக்கு புலத்தில இப்ப இரண்டு மூன்று வேலைகள் செய்ய வேண்டிய தேவையில்லாமல் போயிட்டுது போல. மக்களிட்ட சுருட்டின பணம் கூடிட்டுது போல.
தயிர்ச் சோறூ குளீருக்கு நல்லதெண்டு சாப்பிட்டு சளீ பிடிச்ச மாதிரி உங்களது சாந்த சொரூபமும்.தமிழர் என்றால் இங்கிலாந்தில் ஒரு மரியாதை உண்டு அதை கெடுக்க நினைக்கும் உமக்கு கெட்ட புத்தி.உழைத்துக் களத்து ஊருக்கு காசு அனுப்பும் தமிழன் பிரச்சனை போல உலகில் யாருக்கும் உண்டா? நமது பிரச்சனைகள்தான் இலக்கியம்.நமது மக்கள அனைதையாக்கி வீதியில் விட்டுள்ள இலங்கை அரசுக்கான எதிர்ப்புக் குரலே மகாநாட்டு எதிர்ப்பு.
‘தமிழர் என்றால் இங்கிலாந்தில் ஒரு மரியாதை உண்டு அதை கெடுக்க நினைக்கும் உமக்கு கெட்ட புத்தி.உழைத்துக் களத்து ஊருக்கு காசு அனுப்பும் தமிழன் பிரச்சனை போல உலகில் யாருக்கும் உண்டா’
அப்படியா ஆனால் நான் இப்படி யல்லவா அறிகிறேன் அங்கு தமிழர்களை பக்கி என்றல்லவா கூறுகிறார்களாம். நீர் சொல்லிறியள் தமிழருக்கு மதிப்பென்று. உண்மைதான் உழைத்து காசும் அனுப்பும் தமிழகள் இருக்கிறார்கள்தான். ஆனால் இறந்தவர்களை வைத்துப் பிழைக்கும் தமிழர்களும் இருக்கிறார்கள் தானே அப்பு. இங்க வன்னியில் செத்துக் கொண்டிருக்கிற எங்கட சனங்களை வைத்துத்தானே உங்கட அரசியல் வியாபாரம் எல்லாம் நடக்குது இதெல்லாம் வெள்ளைக்காரன்ட பிரச்சனையோ! என்னப்பு உளர்றியள்.
திருவாழா் தேவசொரூபி,
நீண்ட பின்னூட்டலை வடித்திருக்கின்றீர் ஆனால் முக்கியமான விடயத்தை கூற மறந்துவிட்டீா்,மகாநாட்டினால் யாருக்கும் எதற்கும் எந்தப்பலனும் இல்லை என்கின்றீா் அப்படியானால் மகாநாடு எதற்காக நடத்தப்படுகின்றது என்று கூறலாமே!!!!
ஊா்களை இழுத்து வேதனையை கொட்டியிருப்பது தெரிகிறது என்ன உமது பக்கத்து வீட்டுக்காரா்கள் நல்லூா்,வட்டுக்கோட்டையைச்சோ்ந்தவா்களா ??அவாகழுடன் உமக்கு ஏதோ தகராறுபோல் எண்ணத்தோன்றுகிறது. இப்படி எழுதுவது சிறுபிள்ளைத்தனமாகவோ வழா்ச்சியடையாத முதிர்ச்சியடையாத தன்மையைக்காட்டுவதுபோல் இல்லையா??
பின்னூட்டம் இடுபவா்கள் எல்லோருமே புலிகளின் ஆதரவாளா்கள்தான் என்ற முடிவிற்கு எப்படி வருகின்றீா்கள் யாருக்கும் எதையும் செய்வதற்கு உரிமை உண்டு ஆனால் இலக்கியவாதிகள் தங்கள் இலக்கியம் யாரால் மதிப்புப்பெறுகின்றதோ அவா்களின் அபிலாசைகளையும் கருத்தில் கொள்வது மிக மிக அவசியமல்லவா??
புலிகளை மனதில் வைத்துக்கொண்டே கருத்துக்கூறும் செயலை தயவு செய்து யாவரும் விட்டுவிடுங்கள்[[ஆதரிப்பவா்களாயினும் எதிர்ப்பவா்களாயினும்]],
நீர் சொன்னமாதிாி நான் முதிர்ச்சியடையாத நபர்தான் நான் உங்களைப் போல் முதிர்ச்சி அடைந்திருந்தால் உங்களுடன் சேர்ந்து அடிப்படை விளங்காமல் உளற வேண்டி வந்திருக்கும் அந்தவகையில் முதிர்ச்சியடைமல் இருப்பது எவ்வளவு நல்லது தம்பி குமார். நான் எனது பின்னூட்டங்களில் மிகவும் தெளிவாக பொதுநிலையில் ஆதரவு எதிர்ப்பு என்ற இரண்டின் அடிப்படைகளையும் விளக்கியிருக்கிறேன். மீண்டும் அதனை படித்து பாருங்கள். நான் இந்த மகாநாட்டுக்கு ஆதரவாளனுமல்ல இதனை ஒரு பொருட்டாகவும் எடுக்கவில்லை. என்னைப் பொருத்தவரையில் எதிர்ப்பதற்கும் பங்கு கொள்வதற்கும் உள்ள உாிமையை அங்கிகாிக்கிறேன். இதனை ஒழுங்குபடுத்துபவர்பகளின் அரசியல் பின்புலத்தையும் சொல்லியிருக்கிறேன். அவ்வாறாயின் ஏன் அவர்கள் மகாநாடு நடாத்துகிறார்கள் என்று நீங்கள் கேட்கலாம். நீங்கள் கேட்டதால் நான் பதில் சொல்லுகிறேன். முருக புபதிக்கு தனது கடைசிக் காலத்தில் இலங்கையில் ஒரு புகழ் சுற்றுக்கு வர விருப்பமிருக்கலாம். முருகு இப்படி ஆசைப்பட அவருடன் அவ்வப்போது அவுஸ்ரேலியா சென்று ஒட்டிக் கொண்ட ஞானசேகரனுக்கும் புகழ் அாிப்பெடுத்திருக்கலாம். பிறகு மெதுவாக அன்ரனி ஜீவா மற்றவர்கள் எனத் தொற்றியிருக்காலம் அது மகாநாடு ஆகியிருக்கலாம். இதனை புலம்பெயர் தமிழக முன்னி எழுத்தாளர்கள் சிலர் எதிர்க்கப் போய் சோபா சக்திக்கும் ராகவனுக்கும் நாமும் இதில் சொறிந்து கொண்டால் என்ன என்று யோசித்திருக்காலம். இவர்களின் பிரச்சனை சோபாவை கடுமையாக விமர்சிக்கும் கீற்று தளத்தின் ஆசிாியர் நந்தன் எதிர்ப்பு அணியில் இருக்கிறார் போதாக் குறைக்கு சோபாவின் குருநாதர் அ.மார்க்சின் எழுத்துக்களை கடுமையாக விமர்சிக்கும் யமுணா ராஜேந்திரனும் அங்கால் இருக்கிறார். பிறகு எப்படி சோபாவால் சும்மா இருக்க முடியும். இதில் உந்த மயுரன் அகிலன் பற்றி எனக்கு அதிகம் தொியாது அவர்கள் அந்தளவு எழுத்துலகில் பிரபலமானவர்களும் அல்ல. இப்போதுதான் ஏதோ எழுதுகின்றனர். அவர்கள் ஏன் இதற்குள் வந்தார்கள் எனபதை திட்டவட்டமாகச் சொல்ல முடியாமல் இருக்கிறது. ஒருவேளை புகழ் அாிப்பெடுத்திருக்கலாம் எனவே அாிப்பெடுத்தாலே சொறியத்தானே வேண்டும். அடிப்படையில் இது இலக்கியம் வளர்ப்பதற்கான நிகழ்வல்ல புகழ் தேடிக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்களுக்கு முடிந்தளவு மாறி மாறி சொறிந்து கொள்வதற்கான மகாநாடு – அதன் பெயர்தான் சர்வதேச மகாநாடு. இதில் அரசு எங்கு வருகிறது முள்ளி வாய்க்கால் நடந்து இரண்டு வருடம் கூட முடியாத நிலையில் அவச அவசரமாக இந்த மகாநாடு எதற்கு எழுத்தாளர்களின் தார்மீகத்திற்கு என்ன நடந்தது என்ற கேள்வயில்தான் வருகிறது. முள்ளி வாய்க்கால் கதை பழங் கதையானால் பங்கு கொள்ளலாம். தவிர இந்த வகையான மகாநாட்டில் எல்லாம் எனக்கு உடன்பாடும் இல்லை ஒரு மண்ணும் இல்லை. இது அாிப்பெடுத்த கொஞ்சம் பேர் சொறிந்து கொள்ளும் நிகழ்்வு.
தங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனால் அதனை எழுதிய விதம் சற்றுக் கடுமையானது. தலைவர் 10000 பேருடன் வருவார் என்பதும்> விநாயகம் உள்ளார்> தமிழீழ அரசு என்று வாய்ச்சவடால் அடிப்பதனால் தமிழர் பகுதிகளில் ராணுவத்தை வைத்திருப்பதற்ககான காரணத்தைச் சொல்ல மகிந்தவுக்கு உதவுகிறோம். அதனை விட இம்மாநாடு எதனைப் பெரிதாகச் செய்துவிடும் என்பமு நியாயமான கேள்வியே. அறிவிலும் பார்க்க உணர்வுதானே இன்றெம்மில் பலருக்கு அல்லது செயற்பாட்டாளர்களுக்குப் பெரிதாகப் போய்விட்டது. எனினும் தாங்கள் கூறியதைப் போன்று எதுவித பலனையும் தமிழிலக்கியத்துறைக்குத் தரமாட்டாத மாநாட்டை பெரும்பான்மையோரால் எதிர்க்கப்படுகின்ற மாநாட்டை பேச்சுச் சுதந்திரம் இல்லாத இடத்தில் நடத்த வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியில் நியாயமுண்டல்லவா?
