இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமை வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் தலைவியான சந்திரிக்கா குமாரதுங்க, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வன்முறைகள் மற்றும் ஊழல் மோசடிகளால் கவலையடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அதனை மாற்றியமைப்பதற்காக தனது ஆதரவாளர்கள் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கையின் நிறைவேற்று ஜனாதிபதியாக 11 வருடகாலம் ஆட்சி செய்த சந்திரிகாவின் பகிரங்கமான இந்த அறிவிப்பு சரத் பொன்சேகாவுக்கு பெரும் உற்சாகத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை உருவாக்கிய சந்திரிகாவின் தந்தையும், சந்திரிகாவின் தயாராரும் இலங்கையின் பிரதமர்களாக ஆட்சி நடத்தியவர்கள்.
இந்த பின்னணியில் சந்திரிகாவின் குடும்பத்துக்கு இலங்கையி்ல் பெரும் அரசியல் செல்வாக்கு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
BBC.
ரனிலுக்கு ஆப்பு வைக்கத்தான் சந்திரிகா ஆதரவோ?செல்லாக் காசாகி விட்ட ரனில்,சரத்தால் வாழ்வு பெறலாமென்று போட்ட கணக்கு தப்பாகிப் போய் விடுமோ?சிறீ லங்கா சுதந்திரக் கட்சியை மீளவும் கைப்பற்றி யு என் பி யையும் கபளீகரம் செய்யும் முயற்சியோ?ஒரு கட்சி ஆட்சிக்கு வித்திடப்படுகிறதோ? நாளை நடப்பதை யாரறிவார்?
சந்திரிகா இத்தனைகாலம் ஏன் தாமதப் படுத்தினார்?மகிந்தாவை மீறீ கட்சியை கைப்பற்ருவதா? விவசாயிகள் வாழ்வில் ஒளீ ஏற்றீயவர் சீறீமா அவரைபோன்றூ சந்திரிகாவால் செயற்பட முடியவில்லை.சுதந்திர கட்சி மகிந்தாவிடம் போய் அது அவரது சொந்தமாகி காலம் கடந்து விட்டது. மகிந்தாதான் வருவார் என்றூ வெள்ளவைத்தையில் இருப்பவர்களூம்நல்லூரில் உள்ளவர்களூம் சொல்லுகிரார்கள்.இங்கிருந்து சரத்தான் என்ரால் அது வேலைக்கு ஆகாது.அப்படி சரத் பொன்சேகா வந்தலால் மகிழ்ச்சியே.
சந்திரிகா ஆதரிப்பது ஏன்?
இப்போது இலங்கையில் காணப்படும் சட்டம், ஒழுங்கு சீர்குலைவும், தேர்தல் தொடர்பான வன்செயல்களும் ஜனநாயகத்துக்கும் ஜனநாயக அமைப்புகளுக்கும் பெருத்த அச்சுறுத்தலாகத் திகழ்கின்றன. நாம் இதுவரை கட்டிக்காத்துவந்த மரபுகளுக்கும், அடிப்படை சுதந்திர உணர்வுகளுக்கும் பெரிய ஆபத்தாகத் திகழ்கின்றன. இதுநாள் வரை பெருத்த தியாகங்களுக்கு இடையே நாம் கட்டிக்காத்துவந்த ஜனநாயக மரபுகளும் உரிமைகளும் கட்டிக்காக்கப்பட வேண்டும் என்றே விரும்புகிறோம்.”
“ஜனநாயகம், சுதந்திரம் ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் உருவாக்கப்படும் ஜனநாயக நெறிமுறைகளைவிட வேறு விதமான அரசு முறையால் மக்களுக்கு நன்மைகளைச் செய்துவிட முடியாது என்றே நம்புகிறோம். எனவே இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சிகளால் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பொன்சேகாவை ஆதரிக்கிறேன்,” என்று சந்திரிகா கூறியிருக்கிறார்.
இலங்கையின் நிறைவேற்று ஜனாதிபதியாக 11 வருடகாலம் ஆட்சி செய்த சந்திரிகாவின் பகிரங்கமான இந்த அறிவிப்பு சரத் பொன்சேகாவுக்கு பெரும் உற்சாகத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை உருவாக்கிய சந்திரிகாவின் தந்தையும், சந்திரிகாவின் தயாராரும் இலங்கையின் பிரதமர்களாக இருந்தவர்கள் என்பதுடன் சந்திரிகாவின் குடும்பத்துக்கு பெரும் அரசியல் செல்வாக்கு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
வெற்றிலையா, அன்னப்பறவையா? ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெற்றிலைச் சின்னத்திலும், சரத் பொன்சேகரா அன்னப்பறவைச் சின்னத்திலும் போட்டியிடுகின்றனர். தமிழர்கள் சார்பில் களம் இறங்கியிருக்கும் டெலோ சிவாஜி லிங்கத்துக்கு கப்பல் சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழித்து இலங்கையில் அமைதியை நிலைநாட்டியது நாங்கள்தான் என்று மகிந்த ராஜபக்ச மார்தட்டுகிறார். போரின்போது மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டதுடன் தமிழர்களும் முஸ்லிம்களும் தொடர்ந்து இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்படுகின்றனர் என்று சம்பந்தன், மனோ கணேஷன் உள்ளடங்கலான சரத் பொன்சேகரா சார்பான சில தமிழ் முஸ்லிம் கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
ஜனாதிபதியின் தம்பிமார்களும் இதர குடும்ப உறுப்பினர்களும் கோடிக்கணக்கான ரூபாயை ஊழல் மூலம் சம்பாதித்து வைத்திருப்பதாக சரத் பொன்சேகரா ஆதரவாளர்கள் பொதுக்கூட்டங்களிலேயே பேசியுள்ளனர்.
மகிந்த ராஜபக்ச தன்னுடைய தேர்தல் பிரசாரத்தின் கடைசி கூட்டத்தை தலைநகர் கொழும்பிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிலியாந்தலை என்ற இடத்தில் நடத்தினார். அதற்கு ஏராளமான ஆதரவாளர்கள் வந்தது அவருடைய கட்சித் தொண்டர்களுக்குப் பெருத்த உற்சாகத்தை அளித்திருக்கிறது.
சரத் பொன்சேகாவின் கடைசி பிரசாரக் கூட்டம் கொழும்பு நகரிலேயே முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் மருதானை என்ற இடத்தில் முடிந்தது.
பலத்த பாதுகாப்பு: ஜனவரி 26-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவின்போது எந்தவித அசம்பாவிதச் சம்பவமும் நேரிட்டுவிடக்கூடாது என்பதற்காக 68 ஆயிரம் போலீஸôரும் இதர பாதுகாப்புப் படையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று காவல்துறை துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் காமினி நவரத்ன கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் ஒடுக்கப்பட்டுவிட்டதால் இம் முறை நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் குண்டு வெடிப்புகள் இல்லாமல் சிங்கள, முஸ்லிம் கட்சித் தொண்டர்கள் மட்டுமல்ல தமிழ் மாற்று கருத்துகாரர்களும் அச்சம் இன்றி ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என்று உற்சாகமாக இருந்தார்கள்.
முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி வேட்பாளருமான டாக்டர். AM இல்ல்யாஸ் அவர்களும் ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகி தனது ஆதரவை சரத் பொன்சேகாவிற்கு கொடுத்துள்ளார்.
நன்றி! – அலெக்ஸ் இரவி