முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவினை விடுதலை செய்வதுதொடர்பான பத்திரத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கையொப்பமிட்டு நிதியமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் பந்துல ஜயசேகர தெரிவித்தார். கடந்த 18ஆம் திகதி ஜனாதிபதியினால் கையொப்பமிடப்பட்ட உத்தரவுப் பத்திரம் 21.05.2012 திங்கட்கிழமை நீதியமைச்சிற்கு கிடைக்கப்பெறுமென்றும், அதற்பின்னர் பொன்சேகாவின் விடுதலை தொடர்பில் முடிவெடுக்கப்படுமென்றும் ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
னல்ல விடயம்
very good