இயக்குனர் சீமான்கள் யாரும் இந்த் ஒரு வருடமா தங்கள் தொழிலைச் செய்யாமல் முடங்கிப் போயிருந்தனரா? எழுதாளார்கள் எழுதவில்லையா?கவிதாயினிகள் சினிமாவுக்கும் மற்றவற்றிர்கும் பாட்டு எழுதவில்லையா? அயல் நாடு சுற்றுலா செல்லவில்லையா/ ஏதோ இ ந்த ஒரு வருடம் உலகம் ஸ்தம்பித்து நின்று விட்ட்டது போல எழுதுகிறார் எல்லோரும் அவர்களுக்கு வருமானம் வரக்கூடிய தொழிலை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் உலக்த் தமிழர் மானாடு நட்துவதால் ஒன்றும் பிழை இல்லை என்பது எனது வாதம் .
2 “புகழமட்டுமே அங்கு செல்ல மனசாட்சி மாண்டுவிட்டதா? உலக நாடுகள் சபையில் எடுபடாமல் போனதால் ராஜபக்சேகொலையாளி இல்லையா?”
புகழ மட்டுமே அங்கு செல்கிறார்கள் என்று நீங்கள் முன்கூட்டியே எப்படி தீர்மானித்தீர்கள் ? தமிழர் வாழ்வு உரிமைக் குரித்து எதுவும் பேச மாட்டார்கள் என்று எப்படி முடிவு செய்தீர்கள் . ராஜபக்சே கொலையாளி இல்லை என்று யாரும் சொல்லவில்லை. அவரை கூண்டில் ஏற்றும் முயற்சிகள் இதுவரை தோல்வியில் தான்
முடிந்திருக்கின்றன என்பதைத்தான் சுட்டிக் காட்டினேன் இந்த நிலையில் கொழும்புவில் எழுதாளர்கள் என்ற ன நிகழ்வில் ஒருவரை ஒருவர் தங்களுடைய சொந்த நாடான சீலன்காவில் சந்திதுக் கொள்ளப் போகிறர்கள் இதில் உங்களுக்குக் ஏன் மனக்குத்தல் /20 ஆன்டு காலமாக் சீலங்கா மண்னில் காலடி எடுத்த வைக்க முடியாத புலம் பெய்ர்ந்த எழுத்தாளர்கள் ஒன்று கூடப் போகிறார்கள் இதில் உமக்கு எங்கு வலிக்கிறது /பூனைக் கண்னை மூடினால் உலகம்இருண்டுவிடாது புலிகளுக்கும் அது பொருந்தும்
மயூரன் அவர்களே! நீங்கள் மூன்று அணிகள் இ பின்பு இரண்டு அணிகள் என்றெல்லாம் அட்டவணை வாய்ப்பாடு நடத்துவது சுற்றிவளைத்து மாநாட்டை நியாயப்படுத்துவதற்குப் போடுகிற ஒர் உத்தி போன்றே எனக்குத் தோற்றமளிக்கிறது.
இந்த அணிப்பிரிப்பு எனக்கு அளவற்ற கோபத்தை வரவழைக்கிறது என்று அணியைப் பிரித்த நீங்களே முறையிடுவது உங்களுக்குக் கோபத்தை ஏற்படுத்துவதற்காகவே நீங்கள் புரிந்து கொண்ட செயல்முறையாகவும் இங்கே கொள்ளுவதற்கு வாய்ப்பு உண்டு. இங்கே என்னுடைய பிரச்சினையே வேறு என்று நீங்கள் கூறிக்கொண்டாலும் இந்த மாநாடு நடைபெறுவதற்கான ஆதரவு வெளிப்பாட்டில் நீங்கள் உறுதியாக இருப்பதை அப்பட்டமாக உங்கள் வாதங்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன. அதை அடிப்படையாக வைத்துக்கொண்டே இங்கு நாங்கள் உரையாட முற்படுகின்றோம்.
இந்த மாநாட்டை நடத்துவோரோடோஇ மாநாட்டோடோ எனக்குச் சம்பந்தமெதுவுமில்லை என்று நீங்கள் கூற முடியாதென்பதே இங்கு நான் முன்னிறுத்த விழைவதாகும். மாநாட்டுக்காரர்கள் பலரோடு உங்களுக்கும் நீங்கள் சார்ந்த அமைப்புக்களுக்கும் மாநாடு தவிர்ந்த விடயங்களில் முரண்பாடுகள் பலவிருக்கலாம். அதை நாங்கள் புரிந்து கொள்ள முயற்சிக்கின்றோம். ஆனால் மாநாடு நடைபெறுவது என்ற விடயத்தில் உங்களுக்கும் இ அவர்களுக்கும் இருக்கும் கருத்தொருமிப்பை எந்தக் கொம்பனாலும் அசைத்துவிட முடியாது.
மாநாட்டை எதிர்த்து அரசியல் பண்ணுவோரின் அரசியல் மீதான ஐயங்களோடும் உடன்பாடின்மைகளோடும் அதனால் விழைந்த கோபத்தோடும் இதற்குள் வந்து சேர்ந்த நீங்கள் மாநாடு நடத்த முற்படுபவர்களது அரசியலையும் அது சார்ந்த தார்மீக அறங்களையும் கேள்விக்கு உள்ளாக்க விரும்புவதில்லை. வெகு சாதுரியமாக அதனைத் தவிர்த்து விட்டுக்கொண்டு உங்கள் பயணத்தை நிகழ்த்துவதில் குறியாய் உள்ளீர்கள்.
என்னுடைய பிரச்சினை மாநாடோஇ அதை ஆதரிப்பதோ அல்லஇ மாறாக மாநாட்டை எதிர்க்கும் முறையும் அதன் அரசியலும் தீங்கானது என்பதுதான் என்று நீங்கள் மொழிவதன் அர்த்தத்தை எதுவாக நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுகின்றீர்கள் மயூரன் அவர்களே! இதன் அப்பட்டமான வெளிப்பாட்டு அர்த்தம் மாநாட்டு ஆதரவென்பதுதான். இதை இப்போதும் மறுப்பதென்பது எவ்வகையுள் அடங்கும் ? ஆரம்பத்தில் இந்த மாநாடு தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட நீங்கள் சார்ந்த தேசிய கலை இலக்கியப் பேரவை தொடர்ந்து அது சார்ந்த வேலைத்திட்ங்களில் ஏன் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை என்ற காரணத்தை பகிரங்கமாக எழுத்தில் பதிவுக்குள்ளாக்கி இருக்கின்றதா ? அதன் அர்த்தம் பல்வேறு வகைப்பட்ட அரசியல் காரணங்களுக்கப்பால் மாநாட்டுக்குத் தொலைதூரப் பின்னணியில் இருந்துகொண்டு அரசு வழங்கும் ஆதரவும் ஓர் காரணமா?
மாநாட்டினை எதிர்ப்போருக்குப் பதில் சொல்லுபவர்கள்இ எதிர்ப்போரை விமர்சிப்பவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்பதைக் காது கொடுத்துக் கேட்பதற்கும் முற்சாய்வுகளின்றிப் படிப்பதற்கும் இங்கே எவரும் தயாராயில்லை என்று மனக்குறைப்படும் தாங்கள் இதே கூற்றுக்கள் மறுதலையாக உங்களையும் நோக்கிச் சுட்டப்படுகின்றதுஇ ஏவப்படுகின்றது என்பதை உணரத் தலைப்படுவதில்லை. எந்தப்புள்ளியில் நின்றுகொண்டு பதில்கள் சொல்லப்படுகின்றன என்பதை ஆராய்வுக்குட்படுத்தினால் உங்களுடனான இந்த வாதத்தில் தேசிய கலை இலக்கியப் பேரவை இவ்விடயத்தில் தள்ளாடிக் கொண்டு உத்தியோகபூர்வ நிலைப்பாடு எடுக்காமல் இருப்பது மிக மிக முக்கியமானது.
எடுத்த எடுப்பில் முதல் வேலையாக ஒருவருக்கு முத்திரை குத்தி இரண்டில் ஒரு அணிக்குள் தள்ளி அதன் பிறகு கதைக்க வருபவையாகவே உள்ளன என்ற வாதத்தைக் கருத்துக் கூறும் எல்லோருக்கும் பொதுமைப்படுத்துவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. மயூரனே இந்த மாநாடு தொடர்பாக நாம் உங்களோடு முரண்படுவதால் உங்களை அரச ஆதரவாளனாகப் பட்டியல் இடுவதாகக் கருதத் தேவையில்லை. ஆயினும் நீங்கள் எடுக்கும் நிலைப்பாட்டினால் சிறிலங்காவின் அரச இயந்திரம் அடையக் கூடிய அரசியல் இலாபங்ளே மிகுந்து காணப்படுகின்றன. எனவேதான் கலைஇ இலக்கியம் இ அரசியல் என்ற தளங்களிலே மேம்பட்ட கருத்தியல் சார்ந்து இயங்கக்கூடியவர்களான உங்களைப் போன்றோரே இவ்வாறான நிலைப்பாட்டை மேற்கொள்ளுகின்ற போது எவ்வாறான ஏமாற்றத்திற்கு நாங்கள் உள்ளாகின்றோம் தெரியுமா?
