பாதுகாப்பு சபையை அமை ப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை அடுத்த வாரம் மேற்கொள்வதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியின் பிரதிநிதிகள் திங்கட்கிழமை அலரி மாளிகையில் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியபோதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இப்பேச்சுவார்த்தைகள் தொடர்பாக தேசிய சுதந்திர முன்னணியினர் தெரிவிக்கையில்,
ஜனாதிபதியுடனான சந்திப்பின் முன்னணியில் தலைவரும் எம்.பி. யுமான விமல் வீரவன்ச, பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான நந்த குணதிலக, தேசிய அமைப்பாளர் கமல் தேசப்பிரிய மற்றும் எம்.பி. க்களான பியசிறி விஜேநாயக, அச்சல சுரங்க ????? ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இப்பேச்சுக்களில் ஜனாதிபதி மட்டுமே கலந்துகொண்டுள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்துள்ள விமல் வீரவன்ச எம்.பி. விடுதலைப்புலிகள் தென் பகுதிக்கு கொண்டு வந்த குண்டுகள் அனைத்தும் வெடிக்க வைக்கப்படவில்லை. எனவே எதிர்காலத்தில் சிவிலியன்களை இலக்கு வைத்து அதிபயங்கரமான தாக்குதல்கள் நடத்தப்படலாம்.
எனவே தேசிய பாதுகாப்பு மக்களின் பாதுகாப்பு தொடர்பாக அதிகளவில் கவனம் செலுத்த வேண்டும்.
படையினரின் தாக்குதல்களால் தோல்வியை கண்டு வரும் புலிகள் தென் பகுதியில் தாக்குதல்களை நடத்தி சிவிலியன்களை கெõலை செய்து அதன் மூலம் அரசாங்கத்தின் மீது பேச்சுவார்த்தைக்கான அழுத்தத்தை மக்கள் மத்தியிலிருந்து ஏற்படுத்தவும் ஏ9 பாதைக்கு மாற்றீடாக படையினர் மாற்றுப் பாதையை பயன்படுத்தி மேற்கொள்ளப் போகும் தாக்குதல்களை தடுக்கவும் தென் பகுதியில் மக்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தி அப்பாவித் தமிழ் மக்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டு அதனை சர்வதேச தலையீடுகளுக்கு பயன்படுத்துவது போன்ற முக்கிய விடயங்களை முன்வைத்தே தென்பகுதியில் புலிகள் சிவிலியன்கள் மீது தாக்குதல்களை நடத்துகின்றனர்.
எனவே எதிர்காலத்தில் மக்கள் அழிவுகளை தடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.
அதற்காக சர்வகட்சி பாதுகாப்புச் சபை அமைக்கப்பட வேண்டியது அவசியம் என்றார்.
இது தொடர்பாக இரண்டு மணிநேரம் ஆராய்ந்ததோடு ஜனாதிபதி சர்வகட்சி பிரதிநிதிகளை சந்திப்பதற்கும் இச்சபையை அமைப்பதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளார்.
இதன் ஆரம்பகட்டமாக அடுத்த வாரம் தனித்தனியாக அரசியல் கட்சிகளை சந்தித்து பேச்சு நடத்தவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் என்று சுட்டிக்காட்டினார்