இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுவிப்பது தொடர்பாக, அவரது மனைவி அனோமா பொன்சேகாவுடன் பேச்சு நடத்தியுள்ளார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. நேற்று மாலை இந்தச் சந்திப்பு நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலசின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
முன்னதாக, அவசரமாக லண்டனில் இருந்து திரும்பிய டிரான் அலஸ் நேற்றுக் காலை அலரிமாளிகையில் ஜனாதிபதியை சந்தித்து, சரத் பொன்சேகாவின் விடுதலை தொடர்பாகப் பேசியிருந்தார்.
இதையடுத்தே டிரான் அலசின் வீடு தேடிச் சென்று அனோமா பொன்சேகாவிடம், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பேச்சு நடத்தியுள்ளார்.
அலரிமாளிகையில் நேற்றுக் காலை ஜனாதிபதியுடன் பேச்சு நடத்திய பின்னர் டிரான் அலஸ், நவலோகா மருத்துவமனைக்குச் சென்று சரத் பொன்சேகாவை சந்தித்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சில விவகாரங்களுக்குத் தீர்வு காணப்பட்டவுடன் பொன்சேகா விரைவில் விடுவிக்கப்படுவார் என்று கூறியிருந்தார்.
சில சிறிய விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக இன்று காலை நான் ஜனாதிபதியை சந்தித்தேன். இந்த விடுதலை தொடர்பாக எந்தவொரு தரப்பும் நிபந்தனை விதிக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
இனப்படுகொலையைத் தலைமை தாங்கிய பிரதானமானவர்களுள் ஒருவரான சரத் போன்சேகாவை அமரிக்கா மகிந்தவிற்கு மாற்றாகப் பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறது.
I was very happy to hear the news this morning. Like the late Major C. Lucky Alagama he had also tried to talk to that guy and settle the matter. We can see how important it is for the Sinhalese to bring this carnage to an end. Only in 1999 they put the FTO (Foriegn Terrorist Organisation) label in USA.