‘ஈழத்தமிழர் அவலம்”இ ‘மகிந்தவின் போர்க்குற்றம்” எனும் கோசங்களைப் போட்டால் போதும் – எவரையும் எம்பின்னால் அணி திரட்டிவிடலாம் என்ற போக்கில் செயல்படுகின்ற டி. ராஜேந்தர் போன்றோரின் ‘நான் தமிழண்டா” என்ற கோச அரசியலைப் புறந்தள்ளக் காத்திரமாக அரசியல் நிலைப்பாடுகளை முற்போக்கு அரசியல் பேசுவோரும் எடுத்தல் அத்தியாவசியமல்லவா? அதை விடுத்துச் சந்தர்ப்பவாத அரசியல் அலைகளினால் வர்க்க அரசியல் பேசுவோரும் அடித்துச் செல்லப்படுவார்களேயானால் மீண்டும் ‘உணர்ச்சி அரசியல்” தழைத்தோங்குவதற்கு உங்களைப் போன்றோர் சந்தர்ப்பத்தை வழங்குவதாக அமையாதா?
‘உணர்ச்சி அரசியல்” எழுப்புகின்ற கோசங்களுக்குப் பின்னல் எந்தக் கேள்வியும் இல்லாமல் ஆட்கள் அணிதிரள்கிறார்கள். இந்தக் கோசங்களைப் போட்டுக் கொண்டு சனத்தை எந்தத் திசையிலும் அழைத்துக்கொண்டு போகலாம் என்ற நிலை உருவாகியிருக்கிறது என்ற நிலை முள்ளிவாய்க்கால் தோல்வியின் பின்னரும் தொடருவதை நீங்கள் ஒத்துக்கொள்வதாக இருந்தால் இலங்கையில் தேசியச் சிறுபான்மை இனங்களுக்கான அரசியல் குறித்து சமூக அரசியல் தளங்களிலே இன்றும் முற்போக்குச் சிந்தையாளர்கள் தவறிழைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதுவே இன்று உங்களைப் போன்றோர் இந்த மாநாடு தொடர்பாக எடுத்திருக்கும் நிலைப்பாட்டால் சுட்டப்படுகின்றது.
மயூரன் தம்பிதான் மகாநாட்டில் நிற்பார்.கூடவே சிலரையும் கூட்டிச் செல்வார் அவர்கள் இருந்து டீ யும் வடையும் சாப்பிட்டு எதிர்கால இலக்கியம் பற்றீப் பேசட்டும் அது ஒரு தொலைக்காட்சியில் ஓளீபரப்பாகும் அதையும் அவரைச் சார்ந்தோர் பார்ப்பார்கள்.இணயத்தில் விமர்சனத்தை அவரே எழுதுவார்.
பார்ப்பனர்கள் சதிசெய்து நந்தனாரைத் தில்லைக்கு அழைத்து தீக்குள் தள்ளிவிட்டது போன்ற சதியே இந்த சர்வதேச எழுத்தாளர் மாநாடு. இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியவை யாதெனில் இலக்கியம் என்பது அரசியலின் அடிக் கட்டுமானம் ஆகும். இதில் இந்த “சர்வதேச எழுத்தாளர் மாநாடு” என்பதைத் தவிர்த்து “புலம் பெயர்ந்த எழுத்தாளர் முருகபூபதியின் தலைமையில் எழுத்தாளர் மாநாடு” என எழுதியிருந்தால் இந்த எதிர்ப்பு வந்திருக்காது. சர்வதேசம் என வரும்போது அத்தனை தமிழ்ப்பிச்சைக்கார எழுத்தாளர்களும் இதனை எதிர்க்கிறார்கள். பணக்கார தமிழ் எழுத்தாளர்களும் அவர்களது அடிவருடிகளும் கொழும்பில்..! இணைகிறார்கள். வாழ்க தமிழ்த் தேசியம். ஏந்துக அதே குண்டுச் சட்டியை. வெளிநாட்டில் கொஞ்சத் தமிழர் ஒபாமாவுக்கு கழுவுகிறார்கள்..
சரி.. சரி… தமிழின அழிப்பு தொடரட்டும். சர்வதேச தமிழ் எழுத்தாளர்களே அமைதி.. அமைதி… முருகபூபதி குழுவினர் எம்மை வித்துவாங்கி வருவார்கள். அதுவரை புலிகளின் பெயரால் தங்களுக்கு பிச்சா பாத்திரம் தரப்பட்டிருக்கிறது.
அலைஞனின் அலைகள்: குவியம்- சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு: மண்டகப்படிகள், மண்டையோடுகள், மண்டையுடைவுகள்
பேஸ்புக்கிலே அள்ளிப்போட்டு நண்பர் ஒருவருக்குப் பின்னூட்டங்களாக எழுதிய அவியல் அள்ளிக்குவிப்பான பதிற்குறிப்பின் நீட்சி கருதி வாசிக்கவேண்டிய ஒருவருக்காக, இங்கே
நடத்துகின்றவர்களின் நோக்கங்கள் எவையென்றாலும் நன்றே என்றுதான் முடிவின்றி வாதாட நேரமும் பொறுமையுமின்றி விட்டுவிடுவோம். இம்மகாநாட்டினை ஸ்ரீலங்கா அரசு எவ்வாறு தன் ‘சமரசம் உலாவச்செய்யும் களமானது எம்நாடு’ என பிறருக்குக் காட்டச் சாதகமாகப் பயன்படுத்தக்கூடும் என்பதைச் சுட்டிக்காட்டி இதிலே கலந்து கொள்ளவேண்டாமென்று கேட்பது என் தரப்பு நிலை.
எச்சூழலிலே எவரிடையே என்ன சாதகமான கலாசார நல்லிணக்கப்பரிவர்த்தனை நிகழ்வுகள் சாத்தியமாகியிருக்கின்றன என்று சொல்லுங்களேன். அரசை விமர்சிக்காத பொதுவுடமைவாதிகளினதோ புலியெதிர்ப்பாளர்களினதோ புத்தக, பதிப்பவெளியீட்டு விழாக்கள்தானென்றாலுங்கூட, சிங்களமக்களிடையே இந்நிகழ்வுகள் எடுத்துச்செல்லும், சென்ற சேதிகள் என்ன?
யாழ்ப்பாண நூலகத்திலே இரு வாரங்களுக்கு முன்னாலே நிகழ்ந்ததைப் பற்றி எடுத்துச்சொல்லப்படுகிறதா? இன்றைய பிபிஸி சந்தேச சிங்கள செய்தியிலே வந்த பத்தாண்டுகளுக்கும்மேலாக அடையுண்டிருக்கும் தமிழ்க்கைதிகளைப் பற்றிப் பேசப்படுகின்றதா? இந்நிலையிலே எங்கே போருக்குப் பிந்தித் தொடங்கிய சாதகமான நல்லிணக்கப்பரிவர்த்தனை வருகின்றது?கேட்கமுடியாது முடங்கிக்கிடக்கவேண்டிய அவலத்தின் முனகலிலா? “அரிசியை நாம் கப்பமாய்க் கொணர்கிறோம்; உமியை நீவீர் ஒருபிடி கொணர்க; ஊதி ஊதி இருசாராரும் உண்போம்” என்பதிலா? இத்தனை பேர் நாய்கள் மாதிரியாகக் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்; அதைக் கேட்பாரில்லை; அதை 100% இழைத்தவர்கள் பிடிக்காத காரணத்தினாலே 200% இழைத்தவர்களுக்கு விளம்பரம் எடுத்துக் கொடுக்கப்போகத்தான் வேண்டுமென்பதுமாதிரியாகத்தான் எனக்கு இது தொடர்பாகப் போகவேண்டுமென்று லெ. முருகபூபதியை வைத்து செவ்வியரசியல் நிகழ்த்துகின்றவர்கள் யாரெனக் காணும்போது தோன்றுகின்றது. இஃது எவ்வகையிலும் போகாதே என்பவர்களிலே எல்லோரினதும் நியாயங்களையும் ஆதரிப்பதாக ஆகாது. துரோகிகள் என்பதாக இதுவரைநாள் நானெங்கும் எவரையும் எழுதியறியேன் – தன் பிள்ளைகளுக்கொரு நீதி, ஊரார்பிள்ளைகட்கொரு நீதி வைக்கும் மேதைகளைக்கூட அப்படியாகச் சொல்லவில்லை. அதனால், கூட்டத்துக்குப் போவோர் துரோகிகள் என்றெல்லாம் என் கருத்தில்லை. (‘இப்போதெல்லாம் எம்மைத் துரோகிகள் என்று சொல்லுங்கள்” என்று அறிக்கை விடுவதெல்லாம் “நான் உங்களுக்காக உரோமர் சிலுவையிலே அறையப்படுகிறேன் பாருங்களேன்” என்பதுமாதிரியாகப் படங்காட்டுவதைக் காணுகையிலே எரிச்சல் வருகின்றதா சிரிப்புவருகின்றதா என்று எனக்கே தெரியவில்லை :-() ஆனால், ஸ்ரீலங்காவின் ராஜபக்ஷ அரசின் பிரசாரப்பீரங்கிகள் இவ்விழாவினை எப்படியாகப் பயன்படுத்தும் என்பதை மிகவும் தெளிவாகவே அறிந்துகொண்டும் இவ்விழாவினை நிகழ்த்துகின்றவர்களும் முட்டிமோதிக்கொண்டு அவ்விழாவினைத் தாங்கிப்பிடிக்கின்றவர்களும் 200% ஸ்ரீலங்கா அரசுக்கு விளம்பரம் கொடுக்கின்றோமென்பதை அறிந்துகொண்டே செய்கின்றார்கள். அவ்விளம்பரம் யாழ்ப்பாணத்தமிழ்த்தேசியவெள்ளாளமேலாதிக்கத்தைப் பெரிதும் பாதிக்காத, ஆனால், அப்பெருங்குடியினால் ‘ஒடுக்கப்பட்ட’ வன்னி, கிழக்குமக்களின் மீதான ஸ்ரீலங்கா அரசின் வன்முறையினையும் பெருங்கொலைகளினையும் பேரழிப்புகளையும் மறைத்துக்காட்டி, அவ்வரசினை உலக அரங்கிலே ஒதுக்கிவைக்கவோ நீதிவழங்கலுக்குட்படுத்தவோ 200% உதவவிடாது செய்கின்றதென்பதாலே இவ்விழாவிலே கலந்துகொள்ளக்கூடாதென்பது என் தனிக்கருத்து. இத்துணை கொடூரநிகழ்வுகளையும் போருக்குப் பின்னான இனங்களுக்கிடையேயான கலாசாரப்பரிவர்த்தனையிலே கொழும்பிலே வைத்து எல்லோரும் கேட்கச்சொல்லமுடியுமென்று சொல்லுங்கள்; அப்படியான நேரத்திலே அடுத்தபக்கத்திலிருந்து இதனை என்றோ புரிந்துகொண்டிருக்கின்றோமென்று -இதுவரை நாள் பதினெட்டு மாதங்களாகியும் கேட்காத -ஆறுதலும் தேறுதலும் பகிரங்கமாகச் செய்திப்படட்டும்; 100% இம்மாநாட்டின் தேவையை ஒத்துக்கொள்கிறேன். 100% போருக்குப் பிந்தைய இலங்கையின் சாதகமான கலாச்சார நல்லிணக்கப் பரிவர்த்தனைகளில் மண்ணள்ளிப் போடுகிறது அறிவுசார் இறைமையறுசெயலென ஒத்துக்கொள்கிறேன்.
பிரபாகரனையும் விடுதலைப்புலிகளையும் வைத்துக்கொண்டு போரையும் இறையாண்மையையும் சுயநிர்ணயத்தினையும் கோடு வரைந்து கீறலின் எப்புறம் நாம் என்பதை வைத்துக்கொண்டு குதூகலிப்பதுதான் சாதகமான கலாசாரநல்லிணக்கப்பரிவர்த்தனையென்றால் அறிவுசார் இறைமையும் முழுமையும் நிறைந்த செயலென்றால் சொல்வதற்கில்லை.
இது நாடுகடந்த தமிழீழத்தார், தேசங்கடந்த ஸ்ரீலங்கர் என்பதல்ல பிரச்சனை. சர்வதேசத்தமிழர் என்றால் எவரும் மூக்கை நுழைக்கலாம். அதுவும் தமிழ் எழுத்தாளர் என்றால், எளுத்துப்பிலையோடு எழுதும் பிறபள பதிவார்களும் வாலை ஆட்டலாம். எதுக்கு எப்போதுமே புலிகளையும் நாடுகடந்தவர்களையுமே குற்றக்கூண்டிலே ஏற்றவேண்டும்? மாற்றுக்கருத்தாளர்கள் என்ன கேள்விக்கும் விமர்சனத்துக்கும் அப்பாலிருக்கும் கவசகுண்டலங்களுடனும் தொங்காட்டான்களுடனுமா பிறந்தார்கள்.
இத்தனைபேர் 100 மைல்கள் தொலைவிலே வன்னியிலும் கிழக்கிலும் செத்துக்கொண்டிருக்கையிலே கொழும்பு பண்டாரநாயக்கா நினைவுமண்டபத்திலே மறைந்துபோன மனித உரிமையாளர் பெயரை வைத்துக்கூட்டம் நடத்திக் மனிதத்தைக் காத்தபோது, இப்போது கூட்டம் கூட்டி எல்லோருக்கும் பண்பாட்டுப்பரிமாற்றம் செய்ய எண்ணும் நாம் ஒரு சொட்டுக்குரலையும் எழுப்பவில்லையே! அப்பண்டாரநாயக்கா நினைவுமண்டபத்திலே வரைமுறையற்று சுடுகலன்களின் எதேச்சைச்சரமாரிக்கு நிகழ்தகவின் அடிப்படையிலேமட்டும் கொல்லப்பட்டுக்கொண்டிருந்த வாலும்வரியுமற்ற குழந்தைகளைப் பற்றிப் பேசாமல், எப்போதோ செத்துப்போன உறவின் பேரில் மனிதத்தை விற்று விளம்பரம் தேடியவர்கள் ஏன் அப்போது பண்பாட்டுப்பரிமாற்றம் வந்திருந்த மேற்தட்டு நுனிநாக்கு ஆங்கிலக்கறுவாக்காட்டுச்சீமான்களிடமும் சீமாட்டிகளிடமும் பண்ணமுடியவில்லை. நாமும் கேட்கவில்லை. அவர்களும் சொல்லவில்லை. அதே கூத்தே இங்கும் பரிமாற்றத்தின்பேரிலே அரங்கேறுமென்பதாலேதான் இதன் நிகழ்வின் -கொலைகார அரசியற்கலைஞர்களின் முகங்களைக் காக்கக்கூடிய- எதிர்காலப்பயன்பாடு பயத்தினையும் வெறுப்பினையும் ஏற்படுத்துக்கின்றது.
இப்படியான அடுத்தவரிடம் நாம் எதிர்பார்ப்பின்றி, கடந்ததின் ‘ஞானம்’ இன்றி நம்பிக்கை கொள்ளவேண்டுமென்பது, பூனைக்கு மணிகட்டும் விளையாட்டு; நாயகன் பாணியிலே அவனை நிறுத்தச்சொல்லு நான் நிறுத்துகின்றேன் என்பதல்ல இங்கே நிகழ்வது. இங்கே நிகழ்வது இன்னமும் அழுத்தப்பட்ட நிலையிலே, நிகழ்ந்தவற்றுக்கெல்லாம் ஒரு பக்கத்தினை மட்டும் சாடிக்கொண்டு, மறுபக்கத்தினை எவ்வித விசாரணைக்கும் உட்படுத்தாது, அப்படியே நம்பிக்கையை மட்டும் அடிப்படையாக வைத்துக்கொண்டு போவோமென்பது…. வெறும் பகவத்கீதை பாடிக்காட்டும் அறுதிமுழுச்ச்சரணாகதித்தத்துவமாகமட்டுமே எனக்குத் தோன்றுகின்றது. நம்பிக்கை என்பது வெறுமென கேள்வியற்றுத் தலையைச் சிங்கத்தின் வாய்க்குள்ளே வைப்பதாக ஆகாதென நினைக்கிறேன். இப்படியான நம்பிக்கை, நீங்கள் கூறும் அறிவுசார்ந்த இறைமைக்குட்படாது. கடந்தகாலத்தின் மழைப்பொழிவுகளை வைத்துக்கொண்டே, எதிர்காலத்தினை எதிர்கூறமுடிகின்றது.நம்பிக்கையைமட்டும் வைத்துக்கொண்டால், அறிவியலும் ஏரணமும் தேவையில்லை; வெறும் சந்திமரத்தடிக்கிளிச்சாத்திரியாரின் பறவை இழுக்கும் ஓலையே மழைவீழ்ச்சியைச் சொல்லப்போதுமானதாகிவிடுமே! இத்தனைநாட்கள் புரியாமலிருந்ததற்குப் புலிகள்தான் காரணமா? இன்றைக்கு நம்பிக்கை துளிர்விட்ட நேரத்திலே எத்தனை மறுபக்கத்திலிருந்து இப்பக்கத்துப்பார்வைகளிலே இருக்கக்கூடிய நியாயங்களையும் பயங்களையும் புரிந்துகொண்டிருக்கின்றார்கள்? அல்லது, புரிவார்களென்ற நம்பிக்கை உங்களுகிருக்கின்றது? இதனை நீங்கள் முதிர்ச்சியினை என்பது – சொல்வதற்கு மன்னிக்கவேண்டும் – உங்கள் முதிர்ச்சியின்மையைத்தான் காட்டுகின்றது. திரிபரசியல் இங்கே செய்கின்றவர்கள் யார்? “விடுதலைப்புலிகள் தலித்துகளையும் கம்யூனிஸ்டுகளையும் அடக்கி ஒழித்துத்தள்ளினார்கள்” என்று சொற்களை மிகநேர்த்தியாக விற்பனைக்கேற்பத் தேர்ந்து இந்திய ஆங்கிலப்பத்திரிகைக்குச் செவ்விகாணும் ஒருவரைவிடவா திரிபரசியலை நாம் எம் கண்முன்னே நிகழ்த்திவிடமுடியும்? இப்படியான ஒருவர் இம்மகாநாடு நடந்தேயாகவேண்டுமென்கின்றபோதுதான், 200% எனக்கு இம்மகாநாடு ஸ்ரீலங்கா அரசின் கோரமுகத்துக்குக் காப்பிடும் திரிபரசியலின் நீட்சியாகத் தோன்றிப் பயமுறுத்துகின்றது.
இலங்கை இனங்கள் ஒன்றுபட்டுப்போவதிலோ இலக்கிய, சளாப்பிய, சல்லாபக்கூட்டங்கள் நடப்பதிலோ எனக்கேதும் வருத்தமில்லை; மகிழவேண்டியவிடயமே. ஈழம் என்று பிரிந்துதான் விடுதலை என்றில்லை; புவியரசியற்காரணங்களாலே என்றும் அது நிகழுமென்றும் நான் எதிர்பார்த்ததில்லை. சொல்லப்போனால், அந்நாட்டிலே நான் வாழப்போவதுமில்லை. ஆனால், கோடரி கொண்டு வெட்டிய கைப்புண்ணுக்கு மருந்திடாது, அழகிய காப்பினைப் போட்டு அழகுபார்ப்பது நல்லுள்ளத்தின் செயலென நம்பமாட்டேன்; அஃது என்னைப் போன்றவர்களின் முதிர்ச்சியினமை என்றால் இருந்துவிட்டுப்போகட்டும். இழைக்கப்பட்டவற்றுக்கு உண்மையறிதலில்லாது இன்னமும் அழுத்திக்கொண்டு இணைந்து பேசிப் பரிமாறிப்புரிந்துகொள்வோமென்பது எம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதாகும். இதுதான் நம்பிக்கை வளர்க்கும் முதிர்ச்சியான செயற்பாடென்றால், அறிவியல்சார் வருமழை எதிர்கூறுவானாக நான் முதிர்ச்சியற்றே இருக்கவிரும்புவேன் 🙁 தென்னிலங்கை மக்களுக்குப் போய்க் கன்னியாய், குருநகர், நாவற்குழி, மணியம்தோட்டக்குடியேற்றங்களைப் பற்றிப் புரியவைத்துப் பிரச்சனைகளைத் தீர்ப்போமென்றோ, சர்வதேசத்தமிழ் எழுத்தாளர் மகாநாட்டிலே சிங்கள இலக்கியவாதிகளை அரைமணிநேரம் கூட்டிப் பண்பாட்டுப்பரிவர்த்தனையிலே எல்லாம் புரியவைப்போமென்றோ நம்பிக்கை கொள்ளும் முதிர்ச்சி என்னிடமிருக்கமுடியாது..
மாநாடு நடப்பதால் குருதிசிந்துவதற்கான இன்னொரு நிர்ப்பந்தம் இல்லாதொழியுமென்பது நிகழுமென நம்பிக்கை தர முன்னாதாரத்துடன் சொல்லுங்கள். நிச்சயமாக சொல்கின்றவர்களுன் அப்படியே ஒத்துக்கொள்வேன். அப்படியான என் வாழ்விலே காணாச் சமரசம் உலாவுமிடமே எனக்குமான கனவென்பேன்; எல்லோருக்குமான கனவென்பேன். குருதி சிந்தாதிருத்தல் என்பது முக்கியமானதே. ஆனால், நாம் தவிர்ப்பதனாலே மட்டும் ஏதோ வகையிலே குருதி சிந்தும் நிர்ப்பந்தம் ஒழிந்துவிடுமா? வேண்டுமானால், சிறிதுகாலத்துக்கு ஒளிந்துவிடலாம். தமிழீழக்கனவென்பதெதையும் நான் விற்கவில்லை; விற்கவும் போவதில்லை. அதற்கான ஆயுதக்கிட்டங்கிகளிலே கனவுகளைப் புதைக்கவுமில்லை. ஆனால், சுயநிர்ணயமென்பதும் சமநிலையிலே சகமனிதனைப்போல வாழ்வதென்பதும் மிகவும் அவசியமானது. நான் பேசும்மொழிக்காக நான் தண்டிக்கப்படும்போது, நான் பிறந்த என்னிடம் என்னிடமிருந்து எப்போதும் கவரப்படலாமென்கிறபோது, குடியேற்றங்களை நியாயப்படுத்திக்கொண்டு பரிவர்த்தனைப் பரிமாற்றங்களைச் செய்வது குருதியைச் சிந்தச்செய்யாது, இனி வரப்போகும் என் குழந்தைகளுக்குச் (‘என்’ என்றால் மற்றவர்கள்போல அமெரிக்காவிலிருக்கும் உன்னுடையதா என்று கேட்கமாட்டீர்களெனத் தெரியும்) சரியானதைச் செய்யுமா? செய்தவற்றின் நியாயங்களை நியாயமாகக் கேட்காது, இன்னும் அழுத்திக்கொண்டு பேச்சுப்பரிவர்த்தனை செய்கின்றவர்களிடம் எனக்குப் பெற என்ன ‘ஞானம்’ இருக்கப்போகின்றது? இன்று குருதி சிந்தாது என்பது சரி; ஆனால், சிந்திய குருதிக்கான சரியான கேள்விகளைச் சம்பந்தப்பட்ட அத்தனை பேரிடமும் நிறுத்திக்கேட்காது, 100% பழியை ஒருவரிடம் போட்டுவிட்டு, 200% மற்றைய தரப்பினை மறைமுகமாகக் காப்பாற்றும் செயலுக்கு எவ்விதம் துணை போவது? இதைப் புரிந்து கொள்ளப் புதிய சிந்தனைகளை ஏற்படுத்திக்கொள்ளும் மேதமையும் தேவையில்லை. ஸ்லோவேனியப்புதுச்சிந்தனையாளர்களைப் பின்பற்றவும் தேவையில்லை. இருக்கும் பட்டற்றிவினைச் சிறப்பாகப் பயன்படுத்துதலே போதுமானதெனப்படுகின்றது.
மீதிப்படி, இலக்கியச்சந்திப்பு என்பது கொழும்பிலே நிகழ்ந்தாலென்ன, ரொராண்டோவில் ஓடினாலென்ன, சென்னையிலே மிதந்தாலென்ன, பிரான்ஸிலே தவழ்ந்தாலென்ன, தான் தோன்றிமந்திகளின் மாந்தோப்பில் மாந்திக்குதிக்கும் களியென்பது என் தனிநம்பிக்கையாதலால், சொல்வதற்கேதுமில்லை.அடுத்தவன் விடாய்க்கு ஒரு கோப்பை தண்ணீரும் கொடுக்க வக்கணையற்ற இலக்கியம் தன் திமிர்த்த நானுக்கும் அடங்காவிடாய்களுக்கும் சொட்டு நிரப்பமட்டுமே உத்தமப்படுவது இலக்கியசந்திப்பு.
என் கருத்து; திணிக்கவில்லை; ஆனால், இப்படித்தான் விமர்சனபூர்வமாக அணுகமுடிகின்றது; நான் விடுமுறைக்காக அப்போதும் போகவில்லை; இப்போதும் போகவில்லை; இனிமேல் போகமாட்டேன் என்று அறிக்கையும் விடப்போவதில்லை; இலங்கையிலே முதலீடிடக் கையேதும் நிதியுமில்லை. அதற்காக இத்தனை நாள் புலிகளைக் கையைக் காட்டிக் கொண்டிருந்துவிட்டு அடங்கிய இந்தியதேசியப்புளிகளைப்போலவோ, மாற்றுக்கருத்துக்கு மாற்றுடையில்லாமல், இன்னமும் செத்தபுலிவாலிலே வரியிலே சிதிலம் சுரண்டி நாவற்கிளை சாய்த்திருக்கும் இன்னமும் ‘முன்னைய புலி உறுப்பினர்’ அடைப்பம் பெயர் முன்னிடும் காயசண்டிகைகளைப் போலவோ விற்றிருப்பவர்கள்போலவோ சொல்கட்சி சார்ந்து சாயாது பந்தாடிக்கொண்டிருக்கவும்போவதில்லை.
இயன்றவரை கடந்த ஈராண்டுகளாக நானும் இப்படித்தான் இலாயக்கற்றவனென எஃதெப்படியோ நமக்கென்னெண்டிட்டுண்டிருமென்று தவிர்த்துக்கொண்டிருப்பேன். எப்படியாவது, எங்கேனும் உள்ளே ஓர் அச்சிலிசுக்குதிநரம்பு மேதமையாக இழுத்துக்கொள்ளும் 😉
நாம் நிற்றல் பெரும்பான்மையற்ற பொழுதெல்லாம் உண்மையிலே பேச்சின்றியிருப்பது பெருநிம்மதி… என்ன, ‘பேசவேண்டிய நேரத்திலே பேசாமல் விட்டுவிட்டோமே’ என்று பிறிதோர் அவப்பொழுது மீள்தோன்றி நெருங்காலம் நெருக்கியறுக்கும். அதனாலே, அச்சிலிச்சுக்குதிநரம்பு நெம்ப ஆடவேண்டியதாகின்றது 🙂
அவ்வளவே.
http://wandererwaves.blogspot.com/
ஒரு காரியம் திட்டமிடப்படுகிறது. அதன் பின்னால் தவறான நோக்கங்கள் உள்ளதாகச் சிலர் கூறுகின்றனர்.
திட்டமிட்டோர் சார்பாக விளக்கங்கள் தரப்படுகின்றன. காரியம் திட்டமிட்டபடி நடந்தால் விளைவுகள் சில கேடாக அமையலாம் என அவை எண்ணத் தூண்டுகின்றன.
ஒருவர் மேலும் விளக்கங்களைக் கேட்டுத் திட்டமிட்டோரை விசாரிக்கிறார்.
வேறு சிலர் திட்டமிட்டோரக்குத் தீய நோக்கங்கள் உள்ளதாகக் குற்றஞ் சாட்டுகின்றனர்.
ஓரிருவர் அக் குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்களைக் கோருகின்றனர்.
அக் காரியம் தவறான வழியில் போகாதிருக்க வழி தேடுமாறும் கோருகின்றனர்.
ஏந்த ஆதாரமுமின்றித் தனிமனிதர் மீது குற்றஞ் சாட்டுவோரிடம் ஆதாரங்களைக் கேட்டுத், தவறுகள் நேராது தவிர்க்குமாறு வேண்டுவோருக்கும் சிலர் நோக்கம் கற்பிக்கின்றனர்.
(திட்டமிட்டோரிடம் மேலதிக விளக்கம் கேட்டவர் குற்றஞ் சாட்டியோரையும் விரிவாக விசாரிக்காமை ஒரு குற்றமாக்கப்பட்டு அதற்கும் நோக்கம் கற்பிக்கப்பட்டுள்ளது.)
இவ்வாறு முறையாக விசாரிப்பதையும் தவறு நேராமல் தவிர்க்கும் விருப்பையும் தீய நோக்குடைய செயல்களாகக் காணும் போக்கு எனக்கு ஐயரின் கட்டுரையின் சில பகுதிகளை நினைவூட்டியது.
அதை விட, 1995இல் முஸ்லிம்களின் நோக்கங்கள் பற்றிய பிரகடனங்களையும் ஆதாரங்கள் கேட்டோர் மீது சுமத்தப்பட்ட பழிகளையும் நினைவூட்டியது.
எதையுமே விசாரியாமல் பழிகூறிக்கொண்டு போவோர் எல்லாரும் ஒரே “பொது நோக்கத்துடன்” தான் அவ்வாறு செய்கிறார்களா என்பதை, அவர்களுள் நிதானமாகச் சிந்திப்போர் சிலரேன் கவனத்தில் எடுப்பார்களா?
ஏப்படியாயினும், கவனமான விசாரணைகளைத் தவிர்க்கும் போக்கும் விசாரணைகளைக் கோருவோருக்குக் களங்கங் கற்பிக்கும் போக்குங் கொண்ட ஒரு அணுகுமுறை நாம் மறந்துபோக விரும்பும் ஒரு காலத்துக்கே நம்மை மீளக் கொண்டு செல்லலாம் என்பதே என் அச்சம்.
இதற்கும் மேல் இவ் விடயம் பற்றி மேலும் கூற எதுவுமில்லை.
எனினும் வேறு பொதுப்பட்ட வினாக்கள் உள்ளன.
அவற்றை இதனுடன் குழப்பாமற் பின்னர் வேறாக எழுப்புகிறேன்.
xxx,
இங்கு யாரும் யாரையும் குற்றம் சாட்டவில்லை. முன்வைக்கப்பட்டதெல்லாம் இந்த மநாட்டின் அரசியல் பின் விளைவுகள் குறித்து மட்டும் தான். அதில் என்ன தவறிருக்கிறது. நீங்களோ நானோ ஒரு கருத்தை முன்வைத்தால் அதன் எதிர் விளைவுகளை வாசகர்களும் எழுத்தாளர்களும் ஆராய்வதில்லையா? “சர்வதேச” எழுத்தாள மாநாட்டைப்பற்றிப் பேசுவதற்கு மட்டும் ஏன் தடைவிதிக்கிறீர்கள்? முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் குறித்து எதிர்வினையாற்றும் யாருமே பேசியதாகத் தெரியவில்லை. மாறாக மு.மயூரன் போன்றோர் அவதூறுகளையும் குற்றச்சாட்டுக்களையும் முன்வைக்கின்றனர்.
அருள் எழிலன் என்ற ஊடகவியாளரை சமூகவிரோதக் கருத்துக்களுக்கு உரியவர் என்று மு.மயூரன் என்பவர் மட்டுமே எந்த அறமுமற்ற அவதூறுக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். அவர் தனது இன்னோரன்ன எஜமானர்களிடம் கற்றுக்கொண்ட விமர்சன முறையாக இருக்கலாம்.
தவிர, நீங்கள் அரச ஆதரவாளர்களா இல்லையா என மாநாட்டு அமைப்பாளர்களிடம் மட்டுமல்ல என்னிடமும் உங்களிடமும் கேட்பதில் எந்தத் தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இவை அவதூறுகள் இல்லை கோட்பாடு சார்ந்த பிரச்சனைகள்.
(முன்னர் போட்ட இரு பின்னூட்டங்களிலும் குழப்பமான எழுத்துப்பிழைகள் நேர்ந்துவிட்டதால் அவற்றை நீக்கிவிடவும்.)
/மக்கள் விரோதப்போக்குடைய அரசியல் கருத்துடையவர்கள்/
என்பதற்கும்
/சமூகவிரோதக் கருத்துக்களுக்கு உரியவர்/
என்பதற்கும் அடிப்படையில் நிறைய வேறுபாடுகள் உண்டு.
புலிகளது ஆயுத எதிர்ப்பு முற்றாக அழிக்கப்பட்ட இன்றை நிலையிலும் புலி அரசியலைத் தொடர்வதனை வேண்டும் கருத்துக்களை நான் மக்கள் விரோதப் போக்குடைய கருத்துக்களாகப் பார்க்கிறேன். அது என்னுடைய தனிப்பட்ட அரசியற்பார்வை. அதனடிப்படையில் நான் அருள் எழிலனின் கருத்துக்களை அப்படி விமர்சிக்கிறேன். இங்கே அவரது கருத்துக்களை மட்டுமே நான் சொன்னேன். அக்கருத்துக்கள் எவை என்று ஆதாரம் கேட்டால் எனக்கு ஏராளமான மேற்கோள்களைக் காட்ட முடியும்.
நான் இங்கே போட்ட பின்னூட்டங்களில் இருந்து ஒரு வரியை எடுத்து அதிலிருந்து புதிய விவாதம் ஒன்றை உருவாக்கி புதிய திசைகளில் நகர வைப்பதாக உங்களிந்தப்பின்னூட்டம் இருக்கிறது.
அந்தப்பின்னூட்டத்தில் நான் என்ன சொல்ல வந்தேன் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றே எதிர்பார்க்கிறேன். அதில் அருள் எழிலனுடைய பெயர் இருப்பது உங்களுக்கு உடன்பாடில்லையானால் அதை விட்டுவிட்டு எஸ் போ வின் பெயர் மட்டுமே இருப்பதாக வைத்துக்கொண்டு படித்தாற்கூட நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது புரியும்.
/அவர் தனது இன்னோரன்ன எஜமானர்களிடம் கற்றுக்கொண்ட விமர்சன முறையாக இருக்கலாம்./
என்னுடைய எஜமானர்கள் யாவர் என்று நீங்கள் ஊகிக்க விரும்புகிறீர்கள்? 🙂
நான் கூலிக்கு வேலை பார்க்கும் நிறுவன முதலாளி கூட அந்தளவு எஜமானராக எனக்கு இருக்க முடியவில்லை.
‘அவர் தனது இன்னோரன்ன எஜமானர்களிடம் கற்றுக்கொண்ட விமர்சன முறையாக இருக்கலாம்.’
நாவலனின் இந்த ஊகம் பெரும்பாலும் விமர்சகராக சிலரால் கருதப்படும் சி.சிவசேகரத்தை கருத்தில் கொண்டு கூறியது போல் தொpகிறது. பொதுவாக தான் கூற வந்த கருத்தை மிகவும் வெளிப்படையாக கூறாமல் சுற்றி வழைத்து மூக்கைத் தொடும் எதிலும் பட்டும் படாமலும் இருந்து கொள்ளும் முறையை தனது விமர்சன ஆற்றலாகக் காட்டிக் கொள்ள முயலும் அவாpடமிருந்தே மகாநாட்டை எதிர்ப்பும் இல்லை ஆதரவும் இல்லை ஆனால் அந்த மகாநாட்டின் ஏற்பாட்டாளர்களில் மிகவும் முக்கியமானவரான வடகிழக்கு எங்கும் சென்று தங்கள் முயற்சிக்கு ஆதரவு திரட்டி கூட்டங்கள் நடாத்திய தற்போதும் மகாநாட்டிற்கான கடடுரைகளை சேகாpத்துக் கொண்டிருக்கும் தி.ஞானசேகரனை பேட்டியும் எடுப்போம் ஆனாலும் எனக்கும் மகாநாட்டிற்கும் ஒரு தொடர்பும் இல்லை அவர்களில் ஒருவருடனும் எனக்குத் தொடர்பும் இல்லை என்பது சிவசேகத்தின் பாணியை நாவலுனுக் நினைவூட்டியிருக்கலாம். இன்றும் சிவசேகரம் த.தே.கூட்டமைப்பு குறித்தும் அதன் தலைவர் சம்மந்தர் குறித்தும் மிகவும் மட்டமான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் ஆனால் எங்குமே சிவசேகரம் என்று துனிந்து தன்னை அடையாளப்படுத்தும் விமர்சனத் திராணி அவாpடமில்லை. இந்த வகை முதுகெலும்பற்ற விமர்சன முறைமையொன்று சில நபர்கள் மத்தியிலும் கானப்படுகிறது.
‘மக்கள் விரோதப்போக்குடைய அரசியல் கருத்துடையவர்கள்/
என்பதற்கும்
/சமூகவிரோதக் கருத்துக்களுக்கு உரியவர்/
என்பதற்கும் அடிப்படையில் நிறைய வேறுபாடுகள் உண்டு.
புலிகளது ஆயுத எதிர்ப்பு முற்றாக அழிக்கப்பட்ட இன்றை நிலையிலும் புலி அரசியலைத் தொடர்வதனை வேண்டும் கருத்துக்களை நான் மக்கள் விரோதப் போக்குடைய கருத்துக்களாகப் பார்க்கிறேன்.
”
புலிகள் சாhந்த அரசியலை தொடரும்படி கூறுவது மக்கள் விரோதத்தினை பிரதிபலிக்கிறது ஆயின் சமூக விரோதக் கருத்துள்ளவர்கள் எவ்வாறான கருத்தினை பிரதிபலிப்பர். இங்கு பொpய வெறுபாடுகளை எல்லாம் கண’டு பிடிக்கத் தேவையில்லை/ மக்கள் விரோத கருத்துக்களை பிரதிபலிப்பவர்கள் சமூக விரோதக் கருத்துக்களையும்தான் கொண்டிருப்பர். தவிர எந்த மக்கள் என்ன கருத்துக்கள் என்பது அடுத்த பிரச்சனை. ஒருவர் வெளிப்படுத்தும் கருத்துக்ளைக் கொண்டு அவரை ஒரு மக்கள் விரோதி என்று சடுதியாக முடிவெடுப்பது அறிவுக் குறைபாடொன்றின் வெளிப்பாடே. அருள் எழிலன் சமீபத்தில் லண்டன் நிகழ்வில் மக்களை விடும்படி தாம் புலிகளை கூறியிருக்க முடியாது என்னும் தனது சொந்தக் கருத்தொன்றை வெளிப்படுத்தியிருந்தார். அதனை அடியொற்றி சோபாசக்தி உடனே கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதன் தொடர்ச்யாகவே சிலர் அளுள்எழிலனை ஒரு மகக்ள் விரோதி என்று சொல்ல விழைகின்றனர். அருள் எழிலன் புலிகள் அற்ற சூழலில் அந்தக் கருத்துக்களை தவிர்த்திருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு கூறிவிட்டார். அதற்காக உடனே அவரை ஒரு மக்கள் விரோதி என்பது நோமையான அணுகுமுறையல்ல. அருள் எழிலன் அல்ல ஒருவேளை பரமசிவனே கீழிறங்கி வந்தாலும் இனி புலி அரசியலை தொடர முடியாது. ஆனால் புலம்பெயர் சூழலில் உள்ள ஒருசிலர் தங்களின் லாபங்களுக்காக அவ்வாறு கதைக்கின்றனர். அவ்வறானவர்கள் அங்கம் வகிக்கும் நிகழ்வுகளில் பங்கு கொளளும் அருள் எழிலன் போன்றவர்கள் அவர்களை திருப்திப்படுத்த முயல்கின்றனர். இதுவும் பிழையான ஒன்று. இதனை இனிவரும் காலத்திலாவது அருள் எழிலன் போன்றவர்கள் கவனம் கொள்ள வேண்டும். அடுத்த விடயம்> ஒரு தோல்வியடைந்த அரசியல போக்கை மீண்டும் வழிமொழியும் நபர்களும் ஒரு சமூகத்தில் இருப்பர். இது உலகின் ஏனைய பகுதிகளிலும் கானப்பட்ட ஒன்றுதான். இன்றும் பிந்திரன்வாலே வருவார் என்று கூறும் அகாலி தேசியவாதிகள் இருக்கின்றனர். அப்படியான பிரபாகரன் விசுவாசிகள் நமது சசூழலில் இருப்பதும் ஆச்சிரியமான ஒன்றல்ல. அது அதீத விசுவாசம்> முன்னர் ஏற்படுத்தப்பட்ட நம்பிக்கையின் தொடர்ச்சி இப்படியானவைகள் ஏற்படுத்தும் ஒரு வகை விரக்தி மனப்பாண்மை என்பவற்றால் நிகழும் ஒன்று. ஆனால் இவ்வறானவர்கள் காலப்போக்கில் தாங்களாகவே ஒதுங்கிக் கொள்வர். அல்லது தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வர். இவர்கள் அனுதாபத்துடன் நோக்கப்பட வேண்டியவர்கள். இன்றும் பிழைத்துப் போன ஸ்டாலினிய மாவோவாத வகையறாக்களை சிலாகிபபோர் நம்மத்தியில இல்லாமலில்லை. அதற்காக அவர்களை எலலாம் மக்கள் விரோதிகள் என்று நாங்கள் சொல்லத் தயரா. அப்படியானால் இன்று கொழும்பில் இருந்து கட்சிய நடத்தும் பலரை நாங்கள் இந்தப் பட்டியலில் சேர்க்க வேண்டிவரும். யுத்த காலத்தில் மக்களை பற்றி அக்கறைப்படாது புலிகளின் தந்திரம் பற்றி பேசியோர் அனைவரையும் இந்தப் பட்டியலில் சேர்க்க வேண்டிவரும். இதில் அனைத்து ஊடகவியலாளர்களும் அடக்கம். ஆகவே ஒரு விடயத்தை மட்டும் வைத்துக் கொண்டு ஒருவர் பற்றி நாம் முடிவுக்கு வர முடியாது. அவ்வாறு வருதல் அறுவுடைமையன்று.
சினைமாவில் வரும் கடைசிச் சண்டையில் வில்லன் தோற்றூப் போவார் ஆனால் இங் கே அழிக்க வந்த சிவன் யார் என்பதே குழப்பமாக இருக்கிறது.முருகபூபதியும் அவரது கூட்டாளீயும் பாலைவனத்தில் நாற்றூ நடுகிறார்களாம்,அரிசியையும்,பருப்பைடும் மக்களூக்கு அள்ளீ வழங்குவார்களாம்.நாம் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறோம் இது நாற்றூ நடும் காலமல்ல,காற்றூ அடிக்கும் போது விதை நெல்லை தூவ முடியாது என்றூதானே,இது விளங்காமலா இவர்கள் வெட்டி முறீகிறார்கள்.தமிழ்மாறன்.
எனது கருத்தில் சிவசேகரத்தைக் குறிப்பிடவில்லை. அவ்வாறு உங்கள் ஊகங்கள் கலந்த கருத்துக்கள் அமையுமாயின் ஒருவர் மீதான விமர்சனத்தை உங்கள் சொந்த அடையாளத்துடன் முன்வைப்பதே பொருத்தமானது. அவ்வாறன்றெனில் அது அவதூறாகவே அமைய வாய்ப்புண்டு.
இப் பதிலைக் கட்டுரையாளர் என்ற முறையில் இப்போது நீங்கள் குறுக்கிட்டுள்ளதால் எழுதுகிறேன். மற்றப்படி, என் ஆதங்கங்கள் இருந்தவாறே உள்ளன. சொன்னதற்கும் மேல் எதையும் சொல்லத் தேவையுமில்லை.
மேற்கொண்டு இதை இன்னொரு விவாதமாக முன்னெடுக்க நான் விரும்பவில்லை.
இப் பிரச்சனை பற்றிய விவாதத்தில், இங்கு உண்மையிலேயே யாருக்கும் நோக்கம் கற்பிக்கப்படவில்லை என்று நீங்கள் நினைத்தால் தயவு செய்து பின்னூட்டங்களை மீளவும் பார்க்கக் கோருகிறேன்.
ஒருவர் அரச ஆதரவாளரா என்று கேட்பது முக்கியமானதென்றால், வேறு பலவற்றினதும் ஆதரவாளரா எதிர்ப்பாளரா என்ற கேள்விகளும் அதே அளவு முக்கியமானவை.
இவ்வாறான கேள்விகள் தேனீ, தமிழரங்கம், சீரங்கம், தேசம், நிதர்சனம் போன்ற இணையத் திருத்தலங்களின் சிறப்பு.
கேள்விகள் எங்கே எவ்வாறு எழுப்பப்படுகின்றன என்பது முக்கியமானது. கேள்விகள் எதைச் சுட்டிநிற்கின்றன என்பதும் முக்கியமானது. கேள்விகளின் நோக்கம் அவை கேட்கப்படும் இடம், விதம், தொனி எனப் பலவற்றிலும் புலனாவது.
நான் தொடக்கத்திற் கூறியது சாத்தியப்பாடுகள் நோக்கங்களாகக் காட்டப்பட்டமையைப் பற்றி மட்டுமே.
இங்கே நடப்பது, முருகபூபதியினதும் அவரது கூட்டாளிகளதும் நோக்கம் பற்றிய விவாதமாகியமையாலேயே என் கருத்துக்களைக் கூற நேர்ந்தது. இதுவரை முருகபூபதியுடன் நான் கடிதத் தொடர்பு கூடக் கொண்டிருந்ததில்லை. ஞானசேக்கரனுடைய “அரசியலின்மையின் அரசியல்” பற்றிப் பகிரங்கமாகவே பலரும் கடிந்து பேசியுள்ளோம். அவருடன் எனக்கு எவ்வித உறவுமிலை.
அவர்களது “அரசியல் தவிர்ப்பு” ஆபத்தானது என்பதற்கு மேலாக அவர்களது முயற்சி பற்றி ஆதாரபூர்வமாக என்னால் எதையும் குறைகூற இயலவில்லை.
என்னுடைய பதிலை வைத்து என்னுடைய நிலைப்பாட்டை விளங்கிக் கொள்ள இயலாதவர்களின் என்னைப் பற்றிய கேள்விகட்குப் பதில் சொல்ல முற்படுவது என்னையே நான் குற்றவாளிக் கூட்டில்நிறுத்துவதாகும்.
இது இயக்கப் பாரம்பரியத்துக்குரிய ஒன்றாக இருக்கலாம். ஒரு பொது விவாதக் களத்துக்கு உரியதல்ல.
தயவு செய்து, அருள் எழிலன் பற்றி மயூரனின் கருத்தை இவ் விவாதத்துக்குள் ஏன் கொண்டுவர வேண்டுமோ தெரியவில்லை.
மயூரன் அருள் எழிலன் பற்றித் தவறாக எதையும் கூறியிருந்தால் இரண்டு காரியங்கள் செய்யலாம்: ஓன்று அவரிடம் ஆதாரங்களைக் கேட்பது. மற்றது அவரது ஆதாரமற்ற கூற்றுக்களை மறுப்பது.
அதிசயிக்கத்தக்க வகையில் விவாதங்கள் வேறுதிசை திருப்பப் பட்டு விட்டன. ஊகங்களினடிப்படையில் சம்பந்தப்படாதோரின் பெயர்கள் எல்லாம் சரமாரியாக வந்து விழத்தொடங்கியுள்ளன. மயூரன் கதை தானாகவே பொல்லைக்கொடுத்து அடிவாங்கிய கதையாகிவிட்டது. மாநாட்டு அமைப்பிற்கும் தனக்கும் எதுவித சம்ம்பந்தமுமில்லை என்று பகிரங்கமாகக் கூறியும் நம்மவர்கள் நாலுசாத்துச்சாத்தியே தீருவோம் என்று வேகம் கொண்டுள்ளார்கள். மயூரனைமட்டும் திட்டித்தீர்ப்பதால் மாநாடு நின்றுபோகுமென்றாலோ, அல்லது மாநாடு பரிசீலனைக்குள்ளாக்கப்படும் என்றாலோ இங்கு எழுப்பப்படும் கேள்விகள் சரி. ஆனால் தனக்கு மாநாட்டு அமைப்புப் பற்றி எதுவுமே தெரியாது ஆனாலும் அப்படி ஒரு மாநாடு நடப்பதால் தப்பில்லை, தனக்கு மகிழ்ச்சியே என்று அப்பாவியாகக் கூறும் அவரை நொந்து பலன் என்ன? என்று எனக்குப் புரியவில்லை.பத்திரிகையாளர்கள் பலர் கொல்லப்பட்டும் பலர் உயிராபத்துக்கருதி புலம் பெயர்ந்திருக்கும் இந்தத் தருணத்தில் மாற்றுக் கருத்து ஊடகங்கள் இலங்கையில் தாக்கியளிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன. .படைப்பாளிகள் கலைஞர்கள் ,செய்தியாளர்கள் ஊடகவியலாளர்களென எவருக்குமே பாதுகாப்பில்லா நாடென மனித உரிமை நிறுவனங்கள் சான்று பகர்கின்றன.யுத்தத்தின் கோரம் சிதைத்த தமிழுறவுகள் வாழ்வழிந்து நடைப்பிணங்களாகிப் போயுள்ளனர். பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் அனாதைகளாகியுள்ளனர் பல்லாயிரம் பெண்களின் வாழ்வு சிதைக்கப்பட்டு விதவைகளாக்கப் பட்டுள்ளனர் இந்நிலையில் இத்தமிழ் மாநாட்டால் பயனுண்டா?? என்கின்ற கேள்வியைப் பலர் ஏற்கனவே கேட்டு விட்டார்கள்.அமைப்பாளர்களின் தரப்பின் தெளிவற்ற பதில்களிலிருந்து இதுவரை எதனையும் புரிந்து கொள்ளமுடியவில்லை. இந்நிலையில் கனடிய தேசத்திலிருக்கிற தமிழர் நிறுவகம் ஒன்று இம்மாநாடு குறித்த எதிர்வினை ஒன்றிற்கு அழைப்பு விடுத்திருக்கிறது.மகிழ்வைத்தருகிறது. ஆனாலும் இலங்கையின் ஜனநாயக மறுப்புத்தொடர்பான கருத்துப்பகிர்வு என்ற அமர்வின் கீழேயே இது நடைபெறப் போவதாக இனியொரு அறிவித்தல் கூறுகிறது.இத்தனை அவலம் தமிழருக்கு நடந்த பிறகு இலங்கையின் ஜனநாயக மறுப்பினைக் கருத்திலே கணிக்க முயல்வது என்பது வேடிக்கையானதும் வேதனையானதுமாகும்.தமிழருக்கு இனி அந்த அவசியம் இல்லை எனவே நான் கருதுகின்றேன். இம் மாநாட்டின் மூலம்தான் இலங்கையரசின் ஜனநாயக மறுப்பை இவ்வமைப்புக் கண்டு கொண்டதென்றால்அப்படியாயின் இத்தனைகாலமும் கண்மூடிக்கிடந்ததா இவ் அமைப்பு????????????????????????.
சர்வதேந தமிழ் எழுத்தாளர் மாநாடு தொடர்பான சபாநாவலன் அவர்களின் கட்டுரை மக்கள் நலன் சார்ந்த ஒரு அக்கறையாளனின் கருத்தாக வெளிப்பட்டுள்ளது. இக் கட்டுரையாளருக்கு நன்றி. அவரின் தார்மிகக் கோபம் நியாயமானது.ஆனால் இந்த மாகாநாடு தொடர்பாய் கருததுச் சொல்வோரில் ஒரு சாரார் மிகவும் தேர்ந்த புத்திசீவி சந்தர்ப்பவாத கருத்து நிலையோடு தங்கள் நிலைப்பாட்டை தெரியப்படுத்துகின்றனர். குறிப்பாக மூன்று எக்ஸ் அடையாளமிட்டு எழுதும் அன்பர் மாநாட்டை எதிர்ப்போரை நோக்கி பல்வேறு கேள்விக் கணைகளை எழுப்புவதன் மூலம் அவரின் சாதுரியமாக மாநாட்டை ஆதரித்து நிற்கும்போக்கை காணக்கூடியதாக உள்ளது. இந்த எழுத்து முறைமை ஒரு கைதேர்ந்த அரசியல்வாதிக்கு வாய்க்கப்பெற்றதாகும். இது இந்த அன்பருக்கும் கிடைக்கப்பெற்றமை அவர் செய்த பாக்கியமே. இப்படித்தான் நமது பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி செம்மொழி மாநாடு தொடர்பாய் இந்த அன்பரைப்போன்று சாதுரியமாக வார்த்தை யாலங்களால் மாநாட்டை நியாயப்படுத்தி இறுதியில் பேராசிரியர் அம்பலமாகி பரிதாபப்பட்டு நின்றதை நாம் கண்டோம். எதிர்காலத்தில் இந்த மூன்று எக்ஸ் அன்பரும் இதே நிலையை அடையக்கூடிய சாத்தியப்பாடுகள் இருப்பதுபோன்றே தென்படுகின்றது.
சபா.நாவலனின் ஆக்ரோஷம் வெறும் உணர்ச்சித் தூண்டலாகவே இருக்கிறது.
இன்றைய யதார்த்தம் புரியாமல் கொதிக்கிறார். அவர் பத்திரமாய் வெளிநாடு ஒன்றில் குடியிருக்கிறார் என்று நம்புகிறேன். இலங்கையில் அநீதி ! அநீதி ! என்று குதிக்கிறவர்கள் இலங்கையில் உள்ள தமிழர்கள் என்ன விதமாய் யோசிக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்வதேயில்லை. இன்று அவர்களுக்கு தேவை: சகஜ நிலை. அமைதியாய் முடிந்தளவு ஒற்றுமையுடன் வாழ நினைக்கிறார்களே தவிர எந்த சிக்கல்களிலும் மாட்டிக் கொள்ளவும் விரும்பவில்லை. அரசு என்பது பேயாய் இருந்தால் என்ன? தாயாய் இருந்தால் என்ன? எதுவானாலும் நிம்மதியாய் இருக்கவிட்டால் போதும். இதுதான் அவர்களின் நிலை.
முருகபூபதி எழுத்தாளர் விழா நடத்துகிறார். போக விரும்புபவர்கள் போகட்டும். மற்றவர்கள் ஒதுங்கி கொள்ளட்டும். சபா. நாவலனுக்கு மற்றவர்களை போகக்கூடாது என்று சொல்ல என்ன உரிமை இருக்கிறது? இது புலிகள் நடத்திய காட்டு தர்பார் மாதிரி அல்லவா இருக்கிறது?
சேகரன் நம்மை ஊமையாய் இருங்கள் பேசாதீர்கள்,செவிடராய் இருங்கள் கேட் காதீர்கள், குருடராய் இருங்கள் பார்க்காதீர்கள் என் கிறார்.நமக்கு வந்து ஆணயிட்டு சினம் மூட்டுகிறார்.முருகபூபதியின் கதைகளூக்கும் அவர் இப்போது நடந்து கொள்வதற்கும் என்ன சம்பந்தம் சொல்ல முடியுமா? நமக்கான் குரலாய் நாமே ஒலிக்காது போனால் நாம் எழுதுவது யாருக்காக?
எம் மக்கள் புலத்திலும் தளத்திலும் அடிமையாக இருக்க என்றும் விரும்பியவர்கள் அல்ல. நீங்கள் கூறுவதில் உண்மையிருக்கிறது ஆனால் அது தற்காலிக விரக்தி அதை வைத்து கொண்டு நீண்ட கால திட்டமிடல்களை சிந்திப்பதற்கும் அதனை செயற்படுத்த தருணம் வரும்போது பிரயோகிக்கவும் தற்போது புலத்தில் உள்ளவனால்தான் முடியும். நீங்கள் புலத்திலுள்ள வியாபாரிகளால்தான் ஏமாற்ற பட்டீர்கள் இங்குள்ள போராட்ட உணர்வாளர்களால் அல்ல .
ஆனால் சிங்கள பேரினவாதம் அவர்களை நிம்மதியாக இருக்கவிடவில்லையே! ஏதோ மக்களின் பிரதிநிதி போல் இங்கு எழுதும் நீங்கள் எப்படி இங்கு கருத்தெழுதும் சுதந்திரத்தை கையில் எடுத்துக்கொண்டீர்களோ அதேபோல்தான் நாவலனுக்கு மாத்திரமல்ல தனிழனின் நல்வாழ்க்கையில் அக்கறையுடைய ஒவ்வொரு தமிழனுக்கும் பின்னூடம்விடும் உரிமையிருக்கிறது.
“அவர் பத்திரமாய் வெளிநாடு ஒன்றில் குடியிருக்கிறார்” என்ற வாதம் வெறும் வெட்டிப்பேச்சு. உள்நாட்டில் ஆபத்துக்குள் இருந்துதான் கருத்து எழுதமுடியும் என்பது வெரும் பெருமை. அப்படி எழுதுபதென்றால் முழுப்பெயர், முகவரியுடன் எழுதுங்கள்.